ஐயர் – ஐயங்கார் மோதல்! நால்வரும் பாடிய ஒரே திருவிளையாடல்!! (Post.14,663)

Written by London Swaminathan

Post No. 14,663

Date uploaded in London –  19 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

அய்யர் – ஐயங்கார் மோதல்; நால்வரும் பாடிய ஒரே திருவிளையாடல் !

திருவிளையாடல் புராணத்தில் உள்ள 64   திருவிளையாடல்களில் , சிவ பெருமானின் ஒரே ஒரு லீலையை மட்டுமே, நால்வரும் பாடியுள்ளனர். அதாவது அப்பர் ,சுந்தரர்,, சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் தேவார, திருவாசகத்தில் பாடியுள்ளனர்.

SOURCE BOOK:

MADURAI TEMPLE COMPLEX, A V JEYACHANDRUN, MADURAI KAMARAJ UNIVERSITY, 1985

மதுரைப் பல்ககலைக்கழக வெளியீட்டில் ஏ வி ஜெயச்சந்திரன் கொடுத்த பட்டியல் சரியென்றால் , மாணிக்க வாசகர், தேவாரம் பாடிய மூவருக்கும் முன்னால் வாழ்ந்தது உள்ளங்கை நெல்லிக்கனி போல விளங்கும்மேலும் வரகுணன், பாணபத்திரன் ஆகியோரும் சம்பந்தருக்கு முன்னால் வாழ்ந்தது தெளிவாகும் ;

ஏனெனில் திருமுகம் என்னும் சிபாரிசுக் கடிதத்தை பாணனுக்கு சிவ பெருமான் கொடுத்தது, நரியைப் பரியாக்கியது முதலிய சம்பவங்களை அப்பர் அல்லது ஞான சம்பந்தர் பாடியதாக ஜெயச்சந்திரன் பட்டியல் காட்டுகிறது .

இதில் என்ன அதிசயம் என்றால் நால்வரும் பாடிய சமபவங்கள் இருபது,  முப்பது திருவிளையாடல்களுக்குள் அடங்கி விடுகிறது; ஆனால் விருத்த குமாரன் பாலனாகிய நிகழ்ச்சியை மட்டும் நால்வரும் பாடியுள்ளனர். அப்படியானால் அது சுமார் 1500 அல்லது 1600 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்திருக்கவேண்டும்.  ஏனெனில் அப்பர்- சம்பந்தர் காலம் கி பி 600 CE என்பது உறுதியாகிவிட்டது.

ஒரு நிகழ்ச்சி பாடுவதற்குரிய அதிசயமாக மாறுவதற்கு 200 அல்லது 300 ஆண்டுகள் தேவை. மேலும் தருமி என்ற ஏழைப் பிராமணனுக்கு சிவ பெருமான் எழுதிக்கொடுத்த கவிதையை நக்கீரன் என்ற பார்ப்பனப் புலவன் ஆட்சேபிக்கவே சிவ பெருமானே நேரில் வந்ததையும் அப்பர் பாடியள்ளார் ;ஆக இவை எல்லாம் சங்க காலத்தில் நடந்ததையும் மதுரையில் சங்கம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லில் ஒரு அமைப்பு இருந்ததும் உறுதியாகிறது.

தொல்காப்பியர்  என்னும் எழுத்தில் எந்தச் சொல்லும் துவங்கக்கூடாதென்று தடை போட்டதைத் தமிழர்கள் காற்றில் பறக்கவிட்டுவிட்டதையும் அறியமுடிகிறது .

****

ஐயர் – யங்கார் மோதல்!

கதைச் சுருக்கம் பின்வருமாறு

விருத்த குமாரன் பாலன் ஆகிய திருவிளையாடல்

விக்ரம பாண்டியர் ஆட்சியில் விரூபாக்ஷர் – சுபவிரதை தம்பதியினர் மதுரையில் வாழ்ந்தார்கள். அவர்கள் அந்தணர் குலத்தவர். இத்தம்பதிகளுக்கு இறைவன் அருளால் கெளரி என்ற பெண் குழந்தை பிறந்தது. சைவ சமயத்தில் பற்றுடன் இருந்த குழந்தை திருமண வயதிற்கு வந்தாள்.

அடியார்களுக்கு அன்னமிடுவதை வழக்கமாக கொண்டிருந்த குடும்பத்தினர் என்பதால், ஒரு நாள் வைணவ இளைஞன் ஒருவன் விரூபாக்ஷர் இல்லத்திற்கு வந்து உணவு அருந்தினான். அவன் வைணவன் என்றாலும் விரூபாக்ஷர் அவனிடம் அன்பு கொண்டு மகளை திருமணம் செய்து கொடுத்தார்.வைணவ இளைஞனின் குடும்பத்தினர் சைவ பெண்ணான கெளரியை ஏற்க வில்லை. கெளரி  இள வயதிலேயே முக்தியை வேண்டி சிவபெருமானை வணங்கினார்.

கெளரியின் புகுந்த வீட்டினர், அவளை தனியறையில் அடைத்து வெளியே சென்ற நேரத்தில் அப்பூட்டுகளை உடைத்து அடியாராக வந்தார் சிவபெருமான். அவருக்கு மனதார உணவுகளைப் படைத்து அளித்தாள் கெளரி . அதனால் மனம் மகிழ்ந்த சிவபெருமான் தானே குழந்தையாக மாறினார். கெளரி யின் புகுந்த வீட்டினர் அடைக்கப்பட்டிருந்த கதவுகள் திறந்து கிடைப்பதையும், கெளரி  குழந்தையோடு இருப்பதையும் கண்டு கோபம் கொண்டனர்.

குழந்தை சிவபெருமானாக காட்சியளித்து கெளரி க்கு முக்தி அளித்தார்.

****

இதை தமிழ் அறிஞர் கி.வா. ஜகந்நாதனின்  அற்புதமான விளக்கத்துடன்  காண்போம்.

கெளரி என்னும் பெண் ஒரு வைணவனை மணந்து கொள்கிறாள். அவள் சைவக் குடும்பத்தில் பிறந்தவள். சிவபெருமானை பூசை செய்கிறாள். அவள் சிவனை பூசை செய்கிறாள் என்பதனால் புக்ககத்தார் பல இடையூறு செய்கிறார்கள் . அவள் இறைவனுடைய திவ்ய தரிசனத்தைப் பெறுகிறாள். இந்தக் கதை சைவத்துக்கும் வைணவத்துக்குள் உள்ள முரண்பாட்டைக் காட்டுவதாக முதலில் தோன்றும். ஆனால் ஆழ்ந்து சிந்தித்தால் பழங்காலத்தில் இருந்த ஒற்றுமை நன்கு விளங்கும் . இப்படி நான் சொல்வது நேர் விரோதமாகத் தோன்றலாம் . ஆனால் சற்று விளக்கினால் இந்த உண்மை புலனாகும். திருமணம் செய்வது என்பது அக்காலத்தில், இந்தக் காலத்தைப் போல திடீரென்று  நினைத்துச் செய்வது அன்று.  நன்றாகக் குலம் கோத்திரம் விசாரித்து, பழகின இடத்தில் பெண்ணைக் கொள்ளவோ , பெண்ணுக்குப் பிள்ளையைக் கொடுக்கவோ செய்வார்கள். கெளரியையும் அப்படித்தான்  அந்த வைணவ குடும்பத்தில் கொடுத்தார்கள். மாப்பிள்ளை வைணவன் என்று தெரிந்தும்  சைவ குடும்பத்தினர் தன் பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்திருக்கினார்கள் . இதனால் அக்கால மக்கள் சைவ வைணவ பேதமின்றி  இணைந்து வாழ்ந்து வந்தார்கள் என்பதும்   சமய பேதம் திருமணத்துக்குத் தொடர்புக்குத்  தடையாக  இருக்கவில்லை என்பதும் தெரிகின்றது அல்லவா ?

வைணவர்கள் சிவ பூசையைச் செய்துவந்த கெளரியத் துன்புறுத்திநார்கள்  என்பது சமயம் காரணமாக அமைந்தது அன்று.  அது அவர்களாவது கொடிய இயல்பு காரணமாக அமைந்தது  அதற்கு ஒரு வியாஜ்யம் சிவ பூசை. அவர்கள் திடீரென்று வைணவர்கள் ஆகவில்லை  முன்பே வைணவர்களாக இருந்தவர்களே . அது தெரிந்தே திருமணம் செய்து கொடுத்திருக்க வேண்டும் . அந்தக் காலத்தில் வேறுபாடு இல்லாமல்  சைவர்களும் வைணவர்களும் திருமணம் புரிந்து கொண்டார்கள் என்பதை இந்த வரலாறு காட்டுகிறது. இவற்றைத் தெரிந்து கொள்ள தல புராணங்கள் உதவி செய்கின்றன.

****

என் கருத்து

முதலில் ஏறத்தாழ சங்க காலத்தில் இருந்த பெயர்களைக் கவனியுங்கள் ; எல்லாம் சம்ஸ்க்ருதம் ! பிராமணர் குடும்பத்தில் இப்படி என்று எவரும் சொல்ல முடியாது  சிலப்பதிகார கதா நாயகன் பெயர் கோபாலன்  ( ப= வ மாற்றம் உலகெங்கிலும் உண்டு ; சங்க காலச் சொற்களிலும் இது உண்டு ; சபை= அவை ; பாண்டில்= வண்டி). கண்ணகி கோபாலன் அப்பா அம்மா பெயர் நமக்குத் தெரியாது மஹா நாயகன், மஹா சார்த்தன் என்ற ஸம்ஸ்க்ருதப் பெயர்களை மட்டுமே நமக்கு இளங்கோ விட்டுச் சென்றுள்ளார் ; பிள்ளைமார் ஜாதியில், செட்டியார் ஜாதியில் திலகவதி, புனித வதி, பரமதத்தன் என்ற ஸம்ஸ்க்ருதப் பெயர்கள் இருந்ததையும் தேவாரம் நமக்கு காட்டுகிறது.

இன்னும் ஒரு அதிசயம்

உலகில் விருந்தோம்பல் என்பதை ஒரு பண்பாகக் கருதியது இந்தியாவில் மட்டுமே; இது அதிசயத்திலும் அதிசயம் ; தமிழ், சம்ஸ்க்ருத நூல்கள் இதற்கு ஒரு அத்தியாயம் ஒதுக்கி பல ஸ்லோககங்ளை அல்லது வெண்பாக்களை அல்லது குறள்களைக் கொடுத்துள்ளது சீதையும் கண்ணகியும் இப்படி விருந்து படைக்கும் வாய்ப்பு இல்லாமற் போனதே என்று வருத்தப்படும் பாடலகளை கம்பனும் இளங்கோவும் பாடியுள்ளார்கள்; மேலும் பஞ்ச யக்ஞம் – தினமும் செய்யும் ஐவேள்வி –என்பது இந்து மத சடங்கு! உலகில் வேறு எந்த மதத்திலும் எந்த கலாசாரத்திலும் இது இல்லை; இந்துக்கள் மட்டுமே செய்த சடங்கு. ஏனைய மதத் தலைவர்கள் கதையில் கருணை என்ற தலைப்பில் சில விஷயங்கள் இருந்த போதிலும் அவர்கள் அதைத் தினசரிக் கடமையாகச் செய்ததாக எழுதவில்லை .

இன்னும் ஒரு அதிசயம்

யார், யாருக்கு விருந்து படைத்தார்கள் என்பதைக் கதை காட்டுகிறது  வந்தவன் வைணவன் என்பது அவன் போட்டிருந்த பட்டை நாமத்தில் தெரிந்திருக்கும். அப்படியும் சைவ பிராமணன் வீடு அவருக்குச் சோறு படைத்தது . வேண்டாம் என்று நினைத்திருந்தால் இன்றைய உணவு முடிந்துவிட்டது என்று சொல்லி கழித்துக்கட்டி இருக்கலாம் .

மேலும் இதற்கு மனு நீதி நூலில் ஒரு சான்றும் உள்ளது ; மூன்று ஜாதிக்காரர்கள் குருகுலத்தில் படிக்க வந்தபோது தினமும் பிச்சை எடுத்து உண்ண வேண்டும் ; வாத்தியார் வீட்டுக்கும் கொண்டுவந்து கொடுக்க வேண்டும் எந்த எந்த ஜாதி பவதி பிக்ஷாம் தேஹி என்பதை எப்படிச் சொல்லவேண்டும் என்ற பெர்முடேஷன் காம்பினேஷனையும் permutation combination  மனு ஸ்ம்ருதி கொடுத்துள்ளது . பவதி பிக்ஷாம் தேஹி = தாயே பிச்சை போடுங்கள்! பிக்ஷாம் தேஹி பவதி; பிக்ஷாம் பவதி தேஹி

****

இன்னும் ஒரு செய்தி 

விக்ரம பாண்டியன் என்பவன் அப்பருக்கும் முன்னால் வாழ்ந்த பாண்டியன் . அபிஷேக பாண்டியனின் மகன். அபிஷேக பாண்டியனை நான் நெடுஞ்செழியன் என்று கண்டுபிடித்தேன்; விக்ர ம   பாண்டியனின் மகன் ராஜ சேகரன் ஆண்டபோது கரிகாலன் குறிப்பு வருகிறது ஆக இவர்களனைவரும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தவர்கள் . ஏனெனில் மாங்குளம் கல்வெட்டு குறிப்பிடும் மதுரை நெடுஞ்செழியன் 2200 ஆண்டுகளுக்கு முன்னிருந்தவன்; கரிகாலனும் ஏறத்தாழ அதே காலத்தில் இருந்தவன் . ஆகவே விருத்த குமாரன் கதையும் அதே காலத்தைச் சேர்ந்ததே ; இதை நால்வரும் பாடியதில் வியப்பில்லை.

*****

வரகுணன் மன்னர் பெயர் அல்ல அது இந்திரன் போல பட்டப் பெயர்

வரகுணன் கல்வெட்டுகளை ஆராய்ந்து கட்டுரை எழுதிய  அனைவரும் அவனது தமிழ்ப் பெயர்களையும் தளவாய்புரம் செப்பேட்டுக் கட்டுரைகளில் எழுதியுள்ளனர் . இதிலிருந்து நல்ல குணமுள்ள எல்லா மன்னர்களையும் வரகுணன் என்று குறிப்பிட்டது தெரிகிறது . மேலும் எல்லா வரகுணன்களும் சிவ பக்தர் இல்லை என்பதை நம்மாழ்வார் பாசுரம் காட்டுகிறது. அவர் வரகுணமங்கை என்று பெயர் சொல்லிப் பாடிய பாசுரத்தில் விஷ்ணுவே வருகிறார்; அந்த ஊரிலும் விஷ்ணு கோவில் மட்டுமே உள்ளது ஆகவே மாணிக்க வாசகரின் திருக்கோவையாரில் வரும் வரகுணன் நமக்குத் தெரியாத , அதாவது வரலாற்றில் அறியாத வரகுணன் ஆவான்; இதை அப்பர் சம்பந்தர் பாடிய தேவாரத்தாலும் அறிகிறோம் . சுந்தரர் குறிப்பிடும் மூர்த்தி நாயனார் போல இவரூம் வரலாறு அறியாத பாண்டிய மன்னனே!

(மகாபாரதத்திலும் பாகவதத்தில் இது போல ஜாதி விட்டு ஜாதி மாறி கல்யாணம் நடந்த செய்திகளும் உள்ளன )

–subham—

Tags- விருத்த குமாரன் பாலன்,  வரகுணன், விக்ரம பாண்டியன், கி.வா.ஜகந்நாதன் ,  அய்யர் – ஐயங்கார் மோதல், நால்வரும் பாடிய ,திருவிளையாடல்,

Leave a comment

Leave a comment