Post No. 13,824
Date uploaded in London – 28 October 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
3.பெண்கள் மீது ஷேக்ஸ்பியர் தாக்குதல் (Post No.13,824)
Part Three (Last Part)
அதிகம் கேட்டிராத நீதி வெண்பாப் பாடலைப் பார்ப்போம்:
அத்தி மலரும் அருங்காக்கை வெண்ணிறமுங்
கத்து புனல் மீன் பதமுங் கண்டாலும் — பித்தரே
கானார் தெரியற் கடவுளருங் காண்பரோ
மானார் விழியார் மனம்.
பொருள்:
பெண் மயக்கம் கொண்ட பைத்தியக்காரர்களே! அருமையான அத்திப் பூவும், காக்கையின் வெள்ளை நிறமும், கடலில் உள்ள பெரு மீன்களின் கால்களும் ஒருக்கால் பார்க்க இயன்றாலும் பெண்களின் மன நிலையை நம்மால் காண/ அறிய முடியாது. மான் பார்வை போலும் மருண்ட கண்களை உடைய அப்பெண்களின் நெஞ்சத்தை தேவர்களும் காண மாட்டார்.
மனைவிக்கு அஞ்சுவோன் மீது அம்பலவாணர் தாக்குதல் (11,644)
றப்பளீசுர சதகத்தை எழுதிய அம்பலவாணர் , 56, 57 பாடல்களில் சாதாரணமாக உலகறிந்த விஷயங்களைப் பற்றித்தான் கதைக்கிறார். ஆயினும் வீணர்கள்,– அதாவது வெட்டிப் பயல்கள் —-பற்றியும் கெட்ட விஷயங்கள் (Useless) பற்றியும் சொல்லி அவைகளுக்கு – மார்க் Mark – மதிப்பெண் போடுகிறார் . அதாவது எதைவிட எது மோசம் என்று வரிசைப் படுத்துகிறார்.
மாமனார் வீட்டில் உறைவோரும் – 35/100 fail mark
வெட்டி அரட்டையை விரும்புவோரும் – 30 marks
விருந்தினரைக் கண்டவுடன் மனைவிக்கு அஞ்சி ஓடுவோரும் – 25 marks
படிப்பில்லாதவரும்- 20 marks
கல்லாத பேர்வழிகள் மீது கவிதை பாடுவோனும் – 15 marks ,
மக்களைச் சுமக்கும் பல்லக்கு தூக்கிகளும் – 10 marks
பொருளைத் தேடும் அறிவற்றவர்களும் – 5 marks
வரவவே இல்லாமல் செலவுசெய்வோரும்- o marks வீணர் (Useless Fellows)
அறப்பளீசுர சதகம் 56. வீணர்
வேட்டகம் சேர்வோரும் வீணரே! வீணுரை
விரும்புவோர் அவரின் வீணர்!
விருந்துகண் டில்லாள் தனக்கஞ்சிஓடிமறை
விரகிலோர் அவரின் வீணர்!
நாட்டம் தரும்கல்வி யில்லோரும் வீணரே!
நாடி அவர் மேற்கவி சொல்வார்
நானிலந் தனில்வீணர்! அவரினும் வீணரே
நரரைச் சுமக்கும் எளியோர்!
தேட்டறிவி லாதபெரு வீணரே அவரினும்
சேரொரு வரத்தும் இன்றிச்
செலவுசெய் வோர் அதிக வீணராம்! வீணனாய்த்
திரியும்எளி யேனை ஆட்கொண்
டாட்டஞ்செ யும்பதாம் புயம்முடியின் மேல்வைத்த
அமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
விருந்தினரைக் கண்டவுடன் மனைவிக்கு அஞ்சி ஓடி மறையும் அறிவு இல்லாதவர் வீணர்”
அவ்வையார் தாக்குதல்
அவ்வையார் பசியுடன் நடந்து கொண்டிருந்தார் ; அதைக் கண்ட ஒரு ஆடவனுக்கு கருணை உள்ளம்;
ஏ கிழவி என் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுப் போ என்றான்.; ஆனால் அவன் மனைவியோ அடங்கா பிடாரி; மஹா முரடு; இருந்த போதிலும் அவளைக் கெஞ்சிக் கூத்தாடி அவ்வைக் கிழவிக்கு சோறு போட்டு விடலாம் என்று அவன் தப்புக்கு கணக்குப் போட்டான்; வீட்டுத் திண்ணையில் அவ்வையாரை உட்காரவைத்து விட்டு மனைவியைத் தடவிக்கொடுத்து, தலையை வாரிவிட்டு பேன்களை எல்லாம் எடுத்துவிட்டு அன்பே ஆருயிரே ஒரு விருந்தாளியை அழைத்து வந்துள்ளேன்; பாவம் அவள் ஒரு கிழவி என்று சொல்லி முடிப்பதற்குள் அவள் காளி போல தாண்டவம் ஆடினாள் ; வசை மாறி பொழிந்தாள்; அதுவும் போதாதென்று பழைய முறத்தை எடுத்து கணவனை அடித்து ஓட ஓட விரட்டினாள் ; அவ்வைக் கிழவிக்கு ஒரு பக்கம் அதிர்ச்சி; மறு பக்கம் ஒரே சிரிப்பு ; சும்மாவா விடுவார் ஒரு பாடலையும் பாடினார்:—
இருந்து முகம் திருத்தி ஈரோடு பேன் வாங்கி
விருந்து வந்ததென விளம்ப –வருந்தி
ஆடினாள் … பாடினாள்; ஆடிப்பழ முறத்தால்
சாடினாள் ஓடோடத்தான்.– தனிப்பாடல்கள்
XXXX
இரண்டாவது அதிர்ச்சி
அவ்வையார் கொஞ்ச தூரம் நடந்து போனார்; பசியோ வயிற்றைக் கிள்ளியது ; ஒரு ஆண் மகனைக் கண்டு ,
அப்பா, ரொம்ப பசிக்கிறது; சாப்பிட ஏதாவது கொடு என்றாள் ; அவனும் அன்போடு வீட்டுக்கு அழைத்துச் சென்றான்; அவன் மனைவியும் முரடு; இருந்தபோதிலும் வேண்டா வெறுப்போடு முகத்தைச் சுளித்துக்கொண்டு உணவு பரிமாறினாள்; கரண்டியை வைத்து அடிக்காத குறைதான்.
வெளியே வந்த அவ்வையார் இரண்டு ,மூன்று
பொன்மொழிகளை உதிர்த்துச் சென்றார்.
காணக்கண் கூசுதே கையெடுக்க நாணுதே
மாணொக்க வாய்திறக்க மாட்டாதே – வீணுக்கென்
என்பெல்லாம் பற்றி எரிகின்ற தையையோ
அன்பில்லாள் இட்ட அமுது.
அன்பில்லாத மனைவி இட்ட அமுது அவர் நெஞ்சசத்தைப் பிளந்தது ; கொட்டித் தீர்த்துவிட்டார்
****
அத்தோடு நிறுத்தவில்லை; அந்த ஆடவனுக்கு அறிவுரையும் வழங்கினாள் யாருக்கும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறு ; நல்ல குருவைப் பார்த்து சன்யாசம் வாங்கிக்கொள்; உனக்கு நிம்மதியான வாழ்வும் கிட்டும்; அடியார்கள் அன்போடு கொண்டுவரும் உணவும் கிடைக்கும் என்கிறார்.
சண்டாளி சூர்ப்பனகை தாடகையைப் போல்வடிவு
கொண்டாளைப் பெண்டென்று கொண்டாயே
தொண்டா செருப்படிதான் செல்லாவுன் செல்வமென்ன
செல்வம் நெருப்பிலே வீழ்ந்திடுதல் நேர்
பத்தாவுக்கு ஏற்ற பதிவிரதை உண்டாணால்
எத்தாலும் கூடி யிருக்கலாம் – சற்றேனும்
ஏறுமா றாகஇருப்பாளே ஆமாயின்
கூறாமல் சந்நியாசம் கொள்.
****
பெண்கள் பற்றிய என்னுடைய புஸ்தகங்களில் ஏற்கனவே உள்ள விஷயங்கள்:–
பொருளடக்கம்
1.பெண்கள் வாழ்க – நூல் எழுதக் காரணம்
2.பெண் புலவர்கள் பற்றி ஆராய்ச்சி – சங்கப் புலவர் பட்டியல்
3.ரிக் வேத பெண் கவிஞர்களின் பட்டியல் ; பெண் கவிஞர்களின் அறிவு ; சம்பாஷனைக் கவிதைகள்
4.சாதனை புரிந்த இந்துப் பெண்கள்
5.பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன்’ -பாரதி
பெண்கள் பற்றி மநு தர்ம சாஸ்திரம்
6. புத்திசாலி தமிழ்ப் பெண்கள்!
7.பெண்களின் வியத்தகு அறிவு
8. உலகிலேயே அதிர்ஷ்டசாலிப் பெண்கள்!
9.அதிர்ஷ்டசாலிகள்- திறமைசாலிகள் என்பதற்கு 33 காரணங்கள்
10. 33 காரணங்கள் நிறைவுரை!
11 . இம்மையிலும் மறுமையிலும் ஒரே கணவன்
12.காதல் திருமணம் தோல்வியே!
13.பெண்கள் பற்றி வராஹமிஹிரர் !
14.போர்க் காலத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு
பெண்கள் தொடர்பான பழமொழிகள்
15. ‘பெண் கொலை’ பெரிய பாவம்
16.ராமாயண காலத்தில் ஒரு பெண்துறவி
17.வரதட்சிணை முறை தலைகீழாக மாறியது எப்படி? பெண் ஆட்சியாளர்கள்;
18.பெண்கள் பற்றி மேல்நாட்டு அறிஞர்கள்; கற்பிற்கு எடுத்துக்காட்டு அருந்ததி;
19. பூமி எனது தாய்; நான் அவள் மகன் ;சுயம்வரம் ;பெண் தெய்வ வழிபாடு;;
நதிகளுக்கும் நல்ல குணங்களுக்கும் பெண்களின் பெயர்களே!
20.பெண்களைப் பற்றி பாரதி
21 .மனைவி பெயரே முதலில் வரும்
22 .பெண்கள் எட்டு வகை ; அறிந்து கொள்க
23.பொம்பளை சிரிச்சா, உதைச்சா, பார்த்தா போச்சு!
xxxx
மனைவி ஒரு மருந்து
பொருளடக்கம்
1.மனைவி ஒரு மருந்து- மஹாபாரதப் பொன்மொழி
2.மனைவி- குடும்ப விளக்கு, மகன் -குல விளக்கு!!
3.சீமந்தத்தின் விஞ்ஞான ரகசியம்! அக்கு பங்சர்!!
4.அறுபத்து நான்கு கலைகள் — உலகம் வியக்கும் பெண்கள் பாட திட்டம் !!
5.இரண்டாயிரம் ஆண்டுகளாக பெண்கள் செய்யும் வியாபாரம்
6.அகநானூற்றில் MISS GOOD FRIDAY! ‘மிஸ் குட்Fரைடே’
7.அற்புதப் பெண்மணி அருந்ததி!
8.புத்திசாலிப் பெண்களின் சைகை மொழிகள்!
9.பெண்கள் பேசினால்………… தமிழ்ப் புலவர் கதறல்!
10.கணவன் தெய்வமாம்! பெயரை சொல்லக் கூடாதாம்!!
அடுத்த ஜன்மத்திலும் அவரே…. !!!
11.பாண்டிய மஹாராணி தீயில் குதித்ததற்கு தொல்காப்பியமே காரணம்?
12.பாரி மகள் போட்ட தங்க சோறு! தமிழர் வளம்!!
13.கற்பு பற்றி வள்ளுவர், வால்மீகி , கம்பர், ஷேக்ஸ்பியர், மநு!
14.இந்திய நூல்களில் சிகை அலங்காரம் -Part 1
15.இந்திய நூல்களில் சிகை அலங்காரம் -Part 2
16.தமிழ் இலக்கியத்தில் ஐம்பால் கூந்தல் – வேதத்தில் சிகை அலங்காரம்
17.தாலியை வைத்து கம்பன் சொன்ன கடும் வசவு
18.பெண்களிடம் ரஹஸியம் சொல்லக்கூடாது; ஏன்?
19.பெண்கள் குரங்குகள்! மஹாபாரதம் விசித்திர தகவல்
20.பெண்கள் மீது கை வைத்தால்………. கம்பன் எச்சரிக்கை!
21.பெண்கள் அழிவது எதனாலே? பிராமணர் அழிவது எதனாலே?
22.பெண்கள் பற்றி 300 தமிழ் பழமொழிகள்- Part 1
23.பெண்கள் பற்றி 300 தமிழ் பழமொழிகள்- Part 2
24.பெண்கள் பற்றி 300 தமிழ் பழமொழிகள்- இறுதிப் பகுதி
25.ஐயர்கள் உஷார்! பெண்களும் போட்டிக்கு வருகிறார்கள்!!
26.பெண்கள் வாழ்க
27.கெட்டிக்காரி யார்? ஒரு சமண மதக் கதை
28.உப்பு விற்கும் பெண் பாடிய கவிதை!
29.மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த பரிசு!
30..மூன்றும் கிடைக்காது! வேடிக்கைக் கவிதை
****
29.கணவர் மேல் 44 காதல் கவிதைகள்! இறந்த பின்னர் பெட்டிக்குள் 2000 கவிதைகள் !!
பொருளடக்கம்
1.இரண்டாயிரம் கவிதைகளை பெட்டிக்குள் வைத்துவிட்டு இறந்த அமெரிக்க பெண்மணி
2.புகழ்மிக்க நாவலாசிரியர் சார்லஸ் டிக்கென்ஸ்
3.சோகக் கதை மன்னன் தாமஸ் ஹார்டி
4.ஆங்கில கட்டுரையாளர், கவிஞர் சார்ல்ஸ் லாம்
5.பூதம் உருவாக்கிய பயங்கர எழுத்தாளி மேரி ஷெல்லி
6.எம்மா புகழ் அம்மணி ஜேன் ஆஸ்டின்
7.ஆங்கில நாவல்களின் தந்தை டேனியல் டீஃபோ
8.ஸ்பானிய நாவல் ஆசிரியர் மிகேல் டெ செர்வான்டிஸ்
9.ஆங்கிலக் கவிஞர் ஷெல்லி ;கவிஞர் ஷெல்லியின் ரசாயன மோகம்!
10.ஆயிரம் முறை தோல்வியுற்ற எடிசன்! முயற்சி திருவினை ஆக்கும்;
செவிடாக இருப்பதே மேல்!
11.ஆங்கிலக் கவிஞன் வில்லியம் வோர்ட்ஸ்வொர்த்
12.நம்மாழ்வாரும் ஆங்கிலக் கவிஞனும்
13.மர்மக் கதை மன்னன்; உலகில் முதல் துப்பறியும் கதை எழுதிய ‘போ’
14.ஷெர்லக் ஹோம்ஸ் கதைகள் எழுதிய சர் ஆர்தர் கானன் டாய்ல்
15.பேக்கர் ஸ்ட்ரீட் என்னும் போலி முகவரி
16.துப்பறியும் கதை நிபுணரை அசத்திய டாக்ஸி டிரைவர்!
17.ஆங்கில எழுத்தாளர் ஜொனாதன் ஸ்விஃப்ட்
18.மூர்த்தி சிறிது, கீர்த்தி பெரிது! போப்பும் ஸ்விFப்டும்
19.உதவும் குணம், உதார குணம் பற்றிய சுவையான சம்பவங்கள்,
20.இசை ஞானி ப்ராஹ்ம்ஸ் செய்த குசும்பு!
21.நட்பின் சின்னம் ஆப்ரஹாம் லிங்கன்!
22.ஆங்கிலக் கவிஞர் ஜான் மில்டன் பட்டப்பெயர் THE LADY சீமாட்டி!
23.யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க! – மில்டன்
24.டாக்டர் வேலையை விட்டு, கவிதை எழுத வந்தவர் கீட்ஸ்!
25.மோபி டிக்’ நாவல் எழுதிய ஹெர்மன் மெல்வில்
26.உலகத்தைக் கவர்ந்து இழுக்கும் ஷேக்ஸ்பியர்!
27.ஷேக்ஸ்பியர் நாடகத்தில் இந்துக்கள் போற்றும் துருவ நட்சத்திரம்!
28.பெண்ணின் மனம்: ரிக் வேதம், ஷேக்ஸ்பியர், தமிழ் பாட்டு ஒப்பீடு
29.ரஷ்ய நாவலாசிரியர் லியோ டால்ஸ்டாய்
30.என் தந்தையின் மொழிபெயர்ப்பு :அன்னா கரீனினா
31.இதாலிய கவிஞர் டான்டே; ரஷ்ய நாடக ஆசிரியர் செகோவ்
32.ஆர். கே. நாராயணனுக்கு உதவிய புகழ்மிகு
ஆங்கில நாவல் ஆசிரியர் கிரஹாம் க்ரீன்
33.ஆங்கிலத்தில் ‘பெயில்’ ஆன புகழ்பெற்ற கதாசிரியர் ஆர்.கே நாராய(ண)ன்
34.ஆஸ்கர் பரிசு வென்ற நாவல் ஆசிரியை டில்லிக்காரி ஆர் பி ஜாப்வாலா
35.கணவர் மீது 44 காதல் கவிதைகள் இயற்றிய எலிசபெத் ப்ரவுனிங்
36.மூன்று சகோதரிகள் ; மூவரும் நாவல் ஆசிரியை; 38 வயதுக்குள் இறந்தார்கள்!
37.நாடக ஆசிரியர் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா
38.அழகிய பெண்+ பெர்னார்ட் ஷா = அழகான, புத்திசாலிப் பிள்ளை!
39.பி.பி.சி. தமிழோசையில் பெர்னார்ட் ஷா நாடகம்
40.சோம ரசம் பற்றி நாவல் எழுதிய ஆங்கில ஆசிரியர் ஆல்டஸ் ஹக்ஸ்லி
41.சாகசம், விசித்திரம், கற்பனை கலந்த ஆங்கில
நாவல்கள் – ஜே.ஆர்.ஆர் டோல்கீன்
42.பிரம்மா பற்றி பாடிய அமெரிக்க கவிஞர் எமர்சன்
43.பிளாட்டோவும் என்னைப் போலவே அறிஞர்!
44.உள்ளத்தனையது உயர்வு; உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்!
45.அமெரிக்க கவிஞர் டி .எஸ். எலியட்
46.காலமெனும் மணலிற் காலடி ‘Footprints on the Sands of Time’ – Longfellow
47.லாங்பெலோ கவிதை – வாழ்விசைப்பா
48.நகைச்சுவை நாடக ஆசிரியர் ஷெரிடன்
49.கூன் முதுகுக் கவிஞர் அலெக்சாண்டர் போப்
50.பிரெஞ்ச் எழுத்தாளர் வால்டே(ய)ர்
51.வேலைக்காரியை கட்டி அணைத்த அகராதி ‘பிடித்த’ வெப்ஸ்டர்!
52.பாங்குப் பணத்தைத் திருடி சிறை சென்ற புகழ்பெற்ற
சிறுகதை ஆசிரியர் ஓ ஹென்றி
53.அகராதி “பிடித்த” சாமுவேல் ஜான்சன்
54.லண்டனில் பூனைக்கு ஒரு சிலை! ஒரு எழுத்தாளனின் சுவையான வரலாறு!
*************
தமிழ், சம்ஸ்க்ருத இலக்கியத்தில் பெண்கள்
பொருளடக்கம்
1.பங்குனி உத்திரத்தில் ராமன், சிவன் கல்யாணம் ஏன்?
2.ராமாயணம் படித்தால் சாபம் தீரும்! ராமாயண அதிசயங்கள்!
3.வால்மீகி ராமாயணத்தில் 3462 உவமைகள்!
4.பதஞ்சலி நூலில் கிஷ்கிந்தா மர்மம்
5.அனுமன் பிறப்பிடம் விவாதம்
6.நாலு குணங்கள் பற்றி வள்ளுவனும் வால்மீகியும்
7.வீணைக் கொடியுடைய வேந்தனே!
8.கம்பனின் அதிசயத் தமிழ் சிலம்பம்!
(9). 300 ராமாயணமா? 3000 ராமாயணமா?
10.அதிசயத் தமிழ் முனிவர் ‘புலவர் வால்மீகி’
11.வால்மீகி ராமாயணத்தில் பெண்கள்-1
12.கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
வால்மீகி ராமாயணத்தில் பெண்கள் – 2
13.‘இதை உனக்காக நான் செய்யவில்லை’–
வால்மீகி ராமாயணத்தில் பெண்கள் – 3
14.‘வாழ்நாள் முழுதும் கணவனுக்கு பணிவிடை’-
வால்மீகி ராமாயணத்தில் பெண்கள் -4
15.பெண் சந்யாசிகள்- வால்மீகி ராமாயணத்தில் பெண்கள் -5
16.விலை மாதரும் ஆடல் அழகிகளும் —
வால்மீகி ராமாயணத்தில் பெண்கள்- 6
17.அஹல்யா மானபங்கம் –வால்மீகி
ராமாயணத்தில் பெண்கள் -7 (இறுதிப் பகுதி)
18.சீதையிடம் அனுமன் கண்ட இரண்டு அதிசயங்கள்!
19.வாயு பகவான் சொன்ன ரகசியம்: கம்பன் தகவல்
20..இலங்கைத் தீவு உண்டானது எப்படி?
வாயு பகவான் பற்றிய அதிசயச் செய்திகள்
21.சிந்து சமவெளியில் ராமாயண முத்திரை!!
22.இலக்கியத்தில் 51 வகை பெண்மணிகள்!
23.அதிசயப் பெண்கள்- எட்டு மொழிகளில் 100 கவிகள் – 24 நிமிடங்களில்!
24.கணவனுக்காகப் போராடிய தமயந்தி, சாவித்திரி
25.வேதத்தில் இரண்டு வகைப் பெண்கள்
26.பெண்கள், ரத்தினம், கல்வி: எங்கிந்தாலும் பெறுக!
27.கணவனுடன் எரிந்து கருகிய தமிழ்ப் பெண்கள் பட்டியல்-1
28.கணவனுடன் எரிந்து கருகிய தமிழ்ப் பெண்கள் பட்டியல்-2
29.இந்தியப் பெண்கள் உலக மஹா அறிவாளிகள்! – பகுதி-1
30.இந்தியப் பெண்கள் உலக மஹா அறிவாளிகள்- பகுதி 2
31.ஒரு தாய், ஆயிரம் தந்தைகளை விடப் பெரியவள்
32.கர்ப்பிணிப் பெண்களைப் பார்க்கப் போகும்போது
33.யமன் (எமன்) போல வந்த 3 பெண்கள்!
34.இந்து மதத்தில் காதல், கடத்தல் கல்யாணங்கள்!!
35.தமிழனுக்கு முத்தம் கொடுக்கத் தெரியாது? -1
36.தமிழர்களுக்கு முத்தம் இடத் தெரியாது? -2
****************
Wonderful Weddings (book title)
Contents
1.HUSBAND IS ELEVENTH CHILD! – SAYS RIG VEDA
2.MARRIAGE CEREMONY MANTRA IN RIG VEDA
3.A Wife is a Gift from the Gods- Manu Smrti
4.A WIFE IS HALF THE MAN: STATUS OF WOMEN IN HINDUISM
5.RIG VEDIC WEDDING SCENE IN TURKEY
6.Three Beautiful Tamil Hindu Weddings
7.Kannaki and Andal Weddings
8.Kannaki praised Seven Tamil Women before Burning Madurai City
9.Beautiful Names of Ancient Kashmiri Women!
10.Beautiful Commentary on Five Day Brahmin Wedding! in 1903!!
11.Five Day Hindu Marriage- Part 1
12.FIVE DAY HINDU MARRIAGE – PART 2
13.FIVE DAY HINDU WEDDING- Part 3
14.FIVE DAY HINDU MARRIAGE- PART 4
15.Most Intelligent Woman in the Ancient World
16.TWO TYPES OF VEDIC WOMEN
17.GREAT WOMAN SCHOLAR AVANTI SUNDARI
18.Eastern and Western View of Women
19.GREAT HINDU HEROINES PADMINI & RANI SAMYUKTA
20.LET US ENTER FIRE BEFORE MUSLIMS TOUCH US- HEROIC SPEECH BY RANI BHAI
21.CHANAKYA ON WOMEN’S MIGHTY POWER!!!
22.UGLY GIRL IS OK- CHANAKYA
23.WOMAN AND YOGI- CHANAKYA
24.Definition of a Woman by a Tamil Poet!
25.Gems of Women: Varahamihirar’s Definition
26.Stri Rajya- Kingdom of Women in India!
27.Wonderful Syllabus for Women!
28.Hindu Women’s Education 2700 Years Ago!
29.Fifty-one Interesting Hindu Couples;
Four Types of Women
30.Sita’s Famous Quotes: I would Follow Eleven Women
****************
Woman is an Adjective, Man is a Noun
Contents
1.Mother’s Love: Gandhari’s First Night
2.One Mother is greater than 1000 Fathers!
3.Woman is an Adjective; Man is a Noun!
4.Only Religion where Woman is worshiped!
5.Are Women always demanding?
6.GANDHARI and KUNTI DIED IN FOREST FIRE with
VIDURA AND DHRITARASHTRA
7.GREATEST MUSLIM QUEEN OF INDIA
8.Hindu and Muslim Wedding
9.Hindu Baby Names and Astrology!
10.How Hindu Women Tackle Those Who Make Advances!
11.Mahabharata about Women!
12.Kalidasa’s Women and Tamil Women
13.FLOWERS IN TAMIL CULTURE
14.Custom of Garlanding and Flower Giving in
Tamil and Sanskrit Literature
15.Lotus Flower in the Vedas, Kalidasa and Sangam Tamil Literature
16.Sirisam and Anicham flowers in Tamil and Sanskrit literature
17.Pati – Vati – Mati—in Indus Valley Script
18.QUEEN DIDDA OF KASHMIR – A WOMAN OF
INTRIGUES AND EFFICIENCY
19.MORE SCIENTIFIC PROOF FOR SHAMUDRIKA LAKSHAN!
20.STORY OF WOMAN PHILOSOPHER CHUDALA
21.Scientific proof for Samudrika Lakshana
22.MORE ABOUT STUDY OF BODY FEATURES
23.Eaten but Fasting! Had Sex but Celibate Story!
24.Wife’s three Tests to her Husband! Story from Yoga Vasishta
25.Women who could Compose Verses in Eight Languages in 24 Minutes!
26.Murder of a Beautiful Mathematician
27.Women in state affairs are like Monkeys in Glass Shops
28.EMPEROR ASHOKA AND A PROSTITUTE !
29.Finance Minister’s Wife’s Gown – Uncovered Deficit!
30.Manu Smrti on Low Caste Women
—Subham —-
STORY OF TAMIL DEVADASIS AND ORIGIN OF DANCE DRAMA IN VEDAS
CONTENTS
1.Rare book on 30 Devadasis of Tamil Nadu
2.STORY OF TAMIL DEVADASIS -PART 1, INTRO AND PARAVAI
3.STORY OF TAMIL DEVADASIS -PART 2;
TIRUVARUNAI PANNIIRAAYIRUVAR, PON ANAIYAAR
4.STORY OF TAMIL DEVADASIS -PART 3;
MANIKKA VALLI, MANANTHAI
5.STORY OF TAMIL DEVADASIS- PART 4;
MANIKKA NACHIYAR AND GNANAVALLI
6.STORY OF TAMIL DEVADASIS – Part 5 :
KONDI AMMAL
7.STORY OF TAMIL DEVADASIS – PART 6;
KALIDASA-VILASAVATHY, KALAMEGHAM-MOHANANGI-
8.STORY OF TAMIL DEVADASIS- 7 ;
MANONMANI, ABHIRAMI, CHINTAMANI RATNAM
9.STORY OF TAMIL DEVADASIS- 8 ;
SILAMBI, ANJANAKSHI, SHENBAKAVADIVU
10.STORY OF TAMIL DEVADASIS – Part 9,
SOMI, VELLAI AMMAL, MADHAVI and MANIMEGALAI
11.STORY OF TAMIL DEVADASIS- PART 10;
SEERKAZI KANIKA, AMPOR SILAMBI & PUNGODAI
12.STORY OF TAMIL DEVADASIS—PART 11 ;
MADANA SUNDARI, MADANABISHEKAM
13.STORY OF TAMIL DEVADASIS – Part 12 ;
VELLAIAMMAL, KAMALAAMBIKAI
Part Two
14.Dance in the Vedas!
15.More about Bharatanatya in the Vedas!
16.Interesting titbits about Natyashastra of Bharata Muni
17.More Interesting Titbits about Natyasastra of Bharata
18.Colour for Actors and Ornaments in Natyashastra
19.Matavi’s 11 types of Classical Dance
20.How Dance & Drama came to Earth?
21.Watching Dance is Equal to Studying Vedas;
Sin will Run Away!
22.Origin of Drama in India, No connection with Greece!
23.The Ideal Dancer: Kalidasa
24.Classical Indian Dance Vs Dance in the West
25.Deva Dasis: Dancing Girls of Hindu Temples
26. Nineteen Dance Dramas in the Rig Veda
27.Bharata Muni statue unveiled in Delhi
28.Origin of Drama in Ancient India and Egypt
29.Drama, Puppet Show, Folk Theatre in Tamil and Sanskrit Literature
—subham—
Tags-, ஷேக்ஸ்பியர் நாடகங்கள், அவ்வையார், தாக்குதல், பெண்கள் ,Part 3 அறப்பளீசுர சதகம்,