Post No. 13,814
Date uploaded in London – 25 October 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும் என்பது தமிழ்ப் பழமொழி ; இது போன்ற கருத்தைத் தெரிவிக்கும் பழமொழிகள் சீன ஜப்பானிய மொழிகளிலும் உண்டு .
வாசல் கதவில் புலியை விரட்டினால் கொல்லைப் புறத்தில் ஓநாய் புகுந்தது—
என்பது சீனா ஜப்பான் கொரியா போன்ற நாடுகளில் உள்ளது .
அவை தெரிவிக்கும் கருத்து :
ஒரு பிரச்சனையைத் தீர்த்தால் இன்னும் ஒரு பிரச்சனை வருகிறது. இதை நாம் நமது குடும்பத்திலும், வீடு கட்டும்போதும், கல்யாணம் செய்யும்போதும், பிசினஸ் நடத்தும் போதும் காண்கிறோம். முதலில் சீனாவில் இந்தப் பழமொழி உருவான கதையைக் காண்போம்.
Chinese
前门打虎,后门打狼 (前門打虎,後門打狼) –
qián mén dǎ hǔ , hòu mén dǎ láng
சீனாவில் க்வான் மென் டா ஹூ , ஹூ மென் டா லாங் என்பார்கள்
1. to beat a tiger from the front door, only to have a wolf come in at the back (idiom); fig. facing one problem after another
ஜப்பானில், சென்மோன் நீ டோரா வோ புஸேஜி , கொண்மோன் யோ ஓகாமி வோ சுசுமு என்பார்கள்
Japanese
Zenmon ni tora wo fusegi, komon yo okami wo Susumu
இதோ அந்தக் கதை
ஜப்பான் சக்ரவர்த்தியின் எதிரியை குஸுநோக்கி நசுக்கிவிட்டார் ; சக்ரவர்த்தியை சிம்மாசனத்தில் அமரவைக்கும் தருணத்தில் வேறு ஒரு புரட்சி வெடித்தது. உள் நாட்டில் ஒரு தளபதி புரட்சிக் கொடியைத் தூக்கினார் ; உடனே குஸுநோக்கி அங்கே படைகளுடன் விரைந்தார்; அங்கே அவர் இறந்தார். உடனே மீதோ நகர இளவரசர் ஒரு நடுகல் சமைத்தார். அந்த நடு கல்லில் வாசல் கதவில் புலியை விரட்டினால் கொல்லைப் புறத்தில் ஓநாய் புகுந்தது –என்ற பழமொழியை சீன அறிஞர் ஷூ ஷின் சுய் எழுதினார்.
ஆங்கிலத்திலும் இப்படிப்பட்ட பழமொழிகள் இருக்கிறன.
Misfortunes never come singly
Bad things come in threes
****
ராமேஸ்வரம் போனாலும் சனீஸ்வரன் விடாது கதை
முதலில் ஸ்பெல்லிங் மிஸ்டேக்குகளை சரி செய்வோம்; சனை ஹி சரன் = சனைச் சரன் (மெல்லச் செல்வோன்) என்பதே சரி. மக்களோ அவனை பகவான் நிலைக்கு உயர்த்தி, சனீஸ்வரன் ஆக்கி விட்டார்கள் . சூரியனைச் சுற்றிவர நமது பூமிக்கு 365 + நாள் போதும் ; ஆனால் சனி கிரகத்துக்கோ முப்பது ஆண்டுகள் ஆகும். ஆகையால் அவனுக்கு நொண்டி, மெல்லச் செல்வோன் என்றெல்லாம் இந்துக்கள் பெயர் சூட்டினார்கள்.
ஒரு கடவுள் பக்தன் இருந்தான். அவனுக்கு சனி திசை துவங்க இருந்தது ; நீண்ட ஆயுள் உடைய ஒவ்வொருவர் ஜாதகத்திலும் சனி திசை வரும். அந்த ஏழரை ஆண்டுக்கலாத்தில் பொங்கு சனி, மங்கு சனி என்றெல் காலத்துக்கு கட்டாயம் எல்லோரும் ஏதோ ஒருவிதத்தில் கஷ்டப்படுவார்கள். சனி திசையை வரக்கூயூட்டிய பக்தனுக்கு கடவுள் அருள் இருப்பதால் சனி , அவன் முன் தோன்றி அப்பா, முன் எச்சக்காரிகை தருகிறேன் ; உன்னைப் பீடிக்கப்பகிறேன் என்கிறார்.
அவனோ அலட்சியமாக நான் பெ எரிய பக்தன் ; நாள் என் செய்யும் கோள் என் செய்யும் என்று பாட்டுப் பாடினான் ; சனியும் சிரித்துக் கொண்டே போய்விட்டார் ; சனி திசை துவங்கும் நாள் வந்தது ; இந்த ஆள் தனது அரண்மனை போன்ற வீட்டை விட்டு சாக்கடை ஓடும் இடத்திலுள்ள குடிசையில் ஒளிந்து கொண்டார் . அவர் புத்தி சனி திசை காரணமாக மங்கியதால் இப்படித் தோன்றியது. சனி நம்மைக் கண்டுபிடிக்க முடியாது என்ற அசட்டுத் தைரியாத்தில் வாழ்ந்தார் .
சனி திசை முடிந்தது அப்பாடா என்று எருமூச்சுவிட்டுக்கொண்டு வெளியே வந்தார் . சனி ப அவன் முன் தோன்றி என்ன எப்படி இருக்கிறாய் என்று கேட்டார். நான் சுகம்தான் நீர் சொன்னபடி எண்ணெய் பீடிக்க முடியவில்லையே என்று நகைத்திட்டார் இல்லையே நான் உனைப் பிடித்ததால் அந்தக் காலம் முழுதும் றன் மனை வாசத்துக்குப் பதிலாக நீ சாக்கடை நாற்றத்தின்ல் பன்றிகளுடன் அல்லவா வாழ்ந்தாய் அதுதான் நான் செய்த வேலை என்கிறார். அவன் வெட்கித்து தலை குனிந்தான்.
இதைத்தான் நாம் ராமேஸ்வரம் போனாலும் சனீஸ்வரன் விடவில்லை என்கிறோம்.
கடவுள் நம்பிக்கை இருந்தால் அந்தக் கஷ்டம் நமக்கு கஷ்டம்போலத் தோன்றாமல் களிக்கலாம். அனால் இறை நமிக்கை தொடரவேண்டும் நம்பி
கம்பளிக்காரனுக்குப் பயந்து கட்டடியைக் கட்டிக்க கரடி கொண்டானாம் என்பது போன்ற பழமொழிகளும் உண்டு.
சாண் ஏற முழம் சறுக்குகிறது
One step forward and two steps back
****
உரல் போய் மத்தளத்தோட முறையிட்டது போல
As the mortar went to the tomtom with its complaints.
மத்தளம்= drum, tomtom ; beaten on both sides.
Used when one complains of his misfortunes to another who is in greater distress. The mortar is beaten at one end only, whereas the tomtom is beaten at both ends.
உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி ; அப்படி இருக்கும்போது, உரல் போய் மத்தளத்திடம் புகார் மனு கொடுத்ததாம்,
****
இராவுத்தனை தள்ளியதோடும் அல்லாமல் குழியும் பறித்ததாம் குதிரை!
It is said that the horse not only threw his rider, but dug his grave also.
It is said that the horse has not only thrown its rider, but is digging his grave.
போன்ற பழமொழிகளையும் ஒப்பிட்டுப் பார்த்து மகிழுங்கள்!
–subham—
Tags- குதிரை, உரல் ,மத்தளம், ராமேஸ்வரம் ,சனீஸ்வரன் விடாது ,கதை , பட்ட காலிலே படும்,வாசல், புலி, கொல்லைப் புறத்தில், ஓநாய் . சீன ஜப்பானிய தமிழ் பழமொழிகள்