
Post No. 14,326
Date uploaded in London – 30 March 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
பண்டிகைகள்:– ராமநவமி- 6; மஹாவீரர் ஜெயந்தி -10; பங்குனி உத்தரம் – 11/12; ஹனுமான் ஜெயந்தி -12; தமிழ் புத்தாண்டு – 14; அக்ஷய திருதியை – 30
கிறிஸ்தவப் பண்டிகை= புனித வெள்ளி – 18; ஈஸ்டர் ஞாயிறு -20; ஈஸ்டர் திங்கள் -21
ஏகாதசி உண்ணாவிரத நாட்கள்- 8, 24;
பூர்ணிமா -12; அமாவாசை – 27.
சுப முகூர்த்த தினங்கள்
ஏப்ரல் 4, 7, 9, 11, 16, 18, 23, 25, 30

ஏப்ரல் 1 செவ்வாய்க்கிழமை
துகிலில் வர்ணம் வீசு-என்
துணியில் வர்ணம் பூசு!
முகில்வண்ணா!உன்நிறமென்
துகிலில் நன்றாய்ப்பூசு!
****
ஏப்ரல் 2 புதன்கிழமை
1 )ஆயுள் பூராவும் வண்ணான்
அடித்துத் தோய்த்தாலும்,
ஒட்டிய உன் வண்ணம்
விட்டுவிடாதவண்ணம் (துகிலில்………..)
****
ஏப்ரல் 3 வியாழக்கிழமை
2 )செவ்வண்ணம் வேண்டாம் ;
பச்சைநிறமும் வேண்டாம் ;
உந்தன் முகில் வண்ணத்தையே
என் துகிலில் பூசு!என்னன்புக்கண்ணனே!(துகிலில்)
****
ஏப்ரல் 4 வெள்ளிக்கிழமை
3 ) வாழ்நாளெல்லாமென்னைக்
காத்திருக்கவைத்தாலும்
வர்ணம் பூசிக் கொள்ளாமல்
வீடு செல்லமாட்டேன்!(துகிலில்)
****
ஏப்ரல் 5 சனிக்கிழமை
நீரினும் நுண்ணியது எது?
பூமியினும் பாரமானது எது?
தீயினும் வெம்மையானது எது?
மையினும் கருமையானது எது?
****

ஏப்ரல் 6 ஞாயிற்றுக்கிழமை
நீரினும் நுண்ணியது ஞானம்!
பூமியினும் பாரமானது பாபம்!
தீயினும் வெம்மையானது க்ரோதம்!
மையினும் கறுமையானது களங்கம்!(துகிலில்)
****
ஏப்ரல் 7 திங்கட்கிழமை
மீராவின் கிரி தரன் சரணத்திலே,
பிரபு சரணத்திலே,அரிசரணத்திலே,
ஷ்யாம் சரணத்திலே
இணைந்ததென்னிதயம் (துகிலில்)
****
ஏப்ரல் 8 செவ்வாய்க்கிழமை
எழுந்திரு அன்பே எழுந்திரு அன்பே
கையில் குழலுடன் காதலனே எழுந்திரு
இரவும் முடிந்ததே விடியலும் வந்ததே
கதவும் திறந்ததே வீடுகள் விழித்தனவே
****
ஏப்ரல் 9 புதன்கிழமை
கோபியர் கைவளை குலுங்க தயிர் கடைய
காலைப் பொழுது வந்ததே காளையனே எழுந்திரு
****
ஏப்ரல் 10 வியாழக்கிழமை
வாசலில் தேவதைகள் வந்து காத்திருக்க
ஆசையுடன் யாதவர் கையிலே கொண்டாரே
வெண்ணைப் பண்டம் உனக்காக தருவாரே
மண்ணிலே பசுவைக் காக்கும் பாலகனே
*****

ஏப்ரல் 11 வெள்ளிக்கிழமை
மீராவின் காதலனே உன்னையே நாடி வந்தேன்
என்னையும் காப்பாயே அடைக்கலம் தருவாயே
****
ஏப்ரல் 12 சனிக்கிழமை
காலில் கொலுசுடன் ஆடுவேனே மீரா ஆடுவேனே
தாளில் பணிந்த பணியாளாய் ஆனேனே என் நாராயணன்
தாளில் பணிந்த பணியாளாய் ஆனேனே
****
ஏப்ரல் 13 ஞாயிற்றுக்கிழமை
இராணா அனுப்பிய விஷமும் குடித்தேனே
தானாக சிரித்தபடி குடித்தேனே நானும்
தானாக சிரித்தபடி குடித்தேனே
****
ஏப்ரல் 14 திங்கட்கிழமை
உலகம் முட்டாளென சொல்லுமே
சுலபத்தில் ஏளனம் செய்யுமே
சுலபத்தில் ஏளனம் செய்யுமே
****
ஏப்ரல் 15 செவ்வாய்க்கிழமை
கலகம் செய்து குடும்பம் அழிப்பாளென்று
உலகில் சொல்லும் உறவுகளே
உலகில் சொல்லும் உறவுகளே
****
ஏப்ரல் 16 புதன்கிழமை
இல்லத்தில் இருப்பானே இல்லாது மறைவானே
உள்ளபடி காட்டிலே உல்லாசமாய் திரிவானே
இராதை உடனே இராசத்தில் இருப்பானே
பாதை காட்டியே பாவையுடன் வருவானே
****
ஏப்ரல் 17 வியாழக்கிழமை
மீரா கொண்டேன் அழியா உறவே
கோவர்த்தன கிரிதாரியுடன்
மீரா கொண்டேன் அழியா உறவே
****
ஏப்ரல் 18 வெள்ளிக்கிழமை
நீ துக்கங்களை அறவே களைவாயே
நீ துக்கங்களை அறவே களைவாயே
அன்று அழகாய் சேலைகள் தந்தாயே
நின்று திரௌபதி மானம் காத்தாயே
****
ஏப்ரல் 19 சனிக்கிழமை
பக்தனைக் காக்க உருமாறி வந்தாயே
தக்க தருணத்தில் நரஹரியாய் வந்தாயே
நரசிம்ம கோலத்தில் நரனை அழித்தாயே
வரங்கள் வாங்கியவனை வாகாய் பிளந்தாயே
****
ஏப்ரல் 20 ஞாயிற்றுக்கிழமை
ஆதி மூலமாய் முதலை வாயிலிருந்து காத்தாயே
ஜோதியாய் கஜேந்திரனுக்கு சுகம் அளித்தாயே
****
ஏப்ரல் 21 திங்கட்கிழமை
ஓ மீராவின் கிரிதாரி
துக்கம் என்னை சூழ்ந்திருக்க காக்க வைப்பாயோ
வருவாயே வருவாயே என்னை விடுவிப்பாயே
*****
ஏப்ரல் 22 செவ்வாய்க்கிழமை
உன் காரணமாக உலக சுகம் விட்டேனே என்னைக் காக்க வை ப்பது ஏநோ
கருநீல அழகனுக்கு காணிக்கை தந்தேன்; காதலுடன் என் வாழ்னவ காலடியில் தந்தேன்
****
ஹரி குணம் பாடி நான் ஆடுவேனே பிரபு குணம் பாடி நான் ஆடுவேனே
என் மனக் கோவிலில் இருப்பேனே
நான் கீதை, பாகவதம் படிப்பேனே
****
ஏப்ரல் 24 வியாழக்கிழமை
எழுந்திரு அன்பே எழுந்திரு அன்பே னகயில் குழலுடன் காதலனே எழுந்திரு
இரவும் முடிந்ததே விடியலும் வந்ததே கதவும் திறந்ததே வீடுகள் விழித்தனவே
****
ஏப்ரல் 25 வெள்ளிக்கிழமை
கோபியர் கைவளை குலுங்க தயிர் கடைய
காலைப் பொழுது வந்ததே காளையனே எழுந்திரு
****
ஏப்ரல் 26 சனிக்கிழமை
வாசலில் தேவதைகள் வந்து காத்திருக்க
ஆசையுடன் யாதவர் கையிலே கொண்டாரே
****
ஏப்ரல் 27 ஞாயிற்றுக்கிழமை
வெண்ணைப் பண்டம் உனக்காக தருவாரே
மண்ணிலே பசுவைக் காக்கும் பாலகனே
மீராவின் காதலனே உன்னையே நாடி வந்தேன்
என்னையும் காப்பாயே அடைக்கலம் தருவாயே
****
ஏப்ரல் 28 திங்கட்கிழமை
உன் பணியாளாய்
வைத்துக் கொள் lஎன்னை உன் பணியாளாய்
வைத்துக் கொள்
****
ஏப்ரல் 29 செவ்வாய்க்கிழமை
கோவிந்தனை என்னுடன் கூட்டியே வந்தேனே
பேரமும்பேசி அன்னையே போற்றியே பெற்றேனே
****
ஏப்ரல் 30 புதன்கிழமை
மலிவென்று சிலரும் மகத்தென்று சிலரும்
கலியிலே கூறவே கருத்திலே எடைபோட்டேனே
கருநிறம் என்பாரே கடல்வெண்மை என்பாரே
கருத்தினில் நிறைந்தவனுக்கு ஒரு நிறம் இல்லையே
Please note that i have taken Tamil translations of Mirabai from the websites; thanks.
—-subham—-
Tags- மீராபாய் , ஏப்ரல் 2025 காலண்டர்- மீராபாய் மேற்கோள்கள்