ஆலயம் அறிவோம்! வில்லிவாக்கம் திருத்தலம் ! (Post No.14,759)


 

WRITTEN BY Brhannayaki Sathyanarayanan 

Post No. 14, 759

Date uploaded in London – 14 July  2025 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 13-7-2025 ஞானமயம் ஒளிபரப்பில் ஒளிபரப்பப்பட்ட உரை 

ஆலயம் அறிவோம்!

வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன் 

ஹர சம்போ மஹாதேவ விஸ்வேஸ அமரோ வத்ஸலா

சிவ சங்கர சர்வாத்மன் நீலகண்ட நமோஸ்துதே

                அகத்தியர் இயற்றிய சிவ ஸ்தோத்திரம்

ஓ ஹரனேசம்போமஹாதேவனேவிஸ்வேஸனேதேவர்களை நேசிப்பவனேசிவனே, சங்கராஎல்லா ஆன்மாக்களின் உள்ளும் நிறைந்திருப்பவனே நீல கண்டனே நமஸ்காரம்.         

அகத்தியர் திருவடி போற்றி! 

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது தமிழ்நாட்டில் சென்னை நகரில் அமைந்துள்ள வில்லிவாக்கம் திருத்தலமாகும். 

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து  8 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது இது. 

இறைவர்  மூலவர் :  அகஸ்தீஸ்வரர்

உற்சவர் : ஸோமாஸ்கந்தர்

அம்மன் : ஸ்வர்ணாம்பிகை

தல விருட்சம் : வில்வம்

தீர்த்தம் : அங்காரக தீர்த்தம்

சென்னையில் அமைந்துள்ள இத்தலம் பற்றிய புராணக் கதை ஒன்று உண்டு.

சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் கயிலையில் திருமணம் நடந்த போது அந்த தெய்வீகத் திருமணத்தைப் பார்க்க தேவர்களும் ரிஷிகளும் ஒருங்கே அங்கு கூடினர். இதனால் வடதிசை தாழ தென் திசை உயர்ந்தது. இதை சமப்படுத்த அகத்தியரை தென் திசை ஏகுமாறு சிவபிரான் பணித்தார். தெற்குப் பக்கம் வந்த அகத்திய மாமுனிவர் வில்லிவாக்கத்தில் சிவனை பிரதிஷ்டை செய்து வணங்கினார். இங்கு அகத்தியருக்கு சிவனும் பார்வதியும் திருமண கோலத்தில் காட்சி அளித்தனர்.

முன்னொரு காலத்தில் வில்லிவாக்கம் பகுதியில் வாழ்ந்து வந்த  வில்வலன், வாதாபி என்ற இரு அசுரர்கள் அனைவரையும் கொடுமைப் படுத்தி வந்தனர். அவர்களில் வாதாபியை அகத்தியர் அழித்தார். ஆனால் வில்வலனை தீயவழியிலிருந்து திருத்தி நல்வழிப்படுத்தினார். அவனை நல்வழிப்படுத்திய இடமாதலால் இப்பகுதி வில்லிவாக்கம் என்ற பெயரைப் பெற்றது.

அகத்திய முனிவரின் பெருமை எல்லையற்றது. பதினெட்டு சித்தர்களில் இவர் முதன்மையானவர். தமிழ் மொழியை உருவாக்கியவர். “ஆதியில் தமிழ்நூல் அகத்தியர்க்கு உணர்த்திய மாதொருபாகன்” என்/று சேனாவரையர் தொல்காப்பிய உரையின் கடவுள் வாழ்த்தில் குறிப்பிடுவதால், சிவபெருமானே இவருக்கு தமிழ் மொழியை உபதேசித்தார், என்பது பெறப்படுகிறது.

பொதிகை மலையில் தவம் செய்தவர். ஆகவே பொதிகை முனி என்ற பெயரைப் பெற்றவர். கும்பத்தில் பிறந்ததால் கும்ப  முனி என்ற பெயரும் இவருக்கு உண்டு. அகத்தின் உள்ளே ஈசனைக் கண்டதால் இவர் அகத்தியர் என்று அழைக்கப்படுகிறார்.

தமிழகத்தில் மட்டும் அகத்தியருடன் தொடர்பு கொண்ட நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆலயங்கள் உள்ளன. நான்கு வேதங்களிலும் இவரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. அத்தோடு  அகநானூறு,

புற நானூறு, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, மணிமேகலை உள்ளிட்ட சங்கத் தமிழ் நூல்களிலும் இவரைப் பற்றிய அற்புதமான செய்திகள் ஏராளம் உள்ளன.

இவர் பல நூல்களை இயற்றியுள்ளார். அகத்தியம் என்ற நூல் மட்டும் 12000 பாக்களைக் கொண்டுள்ளது. இவரது மனைவி லோபாமுத்திரை அம்பாளின் தனிப் பெரும் கருணைக்கு ஆளானவர்.

இப்படிப்பட்ட மாமுனிவருடன் தொடர்பு கொண்ட தலமாக

வில்லிவாக்கம் விளங்குகிறது.

வில்லிவாக்கத்தில் உள்ள தீர்த்தம் அங்காரக தீர்த்தம் என்று வழங்கப்படுகிறது. இதைப் பற்றிய வரலாறு ஒன்று உண்டு.

அங்காரகன் என்னும் செவ்வாய் கிரகத்தால் உலகிற்குப் பல தீமைகள் ஏற்படுவதைக் கண்ட ரிஷிகள் நைமிசாரண்யத்தில் ஒருங்கு கூடினர்.

யாகம் ஒன்றை நடத்தத் தீர்மானித்தனர். யாகத்தில் விஸ்வாமித்திர மஹரிஷியும் கலந்து கொண்டார்.

யாகத்திலிருந்து ஒரு பெரும் பூதம் கிளம்பி அங்காரகனை நோக்கிச் சென்றது. அங்காரகன் தன் பெயரில் ஒரு தீர்த்தம் அமைத்தால் கொடும் செயல்களைச் செய்யாமல் இருப்பதாகக் கூறவே இந்திரன் முதலானோர் இங்கு ஒரு தீர்த்தத்தை அமைத்து அதில் நீராடினர். அங்காரகனின் தீமைகளும் அகன்றன.

அங்காரக தீர்த்தத்தின் கரையில் செவ்வாய் காட்சி அளிப்பதால் இதை மக்கள் செவ்வாய் கோவில் என்றும் அழைக்கின்றனர்.

அம்பாள் திருமணக் கோலத்தில் காட்சி தருவதால் ஸ்வர்ணாம்பிகை என்று அழைக்கப்படுகிறாள். அம்மன் சந்நிதி முகப்பில் மகாலட்சுமி, சரஸ்வதி சந்நிதி உள்ளது.

அம்பிகையின் நேரடிப் பார்வையில் குரு பகவான் அமைந்துள்ளார்.

அகத்தியர் வழிபட்ட தலம் என்பதால் சிவபிரான் அகத்தீஸ்வரர் என்ற பெயரைக் கொண்டு மூலவராக இருக்கிறார்.

பொதுவாக கிழக்கு நோக்கிய கோவிலின் வாயில் அமைந்திருக்கும் ஆனால் இங்கு கோவிலின் நுழைவாயில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது.

தென்புற வாயிலின் எதிரே உள்ள தனி கோவிலில் வீரபத்திரர் காட்சி தருகிறார்.  கோரைப்பற்களுடன் இடது கையில் தண்டத்துடன் வீரபத்திரர் காட்சி தர, அருகே  வணங்கிய கோலத்தில் தட்சன் இருக்கிறான். இங்கு முன் மண்டபத்தில் பத்திரகளை சந்நிதி உள்ளது.

சிவனும் பார்வதியும் திருமணக்கோலத்தில் அகத்தியருக்கு காட்சி அருளியது ஒரு ஆடி மாத செவ்வாய்க்கிழமை என்று ஐதீகம் கூறுவதால் மக்கள் செவ்வாய்க் கிழமையன்று திரளாக இங்கு வந்து வழிபடுகின்றனர்.

அத்துடன் இங்கு அங்காரக தோஷம் நீங்கவும் பக்தர்கள் பெருந்திரளாக செவ்வாய்க் கிழமையன்று வந்து கூடி வழிபடுகின்றனர்.

காலம் காலமாக லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஸ்வர்ணாம்பிகை அம்மையும் அகஸ்தீஸ்வரரும்\ அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். நன்றி. வணக்கம்.

**

Leave a comment

Leave a comment