Date uploaded in Sydney, Australia – 8 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை 5
வள்ளலார் பாடலில் கந்த புராணக் கதைகள்
****
தெய்வமணிமாலை பாடல் 27
27. பிரமன்இனி என்னைப் பிறப்பிக்க வல்லனோ
பெய்சிறையில் இன்னும்ஒருகால்
பின்பட்டு நிற்குமோ முன்பட்ட சூட்டில்
பெறுந்துயர் மறந்துவிடுமோ
இரவுநிறம் உடைஅயமன் இனிஎனைக் கனவினும்
இறப்பிக்க எண்ணம்உறுமோ
எண்ணுறான் உதைஉண்டு சிதைஉண்ட தன்உடல்
இருந்தவடு எண்ணுறானோ
கரவுபெறு வினைவந்து நலியுமோ அதனைஒரு
காசுக்கும் மதியேன்எலாம்
கற்றவர்கள் பற்றும்நின் திருஅருளை யானும்
கலந்திடப் பெற்றுநின்றேன்
தரமருவு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.
இந்தப்பாடலில் மூன்று புராணக்கதைகளை அருட் பிரகாச வள்ளலார் எடுத்துரைக்கிறார்
1 .முருகப்பெருமானை சிறுவன் என்று மதியாது சென்ற பிரம்மாவை அவர் சிறையில் அடைத்தார்
2. .ஓம் என்னும் பிரணவ மந்திரத்துக்கு பொருள் கூற முடியாததால் முருகப்பெருமான் அவர் தலையில் குட்டு வைத்தார்.
அப்படிப்பட்ட பிரம்மா இனிமேல் தன்னைப் பிறப்பிக்க வல்லவர் இல்லை; ஏனெனில் நான், முருக பக்தன் என்கிறார் வள்ளலார். பழைய கதைகளை மறந்து பிரம்மா தன்னைப் பிறப்பிக்க முயன்றால் மீண்டும் சிறைப்படுவான் என்பது வள்ளலார் வாதம் .
3.மூன்றாவது கதை மார்க்கண்டேயன் கதை ; பதினாறு வயதானபோது மார்க்கண்டேயரின் உயிரைக் கவர வந்த யமனை சிவபெருமான் காலால் எட்டி உதைத்து கருமை நிற எமன் மீது தழும்பினை உண்டாக்கினார்; மார்க்கனேடேயனுக்கு வயது என்றும் பதினாறு என்று இயம்பினார் சிவன். அப்படி அடிபட்ட இயமன் தன் உயிரைக் கவர வல்லவன் அன்று என்பது வள்ளலார் வாதம் .
இந்தப் பாடலில் இனிமேல் தனக்கு ஜனன மரண சுழல் இல்லை ; ஏனெனில் முருக பக்தன் என்கிறார் .
கைலாயத்தில் சிவபெருமானைக் காணச் சென்ற பிரம்மதேவன் அங்கிருந்த முருகப்பெருமானை சிறுவன் என்று எண்ணி கண்டுகொள்ளாமல் அலட்சியம் செய்தார். முருகன் அவரை நிறுத்தி நீவீர் யார்? என்று வினவ , பிரம்மா தனது பெருமைகளைச் சொன்னார். ஓம் என்னும் பிரணவ மந்திரத்திலிருந்து படைப்பு துவங்கியதால் , முருன் பிரணவத்தின் பொருளைக் கேட்டார் ; பிரமனுக்கு சரியாகப் பதில் சொல்லத் தெரியவில்லை; உடனே மாணவர் தரையில் வாத்தியார் குட்டுவது போல பிரம்மன் தரையில் குட்டு வைத்து சிறையில் அடைத்தார் . பின்னர் பிரம்மன், சிவ பெருமானை வேண்டி விடுதலை பெற்றார்.
புத்திகூர்மையை அதிகரிக்கச் செய்யவும் நிறுவனங்களில் நேரடி பேட்டியில் கேட்கப்படும் புதிர் கேள்விகளுக்கு பதில் சொல்லவும் ஏராளமான புதிர்கள் உள்ளன.
இவற்றை புதிருக்கான புத்தகங்களிலும் படிக்கலாம்; இணைய தளத்திலும் பார்க்கலாம்.
மாதிரிக்காக மூன்று புதிர்கள் இதோ!
1
கேள்வி:
உங்களிடம் 3 லிட்டர் மற்றும் 5 லிட்டர் கேன்கள் உள்ளன. நீரைப் பிடிக்க பக்கத்தில் ஒரு குழாயும் உள்ளது. 4 லிட்டர் தண்ணீர் வேண்டும். இந்த இரண்டு கேன்களையும் மட்டுமே நீங்கள் பயன்படுத்த முடியும். வேண்டுமானால் கேன்களில் உள்ள நீரை கீழேயும் கொட்டிக் கொள்ளலாம். எப்படி 4 லிட்டர் நீரை நீங்கள் தருவீர்கள்?
விடை:
சற்று யோசித்தால் நமக்கு நல்ல வழி புலப்படும்.
முதல் வழி இதோ:
முதலில் 5 லிட்டர் கேனை குழாயிலிருந்து கொட்டும் நீரால் நிரப்புங்கள்
3 லிட்டர் கேனில் இந்த 5 லிட்டர் கேன் நீரைக் கொட்டுங்கள். இப்போது 5 லிட்டர் கேனில் இரண்டு லிட்டர் நீர் மட்டுமே இருக்கும்.
அடுத்து 3 லிட்டர் கேனில் உள்ள நீரைக் கீழே கொட்டுங்கள்.
5 லிட்டர் கேனில் உள்ள 2 லிட்டர் நீரை 3 லிட்டர் கேனில் கொட்டுங்கள்.
அடுத்து 5 லிட்டர் கேனில் நீரை நிரப்புங்கள்
3 லிட்டர் கேனில் மீதி இருக்கும் 1 லிட்டர் அளவுக்கு நீரை நிரப்புங்கள்/
இப்போது 5 லிட்டர் கேனில் இருப்பது நான்கு லிட்டர் நீர் தான்!
நீங்கள் கேட்ட 4 லிட்டர் நீர் இதோ என்று சொல்லலாம்.
இன்னொரு வழியும் இருக்கிறது.
குழாயிலிருந்து வரும் நீரால் 3 லிட்டர் கேனை நிரப்புங்கள்.
இந்த நீரை 5 லிட்டர் கேனில் கொட்டுங்கள்.
மீண்டும் 3 லிட்டர் கேனை நிரப்புங்கள்
5 லிட்டர் கேனில் இந்த நீரைக் கொட்டுங்கள். இப்போது ஒரு லிட்டர் நீரே 3 லிட்டர் கேனில் இருக்கும்.
5 லிட்டர் கேனில் உள்ள நீரைக் கொட்டி விடுங்கள்.
3 லிட்டர் கேனில் உள்ள ஒரு லிட்டர் நீரை 5 லிட்டர் கேனில் கொட்டுங்கள்.
இப்போது 3 லிட்டர் கேனில் நீரை நிரப்புங்கள்.
இதை 5 லிட்டர் கேனில் கொட்டுங்கள்.
இப்போது 5 லிட்டர் கேனில் இருப்பது 4 லிட்டர் நீர் தான்!
நீங்கள் கேட்ட 4 லிட்டர் நீர் இதோ என்று சொல்லலாம்.
2
ஒரு ஜப்பானிய கப்பல் பசிபிக் கடலில் சென்று கொண்டிருக்கிறது. காப்டன் குளிப்பதற்குச் செல்ல நினைத்து தனது வைர செயினையும் தங்க கடிகாரத்தையும் மேஜையின் மீது வைத்து விட்டு குளியலறைக்குச் செல்கிறார். பத்து நிமிடங்கள் குளியலை முடித்து விட்டு மீண்டும் வந்து மேஜையைப் பார்க்கும் போது செயினையும் கடிகாரத்தையும் காணோம்.
அதை யார் திருடி இருப்பார்கள்?
தனது கப்பலில் உள்ள குழுவினரை அழைத்த அவர் கடந்த 10 நிமிடங்களில் அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர் என்று கேட்கிறார்.
குழுவில் இருந்த நான்கு பேரும் பதிலைச் சொல்கிறார்கள் இப்படி.
முதலில் சமையல்காரர்: “நான் குளிர் பதன அறைக்குச் சென்று சமைப்பதற்காக எந்த இறைச்சியை எடுக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.
இரண்டாவதாக ஒரு வேலையாள் : நான் கப்பலின் மேல் தளம் சென்று தலைகீழாக இருந்த கொடியைச் சரி செய்து கொண்டிருந்தேன்.
மூன்றாவதாக எஞ்ஜினியர் : நான் ஜெனரேட்டர் ரூமில் ஜெனரேட்டரை சரி பார்த்துக் கொண்டிருந்தேன்.
நான்காவதாக சுத்தம் செய்யும் வேலையாள் : இரவு ஷிப்டை முடித்து விட்டு நான் தூங்கிக் கொண்டிருந்தேன்.
காப்டன் நன்கு யோசித்தார். வேலையாள் தான் பொய் சொல்கிறான், அவன் தான் செயினையும் கடிகாரத்தையும் எடுத்தான் என்பதை அவர் கண்டு பிடித்தார். எப்படி?
ஒரு வட்டத்தை மட்டுமே கொண்டிருக்கும் ஜப்பானிய கொடியில் மேல், கீழ் என்பது கிடையாது. எந்தப் பக்கம் பார்த்தாலும் வட்டம் ஒன்று தான். ஆகவே கொடி தலைகிழாக இருக்கிறது என்று அவன் சொல்வது நிச்சயம் பொய் தான்!\\
அவனை அதட்டி விசாரிக்க அவன் தான் எடுத்ததை ஒப்புக் கொண்டு செயினையும் கடிகாரத்தையும் திருப்பித் தந்தான்.
ஜப்பானிய கொடியின் படம் இதோ:
3
கேள்வி:
தவறாக லேபிள்கள் ஒட்டப்பட்ட 3 ஜாடிகள் உள்ளன. ஜாடிகள், உள்ளே இருப்பதைப் பார்க்கக் கூடியபடி உள்ள அமைப்பைக் கொண்டவை அல்ல. ஒன்றில் ஆப்பிளும் இன்னொன்றில் ஆரஞ்சும் மூன்றாவதில் இரண்டும் கலந்தும் உள்ளன. சரியாக லேபிள்களை நீங்கள் தான் ஒட்ட வேண்டும். எத்தனை பழங்களை வேண்டுமானாலும் எந்த ஜாடியிலிருந்து வேண்டுமானாலும் நீங்கள் எடுக்கலாம். நீங்கள் எத்தனை பழத்தை எடுத்து ஜாடிகளை முறைப்படுத்தி லேபிளை ஒட்டுவீர்கள்? சொல்லுங்கள் பார்ப்போம்!
விடை
ஒரே ஒரு பழத்தை எடுத்தால் போதும்.
எப்படி?
ஜாடிகளின் லேபிள்கள் தவறாக ஒட்டப்பட்டுள்ளன என்பது உங்களுக்கு நன்கு தெரியும். ஆகவே முதலில் இரண்டு பழங்களும் கலந்தவை என்று லேபிள் ஒட்டப்பட்ட ஜாடியிலிருந்து ஒரு பழத்தை எடுங்கள். அது ஆப்பிள். ஆக அது ஆப்பிள் ஜாடியாகத் தான் இருக்க வேண்டும்.
அடுத்து மீதி உள்ள இரண்டு ஜாடிகளில் ஆரஞ்சு என்று தவறாக ஒட்டப்பட்ட ஜாடி நிச்சயமாக ஆரஞ்சுப் பழங்கள் உள்ள ஜாடி இல்லை என்பது தெரிகிறது. அதுவே அது நிச்சயமாக இரு பழங்களும் கலந்த ஜாடி. மீதி இருப்பது ஆரஞ்சுப் பழ ஜாடி.
Date uploaded in Sydney, Australia – 7 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
எங்கே கட்டத்தை நிரப்பிப் பாருங்கள்
7-1-2025
1
2
3
4
5
6
7
ACROSS
1.நாதமுனிகளின் சீடரான மணக்கால் நம்பிகளால் யமுனைத்துறைவன் என இவருக்கு பெயர் சூட்டப்பட்டது. மணக்கால் நம்பிக்குப் பிறகு ஆசாரிய பட்டம் பெற்றவர் .இராமானுசரின் முதன்மை குரு இவர்.
4.யானைக்கு இது பிடித்தால் — யானை என்போம்.
5.கோவா, டையூ, …………. மூன்றும் போர்ச்சுகீசியர் ஆண்ட இடம்.
6.ஆற்றின் ஓரம்; கடலின் ஓரம். (Right to left) குறுக்கே வலம் இடமாக செல்க
7.மனத்தினால் கோவில் கட்டிய நாயன்மார் (Right to left) குறுக்கே வலம் இடமாக செல்க.
DOWN
1.திருவாடிப் பூரத்தில் ஜகத்துதித்தாள் இவள்.
2.பெண்ணுக்கு —– தேடி அலைந்தார் தந்தை.
3.இந்தியாவின் தேசீய மலர் ;
6.சுதந்திரப்போராட்டத்தில் தியாகிகள் அணிந்தது ;go up கீழிருந்து மேலே செல்க
Date uploaded in Sydney, Australia – 7 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
தெய்வமணி மாலையில் உவமை நயம் தொடர்ச்சி
தெய்வமணி மாலை பாடல் எண் 3
துடிஎன்னும் இடைஅனம் பிடிஎன்னும் நடைமுகில்
துணைஎனும் பிணையல்அளகம்
சூதென்னும் முலைசெழுந் தாதென்னும் அலைபுனல்
சுழிஎன்ன மொழிசெய்உந்தி
வடிஎன்னும் விழிநிறையும் மதிஎன்னும் வதனம்என
மங்கையர்தம் அங்கம்உற்றே…………
இந்தப் பாடலில் பெண்கள் வருணனை நாடு முழுதும் காணப்படும் வருணனையைப் போல உள்ளது
பெண்களின் இடுப்பு = துடி= உடுக்கை;
நடை= அன்னம், பெண் யானையின் நடை;
முகில், அளகம் = மேகம் போல கருத்த கூந்தல்;
சூது முலை/ நகில் = சூதாடு கருவி, தாமரை மொட்டு
சுழி உந்தி= நீர்ச்சுழல் போன்ற கொப்பூழ் ;
வடி விழி = வேல் விழியாள்;
மதிவதனம் = சந்திர வதனா/முகம்
****
ஏழு பகைவர்கள்
காமஉட் பகைவனும் கோபவெங் கொடியனும்
கனலோப முழுமூடனும்
கடுமோக வீணனும் கொடுமதம் எனுந்துட்ட
கண்கெட்ட ஆங்காரியும்
ஏமம்அறு மாச்சரிய விழலனும் கொலைஎன்
றியம்புபா தகனுமாம்இவ்
வெழுவரும் இவர்க்குற்ற உறவான பேர்களும்
காமம், க்ரோதம், லோபம், மோகம், மதம், மார்ச்சர்யம் இவை ஆறும் உட்பகைவர்கள்; இத்துடன் கொலை சேர்ந்து ஏழு பகைவர்கள் ; மற்றும் அவைகளுடன் தொடரும் பொய் போன்ற பிற குணங்கள் .
ஆறு உட்பகையாகிய தீய குணங்களைப் பகைவன், கொடியன் மூடன், வீணன், அகங்காரி /ஆங்காரி, விழலன் என்று உருவகித்துக் கூறுகிறார் வள்ளலார் .
****
எனக்கு வேண்டுபவை
7.நிலைஉறும் நிராசையாம் உயர்குலப் பெண்டிரொடு
நிகழ்சாந்த மாம்புதல்வனும்
நெறிபெறும் உதாரகுணம் என்னும்நற் பொருளும்மருள்
நீக்கும்அறி வாம்துணைவனும்
மலைவறு நிராங்கார நண்பனும் சுத்தமுறு
மனம்என்னும் நல்ஏவலும்
வருசகல கேவலம்இ லாதஇட மும்பெற்று
வாழ்கின்ற வாழ்வருளுவாய்
முந்தைய பாடலில் ஏழு பகைவர்களை வேண்டாம் என்றார்; இனி வரும் பாடல்களில் என்ன வேண்டும் என்று ராமலிங்கர் பட்டியலிடுகிறார். இந்தப் பாடலில் அவைகளை உருவகப் படுத்துகிறார்.
உயர்குலப்பெண் மனைவி= நிராசை; ஆசையே இல்லாத நிலை ;
மைந்தன் = சாந்தம்; அமைதி ;
உதார குணம் = நற்பொருள்; செல்வம்;
மருள் நீக்கும் அறிவு = துணைவன் ;
பகைமையைப்போக்கும் நிரங்காரம்= நண்பன் ;
மாசற்ற மனம் = வேலைக்காரன்;
சகலாவத்தை, கேவலாவத்தை இல்லாத வசிப்பிடம்= வீடு;
இவைகளை அருள்வாயாக.
****
கிழட்டுக் காகம்
கரையில்வீண் கதைஎலாம் உதிர்கருங் காக்கைபோல்
கதறுவார் கள்ளுண்டதீக்
கந்தம்நா றிடஊத்தை காதம்நா றிடஉறு
கடும்பொய்இரு காதம்நாற
வரையில்வாய் கொடுதர்க்க வாதம்இடு வார்சிவ
மணங்கமழ் மலர்ப்பொன்வாய்க்கு
மவுனம்இடு வார்இவரை மூடர்என ஓதுறு
வழக்குநல் வழக்கெனினும்நான்
உரையிலவர் தமையுறா துனதுபுகழ் பேசும்அவ
ரோடுறவு பெறஅருளுவாய்
சாகின்ற கிழட்டுக் காகம் கத்துதல் – வீண் கதை பேசுதல்;
குடிகாரன் உளறல், வாய் நாற்றம் = பொய்கள், குதர்க்கவாதம்;
மணங் கமழ் பொன்வாய் உரை = சிவனடியார் பேச்சு.
****
13. வன்பெரு நெருப்பினைப் புன்புழுப் பற்றுமோ
வானைஒரு மான்தாவுமோ
வலியுள்ள புலியைஓர் எலிசீறு மோபெரிய
மலையைஓர் ஈச்சிறகினால்
துன்புற அசைக்குமோ வச்சிரத் து‘ண்ஒரு
துரும்பினால் துண்டமாமோ
சூரியனை இருள்வந்து சூழுமோ காற்றில்மழை
தோயுமோ இல்லைஅதுபோல்…………………………..
நெருப்பிடத்தில் புழு அணுகாது;
நீண்ட இடைவெளியை மான் கூடத் தாண்ட முடியாது ;
புலியை எலி வெல்ல முடியாது ;
ஈயின் சிறகடித்து மலையை அசைக்க முடியாது ;
வஜ்ஜிரம் போன்ற தூணைத் துரும்பு ஒன்றும் செய்ய இயலாது;
கதிரவனைக் காரிருள் மங்க செய்யாது;
காற்றினை மழைத்துளிகள் நனைக்க முடியாது
அதேபோல அடியார்களுக்குத் துன்பங்கள் வர இயலாது ; தீய குணங்களும் அவர்களை அணுகமுடியாது .
****
14. காணலிடை நீரும்ஒரு கட்டையில் கள்வனும்
காண்உறு கயிற்றில் அரவும்
கடிதரு கிளிஞ்சிலிடை வெள்ளியும் பொன்னைக்
கதித்தபித் தளையின்இடையும்
மானலில் கண்டுள மயங்கல்போல் ………
கானல் நீர் = நீரல்ல;
இருட்டில் தெரியும் கட்டை= திருடன் அல்ல ;
இருட்டில் தெரியும் கயிறு = பாம்பு அல்ல;
சிப்பியின் பளபளப்பு = வெள்ளி அல்ல;
பளபளப்பு உள்ள பித்தளை= தங்கம் அல்ல;
இந்த உவமைகளில் சில பதினோராம் பாடலிலும் வந்துள்ளன.
****
15. கற்றொளிகொள் உணர்வினோர் வேண்டாத இப்பெருங்
கன்மவுட லில்பருவம்நேர்
கண்டழியும் இளமைதான் பகல்வேட மோபுரைக்
கடல்நீர்கொ லோகபடமோ
உற்றொளியின் வெயில்இட்ட மஞ்சளோ வான்இட்ட
ஒருவிலோ நீர்க்குமிழியோ
உரைஅனல் பெறக்காற்றுள் ஊதும் துருத்தியோ……..
மாறும் பருவ காலம் = இளமைப் பருவம் ;
இளமைப்பருவம் நீடிக்காது ; அது = கலையும் வேடம்; கடல் அலை; வெளிப்படும் வஞ்சனை; மாலை நேர மஞ்சள் வெய்யில்; வானவில் ; நீர்க்குமிழி; காற்று ஊதும் துருத்தி .
மேக்கூறிய அனைத்தும் நிலைக்காமல் மாறிக்கொண்டே இருக்கும் என்று வள்ளலார் சொல்கிறார்
இங்கே நீதிநெறி விளக்கப் பாடலையும் ஒப்பிட்டு ரசிக்கலாம்
1. கடவுள் வாழ்த்து
நீரில் குமிழி இளமை நிறை செல்வம்
நீரில் சுருட்டும் நெடுந்திரைகள் – நீரில்
எழுத்து ஆகும் யாக்கை நமரங்காள் என்னே
வழுத்தாதது எம்பிரான் மன்று
(பொருள்.) இளமை நீரில் குமிழி – இளமைப்பருவம் நீரிலுண்டாகும்குமிழியாகும். நிறை செல்வம் நீரில் சுருட்டும் நெடுதிரைகள் – நிறைந்த செல்வம்நீரிலே காற்றினாற் சுருட்டப்படும் உயர்ந்த அலைகளாகும், யாக்கை நீரில் எழுத்துஆகும் – உடம்பு நீரிலெழுதிய எழுத்தாகும்; (இங்ஙனமிருக்க), நமரங்காள் – நம்மவர்களே!’எம்பிரான் மன்று வழுத்தாதது என்னே – நம்கடவுளுடைய மன்றினை (அம்பலத்தை) வாழ்த்தி வணங்காதது ஏனோ?
(கருத்து.) இளமையும் செல்வமும், யாக்கையும் நிலையாமையால், அவை உள்ள பொழுதே இறைவனை வழிபட்டுக் கொள்கவென்பது.
அடுத்த கட்டுரையில் வள்ளலாரின் வாய்மொழி வழியாகக் கந்தபுராணக் கதைகளைக் காண்போம்
Date uploaded in Sydney, Australia – 7 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Hindu Crossword712025
1
2
3
4
5
6
7
8
9
ACROSS
1.- girl’s name; saluting; worshipping in Sanskrit and Indian languages
5. The world, the habitation of mortals. 2. Mundane existence. 3. A succession of births or existences. 4. Transmigration, metempsychosis. 5. Wordly illusion. 6. Secular life. 7. Course, passage..
6.Saints of Shirdi and Puttaparthi are known this name
7.Dawn in Rig Veda; Girl’s name;
8.Twilight; Brahmin’s thrice a day ritual has this word; they do it in dawn, noon, sunset
****
DOWN
2.Father of sati/Parvati who insulted Shiva and got destroyed
3.snake demon killed by Krishna
4.Indian bird named after its cry
8.auspicious, benevolent
9. is the name of one of the four gandharva sons of Sage Kashyapa and his wife Pradha in Hindu mythology; also laughing sound
3-12-24 13964 சந்தானம் சீனிவாசன் அவர்களுக்கு அஞ்சலி – 2 (1-12-2024 ஞானமயம் நிகழ்ச்சி உரை)
4-12-24 13967 S Nagarajan Article Index November 2024
5-12-24 13972 பயிற்சி செய் அல்லது செத்து மடி : ப்ரூஸ் லீயின் அறிவுரை! (27-11- 24 கல்கி இதழில் வெளியாகியுள்ள கட்டுரை).
6-12-24 13975 அதீத உளவியல் விஞ்ஞானிகள் அதிசயித்த பாபா! (kalkionline தீபம் இதழில் 23-11-2024 அன்று வெளியான கட்டுரை!). 7-12-24 13979 அரவிந்தரின் நகைச்சுவை – மஹரிஷி அரவிந்தரிடமிருந்து
TIME: 12 noon LONDON TIME; 5-30 PM IST; 11 PM Sydney Time
VIA ZOOM, FACE BOOK, YOU TUBE
PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES
***
Prayer was sung by Miss Harshika Venkatraman
World Hindu News in Tamil was presented by Vaishnavi Anand from London
***
Bengaluru Nagarajan spoke about Great Saint Thirumoolar.
***
Brahannayaki Sathyanarayan explained the significance of GAYA KSHETRA .
***
SPECIAL PROGRAMME
Interview with Violinist Miss Aparna Raguraman of London by Sandhya Sridhar
Miss Sandhya Sridhar interviewed young London violinist Miss Aparna Raguraman
Daughter and Disciple of renowned musicians Sri Balu Raguraman & Smt Subathra Raguraman, Aparna Raguraman was initiated into the art of violin playing at a very young age. Milapfest awarded the National youth Fellowship to Aparna for the years 2020 and 2021, following with her violin Arangetram in the year 2022 with the support of Sri Srimushnam V Raja Rao. Aparna was featured as a special artiste in the group conducted by Miss Anoushka Shankar and performed at The Royal Festival Hall, South Bank Centre, London in 2022 and has toured Italy for a series of Concerts organized by the Isha Foundation. Aparna debuted her performances in the Chennai music season for several concerts in 2024. Having attended various workshop conducted by Sri Ganesh Rajagopalan and Sri Lalgudi Krishnan, Aparna now trains under Smt A Kanyakumari in Chennai.
Miss Aparna Raguraman was interviewed by Miss Sandhya Sridhar
Sandhya Sridhar is an Odissi dancer based in London, UK. Alongside her profession as a scientist, she has nurtured a range of arts from a young age. She hails from an artistic family- daughter of Smt. Geetha Sridhar, Bharathanatyam Dancer and niece of Kalaimamani Sukanya Ramesh, film actress and Bharathanatyam Dancer. Her maternal family is steeped in artistic lineage, descending from the eminent actress S Jayalakshmi, Veenai S Balachander and painter S Rajam.
She received tutelage in Carnatic violin from Sri Balu Raguraman at a young age at the Bharatiya Vidya Bhavan.
She trained in Odissi dance with Smt Swapnokalpa Dasgupta (NCPA Mumbai), following induction into the form from Smt Sujata Mohapatra. She has additionally received tutelage from Smt Poushali Mukherjee and Smt. Barnali Mitra. She completed her Rang Manch Pravesh (debut performance) at Bharatiya Vidya Bhavan in Chennai in 2013- the first event of its kind in Chennai. She has performed at numerous events and festivals both in the UK and internationally, including International Yoga Day in London, Equator Festival, Kent and Indian High Commission Veterans Day.
Sandhya continues to practice and perform Odissi whilst pursuing her PhD with Imperial College London in Oncology.
***
Anchored by London swaminathan in Sydney, Australia and Kalyanji in India
If you need Zoom link, please contact us; if you want to talk or interview or sing, please contact us.