சுபாஷித மஞ்சரி – சுபாஷிதங்கள் – 1 (Post No.13,823)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.823

Date uploaded in London – 28 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 சம்ஸ்கிருத செல்வம்

சுபாஷித மஞ்சரி – சுபாஷிதங்கள் – 1 

ச. நாகராஜன்

ஆர்ய சமாஜ் பவுண்டேஷன் சென்னை – நிறுவனத்தால் வெளியிடப்பட்ட சுபாஷித மஞ்சரி என்னும் டிஜிடல் புத்தகத்தில் உள்ள சில சுபாஷிதங்கள் இங்கு தமிழில் தரப்படுகிறது.

மூலத்தில் சம்ஸ்கிருத மூலமும் ஆங்கில மொழிபெயர்ப்பும் தரப்பட்டுள்ளது.

இங்கு சம்ஸ்கிருத மூலம் தமிழில் தரப்பட்டிருக்கிறது.

ஆங்கிலத்தில் உள்ள மொழிபெயர்ப்பின் தமிழாக்கம் என்னால் செய்யப்பட்டிருக்கிறது.

1

ஹஸ்தஸ்ய பூஷணம் தானம் ஸத்யம் கண்டஸ்ய பூஷணம் |

ஸ்ரோத்ரஸ்ய பூஷணம் சாஸ்த்ரம் அபூஷணம் கிம் ப்ரயோஜனம் ||

கைகளுக்கு அழகு தானம் வழங்குதல். தொண்டைக்கு அழகு  சத்யம் பேசுதல்.

சாஸ்த்ரங்களைக் கேட்பது காதுகளுக்கு அழகு. (இப்படி இருக்கையில்) மற்றவற்றால் என்ன பிரயோஜனம்?

2

கோதிபார: சமர்தானாம் கிம் தூரம் வ்யவசாயினாம் |

கோ விதேஷ: ஸவித்யானாம் க: பர: ப்ரியவாதினாம் ||

பலசாலிக்கு எது தான் அதிக பாரமாகும்? தளர்ச்சி அடையாதவனுக்கு எது தான் தூரமாகும்? படித்தவனுக்கு எது தான் அயல் தேசம்? பிரியமாகப் பேசுபவனுக்கு யார் தான் அந்நியமாவான்?

3

தாராணாம் பூஷணம் சந்த்ர: நாரீணாம் பூஷணம் பதி: |

ப்ருதிவ்யா: பூஷணம் ராஜா வித்யா சர்வஸ்ய பூஷணம் ||

நட்சத்திரங்களுக்கு ஆபரணம் சந்திரன். பெண்ணுக்கு ஆபரணம் அவளது கணவன். பூமிக்கு ஆபரணம் அரசன். வித்யாவே (கல்வியே) அனைவருக்கும் ஆபரணம்.

4

தா ச அதா பரமேஸ்வர: |

அந்யத்ர சாபி தத்ஸ்தானம் குத்ர ஸ்யாத் யத்ர நாஸ்தி ச: ||

இங்கும் அங்கும் எங்கும் பரமேஸ்வரன் இருக்கிறான்..

ஆனால் அவனுடைய உறைவிடம் வேறு ஒரு இடத்தில் உள்ளது.

என்ன?

அவன் இல்லாத இடம் என்று ஒரு இடம் உண்டா என்ன?

5

வித்வத்வம் ச ந்ருபத்வம் ச நைவ துல்யம் கதாசன |

ஸ்வதேஷே பூஜ்யதே ராஜா வித்வான் ஸர்வத்ர பூஜ்யதே ||

வித்யைக்கும் அரசாள்வதற்கும் ஒரு விதமான ஒப்பீடும் இல்லை. ஏனெனில் அரசன் அவனது ராஜ்யத்தில்  மட்டுமே மதிக்கப்படுகிறான். ஆனால் ஒரு வித்வானோ எல்லா இடங்களிலும் மதிக்கப்படுகிறான்.

6

முண்டே முண்டே மதிர்பின்னா குண்டே குண்டே நவம் ஜலம் |

தேஷே தேஷே நவாசார: முகே முகே நவா வாணீ ||

மனதிற்கு மனம் அறிவு வேறுபடுகிறது. குளத்திற்குக் குளம் ஜலம் வேறுபடுகிறது. தேசத்திற்கு தேசன் சம்பிரதாய பழக்க வழக்கங்கள் மாறுபடுகிறது. வாய்க்கு வாய் பேச்சு வேறுபடுகிறது.

7

ஆகாஷே சந்த்ரமா பாதி பத்மம் பாதி சரோவரே |

சுபுத்ரஸ்து குலே பாதி சுந்ருபோ தரணீதலே ||

சந்திரன் ஆகாயத்தில் ஒளிர்கிறான். தாமரை குளத்தில் அழகாக ஒளிர்கிறது.  அதே போலவே ஒரு நல்ல குடும்பத்தில் நல்ல புத்திரன் ஒளிர்கிறான். பூமியில் ஒரு நல்ல அரசன் ஒளிர்கிறான்.

**

நன்றி :Arya Samaj Foundation Chennai 

Digitized by Arya Samaj Foundation and eGangotri

Leave a comment

Leave a comment