திருவிளையாடல் புராணத்தில் சில அதிசயச் செய்திகள்- PART 4 (Post No.14,725)

picture– கடல் சுவற  வேல் விட்ட படலம் , 

Written by London Swaminathan

Post No. 14,725

Date uploaded in London –  4 July  2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருவிளையாடல் புராணத்தில் (தி.வி.பு) மேலும் சில அதிசயச் செய்திகளைக் காண்போம் .

சுந்தரேச்வரனுக்கும் தடாதகை என்னும் பெயர்கொண்ட அங்கையற்கண்ணிக்கும் திருமணமானபோது மலையத்வஜ பாண்டியன் உயிரோடு இல்லை. காஞ்சன மாலை தடாதகையுடன் எழுகடலுக்கு வந்து ஸ்நானம் செய்வதற்கு முன்னர் கடலில் குளிப்பதற்கான விதி என்னவென்று கேட்க முனிவர்கள்  சொல்கிறார்கள் – கணவன் கையைப்பிடித்துக்கொண்டு கடலில் ஸ்னானம் செய்யவேண்டும் அப்படியில்லாவிடில் புத்திரன் கைகளை பிடித்துக்கொண்டு ஸ்நானம் செய்யலாம்; அவரும் இல்லாவிடின் பசுவின் வாலைப்  பிடித்துக்கொண்டு ஸ்நானம் செய்யவேண்டும்

அடடா எனக்கு கணவனும் இல்லை; புத்திரனும் இல்லையே, பசுவின் வால்தான் எனக்குக் கிடைத்த கதியா என்று காஞ்சன மாலை வருத்தமுற்றபோது தடாதகையே சிவனைப் பிராத்தனை செய்ய, மேலுலத்தில் இந்திரனோடு அமர்ந்திருந்த மலையத்வஜன் கீழ் உலகத்துக்கு வருகிறான் . மனைவி காஞ்சன மாலையின் கரம்பிடித்து ஸ்நானமும் செய்தான் என்ற செய்தியை மலையத்வஜனை அழைத்த  படலத்தில் பரஞ்சோதியார் கூறுகிறார் .

****இங்கு இரண்டு மூன்று சுவையான செய்திகளைக் கூறுகிறேன்:

ஒரு சுவையான செய்தி! மதுரையில் இன்றும் எழுகடல் தெப்பக்குளம் உள்ளது ; கடைகள் சூந்திருப்பதால் கேட்பாறற்றுப் போய்விட்டது இது மதுரையில் மட்டுமல்ல; ஏழுகடல் குளங்கள் வட நாட்டிலும் உண்டு ; ஆக இது தமிழர் கண்டுபிடித்த புது வழக்கம் இல்லை ஒரே இடத்தில் ஏழு கடல் தீர்த்தங்களும் கொண்டு வந்து அடையாள பூர்வமாகக்கொட்டி இப்படி அமைத்தனர் போலும்.

மேலும் பாபர் என்ற மொகலாய மன்னன், பசுவின் வாலைப் பிடித்துக்கொண்டு பட்டமேற்கும் ஓவியத்தினை இந்த பிளாக்கில் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியீட்டுக்கு கட்டுரை எழுதினேன். இந்துக்கள் ஆண்ட வெளிநாட்டிலிருந்து வந்த முஸ்லீம்கள் மொகலாயர்கள்; அதனால்தான் பாபர், அக்பர் போன்றோர் இடத்தில் இந்துமதம் நம்பிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமிருப்பதை பல நிகழ்ச்சிகள் காட்டுகின்றன.

ஆக இறந்தோர் பூமிக்கு வருவது , குறிப்பாக, திதி செய்யும் நாட்களிலும், மாளய பட்சம் என்னும் 15 நாட்களிலும் , வருவது உண்மையே!  பசுவின் புனிததத்தை ஆரம்ப கால மொகலாயர்கள் உணர்ந்து போற்றியதும் உண்மையே.

****

picture–தடாதகை / மீனாட்சி திருமண படலம்.

ராமனும் இவ்வாறு தசரதனைக் கண்ட செய்தி ராமாயணத்தில் வருகிறது ; இதிலிருந்து இறந்த புண்ணியசாலிகள் இந்திரலோகத்தில் புண்ணியம் தீரும்வரை இருப்பார்கள் என்ற இந்துக்களின் நமபிக்கை உறுதிப்படுத்தப்படுகிறது ; இறந்தவர்கள் வேறு ஒரு உலகத்தில் உயிருடன் வளரும் செய்தியை ஞான சம்பந்தரின் பூம்பாவை சம்பவமும், சுந்தரர் முதலை வாயிலிருந்து இறந்த பிராமணச் சிறுவர்களைக் கொண்டுவந்த சம்பவமும் ஒரே நாளில் அர்ஜுனனும் கிருஷ்ணனும் ஸ்பேஸ் ஷட்டிலில் SPACE SHUTTLE சென்று இறந்த பிராமண குழந்தைகளை மீட்டு வந்த செய்தியை நம்மாழ்வார் பாடியதும் காட்டுகின்றன  பல உலகங்கள் இருக்கின்றன என்ற விஞ்ஞான உண்மையை இந்துக்கள்தான் முதலில் அறிவித்தனர். இதை மேல் நாட்டு விஞ்ஞானிகள் சொல்லும் காலம் விரைவில் வரும்.

******

மதுரை மீது  சுனாமி  தாக்குதல்கள் !

முன் காலத்தில்  இருந்த தென் மதுரை, கபாட புரம், குன்றின் மீதிருந்த லங்காபுரி ஆகியன கடலுக்குள் சென்றதை பல நூல்கள் குறிப்பிடுவதால் நாம் அறிகிறோம் ; இதனால்தான் மணலூரில் தற்காலிகமாக முகாமிட்டிருந்த பாண்டியர்கள் தற்போதைய மதுரையை நிறுவினார்கள். அதற்கு தனஞ்ஜயன்  என்ற செட்டியார், கடம்பவனக் காட்டில் இரவு நேரத்தில் கண்ட அதிசயக்காட்சியே காராணம் என்பதையும் தி வி பு கூறுகிறது   தற்போதைய மதுரையிலிருந்து சுமார் நூறு மைல்கள் சென்றால்தான் கடலினைக் காணமுடியும் . தி வி பு.வி ல் இரண்டு சுனாமி தாக்குதல்களை மதுரைக் காண்டத்தில் காண்கிறோம்

கடல் சுவற வேல் விட்ட படலம் என்பது மிகவும் துவக்கத்திலேயே வந்து விடுகிறது; பின்னர் வருணன்விட்ட கடலை வற்றச் செய்த படலம் வருகிறது நமது காலத்திலேயே பெரும் புயல் ஒன்றில் பாம்பன் பாலம் அழிந்து இப்போதைய புதிய பாலம் உருவாக்கப்பட்டது . இந்த இரண்டு படலங்களும் முக்கியமானவை ஏனெனில் வடிவலம்ப பாண்டியன் பற்றிய குறிப்புகள் வேறு இடத்திலிருந்து கிடைக்கிறது. ஆக இந்த இரண்டு பாண்டியர்களும் ஒன்றா என்று ஆராய்வது அவசியம்; கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்ற விஷயத்தையும் புறநானூற்று ப்பாடல் குறிப்பிடுகிறது. ஆகையால் இவை அனைத்தையும் ஒருங்கே ஆராய்ந்தால் பல உண்மைகள் வெளிப்படும் பிளினி என்ற வெளிநாட்டு யாத்ரீகர் எழுதிய குறிப்பினால் மாதுறைத் தலைநகர் மாற்றப்பட்டசெய்தியும் நமக்கு கிடைக்கிறது மேலும் ஆராய்வது அவசியம் 2200ஆண்டுகளுக்கு முன்னர் பெரும் சுனாமி ஏற்பட்ட செய்தியை அறிவியல் மூலம் அறிய முடிகிறது இலங்கை நூல்களிலும் இது பற்றிய குறிப்புகள் உண்டு.

கடலுக்கு அடியில் சென்ற துவாரகாபுரியை அண்மைக்காலத்தில் கண்டுபித்தது போல நாம் கடலுக்குள் சென்ற குமரிக்கண்டம், கபாட புரம், குன்றின் மீதிருந்த லங்காபுரி ஆகியவற்றை கடலியல் தொல்பொருட்த் துறை மூலம் ஆராய வேண்டும்.

*****

படம்–எழுகடல்  அழைத்த படலம், 

அம்புகளில் பெயர் எழுதும் வழக்கம் அம்பில் ராம நாமம் !

மன்னர்கள்  வைத்திருக்கும் அம்புகளில் அவர்கள் பெயர்களைப் பொறிப்பது வழக்கம் என்பதை ராமாயணம் நமக்குக் காட்டுகிறது; ஆகவே எழுதும் வழக்கமும், எழுத்துக்களும் ராமாயண காலத்திலேயே இருந்தது உறுதியாகிறது இதைத் திருவிளையாடல் புராண சுந்தர பேரம்பெய்த படலத்தில் காண்கிறோம், அப்படிப் பெயர்களை எழுதினால் அவைகளுக்குத் தனிப்பட்ட மந்திர சக்தி உண்டு என்ற நம்பிக்கை இருந்ததையும் அறியமுடிகிறது

வாலி   பார்த்த அம்பில் ராம என்ற நாமத்தினைக் கண்ட செய்தி கம்ப ராமாயணத்தில் வருகிறது :

மும்மைசால் உலகுக்கெல்லாம்

மூல மந்திரத்தை முற்றும்

தம்மையே தமர்க்கு நல்கும்

தனிப் பெரும் பதத்தை, தானே

இம்மையே, எழுமை நோய்க்கும்

மருந்தினை இராமன் என்னும்

செம்மைசேர் நாமம் தன்னை

கண்களில் தெரியக் கண்டான்

—–வாலிவதைப் படலம், கம்ப ராமாயணம்

இராம நாமம்தான் எல்லா மந்திரங்களுக்கும் மூத்த மந்திரம், மூல மந்திரம் என்பான் கம்பன். அது ஏழு பிறவிகளில் செய்த தீவினைகளைப் பொடியாக்கும். இராம என்ற சொல்லை, வாலி தனது மார்பில் பாய்ந்த அம்பில் கண்டான். அடடா! ராமன் கையினால் மரணம் சம்பவித்ததால் எனக்கு நேரடி மோட்சம்தான் என்று மகிழ்கிறான்.

தொடரும்………………………

TAGS- அம்புகளில் பெயர், மும்மைசால் உலகுக்கெல்லாம், சுனாமி தாக்குதல், திருவிளையாடல் புராணத்தில் , அதிசயச் செய்திகள்-4 , ஏழுகடல், இறந்தோர் பூமிக்கு வருதல்

Leave a comment

Leave a comment