உபநிஷதத்தின் பெருமையை உலகிற்கு முரசு கொட்டியவர் ஷோபனேர்! (Post No.13,815)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,815

Date uploaded in London – 25 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

உபநிஷதத்தின் பெருமையை உலகிற்கு முரசு கொட்டியவர் ஷோபனேர்!

பன்னரும் உபநிடத நூலெங்கள் நூலே

பார் மீது ஏதொரு நூல் இது போலே

என்று பாரதியார் பாடுவதற்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்னரே இதை பறை அறிவித்தார் ஜெர்மானிய தத்துவ ஞானி ஷோபனேர்!

Arthur Schopenhauer, 19th century German philosopher, said,

“In the whole world there is no study so beneficial and so elevating as that of the Upanishads. It has been the solace of my life, it will be the solace of my death”

இலங்கையின் தலைநகரமான கொழும்பில், சுவாமி விவேகானந்தர் 1897, ஜனவரி 15-ஆம் நாள் ஆற்றிய சொற்பழிவில் ஷோபனேர்பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார் :

“இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஜெர்மனியின் சிறந்த தத்துவ ஞானியான ஷோபனேர் வேதங்களின் லத்தீன் மொழிபெயர்ப்பைப் படித்தார். அது முதலில் பாரசீக மொழியிலும் பின்னர் அதிலிருந்து பிரெஞ்சு இளைஞன் ஒருவனால் லத்தீனிலும் மொழிபெயர்க்கப் பட்டது. அவ்வளவு சிறப்பான மொழிபெயர்ப்பாக அதனைக் கருதுவதற்கில்லை. இருப்பினும் அதைப் படித்த பின் அவர், உபநிடதங்களைப்போல் நன்மையளிப்பதும் உன்னதமான நிலைக்கு அழைத்துச் செல்வதுமான நூல் எதுவும் இல்லை. அது என் வாழ்விற்கு அமைதியைத் தருவதாக உள்ளது. என் மரணத்திற்கும் அமைதியை அளிப்பதாக இருக்கும்“ என்று கூறியுள்ளார்.

இந்த மகத்தான ஜெர்மானியப் பேராசிரியர் முன்பே தீர்க்க தரிசனமாக, கிரேக்க இலக்கியங்களால் உலகச் சிந்தனையில் ஏற்பட்ட மறுமலர்ச்சியைவிட மிக ஆற்றல் வாய்ந்த, மிகவும் தீவிரமான சிந்தனை மறுமலர்ச்சி ஏற்படப்போவதை உலகம் காணப்போகிறது”என்று கூறினார். இப்போது அவரது வார்த்தைகள் உண்மையாகிக்கொண்டிருக்கின்றன. யாரெல்லாம் கண்களைத் திறந்து வைத்துள்ளனரோ, யாரெல்லாம் மேலைத் திசையில் உள்ள பல்வேறு நாட்டு மக்களின் மனப் போக்குகளைப் புரிந்து கொண்டார்களோ. யாரெல்லாம் பல்வேறு நாடுகளைப் பற்றிப் படிக்கின்ற சிந்தனையாளர்களோ, அவர்கள், மெதுவாக ஆனால் தொடர்ச்சியாக எல்லா இடங்களிலும் பரவிக்கொண்டிருக்கின்ற இந்த இந்தியச் சிந்தனைகளால் உலக இலக்கியங்களின் கண்ணோட்டமும் போக்கும் வழிமுறைகளும் வெகுவாக மாறி வருவதைக் காண்பார்கள்.”

****

ஆர்தர் ஷோபனேர்

ஷோபனேர் ஒரு ஜெர்மானிய தத்துவ அறிஞர் .தனித்துவமிக்க தத்துவ அறிஞர். உலகிலேயே உன்னதமான நூல்கள் உபநிஷத்துக்கள்தான் என்று பாரதியார் போல முரசு கொட்டினாலும் அவர் படித்தது, மொழிபெயர்ப்புக்கு மொழிபெயர்ப்பாக வந்த உபநிஷதம் ஆகும்; இந்துமதத்தைப் புகழ்ந்ததற்காக முஸ்லீம் மதவெறியன் அவுரங்கசீப் கொடூரமாகக் கொலை செய்த தாரா ஷிகோஷ் பாரசீக மொழியில் ஆக்கிய உபநிஷதத்தை ஒரு பிரெஞ்சுக்காரர் லத்தீன் மொழியில் ஆக்கினார். அதைப்      படித்துவிட்டுப்  புகழந்த  ஷோபனேர், ஸம்ஸ்க்ருதத்தைப் படித்திருந்தால் இந்தியாவுக்கு வந்து தங்கி இருப்பார் ஆனால் அவரது வாழ்க்கையோ. கொந்தளிப்பான வாழ்க்கை.

****

Arthur Schopenhauer 1788- 1860 ஆர்தர் ஷோபனேர்

பிறந்த தேதி -22 February 1788

பிறந்த  ஊர் –  ஜிடான்ஸ்க்/ டான்சிக் , போலந்து (அந்தக் காலத்தில் ஜெர்மனியின் பகுதி) அப்போது ஜெர்மானிக்கு பிரஷ்யா என்று பெயர்

இறந்த தேதி – 21 September 1860 (aged 72)

கல்வி கற்ற இடம் – Illustrious Gymnasium

University of Göttingen, University of Berlin,

University of Jena (PhD, 1813)

தந்தை பெரிய வணிகர் . அவருடைய பெயர் Heinrich Floris Schopenhauer , ஹென்றி ஷோபனேர்

தாயின் பெயர் – ஜோவன்னா ஷோபனேர்

Johanna Schopenhauer அவரும் நூலாசிரியர் 

பார்த்த வேலைகள் – Businessman, Writer

ஜெர்மன் உச்சரிப்பு- ஷோபன்ஹவர்

அவரது 1818-ஆம் ஆண்டு புத்தகமான The World as Will and Representation, Vol. 1: Volume 1 தி வேர்ல்ட் அஸ் வில் அண்ட் ரெப்ரசென்டேஷன் என்ற புஸ்தகம் மூலம் புகழ் பரவியது .

ஜெர்மன் இலட்சியவாதத்தின் சமகால கருத்துக்களை நிராகரித்ததால் சர்சைக்குரியவர் ஆனார். அவரது குடும்பமே நாத்தீகக் குடும்பம். ஆனால் பிறந்தது பிராடஸ்டன்ட கிறிஸ்தவப் பிரிவில்; பணம் ஒன்றே குறியாக இருந்த குடும்பம்.

“டேய், படிக்கப் போறீயா? அல்லது என் கூட பயணம் செய்து பிஸினஸ்ஸ கத்துக்கதறியா? “ என்று தந்தை கேட்டார். அப்பா உன் கூட வந்து வியாபாரத்தைக் கத்துக்கறேன் என்று சொல்லி தந்தையுடன் 12 ஆண்டுகள் ஐரோப்பாவை வலம் வந்தார்;  பிற்காலத்தில் இளமையில் கற்காமல் போனதற்கு ஷோபனேர் வருத்தப்பட்டார்.

ஒன்பது வயதான போது, அவரை ஒரு பிரெஞ்சு குடும்பத்துடன் இரண்டு ஆண்டுகளுக்கு வாழ்வதற்கு, தந்தை ஹென்றி, ஏற்பாடு செய்தார்; இதனால் அவருக்குப் பிரெஞ்ச்  மொழியிலும் புலமை ஏற்பட்டது.

ஷோபனேருக்குப் பல துறைகளில் ஆர்வம் இருந்தது

துறவு, தன்னலத் துறப்பு, உலகின் மாயத்தோற்றம் உள்ளிட்ட இந்திய தத்துவங்களின்  கோட்பாடுகளை ஏற்றுத் தழுவினார். அழகியல், ஒழுக்கம், மற்றும் உளவியல் பற்றிய அவரது கருத்துக்கள் அவருக்குப் பின் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

ஷோபனேருக்கு 17வயதானபோது தந்தை ஹாம்பர்க் நகரில் தற்கொலை செய்து கொண்டார் . இதன் விளைவாக அவருக்கும் சகோதரிக்கும் தாயாருக்கும் பாகப் பிரிவினையில் பெருந்தொகை கிடைத்தது  பின்னர்தான் அவர் படிக்கச் சென்றார். வணிகத் தொழிலைக் கைவிடவும் தீர்மானித்தார். அவர் டெபாசிட் செய்த தொகைக்கு பெரும் வட்டி கிடைத்ததால் பணம் பற்றிய கவலையே இல்லை; ஆயினும் பயணத்தின் போது ஐரோப்பிய மக்களின் வறுமையையும் ஏழ்மையையும் கண்டதால் தத்துவ எண்ணங்கள் மனதில் உதித்தன. ஏழைகள்  படும்பாடு அவர் மனதில் தாக்கத்தை உண்டு பண்ணின.

ஷோபனேர் இத்தாலியில் பல நகரங்களில் தங்கினார்  பெர்லினில் ஒரு பெண்ணைத் தள்ளிவிட்டதால் அவள் பொய்சொல்லி கேஸ் போட்டார் அந்த வழக்கில் ஷோபனேர் குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டது அவளுக்கு  வாழ்நாள் முழுதும் ஷோபனேர், பென்சன் தர கோர்ட் உத்தரவிட்டது .

****

பெண்களைப் பற்றி

பெண்கள் நர்ஸ் வேலைக்கும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் வேலைக்கும்தான் பொருத்தமானவர்கள். அவர்களே சிறுபிள்ளைத்தனமாவார்கள் ; குறுகிய நோக்கு உள்ளவர்கள் ; அற்பமான எண்ணம் கொண்டவர்கள்; கலைகளில் அவர்களுக்குப் புலமை இல்லை ; நீதி விஷயத்திலும் அறிவு கிடையாது; ஆயினும் முடிவு எடுப்பதில் நிதானமான பேர்வழிகள்; ஆண்களை விட அனுதாபம் அதிகம் உள்ளவர்கள் என்கிறார். ஒருதார மணம் சரியல்ல என்பதும் அவரது கருத்து

பிற்காலத்தில் அவரது சிலையை வடிக்க ஒரு பெண் வந்தாள் ; அவளைப் பார்த்தவுடன் பெண்களைப் பற்றிய கடைசி வார்த்தையையும் சொல்லி விடுகிறேன் என்று பின்வருமாறு சொன்னார் :

ஒரு பெண்மணி பொது ஜனக் கூட்டத்திற்கு மேல் உயர்ந்து நின்றால் மேலும், மேலும் வளர்வாள் ; ஆண்களைவிட உயர்வாள்.

****

எழுதிய நூல்கள் –

The World as Will and Representation, Vol. 1: Volume 1

The World as Will and Representation, Vol. 2: Volume 2:

Essays and Aphorisms (Penguin Classics)

Die Welt als Wille und Vorstellung II: Sämtliche Werke in fünf Bänden, Band 2

The Essays of Arthur Schopenhauer; the Art of Controversy

The Horrors and Absurdities of Religion

Great Ideas : On The Suffering of the World

The Art of Being Right: 38 Ways to Win an Argument

****

ஷோபனேர் ஒரு பன்முகப் பேர்வழி;

பெண்களை வெறுத்தவர்;

தாயாருடன் மோதியவர்

தொழில் ரீதியில் வணிகர்

பிராணிகளை வதைக்கக்கூடாது என்ற கொள்கை உடையவர்

ஐரோப்பாவில் கல்வி கற்போர் அனைவரும் லத்தீன் மொழியைக் கட்டாயமாகக் கற்க வேண்டும் என்பதால் அந்த மொழியைக் கற்றவர் .

ஏனைய ஐரோப்பிய தத்துவ ஞானிகளான இம்மமானுவேல் கான்ட் Immanuel Kant (1724–1804) ,ஸ்பினோசா முதலியோரைக் கற்று,  தனது சித்தாந்தத்தை   நிறுவியவர்; பல நூல்களை எழுதியவர். இதன் காரணமாக இவரே தத்துவம் பயிலுவோருக்கு படிப்பில் ஒரு பாடமாக (Subject) வைக்கப்பட்டார்.

–subham—

Tags–Arthur Schopenhauer , ஷோபனேர், பெண்களைப் பற்றி, உபநிஷதத்தின் பெருமை

Leave a comment

Leave a comment