PICTURE- அஷ்டமா சித்தி உபதேசித்த படலம்
Post No. 14,763
Date uploaded in London – 15 July 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
இமய மலையின் புனிதம் கருதியும்,உலகிலேயே உயர்ந்த மலை என்பதாலும் தமிழ் மன்னர்கள் இமய மலைக்குச் சென்றனர் என்பது உண்மையே. அதுமட்டுமல்ல, அவர்களுக்கு பூகோள அறிவும் இருந்ததால் அதுதான் நாட்டின் வட எல்லை என்பதையும் அறிந்தனர்; பூமியை அளக்கும் அளவுகோல் போல இரண்டு கடல்களையும் தொட்டுக்கொண்டிருக்கும் இமயம் என்று குமார சம்பவத்தில் காளிதாசன் பாடியிருப்பதை சங்கத் தமிழ்ப் புலவர்கள் நன்கு அறிந்து இருந்தனர். இன்று நாம் இமயம் முதல் குமரி வரை என்று சொல்கிறோம் அந்தக்காலத்தில் இதை சம்ஸ்க்ருத மொழியில் ஆசேது ஹிமாசலம் என்று சொன்னார்கள் சேதுக்கரை முதல் இமயம் வரை என்பது இதன் பொருள்.
இதையெல்லாம்விட முக்கிய காரணம் இமய மலையில் அந்தக் காலத்தில் தங்கம் கிடைத்தது என்பதாகும். மஹாபாரதத்தில் அர்ஜுனன் உத்தரகுருவுக்குச் சென்று தங்கம் கொண்டுவந்ததை தருமன் ராஜ சூய யாகம் நடத்திய நிகழ்ச்சியில் படித்தோம்; தமிழ் மன்னர்கள் இமய மலைக்குச் சென்று தங்கம் கொண்டு வந்ததை திருவிளையாடல் புராணத்தில் (தி.வி.பு.) பரஞ்சோதி முனிவர் சொல்கிறார் .
மேருவைச் செண்டாலடித்த படலத்தில் பாண்டியன் செய்த சாதனைகளை பரஞ்சோதி வருணிக்கிறார் ; உக்கிரகுமாரனும் காந்தி மதியும் அகஸ்தியர் சொன்ன சோமவார வீரத்தை அனுஷ்டித்ததால் பிறந்தவன் வீர பாண்டியன் . அவன் காலத்தில் மழையின்றி வறட்சி ஏற்படவே உக்கிரகுமாரன் சோதிடர்களைக் கலந்தாலோசித்தான்; நவக்கிரகங்களின் நிலையே இதற்கு காரணம் என்று சோதிடர்கள் கூறினார்கள் . மன்னன் உக்கிரகுமாரன் கவலையுடன் உறங்கியபோது சிவபெருமான் ஒரு சித்தர் வேடத்தில் கனவில் தோன்றி , மேரு மலையில் ஒரு குகையில் தங்கம் நிறைய இருக்கிறது; நீ அங்கே சென்று மேரு மலையின் செருக்கினை அடக்கி தங்கத்தைக் கொண்டுவா என்று சொன்னார். .
உக்கிரகுமார பாண்டியன் பெரும்படைகளுடன் பல தேசங்களைக் கடந்து சென்றான்; இந்த இடத்தில் பரஞ்சோதி அக்கால பூகோள விஷயங்களை வருணிக்கிறார். மேருவுக்குச் சென்ற பாண்டியன், மலை அரசன் வர தாமதிக்கவே, அதைச் செண்டால் அடித்தான்; அது உடனே நடுங்கி அவன் முன் தோன்றி வந்த காரணத்தை வினவியது ; திரவியம் வேண்டி வந்தேன் என்று பாண்டியன் செப்பவே மாமரத்தின் கீழே தங்கம் புதையுண்டு கிடைக்கிறது என்று மேரு மலை தகவல் கொடுத்தது ; அவனும் அங்கே சென்று பாறைகளைத் தோண்டி தங்கத்தை எடுத்துக்கொண்டு மீதியுள்ளதை பாறைகளால் மூடி அவை தனது என்று சீல் / முத்திரை வைத்தான் . பின்னர் நாட்டிற்கு வந்து மக்களுக்குத் தங்கத்தைக் கொடுத்து வறுமையை நீக்கினான்; மழை பெய்து வறட்சி நீங்கியது
என் கருத்து
மன்னன் என்பவன் கடவுளுக்கு இணையானவன் என்பதால் கோயில் என்னும் சொல் இருவர் இருப்பிடத்துக்கும் பயன்படுத்தப்பட்டது; அவனுடைய கடுமையான முயற்சிகளை கடவுளின் மீது ஏற்றி அவன் வேல் விட்டவுடன் கடல் பின்னால் போனது, அவன் செண்டால் அடித்தவுடன் மேரு தங்கம் கொடுத்தது என்றெல்லாம் எழுதினார்கள். இவை மரபுச் சொற்றோடர்கள் IDIOMS AND PHRASES; அகத்தியர் விந்திய மலையைக் கர்வ பங்கம் செய்தார் அகத்தியர் கடலைக் குடித்தார் என்பதெல்லாம் சங்கேத மொழிகள் SYMBOLIC LANGUAGE; அந்தக் காலத்தில் இதைப் படித்தவர்களுக்கு இதன் பொருள் விளங்கியது ; இன்று நமக்கு இவை புதிர்களாகத் தோன்றும்.
****
PICTURE- ரசவாதம் செய்த படலம்
சீல் SEAL வைக்கும் வழக்கம் !
முத்திரை பதிக்கும் வழக்கத்தைத் தமிழர்கள் நீண்ட காலமாகப் பயன்படுத்தினார்கள். விடை இலச்சினை இட்ட படலத்தில் பாண்டியன் சீல் பற்றி வருகிறது. புகார் / காவேரிப் பூம்பட்டினம் வழியே வந்த வெளிநாட்டுச் சரக்குகளுக்கு சுங்க வரி செலுத்திய பின்னர் சுங்கம் கொடுத்த முத்திரை பதிக்கப்பட்டதை சங்கத் தமிழ் நூல்கள் இயம்புகின்றன . சிந்து சமவெளியிலும் ஏராளமான முத்திரைகள் கிடைத்துள்ளன . பாரதத்தின் எல்லா மன்னர்களும் கொடிகளையும் சின்னங்களையும் பயன்படுத்தியதை நம்முடைய இதிஹாச புராணங்கள் செப்புகின்றன.
*****
சங்க இலக்கியத்தில் தி.வி.பு . புலவர்கள்
இடைக்காடனார் – பாடல்கள் நற்றிணை 142, 221, 316;
அகநானூறு139, 194, 274, 284, 304, 374; புறநானூறு-42; குறுந்தொகை-251
மதுரைப்பேராலவாயார்- புறநானூறு 247, 262; இவர் நற்றிணையில் இரண்டு பாடல்களையும் அகநானூற்றில் இரண்டு பாடல்களையும் பாடிப் பாண்டிய மன்னனைப் புகழ்ந்துள்ளார் . இவரே இறையனார் என்றும் உரைப்பர்; இவர் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் காலத்தவர் . அறிஞர்கள் வேண்டியதையும் மீறி தீக்குள் பாய்ந்து உயிர் நீத்த பூதப்பாண்டியன் மனைவி பாடிய பாடல்களும் புறநானூறு.246,247 ஆராய்ச்சிக்குரியவை
சோழன் இராசசூயம்வேட்ட பெருநற்கிள்ளி – புறநானூறு16, 125, 367, 377; புறநானூறு 367 பாடலில் யாகத்துக்கு வந்த பாண்டியன் கானப்பேர் தந்த உக்ரப் பெருவழுதியையும் சேரமான் மாரிவென்கோவையையும் அவ்வையார் பாடியுள்ளார்.
வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி– புறநானூறு-58
உக்ரப் பெருவழுதி- நற்றிணை 98.
உக்கிர, பூத என்ற ஸம்ஸ்க்ருதச் சொற்கள் இருப்பதையும் உக்கிர குமார பாண்டியன் பற்றி பரஞ்சோதி பாண்டியதையும் சேர்த்து ஆராய வேண்டும்.
****
PICTURES-நாகம் எய்த படலம்
மாயப்பசுவை வதைத்த படலம்
துலாபாரம் பதினாறு வகை தானங்கள் பற்றி தி.வி.பு. பல படலங்களில் குறிப்பிடுகிறது இவை பாண்டியர் செப்பேடுகளிலும் இருப்பதால் தொல்பொருட் துறை சான்றும் கிடைத்துவிட்டது.
தேவர்களை வேண்டி தீயில் வேட்பது அறக்கள வேள்வி.
நான்மறையாளரைச் சுற்றமாகக் கொண்டு, அடிபணிந்த அரசர் ஏவல் செய்ய, தலையங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் அறக்கள வேள்வி செய்தான் என மாங்குடிக்கிழார் கூறுவார் (புறம்.29)
பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதி பல யாகங்களைச் செய்ததால் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி எனப்பெயர் பெற்றான் (புறம்.15)
பல்யானை செல்கெழுகுட்டுவன் கௌதமனாருக்காக பார்ப்பாரில் பெரியோரைக் கேட்டு பத்து பெருவேள்வி வேட்பித்தான். (பதிற்றுப்பத்து, பதிகம் 3)
பெருஞ்சேரல் இரும்பொறை வேள்விக்குரிய விதிகளைக் கேட்டு வேள்வி வேட்பதற்கு முன், தான் இருக்க விரதங்களை முறைப்படி முடித்து வேள்வி முடித்தான். (பதிற்றுப்பத்து, பதிகம் 74-1-20
இளஞ்சேரல் இரும்பொறை முறைப்படி சாந்தி வேட்டான். சேரமான் செங்குட்டுவன் வஞ்சிமாநகரின் குளிர்ந்த பொழில்கள் சூழ்ந்த இடத்தில் வேள்விச்சாலை அமைத்தான். வேள்விமாக்களை கேட்டு உரிய முறையில் ராஜசூயம் வேட்டான. அதை ஒட்டி சிறையிருந்த எல்லாக் கைதிகளையும் விடுதலை செய்தான். வந்திருந்த மன்னருக்கேற்ப வரிசை முடித்தான்.
பாண்டியர்களில் அரிகேசரி மாறவர்மன் ஹிரண்யகருப்பம், துலாபாரம், பகு சுவர்ணம் என்பவற்றைச் செய்தான்.
தேர்மாறன் என்னும் பாண்டியனும் எண்ணிறைந்த கோசஹஸ்ரமும், ஹிரண்யகருப்பமும், துலாபாரமும், செய்தான் என்று வேள்விக்குடி செப்பேடுகள் குறிக்கின்றன.
மாறவர்மன் இராஜசிம்மன் துலாபாரம் செய்தான் என்றும் சின்னமனூர் செப்பேடு கூறுகிறது.
வேள்விக்குடி , சின்னமனூர், தளவாய்புரம் செப்பேடுகள் மற்றும் இந்தோனேஷியாவின் அடர்ந்த காட்டுக்குள் கிடைத்த நாலாம் நூற்றாண்டு கல்வெட்டுகள் ஆகியவற்றை பின்னணியில் வைத்து ஆராய்ந்தால் பல புதிர்களை விடுவிக்கமுடியும் .
***
குலசேகரன்காலர்த்தில் மணவூர் தலைநகராக இருந்தது பின்னர்தான் தற்போதைய மதுரை உண்டானது . இந்த மணவூர் எது? எங்கே இருந்தது?
****
PICTURES- உலவாக்கிழி அளித்த படலம்
வளையல் விற்ற படலம்
அக்ஷய பாத்திரம் போல உலவாக்கிழி, உலவாக்கோட்டை பற்றி பரஞ்சோதி பாடியதும் சிறப்புக்குரியது .
குல பூஷணன் காலத்தில் வறட்சி காரணமாக பிராமணர்கள் வெளியேறிய செய்தியை தி.வி.பு கூறுகிறது ;காசியிலிருந்து பிராமணர்களையும் காவிரிப்பூம்பத்தினத்திலிருந்து செட்டியார்களையும் அழைத்த செய்தி மக்கட் தொகை குடியேற்றத்தைக் காட்டுகிறது.
வங்கிய சேகரன் காலத்தில் ஜனத்தொகை பெருக்கத்தால் புதிய ஆலவாய் தோற்றுவிக்கப்பட்டது என்கிறார் பரஞ்சோதி.
மாணிக்கவாசகர் காலத்துக்கும் முன்னதாக சங்கப்புலவர் சண்டையிட்டதையும் மறைக்காமல் எழுதியுள்ளார் பரஞ்சோதி
ஆகவே சுனாமி, ஜனத்தொகை பிரச்சினை, அரசர்கள் படை எடுப்பு, கனவுகளின் பங்கு, வறட்சி, வைகையில் பெருவெள்ளம், அற்புதங்கள், பிராணிகளுக்கும் கடவுள் அருள் புரிந்தது , வரலாறு, மக்கள் குடியேற்றம், இமயம் வரை பயணம் , நவரத்தின சாஸ்திரம் சாமுத்ரிகா லட்சண சாஸ்திரம் குதிரை சாஸ்திரம், தாவரவியல் , அதிசயங்கள், அற்புதங்கள் , யாக யக்ஞங்கள் போன்ற ஏராளமான தலைப்புகளில் ஆராயப்பட வேண்டிய நூல் தி.வி.பு.
எல்லாவற்றுக்கும் மேலாக எல்லா தி.வி.பு. க்களும் சம்ஸ்க்ருத நூல்களின் மொழிபெயர்ப்பு என்பதால் மூலத்தைக் கைகளில் வைத்துக்கொண்டு ஆராய்ச்சி செய்ய வேண்டும்.
PICTURE-மெய் காட்டிய படலம்
இதற்கு மடாதிபதிகளும் ஆதீனகர்த்தர்களும் முயற்சி எடுக்க வேண்டும் .
—சுபம்—
TAGS- தமிழ் மன்னர்கள், இமய மலை,சென்றது ஏன்? தங்கம்