சென்னை – சுவாமிமலை சாலையோரக் காட்சிகள் (Post No.14,327)


POSTER FOR NEW RETIREMENT HOME

Written by London Swaminathan

Post No. 14,327

Date uploaded in London –  30 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

மார்ச் மாதம் (2025)  சென்னை முதல் கும்பகோணம் வரை  பயணம் செய்தபோது பார்த்த காட்சிகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன் .

சாலை ஓரக் கோவில்கள் ஏராளம் ; கரும்புச் சாறு, வெள்ளரிக்காய், பலாப்பழம், பனை நுங்கு , மல்லிகைப்பூக்களை விற்கும் ஆட்களை நிறைய  காண முடிகிறது

போகும்  வழியெல்லாம் ‘டோல் கேட்’டுக்களுக்குப் பஞ்சமில்லை.. டாக்சிக்காரர்கள் ஒரு நாளைக்கு 500 ரூபாய் ‘பேட்டா’வுடன் கிலோமீட்டருக்கு 13 முதல் 15 ரூபாய் வரை வாங்குகின்றனர்.

இரட்டை அறை  ரூம்களுக்கு 2000 ல் 3000 வரை ஓரிரவுக்குச் செலவாகிறது . சாப்பாட்டுக்கு அதிக செலவாகாது; ஒரு வேளைக்கு  முழுவயிறு சாப்பாட்டுக்கு 100 முதல் 125 ரூபாய் வரை இருந்தால் போதும்.

காப்பி, டீ   என்பதெல்லாம் சாலை ஓரக் கடைகளில்  கொள்ளை மலிவு ;15 ரூபாய்தான்!

வெளி நாடுகளிலிருந்து இந்தியாவுக்குச் செல்வோருக்கு அது சொர்க்க பூமிதான் .

முதியோர் இல்லம் போன்றவற்றில் அறையில் தங்கினால் மாதத்துக்கு முப்பதாயிரம் ரூபாய் வேண்டும்; சொகுசான வசதி படைத்த இடங்களில் வயதானோர் வாழ்ந்தா ல் இதைப்போல இரு மடங்கு ரூபாய் வேண்டும் .

எனக்குத் தெரிந்த மூன்று நான்கு குடும்பங்கள் கோவை நானா- நானியில் தங்கியுள்ளனர் ; நான் அந்த இடத்தைப் பார்த்ததில்லை. கும்பகோணத்தில் வெஜிட்டேரியன் இந்துக்கள் மட்டுமே தங்கும் ஸ்ரீவத்சம் விடுதியில் எனது நண்பர் தனியாக வாழ்கிறார். அவர் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் ‘போர்’ அடிக்காமல் இருக்க அந்த இடத்திலேயே கச்சேரிகள் உபந்யாசங்கள்  நடப்பதாகவும் கூறினார்.

வைத்தீஸ்வரன் கோவில் அக்ஷர்தாமில் ஒரு நாளைக்கு 3000 ரூபாய் கொடுத்தேன்; கும்பகோணம் ஸ்ரீவத்சத்தில்  (Retirement Homes) பிராமண சாப்பாடு, காப்பி உள்பட ஒரு நாளைக்கு 2000 ரூபாய்தான் ; இது நல்ல வசதியுள்ள இரட்டைப் படுக்கை அறைக்கான செலவு.

மஹாரண்யம் ஆஸ்ரமத்தில் எனக்குப் பிடித்த தையல் இலையில் சாப்பாடு சாப்பிட்டேன் 

வழியெங்கும் பூக்கடைகள் , மாலைக் கடைகள் 

TO BE CONTINUED…………………………….

–subham—

Tags- Kumbakonam, Old age home, Retirement Home, Roadside views, கும்பகோணம் ஸ்ரீவத்சம்,   சென்னை – சுவாமிமலை, சாலையோரக் காட்சிகள், பூக்கடைகள் , மாலைக் கடைகள் , PART 1

Leave a comment

Leave a comment