WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.809
Date uploaded in London – —24 October 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் வரங்கள் (15) கைகேயி மந்தரைக்கு வரம் தருவதாகக் கூறியது!
ச. நாகராஜன்
அயோத்யா காண்டத்தில் ஏழாவது ஸர்க்கமாக அமைவது, ‘மந்தரையின் துக்கம்’ என்னும் ஸர்க்கம்.
ராமருக்கு பட்டாபிஷேகம் என்ற செய்தியைக் கேட்டு அயோத்தி நகரமே விழாக் கோலம் பூண்டது. எங்கும் விழாக் கோலம் பூண்டிருப்பதைக் கண்ட மந்தரை என்ற கூனி விஷயம் என்ன என்று விசாரித்தாள். ராமருக்குப் பட்டாபிஷேகம் என்ற செய்தியைக் கேட்டு நேரடியாக கைகேயிடம் வந்தாள்.
“தசரதர் ராமனை இளவரசனாய் பட்டம் சூட்டப் போகிறார்.அவர் வாயினால் இனிய மொழி பேசி செயலினால் கொடியதைச் செய்கிறார்.பரதனை விலக்கி விட்டு நாளை சூரியோதய காலத்தில் ராமனை ராஜ்யத்தில் நிலை நிறுத்தப் போகிறார். இப்போதே உமது நன்மையைத் தேடிக் கொள்ளும்” என்று பலவாறாகக் கூறுகிறாள்.
இதைக் கேட்ட கைகேயி மிகவும் மகிழ்ச்சி அடைகிறாள். மந்தரைக்கு ஒரு ஆபரணத்தைப் பரிசாக அளித்துக் கூறுகிறாள் இப்படி:
“மந்தரையே, எனக்கு மிக்க மங்களச் செய்தியையே இப்போது நீ சொன்னாய். எப்னக்கு இந்த மகிழ்ச்சியைப் பெருக்கும் சந்தோஷ சமாசாரத்தைச் சொன்ன உனக்கு இன்னும் என்ன வேண்டுமோ கேள்.
தருகிறேன். சக்கரவர்த்தியார் ராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்யப் போகிறார்.அதனால் மிக்க சந்தோஷம் அடைகிறேன். ஏனெனில் நான் ராமனிடத்தில் தானாகட்டும் பரதனிடத்தில் தானாகட்டும் ஒரு வித பேதத்தைக் கொள்ளவில்லை” என்கிறாள்.
மேலும் கைகேயி கூறுகிறாள்:
ந மே பரம் கிஞ்சிதிதஸ்த்வயா புன: ப்ரியம் ப்ரியார்ஹே சுவசம் வச: பரம் |
ததா ப்ஹ்ருவோசஸ்த்வமத: ப்ரியோத்தரம் பரம் வரம் தே ப்ரததாமி தம் வ்ருணு |\
மே – எனக்கு
ப்ரம் – சர்வோத்கிருஷ்டமான
ப்ரியம் – மனோரதமிது.
இத: – இதைக் காட்டிலும்
பரம் – சிலாக்கியமான
வச: – சொல்
கிஞ்சித் ஹி – ஏதொன்றும்
த்வயா – உன்னால்
புன: – இனிமேல்
சுவசம் ச – சொல்ல முடியாது
த்வம் – நீ
ததா – அப்படிப்பட்டதாகிய
தம் – அதை
அவோச – சொல்லி விட்டனை
அத: – ஆகையால்
ப்ரியார்ஹே – அனுக்ரகத்திற்குப் பாத்திரமானவளே
ப்ரியதோத்தரம் – உனக்கு இஷ்டமாயிருக்கும்
பரம் – வேறு
வரம் – வரம் எது வேண்டுமோ அதை
வ்ருணு – கேட்டுக் கொள்
தே – உனக்கு
ப்ரததாமி – நான் கொடுக்கிறேன்.
அயோத்யா காண்டம் ஏழாவது ஸர்க்கம், ஸ்லோக எண் 36
கைகேயியை ப்ரமதோத்தமா – பெண்களில் உத்தமி என்று வால்மீகி இங்கு கூறுகிறார்.
உத்தமமான மனதை உடைய கைகேயி கூனிக்கு வேண்டியதை இன்னும் தருவதாக ஒரு ஆபரணத்தைப் பரிசாக வழங்கிய பின் கூறுகிறாள்.
இங்கு வரம் அளிக்கும் கைகேயியின் மனதைப் பார்க்கிறோம்.
**