
Written by London Swaminathan
Post No. 14,684
Date uploaded in London – 24 June 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx

Horse Manual with SANSKRITINSTRUCTIONS OF KIKKULI, 1400 BCE, IN BERLIN MUSEUM.
திருவிளையாடல் புராணத்தில் குதிரை சாஸ்திரம்-3 (last part)
திருவிளையாடல் புராணத்தில்
****
குதிரை சாஸ்திரம்- Part 1
Post No. 14,668
Date uploaded in London – 20 June 2025
****
பஞ்சகல்யாணி: திருவிளையாடல் புராணத்தில் குதிரை சாஸ்திரம்- Part 2 (Post 14,761)
Written by London Swaminathan
Post No. 14,671
Date uploaded in London – 21 June 2025
****
Part- 3 சாமுத்ரிகா லட்சணம் (last part)
இதில் குதிரையின் உயரம் , வயது, அது குதிக்கும் உயரம், சாமுத்திரிகா லட்சணம், அதனால் வரும் நன்மை தீமைகள், முதலியனவற்றைப் பார்க்கையில், துருக்கி நாட்டில் கிக்குலி (Horse Trainer Kikkuli) ஏன் சம்ஸ்க்ருத மொழியில் குதிரை ஓட்டம் பற்றிக் கற்பித்தார் என்று விளங்குகிறது .
ஸம்ஸ்க்ருதச் சொற்கள் உடைய 3400 ஆண்டுப் பழமையான கல்வெட்டு (1400 BCE) ஜெர்மனியில் பெர்லின் மியூசியத்தில் இப்போது இருக்கிறது.

இச்சுழி யுடைய புரவிபந் தியில்யாத் திருக்கினும் பழுதிவை
கிடக்க
அச்சமில் பரிக்குப் பிராயநா லெட்டா மவத்தைபத்
தாகுமொவ் வொன்றில்
வைச்சது மூன்று வருடமு மிரண்டு மதியமும் பன்னிரு
நாளும்
நிச்சயித் தளந்தா ரின்னமு மொருசார் நிகழ்த்திடு
மிலக்கண மதுகேள்.
இந்தக் குற்றமுள்ள சுழியினையுடைய குதிரைகள்,
பந்தியில் கட்டப்பட்டிருப்பினும், தீங்குவிளையும்; இவை நிற்க;
போரின்கண் அஞ்சுதலில்லாத குதிரைக்கு வயசு முப்பத்திரண்டாகும்; பருவம் பத்தாகும்; ஒவ்வொரு பருவத்திலும் வைத்த கால வளவு,
மூன்றாண்டும் இரண்டு திங்களும் பன்னிரண்டு நாளுமெனத்
துணிந்து வரையறை செய்தனர்; இன்னமும் ஒரு வகையாகப் பரிநூலார் கூறும் இலக்கணத்தைக் கேட்பாயாக.
****
எவ்வண்ண பேதமிகுந் திருந்தாலும் வெள்ளைகலந் திருந்த
தானால்
அவ்வண்ணப் பரிநன்று கரும்புரவிக் கேடேனு மகன்மார்
பேனுஞ்
செவ்வண்ண மிருக்கினது சயமுளதப் படிவெண்மை சேர்ந்தா
லந்த
மைவண்ணப் பரியின்பேர் வாருணமாஞ் சயங்கொடுக்கு
மாற்றார்போரில்.
எந்த நிறத்தின் வகை மிக்கிருந்தாலும், வெள்ளை / வெண்ணிறங் கலந்திருக்குமாயின், அந்நிறத்தையுடைய குதிரை நல்லது; கரிய குதிரைக்கு வயிற்றிலேனும் அகன்ற மார்பிலேனும்,
செந்நிற மிருக்குமாயின், அக்குதிரை வெற்றியையுடையது, அப்படி வெண்மை சேர்ந்தால் – அங்ஙனமே வெண்ணிற மிருப்பின், அந்த
மை போலுங் கரிய நிறத்தினையுடைய குதிரையின் பெயர், வாருணம்[ அது பகைவருடன் புரியும் போரின்கண் தன் தலைவனுக்கு வெற்றியைக் கொடுக்கும்.
****

மகவளிக்கும் பிடர்வெளுப்பு மகிழ்வளிக்கு
முரவெளுப்பு மணித்தார்க் கண்டத்
தகவௌப்புப் பொருள்கொடுக்கு முகவெளுப்புச்
சயங்கொடுக்கு மதன்பின் பக்கத்
தகவெளுப்புச் சுகம்பயக்கு மிடவெளுப்புச்
சந்தானந் தழைக்குஞ் செல்வம்
மிகவளர்க்குந் தனம்பலதா னியநல்கும்
வலப்புறத்து வெள்ளை மாதோ.
பிடர் வெளுப்புள்ள குதிரை தன் தலைவனுக்கு மகப் பேற்றினைக் கொடுக்கும்; மார்பு வெளுப்புள்ள குதிரை மகிழ்ச்சியைக் கொடுக்கும்; மாணிக்கமாலையை யணிந்த கழுத்தின்கண் வெண்மையுள்ள குதிரை, பொருளைக் கொடுக்கும்; முகவெளுப்புள்ள குதிரை வெற்றியைக் கொடுக்கும்; அம்முகத்தின் பின்பக்கத்தின் கண் பொருந்த வெளுப்பமைந்த திரை,இன்பத்தைக் கொடுக்கும்; இடது பக்கத்தில் வெண்மையுள்ள குதிரை மகப் பேறு மிகுதலாகிய செல்வத்தை ப் பெருக்கும்;வலது பக்கத்தின்கண்
வெண்மையுள்ள குதிரை, திரவியத்தையும் பல விளைபொருளையும் அளிக்கும். வெளுப்பு,வெள்ளை என்பன பரிக்கு ஆயின.
****
நற்புறம்வான் முகமூன்றும் வெளுத்தபரி வென்றிதரு*
நாபி தொட்டு
முற்புறமெ லாம்பரிதி யெனச்சிவந்து மதியெனப்பின்
முழுதும் வெள்கும்
பொற்புடைய வயப்பரிக்குப் பகல்விசய மதியெனமுற்
புறம்பு வெள்கிப்
பிற்புறமெல் லாங்கதிர்போற் சிவந்தபரிக் கிராவிசயம்
பெருகு+மன்றே.
நல்ல முதுகும் வாலும் முகமுமாகிய இம்மூன்றிலும்
வெண்ணிறமுள்ள குதிரை (தன் தலைவனுக்கு) வெற்றியைத் தரும்; உந்தி முதலாக, முன் பக்கமனைத்தும் சூரியனைப்போல் செந்நிறம் பெற்று, பின்புறமனைத்துஞ் சந்திரனைப் போல வெளுத்திருக்கும், அழகுடைய தாவுங்குதிரைக்குப் பகற்போரில் வெற்றியும், முன்புறமுற்றும் சந்திரனைப்போன்று வெண்ணிறம் பெற்று, பின்புறமனைத்து சூரியனைப்போலச் சிவந்த குதிரைக்கு, இராப்போரில் வெற்றியும் பெருகும்.

*****
வந்தனவா லிவ்விரண்டு வகைப்பரியும் புரவியடி வைத்தா
லொத்த
பந்தெனவு நின்றாலோ மலையெனவு மொலித்தாலோ பகடு
சீறும்
வெந்தறுக ணரியெனவும் வேகத்தாற் காற்றெனவு மிதிக்குங்
கூத்தாற்
சந்தநட மகனெனவு நடக்கிலரி களிறெனவுந் தகைய தாகி.
இந்த இரண்டுவகைக் குதிரைகளும் வந்தன; குதிரை அடி வைத்தால் ஒத்த பந்தைப்போலவும்,
நின்றதானால் மலை போலவும்,
கனைத்ததானால், யானையைச் சீறிக் கொல்லும் கொடிய
அஞ்சாமையையுடைய சிங்கம்போலவும்,
வேகத்தினால் காற்றைப்போலவும், மிதித்து நடக்கும் கூத்தினால் அழகிய கூத்தனைப்
போலவும், நடந்தால்
சிங்கத்தையும் யானையையும் போலவும் தன்மையையுடையதாய்.
****
குலமகள்போற் கவிழ்முகமுங் கருநெய்த லெனக்கண்ணுங்
கொண்டு கார்போல்
நிலவியசீர் வண்ணமுங்கார் நெய்தலெனக் கடிமணமு நிறைந்து நாற்ற
மலரகில்சந் தெரிமணிப்பூ ணலங்கரிக்கி லானாத மகிழ்ச்சி
யெய்தி இலகுவதுத் தமவாசி யென்றுரைப்பர் பரிவேத
மெல்லை கண்டோர்.
உயர்குடியிற் பிறந்த கற்புடை மகள்போலக் கவிழ்ந்த முகத்தையும், கருங்குவளை மலர்போலும் கண்ணையும் கொண்டு, கருமுகில் போல் விளங்கிய சிறந்த நிறமும், கருநெய்தல் போல மிக்க மணமும் நிறைந்து, மணமிக்க மலரும் அகிற்குழம்பும் சந்தனக் குழம்பும் நெருப்புப்போன்ற மணிகள் அழுத்திய அணிகளுமாகிய இவற்றால் ஒப்பனைச் செய்யின், நீங்காத மகிழ்ச்சியை அடைந்து விளங்குவது, உத்தமக்குதிரை என்று, புரவிநூலின் வரம்பினைக் கண்டறிந்தவர் கூறுவர்.
*****
நூறுவிர லுத்தமவாம் பரிக்குயர்வீ ரெட்டுவிர னூறு நீக்கிக்
கூறுவிரன் மத்திமவாம் பரிக்கறுபத் தொன்றதமக் குதிரைக
கென்ப
ஈறில்புக ழாய்பொருந ரிப்பரியைப் பூசனஞ்செய் திறைஞ்சிப்
பாசம்
மாறுவரா லெனமணித்தார் சதங்கைசிலம் பணிவித்து
மதிக்கோ மாறன்.
தாவுகின்ற உத்தமக் குதிரைக்கு உயரம் நூறுவிரலளவாகும், தாவுகின்ற மத்திமக்குதிரைக்கு உயரம் அந்நூறு விரலில் பதினாறு விரல் நீக்கி மீதமாகக் கூறப்படும் எண்பத்து நான்கு விரலளவாகும், அதமக்குதிரைக்கு உயரம் அறுபத்தொரு விரலளவாகும் என்று கூறுவர்; அழிவில்லாத புகழை யுடையோய், வேந்தர்கள், இக்குதிரைகளைப் பூசித்து வணங்கிக் கயிறுமாறுவார் களென்று கூறியருள,
அழகிய கிண்கிணி மாலையும் சதங்கை மாலையும் சிலம்பும்
அணிவித்து, சந்திரன் மரபினனாகிய அரிமருத்தன பாண்டியன்.
பொருநர் – ஈண்டு வேந்தர். பூசனஞ் செய்து – பூசித்து. மாறுவர் – மாறும் வழக்க முடையர். பொருகின்ற நரிப்பரியை என உண்மை புலப்பட வைக்கும் நயம் பாராட்டற்குரியது. (120)
****
கொத்தவிழ்தார் நறுஞ்சாந்தங் கொண்டுசெழும் புகைதீபங்
கொடுத்துப் பூசை
பத்திமையாற் செய்திறைஞ்சி யெதிர்நிற்ப வாலவாய்ப்
பரனை நோக்கிக்
கைத்தலந்தன் சிரமுகிழ்த்து வாழியெனப் பரிகொடுத்தான்
கயிறு மாறி
முத்தொழிலின் மூவராய் மூவர்க்குந் தெரியாத முக்கண்
மூர்த்தி.
கொத்தொடு மலர்ந்தமலர்களாற் றொடுத்தமாலையும்
தூபமும் தீபமுங் கொடுத்து, அன்புடன் வழிபட்டு, வணங்கி எதிரே
நிற்க, மூன்று தொழில்களை யுடைய மூன்று தேவராகியும்,
அம்மூவருக்கும் தெரியாத மூன்று கண்களையுடைய இறைவன்,
திருவாலவாயில் எழுந்தருளிய சோமசுந்தரக் கடவுளை நோக்கி,
கைத்தலங்களைத் தன் முடியிற்குவித்து, மன்னன் வாழக்கடவன் என்று வேண்டிக் கயிறு மாறிக் குதிரைகளைக் கொடுத்தனன். 121
–subham–
tags–தி. வி. புராணத்தில்,குதிரைகள், சாமுத்ரிகா லட்சணம் , பகுதி -3 கிக்குலி (Horse Trainer Kikkuli), 1400 BCE