கம்பனுக்கும் பரஞ்சோதிக்கும் திராவிடநாடு தெரியாது ! (Post No.14,658)

Written by London Swaminathan

Post No. 14,658

Date uploaded in London –  18 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 APPAR/ TIRU NAVUKKARASAR TRAVEL MAP 

DRAVIDA DESA OUTSIDE TAMIL NADU.

GODDESS MEENAKSHI’S MOTHER KANCHANAMALA WAS FROM SURASENA COUNTRY.

திராவிடம் என்ற சொல்லி இனத்வேஷ சொல்லாக வைத்து கால்டு வெல் முதல் திராவிடக் கட்சிகள் வரை பல செப்படி வித்தைகளை செய்து வருவதை நாம் அறிவோம் ; அதன் உண்மைப் பொருள் தெற்கத்திய SOUTHERN  என்பதாகும். காரவேலன் , வஜ்ர நந்தி,  குமாரில பட்டர், ஆதி சங்கரர் ஆகியோர் த்ரமிர சங்கடன் திராவிட சங்கம் , திராவிட பாஷா, திராவிட சிசு என்றெல்லாம் சொன்னார்கள்;பின்னர் திராவிட ஆச்சாரியா, திராவிட வேதம் என்றெல்லாம் அபிதான சிந்தாமணி என்னும் சிங்காரவேலு முதலியாரின் என்சைக்ளோபீடியாவிலும் காண்கிறோம்.

ஐம்பத்தாறு நாட்டுத் தேசப்பட MAPS புத்தகத்தைப் பார்த்தால் சேர சோழ பாண்டிய நாடுகளுக்கு வெளியேதான் திராவிடநாடு உள்ளது. பரஞ்சோதி, கம்பர் ஆகியோர் சேர- சோழ -பாண்டிய தேசங்களைப் பாடினாலும் திராவிட நாடு என்று எங்கும் சொல்லவில்லை . கீழ்க்கண்ட பட்டியல்களைக் கண்டு மெய்ப்பொருள் காண்பது அறிவு!

****

திருவிளையாடற்புராணம் — பரஞ்சோதி முனிவர்

பரஞ்சோதி முனிவரின் நாற்பது நாடுகள் பட்டியலில் திராவிட நாடு இல்லை !

மெய்காட்டிட்ட படலம் 27 நாடுகள் பட்டியல்

நாவலர், பண்டித ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை

(29)

கொங்கரிவ ரையகுரு நாடரிவ ரைய

கங்கரிவ ரையகரு நாடரிவ ரைய

அங்கரிவ ரையவிவ ராரியர்க ளைய

வங்கரிவ ரையவிவர் மாளவர்க ளைய.

ஐயனே இவர் கொங்க நாட்டினர், ஐயனே இவர் குருநாட்டினர்;

ஐயனே இவர் கங்க நாட்டினர்; ஐயனே இவர் கருநாட நாட்டினர்;

– ஐயனே இவர் அங்க நாட்டினர்; ஐயனே இவர்கள் ஆரிய நாட்டினர்கள்; ஐயனே இவர் வங்க நாட்டினர்; ஐயனே இவர்கள்

மாளவநாட்டினர்கள். (30)

****

குலிங்கரிவ ரையவிவர் கொங்கணர்க ளைய

தெலுங்கரிவ ரையவிவர் சிங்களர்க ளைய

கலிங்கரிவ ரையகவு டத்தரிவ ரைய

உலங்கெழு புயத்திவர்க ளொட்டியர்க ளைய.

ஐயனே இவர் குலிங்க நாட்டினர்; ஐயனே இவர்கள்

கொங்கண நாட்டினர்கள்; ஐயனே இவர்தெலுங்க நாட்டினர்கள்; ஐய ஐயனே இவர்கள் சிங்களநாட்டினர்கள்; ஐயனே இவர் கலிங்க

நாட்டினர்; ஐயனே இவர் கவுட நாட்டினர்; ஐயனே திரண்ட

கற்போலும் புயத்தினையுடைய இவர்கள் ஒட்டிய நாட்டினர்கள். (31)

****

கொல்லரிவ ரையவிவர் கூர்ச்சரர்க ளைய

பல்லரிவ ரையவிவர் பப்பரர்க ளைய

வில்லரிவ ரையவிவர் விதேகரிவ ரைய

கல்லொலி கழற்புனை கடாரரிவ ரைய.

ஐயனே இவர் கொல்லநாட்டினர்; ஐயனே இவர்கள்

கூர்ச்சர நாட்டினர்கள்; ஐயனே இவர் பல்லவநாட்டினர்; ஐயனே

இவர்கள் பப்பர நாட்டினர்கள்; ஐய ஐயனே இவர்கள் வில்லர்கள்; ஐயனே இவர் விதேகநாட்டினர்; ஐய ஐயனே இவர் கல்லென்னும் ஒலியையுடைய வீரக்கழலையணிந்த கடார நாட்டினர்.

****

கேகயர்க் ளாலிவர்க்ள கேழ்கிளர் மணிப்பூண்

மாகதர்க ளாலிவர் மராடரிவர் காஞ்சி

நாகரிக ராலிவர்க ணம்முடைய நாட்டோர்

ஆகுமிவர் தாமெனமெய்க்* காட்டியறி வித்தான்.

இவர்கள் கேகயநாட்டினர்கள்; ஒளி விளங்கும் மணிகள் பதித்த அணிகளை யணிந்த இவர்கள் மகத நாட்டினர்கள்; – இவர் மராடநாட்டினர்; – இவர்கள் காஞ்சி நாட்டிலுள்ள

நாகரிகமுடையவர்கள்; இவர் நமது நாட்டினராவர்; என என்று, மெய்க் காட்டி அறிவித்தான் –

அவரவர் உருவினைக் காட்டித் தெரிவித்தான். காஞ்சி நாகரிகர்

என்றது சோழரை யாதல்வேண்டும். (33)

*****

திருமணப்படலம் –நாற்பது நாடுகள் பட்டியல்

தென்னர் சேகரன் றிருமக

     டிருமணத் திருமுகம் வரவேற்று

மன்னர் வந்தெதிர் தொழுதுகைக்

     கொண்டுதம் மணிமுடி மிசையேற்றி

அன்ன வாசகங் கேட்டனர்

     கொணர்ந்தவர்க் கருங்கலந் துகினல்கி

முன்ன ரீர்த்தெழு களிப்புற

     மனத்தினு முந்தினர் வழிச்செல்வார்.

பாண்டியர்களின் முடி போல்பவனாகிய மலயத்துவச பாண்டியன்

திருமணங் குறித்த ஓலையை, வரவேற்பாராய், – மன்னர்கள் எதிர்கொண்டு வந்து, வணங்கி, கையில் வாங்கி,  தம்முடைய மணிகள் அழுத்திய முடியின்மேல் ஏற்றி, அத்திருமுகச் செய்தியைக் கேட்டு, கொண்டு வந்தவர்களுக்கு, அரிய அணிகளும் ஆடைகளும்

அளித்து, முன் இழுத்துச் செல்லும் களிப்பு மிக,

மனத்தினும் விரைந்து வழிக்கொண்டு செல்வார்கள் .

****

கொங்கர் சிங்களர் பல்லவர் வில்லவர் கோசலர்

                                        பாஞ்சாலர்

வங்கர் சோனகர் சீனர்கள் சாளுவர் மாளவர் காம்போசர்

அங்கர் மாகத ராரியர் நேரிய ரவந்தியர் வைதர்ப்பர்

கங்கர் கொங்கணர் விராடர்கள் மராடர்கள் கருநடர்

                                         குருநாடர்.

கொங்கு நாட்டரசரும், சிங்களநாட்டரசரும், பல்லவநாட்டரசரும், வில்லவர் , கோசல நாட்டரசரும், பாஞ்சால நாட்டரசரும், சோனகர் –

சீனர்கள் சாளுவர் , மாளவர் காம்போசர், அங்கர், மகதர் ,

ஆரியர் , சோழ வரசரும், அவந்தியர் , வைதர்ப்பர், கங்கர், கொங்கணர், , விராடர்கள் ,மராடர்கள்,கருநடர்,  குரு நாட்டரசரும்,

     இவருள் கொங்கர், பல்லவர், வில்லவர், நேரியர் என்போர்

தமிழ் மண்டலத்தினர்; சிங்களர், கங்கர், கொங்கணர், கருநடர்

என்போர் தமிழ் மண்டலத்தின் சார்பிலுள்ளவர். வில்லவர் –

விற்கொடியையுடைய சேரர். நேரியர் – நேரி மலையையுடைய

சோழர்.

****

கலிங்கர் சாவகர் கூவிள

     ரொட்டியர் கடாரர்கள் காந்தாரர்

குலிங்கர் கேகயர் விதேகர்கள்

     பௌரவர் கொல்லர்கள் கல்யாணர்

தெலுங்கர் கூர்ச்சரர்* மச்சர்கள்

     மிலேச்சர்கள் செஞ்சையர் முதலேனைப்

புலங்கொண் மன்னருந் துறைதொறு

     மிடைந்துபார் புதைபட வருகின்றார்.

கலிங்கர் , சாவகர் , கூவிளர், ஒட்டியர் , கடாரர்கள், காந்தாரர் ,

குலிங்கர், கேகயர், , விதேகர்கள் , பௌரவர், , கொல்லர்கள்

கல்யாணர், தெலுங்கர், கூர்ச்சரர் மச்சர்கள், மிலேச்சர்கள், செஞ்சையர்,

முதலாக, பிற நாட்டரசாகளும், வழிகள் தோறும், நெருங்கி, பூமி

மறையும்படி வருகின்றார்கள் .

     கலிங்கம் – வடக்கே கீழ்கடலோரத்திலுள்ளது. சாவகம் –

தெற்கிலுள்ள தீவு; ஜாவா. கடாரம் – கிழக்கிலுள்ளது; பர்மாவின்

ஒருபகுதி. பௌரவர் – பூருமரபினர் : தத்திதாந்தம். கல்யாணர் –

சாளுக்கியர். (75)

*****

மாக்ஸ்முல்லர், கால்டு வெல் உண்டாக்கிய ஆரிய, திராவிடர் கிடையாது ; வெளிநாட்டிலிருந்து மதத்தைப் பரப்பவும் நாடு பிடிக்கவும் வந்தவர்கள், பிரித்தாளும் சூழ்ச்சியைக் கைக்கொண்டு , இந்தியாவையே ஆரியர்- திராவிடர் என்று பிரித்தனர். இ ந்துக்கனின் எந்த சரித்திர, சமய நூல்களிலும்  இந்தப் பிரிவினை இல்லை. அவர்கள் மக்களை ௧௮ வகையாகப் பிரித்தனர் இதை ராமாயண காலத்திலிருந்து காண்கிறோம்

எழுவ ரன்னையர் சித்தர்விச் சாதர

     ரியக்கர் கின்னரர் வேத

முழுவ ரம்புணர் முனிவர்யோ

     கியர்மணி முடித்தலைப் பலநாகர்

வழுவில் வான்றவ வலியுடை

     நிருதர்வாள் வலியுடை யசுரேசர்

குழுவொ டும்பயில் பூதவே

     தாளர்வெங் கூளிக ளரமாதர்.

ஏழு மாதரும்,  சித்தரும் , வித்தியாதரரும், இயக்கரும்,

கின்னரரும்,  மறையின் எல்லை முடிய உணர்ந்த முனிவர்களும்

யோகிகளும் , மணி விளங்கும் உச்சியையுடைய தலையினையுடைய பல உரகர்களும்/,நாகர்  குற்றமில்லாத சிறந்த

வலிமையையுடைய அரக்கர்களும்,  வாளின் வலியுடைய அசுரர் தலைவர்களும், கூட்டத்தோடு உலாவும் பூத வேதாளர்களும்,

*****

கங்கர்கொங்கர்கலிங்கர்குலிங்கர்: கம்பன் தரும் நாடுகளின் பட்டியல் — பால காண்டம்கம்ப ராமாயணம்

1.கங்கர் கொங்கர் கலிங்கர் குலிங்கர்கள்

சிங்களாதிபர் சேரலர் தென்னவர்

அங்கராசர் குலிந்தர் அவந்திகர்

வங்கர் மாளவர் சோழர் மராடரே

2.மான மாகதர் மச்சர் மிலேச்சர்கள்

ஏனை வீர இலாடர் விதர்ப்பர்கள்

சீனர் தெங்கணர் செஞ் சகர் சோமகர்

சோன சேகர் துருக்கர் குருக்களே

3.ஏதி யாதவர் ஏழ்திறல் கொங்கணர்

சேதிராசர் தெலுங்கர் கருநடர்

ஆதிவானம் கவித்த அவனிவாழ்

சோதி நீள்முடி மன்னரும் துன்னினார்

—பால காண்டம், கம்ப ராமாயணம்

உலாவியல் படலத்தில் ராமன் — சீதை திருமணத்துக்கு வந்த மன்னர்கள் பட்டியல் இது.

பொருள்:-

1.கங்க நாடு, கொங்கு நாடு,  கலிங்க நாடு, குலிங்க நாடு, சிங்கள நாடு, சேர நாடு, தென்னாடான பாண்டிய நாடு, அங்க நாடு, குலிந்த நாடு, அவந்தி நாடு, வங்க நாடு, மாளவ நாடு, சோழ நாடு, மராட நாடு ஆகிய நாட்டு அரசர்களும்,

2.பெருமை மிகுந்த மகத நாடு, மச்ச நாடு, மிலேச்ச நாடு, மற்றுமுள்ள வீரம் பொருந்திய இலாடநாடு, விதர்ப்ப நாடு, சீன நாடு, தெங்கண நாடு, செம்மை வாய்ந்த சக நாடு, சோம நாடு, சோனக நாடு, துருக்கி நாடு, குரு நாடு ஆகிய நாட்டு அரசர்களும்,

3.ஆயுதங்கள் நிறைந்த யாதவ நாடு, ஏழு பிரிவு கொண்ட கொங்கண நாடு, சேதி நாடு, தெலுங்கு நாடு, கரு நாடு என்னும் கன்னட நாடு, ஆகிய நாடுகளின் அரசர்களும், பஞ்ச பூதங்களில் முதன்மையானதான ஆகாயத்தின் கீழே ஆழும் — ஒளிவீசும் மணிமுடி அணிந்த பிற அரசர்கள் அனைவரும் அந்த மண்டபத்தை அடைந்தனர்.

முதல் பாட்டில், அங்கராசர் என்பதற்குப் பதிலாக சில பதிப்புகளில் அங்கர் சீனர் என்று காணப்படும்; அப்படியானால் அடுத்த பாட்டில் வரும் சீனர் என்ற சொல்லுக்கு மகா சீனர் என்று பொருள் சொல்லுவர் பெரியோர்.

இதே போல சோனர் சேகர் என்பதை சோன கேசர் என்றும் எழுதுவர். விசுவாமித்திரர் சேனைகளை எதிர்ப்பதற்காக காமதேனு என்னும் தெய்வீகப் பசு மூலம் வசிட்டனால் உண்டாக்கப்பட்ட சேனை என்றும் சொல்லுவர். இது பற்றிய கதை மிதிலைக் காட்சிப் படலத்தில் உள்ளது.

கம்பன் பாட்டில் தெரிய வரும் செய்திகள்:-

கம்பன் காலத்தில்திராவிட நாடு என்று  ஒரு நாடு இல்லை.

கொங்கண நாட்டைக் குறிப்பிடும் போதெல்லாம் ஏழு பிரிவு கொண்ட கொண்க்கண நாடு என்பதை ஏன் அழுத்தம் திருத்தமாகச் சொல்லுகிறார் என்று தெரியவில்லை.

துருக்கி, சீனம், அரேபியா (சோனகம்) என்பவை கம்பன் காலத்தில் நன்கு தெரிந்தவை.

மிலேச்ச நாடு (ரோம்/இதாலி, கிரீஸ் உள்ளிட்ட யவன பூமி)

ஏழு பிரிவுகள் கொண்ட கொங்கண நாட்டை அவன் சுந்தர காண்டத்திலும் குறிப்பிடுவான்.

சுந்தர காண்டத்தில் அவன் சொல்லும் பல பூகோள/நிலவியல் விஷயங்கள் இன்னும் வியப்பானவை.

துருக்கர் கொண்டுவந்த குதிரைகள் பற்றி ‘உன் அமுத உத்தியன ஒண் நகர்……..‘ என்ற பாட்டிலும் கம்பன் பேசுகிறான்.

*******

புராதன இந்தியாவின் 56 தேசங்கள்! (Post No. 2686)

Date: 2 April, 2016  Post No. 2686 

புராதன இந்தியாவில் 56 தேசங்கள், அதாவது 56 பிரிவுகள் இருந்தன. இவைகளை இப்போதைய மாநிலங்களுக்கு ஒப்பிடலாம். பலம்பொருந்திய மன்னர்கள் ஆளுகையில் எல்லா மன்னர்களும் சக்ரவர்த்தியின் ஒரு குடைக்கீழ் ஆளப்பட்டார்கள். சுயம்வரம், போட்டிகள், பட்டாபிஷேகங்கள் முதலியவற்றுக்கு 56 தேச ராஜாக்களுக்கும் அழைப்பிதழ்கள் சென்றன. அவ்வப்பொழுது சண்டைகளும் போட்டார்கள்; பெண் கொடுத்து, பெண் எடுத்தார்கள். 

இந்தப் பட்டியலில் தமிழர்களின் சேர சோழ, பாண்டிய நாடுகளுக்குப் புறம்பாக திராவிட நாடு காட்டப் பட்டிருப்பது பற்றி, திராவிடர்கள் யார்? என்ற கட்டுரையில் முன்னரே எழுதியுள்ளேன் (திராவிடர்கள் யார்? ஜூலை, 2013). இதிலுள்ள வரைபடங்கள் ஓரளவுக்கு நமக்கு, நாடுகளின் இருப்பிடம் பற்றி தகவல் கொடுக்கிறது. ஆயினும் அவ்வப்பொழுது அவற்றின் எல்லைகள் விரிந்தும் சுருங்கியும் போனதால் குழப்பங்கள் ஏற்பட்டன. 

ஒருவர் ஒரு நூலை எழுதும்போது, ஒரு நாட்டின் எல்லை எவ்வளவு தூரம் பரவியிருந்ததோ அதற்கேற்ப அவர்கள், ஊர்கள் பற்றியும் மக்கள் போக்குவரத்த் பற்றியும் எழுதினர். பிற்காலத்தில் நாம் அவைகளை ஒரு சேரப் படிக்கையில் முரண்பாடுகளைக் காண்கிறோம். யவன தேசம் என்பது பல தவறான முடிபுகளைத் தோறுவித்தது இதற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். இது ரோமாபுரி, கிரேக்கம் மற்றும் அலெக்ஸாண்டருக்குப் பின்னர் வடமேற்கு இந்தியாவில் ஆண்டோர், அராபியர் ஆகிய அனைவரையும் குறித்தது! 

இதோ ஜகதீச அய்யர் எழுதிய புராண இந்தியா – 56 தேச சரிதம். பேஸ்புக்கில் ஏற்கனவே வெளியிட்டுள்ளேன். இதிலுள்ள வரைபடங்கள், மேலும் ஆராய்ச்சி செய்ய உதவும்:–

புராதன இந்தியாவின் 56 தேசங்கள் –பகுதி 2 (Post No 2693)

Date: 4 April, 2016; Post No. 2693

நாடுகளின் வரைபடத்தைப் பார்த்தால் தேசங்களின் இருப்பிடம் தெரியும் ; மீனாட்சியின் தாய் சூரசேன நாட்டிலிருந்து வந்த காஞ்சன மாலா ஆவாள் ; இது வட  இந்தியாவில் காட்டப்பட்டுள்ளது!

–SUBHAM—

TAGS- கம்பன் பரஞ்சோதி, திராவிடநாடு , 56 தேசங்கள், ஆரியர், திராவிடர் திருவிளையாடல் புராணம் , நாடுகள் பட்டியல்

Leave a comment

Leave a comment