அகஸ்தியர் பற்றி பத்து விஷயங்களைச் சொன்னால் 100 மார்க்! (Post No.14,716)

Written by London Swaminathan

Post No. 14,716

Date uploaded in London –  2 July  2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

அகஸ்தியர் என்று சொன்னவுடன்  உங்கள் மனதிற்கு வரும் பத்து அம்சங்களைச் (POINTS)  சொல்லுங்கள் . கீழே உள்ள அட்டவணையுடன் (IT MUST MATCH OUR SELECTION GIVEN BELOW ) ஒப்பிட்டு உங்களுக்கு நீங்களே மார்க்/ மதிப்பெண் போட்டுக் கொள்ளுங்கள் . ஒவ்வொன்றுக்கும் பத்து மார்க்குகள்.

****

SAMPLE ANSWER –Ten Marks

விடைகள்— 1. அகஸ்தியர் குள்ளமானவர்

2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10…………………………

****

விடைகள்—

1.அகஸ்தியர் குள்ளமானவர் — பத்து மார்க்குகள்.

2.கடலைக்குடித்தார்; (அதாவது கடல் கடந்து பாண்டியர்களை அழைத்துச் சென்று, ஏழு தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இந்து நாகரீகத்தை 1500 ஆண்டுகளுக்கு கொடி கட்டிப்பறக்கவிட்டார் ; மிகப் பழைய பாண்டியமன்னன் திருமாறனின் கல்வெட்டு வியட்நாமில் உள்ளது). பத்து மார்க்குகள்.

3.விந்திய மலையைக் கர்வபங்கம் செய்தார் ; (அதாவது முதல் தடவையாக விந்திய மலைக்கு இடையே சாலை அமைத்து வந்தார்; ராமன் ,அர்ஜுனன் போன்றோர் கடற்கரை சாலையைப் பயன்படுத்தி  தென்னிந்தியாவுக்கு வந்தனர்). பத்து மார்க்குகள்.

4.காவிரி நதியை உண்டாக்கினார் ; (அதாவது அகஸ்தியர் மாபெரும் சிவில் என்ஜினீயர் GREAT CIVIL ENGINEER; வடநாட்டில் பகீரதன் கங்கை நதியை இப்போதைய பாதையில் திருப்பி விட்டது போல பல பாறைகளை நகர்த்த வைத்து, காவிரியைத் தமிழ் நாட்டிற்குள் திருப்பி விட்டார் ; இப்படித் திருப்பலாமா, அப்படித் திருப்பிவிடலாமா என்று BLUE PRINT   ப்ளு பிரிண்ட் போட்டுக்கொண்டு இருந்தபோது, ஒரு காகம் வந்து அவரது கமண்டல நீரை கவிழ்த்தது அந்த நீர் ஒடிய திசையில் காவிரி நதியைத் திருப்பிவிட என்ஜினீயர்களை அமர்த்தி வெற்றிகண்டார்0- பத்து மார்க்குகள்.

5.ரிக்வேத அகஸ்தியர், லோபாமுத்ரா என்ற ராணியைக் கல்யாணம் செய்துகொண்டார் –பத்து மார்க்குகள்.

6. தமிழ் மொழிக்கு இலக்கணம் உண்டாக்கினார் (பாரதியார் பாட்டில் உள்ளது )   –பத்து மார்க்குகள்.

7. கடைசியாக இவர் பொதிய மலையில் ஆஸ்ரமத்தை அமர்ந்து தங்கிவிட்டார். –பத்து மார்க்குகள்.

.8.அகஸ்திய நட்சத்திரம், அகத்திக்கீரை  முதலிய பல இவர் பெயரில் உள்ளன –பத்து மார்க்குகள்.

9.தமிழ்நாட்டின் தென் பகுதியில் அகத்தியர் பெயரில் ஊர்களும் மழையும் உள்ளன.— பத்து மார்க்குகள்.

10.இவரது பெயரில் நிறைய மருத்துவ, சோதிட நூல்கள் உள்ளன அல்லது இவரது சிலைகள் லண்டன் மியூசியத்திலும் தென் கிழக்கு ஆசியா நாட்டு மியூசியங்களிலும்  உள்ளன ஏதேனும் ஒன்று சொன்னால் போதும் — பத்து மார்க்குகள்.

–subham—

Tags—அகஸ்தியர், குள்ளமானவர், 100மார்க்குகள்.

Leave a comment

Leave a comment