WRITTEN BY S NAGARAJAN
Post No. 14,710
Date uploaded in London – —1 July 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மௌலானா அபுல்கலாம் ஆஜாத் உள்ளிட்டோரின் கல்வித் தொண்டு! – 7
ச. நாகராஜன்
2025 மே மாதம்1ம் தேதியிட்ட ஸ்வராஜ்யாஇதழில் திரு எம். நாகேஸ்வர ராவ் எழுதியுள்ள கட்டுரை :
திரித்து எழுதியதற்கான சாட்சியம்
கல்வித்துறையில் இந்தியத்துவத்தை ஒழிக்கும் முயற்சியில் மௌலானா ஆஜாதாலும் அவருக்குப் பின் வந்தோராலும் ஹிந்துக்களின் சரித்திரத்தையும் பண்பாட்டையும் மறைக்கும் முயற்சி நாம் சுதந்திரம் பெற்றதற்குப் பின்னர் தொடங்கப்பட்டது.
இடைக்காலத்தில் உருவான காலவரிசைப்படியான சரித்திரம்
தபாகத் இ நஸிரி (Tabaqat – I – Nasiri) போன்ற ஆவணங்கள் ஆலயங்கள் அழிக்கப்பட்டதையும் கோரமான படுகொலைகளையும் ஆவணப்படுத்தியுள்ளன என்றாலும், இவை பாடபுத்தகங்களில் தவிர்க்கப்பட்டன. எடுத்துக்காட்டாக, சித்தூரை 1303ல் அலாவுதீன் கில்ஜி
அழித்ததையும் அதைத் தொடர்ந்து ராஜபுத்திரப் பெண்மணிகள் தற்கொலை செய்து கொண்டதையும் மிக அரிதாகவே இவை கூறின.
மேலைநாட்டு வரலாற்று ஆசிரியர்கள்
அமெரிக்க வரலாற்று ஆசிரியரான வில் டியூரண்ட் 1935ல் எழுதிய தனது நூலான தி ஸ்டோரி ஆஃப் சிவிலைசேஷன் : அவர் ஓரியண்டல் ஹெரிடேஜ் (The Story of Civilization : Our Oriental Heritage) என்ற நூலில் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்: இந்தியாவை முகலாயர்கள் வென்றதை வரலாற்றில் மிக கோரமான ரத்தம் சிந்தல் என்று கூறலாம். ஹிந்துக்களைப் படுகொலை செய்ததையும் அவர்களைக் கட்டாயப்படுத்தி மதம் மாற்றியதையும் ஹிந்துப் பெண்மணிகளையும் குழந்தைகளையும் அடிமைச் சந்தைக்கு தூக்கிச் சென்றதையும், கி.பி 800 முதல் 1700 முடிய ஆலயங்கள் இஸ்லாமிய வீரர்களால் அழிக்கப்பட்டதையும் இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர்களும் அறிஞர்களும் மிக்க கர்வத்துடன் ஆவணப்படுத்தியுள்ளார்கள்.
லட்சக்கணக்கான ஹிந்துக்கள் வாள் முனையில் இந்தக் காலத்தில் இஸ்லாமுக்கு மதம் மாற்றப்பட்டார்கள்.
இது ஒரு துயரமான கதை. ஏனெனில் நாகரிகம் என்பது விலைமதிப்புடைய ஒரு விஷயம். அதனுடைய நுட்பமான ஒழுங்கும் சுதந்திரமும் பண்பாடும் அமைதியும் வெளியிலிருந்தும் உள்ளே அதிகமாகப் பெருக்கப்பட்ட காட்டுமிராண்டிகளாலும் தூக்கி எறியப்படக்கூடும் என்பதை அறிவித்த கதையாகும் இது. ஹிந்துக்கள் உள்நாட்டுப் போர்களாலும், பிரிவுகளாலும் தங்கள் வலிமையை வீணாக்க அனுமதித்து விட்டனர். அவர்கள் வாழ்க்கையைச் செலுத்த புத்த மதம் ஜைன மதம் ஆகியவற்றைப் பின்பற்ற ஆரம்பித்தனர்.“
இப்படி அவர் கூறினாலும் அது இந்திய கல்வித் துறை அ,மைப்பில் ஒரு வார்த்தை கூடச் சேர்க்கப்படவில்லை.
பாடபுத்தகத்தில் குறிப்பிடப்பட்ட விஷயங்கள்
மௌலானா ஆஜாதின் செல்வாக்குக்கு உட்பட்ட NCERT புத்தகங்கள் முகலாயரின் நிர்வாகத்தைப் பற்றி மட்டுமே கவனம் செலுத்திக் குறிப்பிட்டன. ஹிந்துக்களின் மீது விதிக்கப்பட்ட ஜஸியா வரி பற்றியோ இஸ்லாமிய ஆட்சியில் கட்டாயமாக மதம் மாற்றப்பட்டதையோ அவை குறிப்பிடவில்லை.
தொடரும்…………………………………,
நன்றி, ஆதாரம் : ட்ரூத், கல்கத்தா வார இதழ்
TRUTH Vol 93 Issue No 7 Dated 30-5-2025