Post No. 13,811
Date uploaded in London – 24 October 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஷேக்ஸ்பியர் சொல்லும் அண்டங்காக்கை, காகம் ஜோதிடம் – 2
பிருஹத் ஜாதகம் என்னும் ஜோதிட நூலையும் பிருஹத் சம்ஹிதா என்னும் என்சைக்ளோபீடியாவையும் வராஹமிஹிரர் எழுதினார். இந்தக் கலைக்களஞ்சியத்தில் அத்தியாயம் 88 சகுனங்கள் பற்றியது ; அதில் காகங்கள் பற்றி மூன்று ஸ்லோகங்களில் குறிப்பிடுகிறார்.அவற்றின் குரல் கர்ண கடூரமாக இருந்தால் ஆபத்து;. இரண்டு பறவைகள் வலமாகப் பறந்து சண்டையிட்டு ஒன்று இறந்தால் ஆபத்து என்கிறார்.
அத்தியாயம் 45- ல் , 16 ஸ்லோகங்களில் வாலாட்டி குருவி ஜோதிடம்- சகுனம் பற்றி எழுதியிருக்கிறார்.
இந்தப் பாடல்களில் அதன் நிறம் எப்படி இருந்தால் வெற்றி, அது எங்கெங்கு காணப்பட்டால் வெற்றி, மன்னன் படை எடுக்கும்போது அது எங்கு காணப்பட்டால் வெற்றி என்றெல்லாம் சொல்கிறார். அதே போல, தோல்வி ஏற்படுவது எப்போது என்றும் அந்தப் பறவையை வைத்துச் சொல்கிறார்.
வாலாட்டிக் குருவி பறவையின் ஆங்கிலப் பெயர் Wagtail (khañjana-kalakṣaṇa)
ஸம்ஸ்க்ருதப் பெயர் – கஞ்சன கலக்சன ( Mounta alla, Alba )
****
உலகம் முழுதும் அண்டங்காக்கை பற்றி அபூர்வமான செய்திகள் உள்ளன :-
அண்டங்காக்கை என்பது பெரும்பாலும் கெட்ட சகுனமாகவே கருதப்படுகிறது. ஆனால் சில கலாசாரங்கள் இதை அறிவின் சின்னமாகவும் கருதுகின்றன.
பைபிளில் முதல் அத்தியாயத்திலேயே இது வருகிறது கப்பலில் சென்ற நோவா , கரையை நெருங்கி விட்டோமா என்று அறிய இந்தப் பறவையை அனுப்புகிறார். மேலும் எலிஜாவுக்கு Prophet Elijah ரொட்டியும் மாமிசமும் கொண்டுவருகிறது..
பாபிலோனியர்கள் இதைக் கெட்ட பறவையாகவே கருதினர். இது 13 ஆவது மாதத்தை ஆளும் பறவை. இந்துக்கள் அந்த மாதத்தை மல மாதம் என்று சொல்லி நல்ல காரியங்களை ச் செய்யமாட்டார்கள்.
கிரேக்க புராணத்திலும் இந்தப் பறவைக்கு கெட்ட பெயர்தான். இது ரகசியங்களை வெளிப்படுத்தியதால், இதன் வெள்ளைச் சிறகுகளை அப்பலோ APOLLO கருப்பாக மாற்றினார். அதீனாவின் ATHENA பறவையாக இருந்த இதை பதவி நீக்கம் செய்து ஆந்தையை அதீனா அருகில் அமர்த்தினர்.
தண்ணீர் கொண்டு வா என்று சொல்லி .அண்டங்காக்கையை, அப்பலோ அனுப்பினார். அது ஒரு அத்தி மரத்துக்கு அடியில் அமர்ந்து அதன் காய்கள் பழமாகும் வரை காத்திருத்தது. இதனால் கோபமுற்ற அப்பலோ அந்தப் றவையை வாநத்திற்கு அனுப்பி நட்சத்திர மண்டலம் ஆக்கினார். அது மட்டுமல்லாமல் அதை ஹைட்ரா நட்சத்திர மண்டலம் எப்போதும் கண்காணிக்கும் இடத்தில் வைத்தார் .
மூத்த பிளினியும் இந்தப்பறவையின் குரல் பற்றி எழுதியுள்ளார்.
இந்தப் பறவை அலகின் வழியாக முட்டையிடும் என்று பழங்கால மக்கள் நம்பியதால் கர்ப்பிணிப் பெண்கள் இதன் அருகில் வரமாட்டார்கள். அவர்களுக்கு சுகப்பிரசவம் நிகழாது என்ற அச்சகமே இதற்குக் காரணம்.
****
இது பற்றிய நல்ல செய்திகளும் உண்டு; அப்பலோ இந்தப் பறவையின் வடிவத்தில் சன்டோரினி தீவிலிருந்து வழி காட்டிப் பலரையும் வெளியே கொணர்ந்தார். அலெக்சாண்டருக்கும் இந்தப் பறவை வழிகாட்டியது..
ரோமில் மித்ரா வழிபாட்டுக்காரர்களும் வட அமெரிக்காவில் பழங்குடி மக்களும், அண்டங்காக்கையை, தங்கள் சின்னமாக வைத்துக் கொண்டனர்
நார்ஸ் Norse Mythology புராண கதைகளில் ஓடின் ODIN என்னும் தெய்வத்துக்குத் துணையாக வருவது இரண்டு அண்டங் காக்காய்கள்தான் ஒன்றின் பெயர் சிந்தனை இன்னொன்றின் பெயர் ஞாபகம்.
பல கிறிஸ்தவ சான்யாசிகளுடன் இந்தப் பறவையைக் காணலாம்.
சீனாவில் மூன்றுகால் அண்டங்காக்கையை, சூரியனுடன் தொடர்புபடுத்தி கதைகள் செல்கின்றனர்.; சூ வம்ச அரசர்கள் சோசர்களைப்போல சூரிய வம்சத்தினர் என்று சொல்லிக்கொண்ண்டனர் அவர்களுக்கு சிவப்பு நிறப் பறவைகள் சொந்தமாகும் . அவர்கள் வணங்கிய தெய்வங்களுக்கு இந்தப் பறவைகள் உணவு கொண்டு வந்தன.
–subham–
Tags- ஷேக்ஸ்பியர், அண்டங்காக்கை, காகம் ,ஜோதிடம் – Part 2, Wagtail, வராஹமிஹிரர், வாலாட்டிக் குருவி