WRITTEN BY S NAGARAJAN
Post No. 14,701
Date uploaded in London – –29 June 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மௌலானா அபுல்கலாம் ஆஜாத் உள்ளிட்டோரின் கல்வித் தொண்டு! – 5
ச. நாகராஜன்
பக்ருதீன் அலி அஹமது – தொடர்ந்தார் தொண்டை!
பக்ருதீன் அலி அஹமது மிகக் குறுகிய காலமே பதவியில் இருந்தார். அவரும் ஹிந்து விரோதப் போக்கையும் இஸ்லாமிய ஆதரவுப் போக்கையும் தொடர்ந்து கடைப்பிடித்தார். ஔரங்கசீப்பின் ‘பர்மான்களிலேயே’ குறிப்பிடப்பட்டிருக்கும் ஹிந்துக் கோவில்களின் அழிவு பற்றி, எதிலும் சொல்லப்படவே இல்லை. கல்வித் திட்டம் இஸ்லாமியரின் “நல்லாட்சியை” மட்டும் தெரிவித்தது. திப்பு சுல்தான் செய்த கட்டாய மதமாற்றம் மற்றும் சீக்கியர்களை முகலாயர் கொடுமைப்படுத்தியது ஆகிய எதுவும் சொல்லப்படவில்லை.
சையித் நூரல் ஹஸன்
சையித் நூரல் ஹஸன், ஒரு வரலாற்று ஆசிரியர். இவர் 1971 முதல் 1977 முடிய கல்வித்துறை அமைச்சராக இருந்தார். ஆஜாதிற்குப் பிறகு படு மட்டமான ஆளாக இருந்த இவர் ஹிந்து விரோதப் போக்கைக் கல்வித் துறையில் ஆழ வேரூன்றினார். ஹஸனின் பதவிக்காலம் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. மார்க்ஸீயவாதிகளான ரோமிலா தாபர் மற்றும் இர்ஃபான் ஹபீப் ஆகியோர் ஹிந்துப் பண்பாடு, நாகரிகம் மற்றும் மதத்தை இழிவு படுத்தும் வகையில் வரலாற்றைத் திருப்பி எழுத (அதாவது மாற்றி எழுத) பணிக்கப்பட்டார்கள்.
ஹஸனது பதவிக் காலத்தில் NCERT பாடபுத்தகங்கள் மூலம் பழங்கால மற்றும் இடைக்கால இந்திய வரலாற்றில் போலியான மார்க்ஸிய போராட்டங்கள் திணிக்கப்பட்டது. முகலாயரின் சாதனைகளை அது அழுத்தம் திருத்தமாக உரைத்தது. பாபருக்கு எதிராக ராஜபுத்திரர்கள் போர் செய்தது மற்றும் அஹோம் வம்சத்தார் ஔரங்கசீப்பை எதிர்த்தது ஆகியவை சேர்க்கப்படவில்லை.ஹிந்துக்களை அவமானப்படுத்தும் விஷயங்களை அது உறுதிப்படுத்தியது. எடுத்துக்காட்டாக மராத்திய சாம்ராஜ்யத்தில் முகலாயரின் ஆட்சி நீக்கப்பட்டதை அது குறைவாக மதிப்பிட்டதோடு பழித்தும் பேசப்பட்டதைக் கூறலாம். பாபரின் வெற்றிகள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. ஹஸனின் உருது மொழி ஆதரவும் மைனாரிடி நிறுவனங்களின் ஆதரவும் இன்னும் அதிகமாக ஹிந்துக்களின் பண்பாட்டு அடையாளங்களை ஓரங்கட்டியது. கல்வித்துறையானது ஹிந்து பண்பாட்டை நீக்கி “அராபியமயமாக” இந்தியாவை ஆக்க ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டது.· தொடரும்,
நன்றி, ஆதாரம் : ட்ரூத், கல்கத்தா வார இதழ்
TRUTH Vol 93 Issue No 6 Dated 23-5-2025