
Post No. 14,709
Date uploaded in London – 30 June 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ரத யாத்திரை அல்லது தேரோட்டம் என்று சொன்னவுடன் உங்கள் மனதிற்கு வரும் பத்து அம்சங்களைச் (POINTS) சொல்லுங்கள் . கீழே உள்ள அட்டவணையுடன் (IT MUST MATCH OUR SELECTION GIVEN BELOW ) ஒப்பிட்டு உங்களுக்கு நீங்களே மார்க்/ மதிப்பெண் போட்டுக் கொள்ளுங்கள் . ஒவ்வொன்றுக்கும் பத்து மார்க்குகள்.
****
SAMPLE ANSWER –Ten Marks
விடைகள்— 1.ஊர் கூடி தேர் இழுப்பார்கள்; ஜாதி மத இன வேறுபாடுகள் கிடையாது — பத்து மார்க்குகள்
2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10…………………………



****
விடைகள்—
1.ஊர் கூடி தேர் இழுப்பார்கள்; ஜாதி மத இன வேறுபாடுகள் கிடையாது — பத்து மார்க்குகள்.
2.வடம் பிடித்தால் புண்ணியம்; வடக் கயிற்றைத் தொட்டாலே போதும். — பத்து மார்க்குகள்.
3.தேரை நிலைக்கு கொண்டு சேர்க்கவேண்டும்– பத்து மார்க்குகள்.
4. தேர் கவிழாமல் இருக்க முட்டுக்கட்டை போட வேண்டும் ; வாழ்க்கையில் எவ்வளவு முட்டுக்கட்டைகள் வந்தாலும் இறுதியில் தேர் நிலையை அடைவது போல நாம் இறுதி வெற்றி அடைவோம் என்பது இதன் தத்துவம். — பத்து மார்க்குகள்.
5. திருவாரூரின் ஆழித் தேர்தான் பெரியது அல்லது உலகம் மு ழுதும் தெரி ந்த ரத யாத்திரை புரி ரத யாத்திரை – அல்லது மதுரைத் தேரோட்டம்; இவை மூன்றும், லட்சக் கணக்கில் மக்களை ஈர்க்கும் பண்டிகைகள்– பத்து மார்க்குகள்.
6.தமிழர்களும் ஹரே கிருஷ்ணா இயக்கத்தினரும் இன்று உலகின் முக்கிய நகரங்களில் ஆண்டுதோறும் ரத யாத்திரை நடத்துகின்றனர் — பத்து மார்க்குகள்.
7. தேர்த் திருவிழா என்றவுடன் பெருங்க்கூட்டமும் சிறுவர்களுக்கான மிட்டாய், பொம்மைகள் விற்பனையும், ராட்டினம் முதலியவையும் வந்து விடும்– பத்து மார்க்குகள்.
8.இந்துக்களின் மகத்தான கண்டுபிடிப்பு இது; சைவர்களும் வைணவர்களும் நடத்தும் விழா ;சுவாமியைத் தரிசிக்க கோவிலுக்குச் செல்ல முடியாதோருக்கு சுவாமியே வந்து தரிசனம் தாரும் அற்புத ஏற்பாடு இது — பத்து மார்க்குகள்.
9.தேர் விழா பொதுவாக கடைசி நாள் கோவில் விழாவாக இருக்கும் ஆயினும் மறுநாள் சுவாமி தடம் பார்க்க வருவார் என்று சொல்லி மீண்டும் வருவார் — பத்து மார்க்குகள்.
10.இந்த விழா மக்கள் அனைவரும் சமம் என்பதைக் காட்டுவதோடு அந்தக் காலத்தில் பிரம்மாண்டமான ராட்சதத் தேர்களைத் தாங்கும் வகையில் சாலை அமைப்புகள் அகலமாகவும் வலுவானதாகவும் இருந்ததைக் காட்டுகிறது — பத்து மார்க்குகள்.
.
–subham—
Tags–ரத யாத்திரை, தேரோட்டம், பத்து விஷயங்கள்., 100 மார்க்,