மௌலானா அபுல்கலாம் ஆஜாத் உள்ளிட்டோரின் கல்வித் தொண்டு! – 2 Post.14,690)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,690

Date uploaded in London – –26 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

மௌலானா அபுல்கலாம் ஆஜாத் உள்ளிட்டோரின் கல்வித் தொண்டு! – 2

ச. நாகராஜன்

புத்த தர்மம் மற்றும் ஹிந்து மதம் பற்றி அறிவதற்கான உலக மையமாக விளங்கிய நாலந்தா பல்கலைக்கழகத்தை 1193ம் ஆண்டில் பக்தியார் கில்ஜி எரித்தது உள்ளிட்ட சம்பவங்களை மௌலானா அபுல்கலாம் ஆஜாத் மறுத்து அவை அப்படியி\ல்லை என்றார்.

பாடபுத்தகங்கள் இப்படிப்பட்ட கொடுமைகளைப் புறக்கணித்தது. முகலாயரின் கட்டிடக்கலை சாதனைகளையும் அக்பரின் சமரசக் கொள்கைகளையும் மட்டுமே விவரித்தன. இப்படிப்பட்ட ஹிந்துக்களின் அறிவையும் அவர்களின் வரலாற்றையும் குறிக்கும் பொற்காலத்தை புறக்கணித்ததோடு முகலாயர் படுத்திய கொடுமைகளை விட்டு விட்டு அவர்களின் வெற்றிகளையும் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளையும் மட்டுமே தெரிவித்தது.

கொள்கையில் ஹிந்து விரோதப் போக்கு

மௌலானா ஆஜாதின் கொள்கைகள் ஹிந்து பண்பாட்டை குறைத்து மதிப்பிட்டதோடு இஸ்லாமிய செல்வாக்கை உயர்த்திப் பேசியது. அவர் இஸ்லாமிய மொழியான உருது மொழியை ஆதரித்தார். ஹிந்துக்களின் சாஸ்திரங்களைக் கொண்ட சம்ஸ்கிருதத்தை ஆதரிக்கவில்லை.  பாரம்பரியமாக இருந்து வந்த ஹிந்து குருகுலங்களை புறக்கணித்து விட்டு இதற்கு எதிராக ஜமியா மிலியா இஸ்லாமியா போன்ற நிறுவனங்களை அவர் ஆதரித்தார். சனாதன தர்மத்தை பிற்போக்கானது என்று எண்ணும்படி செய்வதற்கான முயற்சி இது. இதர அந்நிய இறக்குமதி செய்யப்பட்ட பண்பாட்டையும் தத்துவங்களையும் இங்குள்ள தர்மத்திற்கு பதிலாக மாற்றுவதே இதன் நோக்கம்.

மௌலானாவால் நிறுவப்பட்ட சாஹித்ய அகாடமி, சங்கீத் நாடக அகாடமி போன்றவை ராமாயணம் மற்றும் மஹாபாரதம் ஆகிய இதிஹாஸங்களுக்குப் பதிலாக உருது மொழிக்கும் பெர்சிய மொழிக்கும் முதன்மை தருவதை அனைவரும் விமர்சித்தனர்.

இந்த ஹிந்து விரோதப் போக்கு மற்ற பொது நிறுவனங்களில் அனைத்திலும் தொடர ஆரம்பித்தன.  ஹிந்து அடையாளங்களும் மதிப்புக்குரியவைகளும் திட்டமிட்டு ஒதுக்கப்பட்டன. இது ஹிந்து மாணவர்களிடையே தங்கள் ஹிந்து பாரம்பரியம் பற்றி ஒரு தாழ்வு மனப்பான்மையை ஊக்குவித்தது.

சரி, இதற்குப் பின்னால் மௌலானாவைத் தொடர்ந்து வந்தவர்கள் என்ன செய்தார்கள் என்று பார்ப்போம்!          

                           *                    – தொடரும்

Leave a comment

Leave a comment