ராஜீவ் காந்தியின் பலஹீனம்! (Post No.14,745)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,745

Date uploaded in London – 10 July 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

பழைய கதை – புதிய வெளிச்சத்தில்…

ராஜீவ் காந்தியின் பலஹீனம்!

ச. நாகராஜன்

1988ம் ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்திற்குப் பெயர் : Agreement on the Prohibition of Attack against Nuclear Installations and Facilities. 

1988ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி கையெழுத்திடப்பட்டு 1991 ஜனவரி மாதம் 27ம் தேதி இது அமுலுக்கு வந்தது.

 இந்த ஒப்பந்தத்தின் படி ஒவ்வொரு ஆண்டும் இரு தேசங்களும் தங்களிடம் உள்ள அணு ஆயுதங்கள் பட்டியலை வெளியிட வேண்டும்; அத்துடன் ஒரு தேசத்தின் மீது இன்னொரு தேசம் அணு ஆயுதத் தாக்குதலை நடத்தக் கூடாது. 

இந்த அணு ஆயுத ஒப்பந்தம் பற்றி பாரதீய ஜனதா கட்சியிநன் எம்.பி. நிஷிகாந்த் டுபே ஒரு செய்தியை எக்ஸ் தளத்திலிருந்து எடுத்து வெளியிட்டுள்ளார்.

இந்த ஒப்பந்தம் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்டு ரீகன் எப்படி இது இருக்க வேண்டுமென்று  செயல்பாட்டுத் திட்டத்தை வகுத்தார் என்றும் அதன்படியே நியூடெல்லிக்கும் இஸ்லாமாபாத்திற்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்ததாகவும் கூறப்படுகிறது.

 அமெரிக்கா கொடுத்த அழுத்தத்தின் படி நாம் பாகிஸ்தான் ஜனாதிபதி ஜெனரல் ஜியாவுடன் பேசினோம். ஆனால் செயல் திட்டம் அமெரிக்க ஜனாதிபதியால் வகுக்கப்பட்டது.

 அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி அமெரிக்கா தந்த அழுத்தத்திற்கு பணிந்ததையே இது காட்டுகிறது என்பது டுபேயின் வாதம்.

30-5-25 டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழில் Signed Under Pressure

என்ற தலைப்பில் இந்தச் செய்தி வெளியாகியுள்ளது.

 டுபே இன்னொரு கடிதத்தையும் குறிப்பிடுகிறார்.

 ராஜீவ் காந்தி ரீகனுக்கு எழுதிய கடிதம் இது. ராஜீவ் காந்தி ரீகனை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சமரசம் செய்து வைக்கும்படி வேண்டிக் கொண்ட கடிதம் இது.

 1972ல் சிம்லா ஒப்பந்தம் என்று ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரு தேசங்களுக்கும் இடையே எந்த தேசமும் புகுந்து சமரசம் பேசக் கூடாது என்ற ஷரத்து இருக்கிறது.

 இதை ராஜீவ் காந்தி மீறி இரு தேசங்களுக்கும் இடையே சமரசம் செய்ய ரீகனை அழைத்தார் என்கிறார் டுபே.

 இப்போது பெகல்ஹாம் விஷயத்தில் அமெரிக்காவின் ஆதரவில் மோடிஜி பாகிஸ்தானுடன் சமரசம் செய்து கொண்டார் என்று காங்கிரஸ் கூறினால் அது தவறு என்கிறார் டுபே.

 காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் அமெரிக்க செக்ரட்டரி ஆஃப் ஸ்டேட், மார்கோ ரூபியோ அமெரிக்கா தான் இந்தியா-பாகிஸ்தான் இடையே சமரசம் ஏற்படுத்தியது என்று சொல்வதை வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் ஏன் மறுக்கவில்லை என்று கேட்கிறார்.

  (ஆனால் மோடிஜியே இதைத் தெளிவாக மறுத்திருக்கிறார்!)

 ஆக ராஜீவ் காந்தி காலத்தை விட மோடிஜியின் காலம் தெளிவானதாகவும் வலுவானதாகவும் இருக்கிறது என்பதை டுபேயின் செய்திகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது!*

Source  and Thanks: Truth Kolkata Weekly Volume 93 Issue no 9 Dated 13-6-2025

Leave a comment

Leave a comment