பெங்களூரில் சந்யாசிகள் மகாநாடு; ஆயிரம் சந்யாசிகள் பங்கேற்பு (Post No.14,678)

Written by London Swaminathan

Post No. 14,678

Date uploaded in London –  23 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Collected from popular dailies and edited for broadcast.

ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல் .

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து  லதா யோகேஷ்  வாசித்து வழங்கும் செய்தி மடல்.

அனைவருக்கும் லதா யோகேஷ் வணக்கம்.

இன்று ஞாயிற்றுக்கிழமை ஜூன் 22-ஆம்  தேதி ம் தேதி 2025-ம் ஆண்டு .

முதலில் இந்தியச் செய்திகள்!

காஷ்மீர் அமர்நாத் யாத்திரை பகுதியில் பலூன்கள்ட்ரோன்கள் பறக்க தடை


அமர்நாத் குகைக் கோயிலுக்கு செல்லும் அனைத்து வழிகளையும் “பறப்பதற்கு தடை செய்யப்பட்ட பகுதி” களாக அறிவித்து ஜம்மு-காஷ்மீர் அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 3-ல் தொடங்கி ஆகஸ்ட் 8 உடன் நிறைவடைய உள்ளது. இதையடுத்து, யாத்திரைக்கான பாதுகாப்பை பலப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக அமர்நாத் யாத்திரை மேற்கொள்ளும் அனைத்து வழிகளிலும் பறப்பதற்கு தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், பஹல்காம் மற்றும் பால்தால் வழியான பாதைகளும் அடங்கும்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகான பாதுகாப்பு சூழலை கருத்தில் கொண்டே தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

****

நேற்று சர்வ தேச யோகா தினம்

உலகம் முழுதும் சர்வ தேச யோகா தினம் நேற்று ஜூன் 21- ம் தேதி கொண்டாடப்பட்டது . இந்தியாவில் பெரிய நகரங்களில் அரசு சார்பிலும் தனியார் சார்பிலும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கூடி யோகாசனப் பயிற்சிகளை செய்தார்கள் . தமிழ் நாடு உள்பட எல்லா மாநில அரசுகளும் இதை ஊக்குவித்தன

சர்வதேச யோகா தினத்தை ஒட்டி தமிழகத்தின் 15 நகரங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு முன்பதிவு முறையில் இடம் கொடுக்கப்பட்டது

ஆந்திர மாநிலத்தில் 21-ந் தேதி கின்னஸ் உலக சாதனை யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் முழு விவரம் விரைவில் வெளியாகும்.

*****

பெங்களூரில் சந்யாசிகள் மகாநாடு ஆயிரம் சந்யாசிகள் பங்கேற்பு

பாரதீய சாந்த் மகா சம்மேளனம்

காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் ஜூன் 17- ஆம் தேதி பெங்களூரில் நடைபெற்ற பாரதிய சாந்த் மகா சம்மேளனத்தில் கலந்து கொண்டார். சமஸ்கிருதத்தில் சங்கல்பம் என்ற சமஸ்கிருத பதிப்பை வாசித்தார். தமிழ்நாட்டிலிருந்து தருமபுர ஆதீனகர்த்தரும் மஹா நாட்டில் பங்கேற்றார்.

இந்த நிகழ்வில் பேசிய சுவாமிகள், மாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக ஸ்ரீ சுயம்பிரகாச சச்சிதானந்த சரஸ்வதி மற்றும் ஸ்ரீ ஜெயேந்திர பூரி ஆகியோரின் முயற்சிகளைப் பாராட்டினார்.

சம்மேளனத்தில் திட்டமிட்டஒருமுகப்படுத்தப்பட்ட முயற்சிகள் நமது நாட்டை ‘விஸ்வ குரு’வாக மாற்றும் என்று கூறினார்.

இதுதான் உலகில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை உறுதி செய்யும் என்றும் சொன்னார்

இந்தியா முழுவதிலுமிருந்து 1000 ஆன்மீகத் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்

பாரதீய சாந்த் மஹா சம்மேளனம் என்பது இந்திய சாதுக்கள் மற்றும் துறவிகளின் ஒரு பெரிய கூட்டமைப்பு அல்லது சங்கமாகும். இது பெரும்பாலும் மத மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகளை  ஏற்பாடு செய்கிறது.

இது ஒரு தேசிய அளவிலான கூட்டமைப்பு அல்லது சங்கம் ஆகும், இதில் பல துறவிகள், சாதுக்கள் மற்றும் ஆன்மீக குருக்கள் உள்ளனர்.

இந்த சம்மேளனம், மத மற்றும் ஆன்மீக நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கும், சமூகத்தில் நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் ஏற்படுத்துவதற்கும், தர்மத்தை பரப்புவதற்கும் நிறுவப்பட்டுள்ளது.

****

கோவை மாரியம்மன் கோவில் சிலைகள் சேதப்படுத்தப்பட்ட விவகாரம் – அண்ணாமலை கண்டனம்! கோவை சின்னியம்பாளையம் பிளேக் மாரியம்மன் கோவிலில், நூற்றாண்டு கால பழமையான சிலைகளை  விஷமிகள் சேதப்படுத்தினர் இதற்கு பாரதீய ஜனதாக கட்சியின்  தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், இந்தப் பகுதி மக்கள் காலங்காலமாய் வணங்கி வரும் அம்மன் ஆலயத்தின் சிலைகளை உடைத்து, சமூகப் பதற்றம் ஏற்படுத்துவதே நோக்கமாகத் தெரிகிறது என தெரிவித்துள்ளார்

உடனடியாக, கோவில் சிலைகளை உடைத்த சமூக விரோதிகளை கைது செய்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பதையும் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

****

மதுரையில் மாபெரும் முருக பக்தர்கள் மகாநாடு

கடந்த சில மாதங்களாக மாநிலம் முழுதும் பரப்புரை செய்யப்பட்டு எல்லா மடத்தின் தலைவர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்ட  பெரிய மகா நாடு இன்று ஞாயிற்றுக்கிழமை மதுரையில் நடந்து கொண்டிருக்கிறது ; பல்லாயிரம் மக்கள் இதில் பங்கேற்றனர் இதையொட்டி நடந்த  கந்த  சசஷ்டி பாராயணத்திலும் பல்லாயிரம் பேர் பங்கு கொண்டனர் அறுபடை வீடு கண்காட்சி  யைப் பாக்க கடந்த சில தினங்களாக  மக்கள் வந்து  சென்ற வண்ணம் உள்ளனர்

முருக பக்தர்கள் மாநாட்டு திடலில் அறுபடைவீடு மாதிரிகள் அமைப்பு

மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டில் முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரி அமைக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.
மதுரை பாண்டி கோயில் அருகே அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடை பெறுகிறது . இதையொட்டி மாநாட்டு வளாகத்தில் முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மாதிரி அறுபடை வீடுகளை புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் திறந்து வைத்தார்.


முருகனின் அறுபடை வீடுகளாக திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, சோலைமலை முருகன் கோயில்களின் கோபுரங்களுடன் தனித்தனியாக மாதிரி கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மாதிரி கோயில்களில் அறுபடை வீடுகளின் மூலவர் அப்படியே காட்சிப்படுத்தப்பட்டுள்ளார்.
அறுபடை வீடுகளில் பூஜிக்கப்பட்ட வேல்களை மூலவர் கையில் பிடித்தபடி காட்சியளிக்கிறார்.

தினமும் காலை, மாலையில் 2 மணி நேரம் பூஜை செய்யவும், பிரசாதம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் இந்து முன்னணியினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்கள் கந்த சஷ்டி கவசம், திருப்புகழ் பாடி வருகின்றனர்.

****

திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.4½ கோடி

கடந்த வாரத்தில் திருப்பதி பாலாஜி,  வெங்கடாசலபதி  கோவிலில் ஒரேநாளில் சுமார் 85 ஆயிரம் பேர் சாமிதரிசனம் செய்ததாக தேவஸ்தானம் அறிவித்தது அனறைய தினம் மட்டும் உண்டியல் வசூல் நாலரைக் கோடி  ரூபாய் என்றும் தெரிவித்தது

*****

ராமேசுவரத்தில் 108 அடி உயர ஆஞ்சநேயர் சிலை கட்டும் பணி 50 சதவீதம் நிறைவு
ராமேசுவரம் சங்குமால் கடற்கரையில் ஒரு அமைப்பு சார்பில் சுமார் ரூ.100 கோடியில் 108 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சிலை கட்டும் பணியானது கடந்த 2 ஆண்டுகளுக்கு மேல் நடந்து வருகிறது இப்போது பாதி வேலை முடிந்துவிட்டது . இதைக்கட்டி முடிக்க இன்னும் பல மாதங்கள் ஆகும்

****

இனி சில வெளிநாட்டுச் செய்திகள்

மோடிக்கு சமஸ்கிருத இலக்கண புத்தகத்தை பரிசளித்த குரோஷியா பிரதமர்

குரோஷியா விமான நிலையம் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. குரோஷியா பிரதமர் பென்கொவிக், விமான நிலையத்திற்கு நேரில் சென்று பிரதமர் மோடியை வரவேற்றார். இந்த சந்திப்பின்போது, வரலாற்றில் முதல்முறையாக அச்சிடப்பட்ட சமஸ்கிருத இலக்கணபுத்தகத்தின் பிரதியை பிரதமர் மோடிக்கு பென்கொவிக் பரிசளித்தார். இது குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “விஞ்ஞானியும், மிஷனரியுமான பிலிப் வெஸ்டின்(1748–1806) லத்தீன் மொழியில் 1790-ம் ஆண்டு எழுதி முதல் முறையாக அச்சிட்ட சமஸ்கிருத இலக்கண புத்தகத்தின் பிரதியை இந்திய பிரதமர் மோடியிடம் வழங்கினேன்.
பிலிப் வெஸ்டின் இந்தியாவில் வாழ்ந்தபோது, கேரள பிராமணர்கள் மற்றும் உள்ளூர் கையெழுத்துப் பிரதிகள் மூலம் அவருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த

புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இது குரோஷியாவிற்கும், இந்தியாவிற்கும் இடையிலான ஆரம்பகால கலாசார உறவுகளின் அடையாளமாக விளங்குகிறது.

****

இலங்கை சீதையம்மன் கோயிலில் நடைபெற்ற ராமர் – சீதை திருக்கல்யாணம்!

இலங்கையில் உள்ள சீதையம்மன் கோயிலில் ராமர் – சீதை திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இலங்கையின் நுவரெலியா மாகாணம், சீதாஎலிய பகுதியில் உள்ள சீதையம்மன் கோயில், ராமாயணத்தில் அசோகவனம் என கூறப்படும் இடத்தில் அமைந்துள்ளது. இங்கு சீதைக்காக கட்டப்பட்டுள்ள கோயிலில் ராமர்-சீதா பிராட்டியின் திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

காலை 8 மணிக்கு கணபதி வழிபாட்டுடன் சிறப்பு பூஜைகள் தொடங்கிய நிலையில், கன்னிகாதானம் மற்றும் திருமாங்கல்யதாரண நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. பின்னர், ராமபிரானுக்கு பட்டாபிஷேகம் நடந்த நிலையில், உற்சவ மூர்த்திகளான ராமர், லட்சுமணன், சீதாதேவி ஆகியோர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

பின்னர், கோயிலில் புதிதாக அமைக்கப்பட்ட அனுமான் சிலையை ஆலயத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

****

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து  லதா யோகேஷ் வாசித்த செய்தி மடல் இது.

அடுத்த ஒளிபரப்பு

ஜூன்  மாதம் 29–ம்  தேதி 

லண்டன் நேரம் பகல் ஒரு  மணிக்கும்,

இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் .

வணக்கம்.

—SUBHAM—-

Tags- ஞானமயம்(22-6-2025) ,உலக இந்து செய்திமடல்

Leave a comment

Leave a comment