Post No. 14,714
Date uploaded in London – —2 July 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மௌலானா அபுல்கலாம் ஆஜாத் உள்ளிட்டோரின் கல்வித் தொண்டு! – 8
ச. நாகராஜன்
2025 மே மாதம்1ம் தேதியிட்ட ஸ்வராஜ்யாஇதழில் திரு எம். நாகேஸ்வர ராவ் எழுதியுள்ள கட்டுரையை இது வரை படித்தோம்.
நீண்ட கட்டுரையில் இதுவரை சொல்லப்படாத புதுக் கருத்துக்களை மட்டும் இங்கு காண்போம். திருப்பிச் சொல்லப்பட்ட கருத்துக்களை சேர்க்காமல் நீண்ட கட்டுரை சுருக்கமாகத் தரப்படுகிறது.
ரிக்வேதம், மஹாபாரத்ம் உள்ளிட்ட பொக்கிஷங்கள் ஒதுக்கப்பட்டன. உலகின் மிக நீண்ட இதிஹாஸமான மஹாபாரதத்தின் புகழ் சொல்லப்படவில்லை. அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் போன்ற உருது கல்விக்கூடங்கள் ஆதரிக்கப்பட்டன.
காஷ்மீர் ஹிந்துக்கள் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். ஹம்பி ஆலயம் அழிக்கப்பட்டது. இவை குறிப்பிடப்படவில்லை.
ஹிந்து விரோதப் போக்கு ஊடகங்களிலும் சினிமாக்களிலும் பரவச் செய்யப்பட்டது.
இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் நேருவின் சோஷியலிஸ அமைப்பின்படி கிறிஸ்தவத்தையும் இஸ்லாமையும் தாஜா செய்யும் போக்கு பரவியது.
பின்னால் வந்த பிஜேபி அரசும் பாடபுத்தகங்களைத் திருத்தத் தவறி விட்டது. பிரகாஷ் ஜாவேத்கர் என்ற பிஜேபி கல்வி அமைச்சர் தாங்கள் ஒரு அத்தியாயத்தைக் கூட திருப்பி எழுதவில்லை என்று பெருமை அடித்துக் கொண்டார்.
நாம் எதைப் படிக்கிறோமோ அதாகவே நாம் ஆகிறோம்; எதைச் சாப்பிடுகிறோமோ அதாக ஆவதில்லை – என்ற பழமொழி ஒரு மக்களின் குணாதிசயங்களையும் எதிர்காலத்தையும் சுட்டிக் காட்டுகிறது.
தானே ஏற்படுத்திக் கொண்ட இந்தக் காயமானது வெளிநாட்டு சக்திகள் நம்மை உருவாக்க வழி வகுத்து விட்டன. “பெயருக்கு மட்டும் ஹிந்து” Hindus in name only என்ற நிலைக்குத் தள்ளப்பட்டோம்.
ஹிந்துக்களான கல்வி அமைச்சர்கள் வி.கே.ஆர்.வி. ராவ் (1971) அர்ஜுன் சிங் (1991-1994, 2004-2009) ஆகியோர் இடதுசாரிப் போக்கைக் கொண்டிருந்தார்கள், மேலும் முஸ்லீம்களை தாஜா செய்யும் போக்கைக் கொண்டிருந்தார்கள்.
கல்வித் துறை முக்கியமான ஒரு துறையாகவே கருதப்படவில்லை.
உள்துறை அமைச்சகம், நிதி அமைச்சகம் ஆகியவற்றிற்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் கல்வித் துறைக்குக் கொடுக்கப்படவில்லை.
இவையெல்லாம் சேர்ந்து ஹிந்துக்கள் தங்கள் புகழோங்கிய காலம் பற்றி அறிய முடியாமல் செய்து விட்டது.
இவற்றை உணர்ந்து இந்தியாவின் உண்மை வரலாற்றைச் சொல்ல வேண்டிய காலம் வந்து விட்டது.
நமது தியாகங்கள், நமது வெற்றிகள் ஆகியவை கல்லறைக்குள் புதைத்து வைத்துவிடப்படக் கூடாது.
குறிப்பு : இந்தக் கட்டுரையை ஸ்வராஜ்யா இதழில் எழுதியுள்ள திரு எம். நாகேஸ்வர ராவ் ஓய்வு பெற்ற ஐபிஸ் அதிகாரி ஆவார். அத்துடன் அவர் முன் நாளைய சிபிஐ டைரக்டருமாவார். அவரது கருத்துக்கள் அவருடைய சொந்தக் கருத்துக்களே.**
இவற்றில் இருக்கின்ற உண்மைகளை எடுத்துப் பார்த்து தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றே அனைவரும் எதிர்பார்க்கலாம்.
இந்தக் கட்டுரைத் தொடர் முடிகிறது.· முற்றும்.,
நன்றி, ஆதாரம் : ட்ரூத், கல்கத்தா வார இதழ்
TRUTH Vol 93 Issue No 7 Dated 30-5-2025