Post No. 13,839
Date uploaded in London – 1 November 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
யஜுர் வேதத்தையும் சாம வேதத்தையும் ஆராய்ந்து வெள்ளைக்காரர்களுக்கு அறிமுகப்படுத்தியர் ஆல்பெர்ட் வீபர்.
அவர் இப்போது போலந்து நாட்டிலுள்ள பிரேஸ்லாவில் பொருளாதாரப் பேராசிரியர் ஒருவரின் மகனாகப் பிறந்தார். ஹீப்ரு/ எபிரேயம், கிரேக்கம், அராபியம், சம்ஸ்க்ருதம் மொழிகளைக் கற்றார். ஏராளமான ஆராய்ச்சிகளைச் செய்தபோதும் பல தவறான முடிவுகளையும் வெளியிட்டார். இது அவர் வாழ்ந்த காலத்தின் கோளாறு!
வெள்ளைக்கார்களுக்கு கிரேக்க நாடு ஒன்றுதான் தெரியும்; ஆகையால் உலகமே கிரேக்கத்திலிருந்து வந்தது என்று கதைப்பது வழக்கம்.
மேலும் வெள்ளைக்காரர்கள் உலகம் முழுதும்
சென்று மண்ணின் மைந்தர்களைக் கொன்று குவித்து ஆட்சியை நிலைநாட்டியதை நியாயப்படுத்த உலகம் முழுதும் ஆக் ரமிக்கப்பட்ட நிலம் என்ற வாதத்தையும் முன்வைத்தனர். மாக்ஸ்முல்லர் கும்பலும் கால்டுவெல் கும்பலும் ஆரியர்களும் திராவிடர்களும் இந்தியாவுக்குள் குடியேறியதாக சாகும் வரை எழுதி வந்தன. அது போல இவரும் ஆரியர் குடியேற்றம் பற்றி அழகாக ஜோடித்தார். ஆயினும் சமண மத, பிராகிருத, சம்ஸ்க்ருத ஆராய்ச்சி செய்து அவைகளை ஜெர்மன் மொழியில் எழுதிக் குவித்தார்.
ALBRECHT WEBER 1825-1931
ஆல்பெர்ட் வீபர்
பிறந்த தேதி – 17-2-1825
இறந்த தேதி – 30-11-1901
பிறந்த ஊர் – பிரெஸ்லாவ் (BRESLAU (NOW WROCLAW), போலந்து
சம்ஸ்க்ருத மொழி குரு- A.STENZLER ஏ ஸ்டென்ஸ்லர்
கல்வி கற்ற இடம் – பிரெஸ்லாவ் பல்கலைக் கழகம்,
வேலைபார்த்த இடம் –பெர்லின் பல்கலைக் கழகம், பேராசிரியர்
வேத ஆராய்ச்சிதான் இவரது முக்கிய ப் பணியாக இருந்தது ;அதோடு மொழியியல் வரலாறு ஆகிய துறைகளிலும் ஆர்வம் செலுத்தினார். .பான், பெர்லின் நகரங்களுக்குச் சென்று பல சொற்பொழிவுகளைக் கேட்டுவிட்டு சொந்த ஊரான பிரெஸ்லாவுக்குத் திரும்பி வந்து , யஜுர் வேத ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்டார். ஒன்பதாவது அத்தியாயத்தை மட்டும் மஹீதர பாஷ்யத்துடன் வெளியிட்டு இது மாதிரிதான்- சாம்பிள்— என்று சொன்னார். தேவநாகரியெழுத்து, ஆங்கில எழுத்து ஆகியவற்றுடன் மந்திரங்களை வெளியிட்டார்.
இதைத்தொடர்ந்து அவருக்கு பிரஷ்யன் அகாடமி பயணத்தொகை அளித்தது; அவர் பிரான்சுக்கும் இங்கிலாந்துக்கும் சென்று சுக்கில யஜுர் வேதத்தை வெளியிட்டார். பின்னர் பெர்லின் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் பதவியை ஏற்றார்
எழுதிய, மொழிபெயர்த்த நூல்கள் :–
சுக்ல யஜுர் வேதத்தை மூன்று தொகுதிகளாக வெளியிட்டார் . முதல் தொகுதியில் வாஜசநேயி , மாத்தியந்தினிய, கண்வ சாகைகளி களை மஹீதாரரின் பாஷ்யத்துடன் அச்சிட்டார்.
இரண்டாவது தொகுதியில் சதபத பிராமண நூலையும் மேற்கண்ட யஜுர் வேத சாகைகள் களுக்கு சாயனர், ஹரிசுவாமின், த்விவித வேத கங்கர் ஆகியோர் உரையுடன் அச்சிட்டார்.
மூன்றாவது தொகுதியில் காத்யாயன சிராவுத்த சூத்ரம் பலருடைய துறைகளுடன் வந்தது. இவைகள் பல விளக்கங்களுடனும் அடிக்குறிப்புகளுடனும் வெளியாயின ஜெ எக்லிங் என்ற ஜெர்மானிய அறிஞர் பின்னர் இவற்றின் பல பகுதிகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் அவை அனைத்தும் சாக்ரெட் புக்ஸ் ஆப் தி ஈஸ்ட் SACRED BOOKS OF THE EAST தொகுதிகளில் இடம்பெற்றன.
பின்னர் கிருஷ்ண யஜுர் வேத தைத்ரீய சம்ஹிதையையும் அச்சிட்டார்.
சம்ஸ்க்ருத அகராதி செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிலிருந்து வெளியானது; அதற்கும் இவர் பல குறிப்புகளை அளித்தார்
சம்ஸ்க்ருத நூல்களை கால வரிசையில் வெளியிட்டார்
மஹாபாஷ்யத்திலிருந்து அக்கால வரலாற்றினை எழுதினார்; பாணினியின் காலத்தை அதிலிருந்து யூகித்தார்
விக்ரமாதித்தன் கதைகள் ;காதா சப்த சதி ;சமண மத இலக்கியம்
Works
Indische Studien, 1849–85 (18 vols.)
Weiße Jadschurveda, London 1849-1859 (3 vols.)
Schwarze Jadschurveda, Leipzig 1871-1872
Tscharanawyuha. Übersicht über die Schulen der Vedas, Berlin 1855
Akademische Vorlesungen über indische Litteraturgeschichte, Berlin, 1852; 2d ed. 1876 (translated by Zachariae and Mann, London, 1878)
a translation of Kalidasa’s drama Mālavikā und Agnimitra, 1856
Indische Skizzen, Berlin 1857
Indische Streifen, Berlin 1868–1879 (3 vols.)
Verzeichnis der Sanskrithandschriften der königlichen Bibliothek zu Berlin, Berlin 1853–1892
Über das Catrunjaya des Mahâtmyam, Leipzig 1858
an edition of Hala’s Saptasataka, 1881
He also contributed much lexicographical material, especially from Vedic literature, to the Sanskrit-Wörterbuch of Otto von Böhtlingk and Rudolf Roth.
****
தவறான முடிவுகள்:
பிரளயம் பற்றிய கதை; ஆரிய குடியேற்றக் கதை என்ற தலைப்பில் தனது கருத்துக்களை வெளியிட்டார்;
வால்மீகி ராமாயணத்தில், கிரேக்க நாட்டு ஹோமரின் தாக்கம் இருக்கிறது என்றார் .
பாபிலோனியரிடமிருந்து இந்தியர்கள் சந்திராம்ச ஜோதிடத்தை அறிந்தனர்.
கிரேக்க- இந்தியக் கதைகளின் தொடர்பு
புத்தமதத்தின் ஒரு பிரிவு சமண மதம்.
சமண மத பிராகிருத மொழி
வேதகால இந்தியர்களின் நரபலிகள்
இந்த வீபரின் தவறான ஊகங்களைப் பிற்காலத்தில் வந்த ஆராய்ச்சியாளர்கள் தகர்த்து எறிந்தனர்.
–SUBHAM—
Tags- யஜுர் வேதம் , மேலை உலகம், வீபர் , ஜெர்மானிய அறிஞர், சமண மத ஆராய்ச்சி, சதபத பிராமணம் , காதா சப்த சதி, ALBRECHT WEBER , ஆல்பெர்ட் வீபர்