
Post No. 14,699
Date uploaded in London – 28 June 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கல்யாணம் என்று சொன்னவுடன் பெண் வீட்டார் என்ன என்ன செய்வார்கள் என்று உங்கள் மனதிற்கு வரும் பத்து அம்சங்களைச் (POINTS) சொல்லுங்கள் . கீழே உள்ள அட்டவணையுடன் (IT MUST MATCH OUR SELECTION GIVEN BELOW ) ஒப்பிட்டு உங்களுக்கு நீங்களே மார்க்/ மதிப்பெண் போட்டுக் கொள்ளுங்கள் . ஒவ்வொன்றுக்கும் பத்து மார்க்குகள்.
****
SAMPLE ANSWER –Ten Marks
விடைகள்— 1.பத்திரிகை அடித்து எல்லோருக்கும் அனுப்புதல் — பத்து மார்க்குகள்
2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10…………………………
****

விடைகள்—
1.. கல்யாண பத்திரிகை அடித்து எல்லோருக்கும் அனுப்புதல் — பத்து மார்க்குகள்
2. கல்யாண மண்டபத்தை , கல்யாண மஹாலை வாடகைக்கு எடுத்தல்; அலங்காரத்துக்கு ஆட்களை அமர்த்தல் — பத்து மார்க்குகள்
3.தாலி, மாங்கல்யம் நகைகள் வாங்குதல் — பத்து மார்க்குகள்
4. பணம் , பணம், பணம் எல்லாவற்றுக்கும் தேவை — பத்து மார்க்குகள்
5.பூ மாலைகளை ஏற்பாடு செய்தல் அல்லது கல்யாண ப்ரோக்கரிடம் பொறுப்பை ஒப்படைத்தல் — பத்து மார்க்குகள்
6.வரதட்சிணை இல்லாவிடிலும் மாப்பிள்ளைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மரியாதை; புடவை, வேஷ்டி அளித்தல் அல்லது மாப்பிள்ளைக்கு மோதிரம் போடுதல் — பத்து மார்க்குகள்
7. புரோகிதர் அல்லது கல்யாணத்தை நடத்தி வைப்பவரை ஏற்பாடு செய்தல் பத்து மார்க்குகள்
8.தாம்பூலப் பை அல்லது வந்தோருக்கு நினைவுப் பரிசு கொடுத்தல் . — பத்து மார்க்குகள்
9. கல்யாண படசணங்கள் அல்லது நலுங்கு அல்லது ரிசப்ஷனில் கலை நிகழ்ச்சிகள் –பத்து மார்க்குகள்
10.ஜாதகத்தில் நம்பிக்கை இருந்தால் ஜோதிடப் பொருத்தம் பார்த்தல் அல்லது குடும்பத்திலுள்ள பெரியோர்களைக் கலந்தாலோசித்தல் அல்லது குல தெய்வ வழிபாடு அல்லது சுமங்கலிப் பிரார்த்தனை – ஏதாவது ஒன்று சொன்னால் போதும்–பத்து மார்க்குகள்
–subham—
Tags- கல்யாணம் , பெண் வீட்டார், பத்து விஷயங்கள்,நூறு மார்க்