மகர ராசிக்குள் சனி புகுந்தால் பஞ்சம் வரும்! தேவாரத்தில் சம்பந்தர் எச்சரிக்கை! (Post.14,750)

Written by London Swaminathan

Post No. 14,750

Date uploaded in London –  11 July  2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

அலங்கல் மலி வானவரும் தானவரும் அலைகடலைக் கடைய, பூதம்கலங்க, எழு கடுவிடம் உண்டு இருண்ட மணிகண்டத் தோன் கருதும் கோயில் -விலங்கல் அமர் புயல் மறந்து, மீன் சனி புக்கு, ஊன் சலிக்கும் காலாந்தானும் கலங்கல் இலா மனப் பெரு வண்கை உடைய மெய்யர் வாழ் கழுமலமே.

–சம்பந்தர்  தேவாரம் 

திருஞான சம்பந்தர் பெரிய ஜோதிட நிபுணர் ; ஆதி சங்கரர் போல சகல சாத்திரங்களையும் அறிந்தவர்; பதினாறு வயதில் இறைவனுடன் கலந்துவிட்ட அவர் சொன்ன விஷயங்களை அவருக்கு 300 ஆண்டுகளுக்குப் பின்னர் திருமூலரும் செப்பினார்.

1990- களில் லண்டலிலிருந்து வெளியான மேகம் பத்திரிகையில் கிழமைகளைக் கண்டுபிடித்தது தமிழன் என்று எழுதினேன். அது 2009-ல் நாகப்பா பதிப்பகம் வெளியிட்ட தமிழ் இலக்கியத்தில் அதிசயச் செய்திகள் என்ற என்னுடைய புஸ்தகத்திலும் வெளியானது.

ஏனெனில்  உலகம் முழுதும் இன்று பின்பற்றும் ஞாயிறு முதல் சனி வரையான கிழமைகளை அதே  வரிசையில் முதல் முதலில் கோளறு திருப்பதிகத்தில் பாடியது சம்பந்தர் மட்டுமே. மேலும் ஆங்கிலத்தில் உள்ள சண்டே டு சாட்டர்டே வரிசையில் கிரகங்களின் பெயரிலுள்ள கிழமைகள் மூன்று மட்டுமே ; ஏனைய கிழமைகள்  பிற கலாசார தெய்வங்களைப் பற்றியது .

கோளறு திரு   பதிகம்

வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்

    மிகநல்ல வீணை தடவி

மாசறு திங்கள் கங்கை முடிமேல ணிந்தென்

    உளமேபு குந்த அதனால்

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி

    சனிபாம்பி ரண்டு முடனே

ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல

    அடியார வர்க்கு மிகவே.

*****

மேலும் அதே கோளறுபதிக்கத்தில் ஆகாத நட்சத்திரங்கள் எவை என்றும் ஒரு பாடலில் பாடுகிறார்.

என்பொடு கொம்பொ டாமை இவைமார்பி லங்க

    எருதேறி ஏழை யுடனே

பொன்பொதி மத்த மாலை புனல்சூடி வந்தென்

    உளமே புகுந்த அதனால்

ஒன்பதொ டொன்றொ டேழு பதினெட்டொ டாறும்

    உடனாய நாள்க ளவைதாம்

அன்பொடு நல்ல நல்ல அவைநல்ல நல்ல

    அடியா ரவர்க்கு மிகவே.

 ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடு ஆறும் =அசுவினி முதலாக உள்ள நாள்களில் ஆகாதனவாகிய ஒன்பது, பத்து, பதினாறு, பதினெட்டு, ஆறு ஆகிய எண்ணிக்கையில் வருவனவும் பிறவுமான நட்சத்திரங்கள் அன்போடு மிக நல்லனவே செய்யும். அடியவர்கட்கும் மிக நல்லனவே செய்யும்

****

சோடியாக் ZODIAC  என்னும் 12 ராசி மண்டலத்தை பாபி லோனியர்கள் கண்டு பிடித்ததாகவும்  கிரேக்கர்கள் மூலம் நாம் அதைக் கற்றதாகவும் என்சைக்ளோபீடியாக்கள் என்னும் கலைக்களஞ்சியங்கள் கதை அளந்து இருப்பதைக் காணலாம். அவர்கள் சொல்லும் யவனஜாதகா என்னும் நூலின் ஆதாரமே ஆட்டங்காணும் அஸ்திவாரத்தை உடையது; அந்த நூலின்  ஒரிஜினல் இல்லை; அதன் மொழிபெயர்ப்புக்கு மொழிபெயர்ப்பும்  முழுவதும் கிடைக்கவுமில்லை ; எல்லாம் அவியல் செய்திகள். ஓட்டுப்போட்ட கந்தைத்துணி!

மேலும் சங்க இலக்கியத்தில் வரும் ராசிகளைப் பற்றிய செய்திகளை முன்னரே கொடுத்துள்ளேன்; ராமர் பிறந்த ஜாதகத்தையும் ஐந்து கிரக உச்சத்தையும் ராசிகளையும் வால்மீகி பாடியுள்ளார்; இவை எல்லாம் அசட்டுப்பிசட்டு அறிவிலிகள் சொல்லும் தப்பான செய்திகளுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட காவியங்கள். . இன்னும் சொல்லப்போனால் ராமாயணத்தை இவர்கள் கிண்டலும் கேலியும் செய்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

சுருக்கமாகச் சொல்லப்போனால் இந்துக்கள்தான் ஜாதகம், நட்சத்திரங்கள், ராசி மணடலம் எல்லா வற்றையும் கண்டு பிடித்தார்கள். ராம நவமி ,ஜென்ம அஷ்டமி , சைவர்களின் குரு பூஜை விழாக்கள், ராமனுக்குப் பங்குனி உத்தரத்தன்று கல்யாணம் , நாம் பிறக்கும்போது எழுதும் ஜாதகம்  என்பதை நாம் இன்று வரை பின்பற்றுகிறோம் . உலகில் எந்த ஒரு பண்பாடும் இப்படி   பின்பற்றுவதும் இல்லை ; நம்மைப்போல ஜாதகம் எழுதுவதோ பலன் பார்ப்பதோ செய்வதுமில்லை

***

வராஹ மிஹிரர் எழுதிய பிருஹத் சம்ஹிதா கிட்டத்தட்ட அப்பர், சம்பந்தர் காலத்தில் (600 CE)  உண்டானது; அதில் அத்தியாயம் அத்தியாயமாக கிரகங்கள் ,பலன்கள, அது 56 தேசங்களில் எந்த தேசத்தைப் பாதிக்கும் என்றெல்லாம் சம்ஸ்க்ருதத்தில் எழுதியுள்ளார் அவர் கூட மகர ராசி- சனிக்கிரக பஞ்சம் வறட்சி பற்றி எழுதவில்லை. சம்பந்தர் காலத்தில் வேறு பல நூல்களும் இருந்திருக்க வேண்டும்.

நாம் குரு கிரகம் நுழையும் ராசியைப் பொருத்து மகாமகம்கும்ப மேளா போன்ற பண்டிகைகளை ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகக் கொண்டாடிவருகிறோம் குரு என்னும் வியாழன் கிரகம் ஆண்டுக்கு ஒரு முறை வேறு ராசிக்குச் செல்வதால் தமிழ் ஸம்ஸ்ருத நூல்ககள் சொல்லும் 12 ஆண்டு வறட்சி இத்தோடு தொடர்புடையதாக இருக்கலாம்..

*****

அலங்கல் மலி வானவரும் தானவரும் அலைகடலைக் கடைய, பூதம்கலங்க, எழு கடுவிடம் உண்டு இருண்ட மணிகண்டத் தோன் கருதும் கோயில் -விலங்கல் அமர் புயல் மறந்து, மீன் சனி புக்கு, ஊன் சலிக்கும் காலாந்தானும் கலங்கல் இலா மனப் பெரு வண்கை உடைய மெய்யர் வாழ் கழுமலமே.

–சம்பந்தர் தேவாரம் 

பொருள்: மலர் மாலைகள் அணிந்த தேவர்களும், அசுரர்களும் அலைகள் பொருந்தியதிருப்பாற்கடலைக் கடைந்தனர். அப்பொழுது பஞ்ச பூதங்களும் கலங்குமாறு எழுந்த கொடிய நஞ்சை சிவபெருமான் வாயில் போட்டுக் கொண்டார். இதனால் கரிய மணி போன்ற கண்டத்தை உடையவரானார். தனது உறைவிடம் என்று மகிழ்வோடு கருதுகின்ற கோயில் உள்ள இடம் திருக்கழுமலம் ஆகும். மகர இராசியில் சனிக்கோள் புகுதலால் மலையின்மேல் தவழும் மேகங்கள் மழை பொழிதலை மறக்க உணவு கிடைக்காமல் மக்கள் பஞ்ச காலத்தில் உடல் இளைப்பர். இப்படி ஒரு நிலைமை வந்தாலும், மனம் கலங்காது பெரிய வள்ளல் தன்மையோடு மக்களைக் காக்கும் உண்மையாளர் வாழ்கின்ற ஊர் இக்கழுமலம் ஆகும்.

மீன்சனி புக்கு – மகர ராசியில் சனி புகுந்து: உளன் சலிக்கும் காலத்தாலும் – உடல் வாடிய காலத்திலும், பஞ்சகாலத்தும் கலங்காத வள்ளல்கள் வாழும் நகர் என்க. 

The Devas and Asuraas wearing flower garlands started churning the ocean of milk to get nectar. But the deadly poison that foamed on the top of the ocean created a great terror on all, everywhere in the universe including the goblins of Lord Civan. Being the repository of mercy, grace and love, Lord Civan came forward to save one and all in the universe (the entire humanity in the universe) from death. He, therefore, without swallowing the poison, put it in His mouth and positioned it in His throat permanently; His neck therefore is always in dark blue colour, similar to that of sapphire gem. In certain seasons of the year the planet Saturn enters into the tenth zodiac known as Capricorn and stays there for some period. During this period rain bearing clouds could not gather on mountaintop and shower rain. As there was no rainfall in the city, the country got afflicted with famine for want of food materials. Even in such times of draught and famine, the philanthropic and virtuous people of the city in large numbers came forward and helped the people and saved them from the devastating effect of the famine. Lord Civan is happily entempled in this famed city of Thiru-kazhu-malam.

Read more at: https://shaivam.org/scripture/Tamil/sambandhar-thevaram-first-thirumurai-english-translation-tamil-explanation-part-4/#gsc.tab=0

*****

1575.     வேள்படுத்திடுகண்ணினன்மேருவில்லாகவே     வாளரக்கர்புரமெரித்தான்மங்கலக்குடி     ஆளுமாதிப்பிரானடிகள்ளடைந்தேத்தவே     கோளுநாளவைபோயறுங்குற்றமில்லார்களே.       வேள் படுத்திடு கண்ணினன், மேரு வில்ஆகவே     வாள் அரக்கர் புரம் எரித்தான், மங்கலக்குடி     ஆளும் ஆதிப்பிரான், அடிகள்(ள்) அடைந்து ஏத்தவே,     கோளும் நாள்அவை போய் அறும்; குற்றம் இல்லார்களே.  

.பொருள்:     மங்கலக்குடி எம்பெருமானே! நீர் மன்மதனை நெற்றிக்கண்ணால் சாம்பலாக்கினீர் !  கொடிய அரக்கர்களுக்கு உரித்தாய முப்புரங்களையும் சிரித்தே அழித்தீர்! மங்கலக்குடியில் கோயில் கொண்டுள்ளீர்! உமது திருவடிகளை ஏத்தி வணங்கிட எங்களுக்கு கிரகங்களாலும் விண்மீன்களாலும் உண்டாகும் தீமைகள் நிச்சயம் நீங்கப் பெறும். நாங்கள்  குற்றம் இல்லாதவர்களாய் விளங்கிடுவோமாக! 

    It is Civan, the Lord of Vada-mangalak-kudi who burnt cupid with His eyes. He also burnt the three flying fortresses of the wicked demons using mount Meru as His bow. It is He the Lord of Vada-mangalak-kudi, the ancient one. Those devotees who reach and bow at His holy feet will not be affected by the evil effects of planets and stars. These devotees will be blemishless.

*****

My earlier posts related to this topic

Post No.1062.OWLS: Are they Good or Bad Omens? 24-5-14

Post No.1065.ஆந்தைகள் அலறல்: நல்ல சகுனமா? கெட்ட சகுனமா? பகுதி-1(26-5-14)

Post No.1067. ஆந்தைகள் அலறல்: நல்ல சகுனமா? கெட்ட சகுனமா? பகுதி-2(27-5-14)

1058.Ode to Skylark:Shelley,Kalidasa and Vedic poet Grtsamada 22/5

1059.ரிக்வேதத்தில் ஒரு பறவைப் பாட்டு23-5-14

1060.Kapinjala Bird Mystery in Rig Veda 23-5-14

1061. வேதத்தில் கபிஞ்ஜலா பறவை மர்மம்! 24-5-14

1054.Why did Sangam Tamils marry on Rohini star?20/5

1055.ரோகிணி நட்சத்திர மர்மம்: தமிழர்கள் திருமணம் நடத்தியது ஏன்?21-5-14

1003. வெள்ளி கிரகம்—மழை தொடர்பு பற்றி உபநிஷத்! 26th April, 2014.

967.What Hindus know that Scientists don’t know, 9-4-14

Can Birds Predict your Future? (July 22, 2012)

Tamil Astrology :Rope Trick for Predictions (Feb.27, 2013)

What India could teach NASA  Scientists? (May 5, 2014)

1021.நாடி ஜோதிட ரகசியங்கள்: நாஸா விஞ்ஞானிகள் கவனிக்க, 5-5-14

Hindus Future Predictions- Part 1 (May 20, 2012)

Etruscan- Hindu/Tamil Link (July 28, 2012)

Do our Dreams have Meaning? (29 December 2011)

புறநானூற்றில் சூரிய கிரஹணம் (2 9 December 2011)

Posted 3rd June 2014 by Swaminathan

(all these were written before 2014; later I have added scores of articles on the subject)

–subham—

Tags- Zodiac, கோளறு பதிகம் , ராசி சக்கரம்,மண்டலம் ,12 ராசிகள், மகர ராசி சனி கிரகம் ,தேவாரத்தில் ஜோதிடம், 12 ஆண்டு வறட்சி

Leave a comment

Leave a comment