காலம் வரும் முன்னே காலன் வர மாட்டான்! – 9 (Post No.14,765)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,765

Date uploaded in London – 16 July 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

இந்தத் தொடரில் இதற்கு முன்னே வந்துள்ள் அனைத்துக் கட்டுரைகளையும் இந்த பிளாக்கில் படிக்கலாம்! 

காலம் வரும் முன்னே காலன் வர மாட்டான்! – 9 

ச.நாகராஜன் 

சமீப காலத்தில் நடந்த கோரமான நெஞ்சை உலுக்கும் சம்பவம் ஏர் இந்தியாவின் போயிங் 787 ரக ட்ரீம் லைனர் ஃப்ளைட் AI-171-இன்  விபத்து தான்!

அஹமதாபாத்திலிருந்து 2025 ஜூன் 12, தேதி கிளம்பிய அது லண்டனில் உள்ள கேட்விக் தளத்திற்குச் செல்ல பறக்க ஆரம்பித்தது. சரியாக பகல் 1.39க்குக் கிளம்பிய விமானம் சில விநாடிகளுக்குள்ளேயே அவசர கால உதவியான மே டே அழைப்பை விடுத்தது.

1.40க்கு அது வெடித்துச் சிதறியது.

விமானத்தில் 242 பெர்கள் இருந்தனர். அவர்களில் 230 பேர்கள் பயணிகள்; 12 பேர்கள் விமானத்தைச் செலுத்தும் குழுவினர். இவர்களில் 169 பேர்கள் இந்தியர்.53 பேர்கள் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள். ஏனையோர் மற்ற நாட்டவர்கள். 

விமானம் கிளம்பிய சில நொடிகளிலேயே வெடித்துச் சிதறியது.

அது விமான நிலையத்திற்கு அருகிலிருந்த BJ மெடிகல் கல்லூரி மற்றும் மெகானிநகர் அருகிலிருந்த சிவில் மருத்துவமனை மற்றும் ஹாஸ்டல் மீது விழுந்து நொறுங்கி ஹாஸ்டலைச் சேதப்படுத்தியது.

ஹாஸ்டலில் இருந்தவர்களில் பலர் காயமடைந்தனர். ஹாஸ்டலில் மேல் தளங்கள் இடிபட்டு நசமாயின. ஹாஸ்டலின் மீது விமானம்  மோதியதில் சுமார் 24 பேர்கள் இறந்தனர். 

விபத்தில் உயிர் இழந்தவர்களில் முன்னாளைய குஜராத் முதல் அமைச்சரான விஜய் ரூபானியும் ஒருவர் 

விமானத்தில் பயணித்த 242 பேர்களில் ஒரே ஒருவர் தான் அதிர்ஷ்ட வசமாக உயிர் பிழைத்தார்.

.விமானம் ஏன் தரை மீது மோதியது என்பதைப் பற்றிய ஏராளமான ஊகங்கள் கிளம்பின.

எரிபொருள் டாங்கிற்கு எரிபொருள் சப்ளை ஆகவில்லை என்பதும் ஒரு ஊகமாக இருக்கிறது. இரண்டு எஞ்ஜின்களும் அதனால் தான் இயங்கவில்லை என்பது வல்லுநர்களின் கண்டுபிடிப்பு.

 இதில் அதிசயிக்கத்தக்க ஒரு சம்பவம் இதில் உயிர் பிழைத்தவர் ஒருவர் மட்டுமே தான் என்பது.

விஸ்வாஸ் குமார் ரமேஷ் என்ற 38 வயதான ஒருவர் மட்டுமே தீவிர காயத்துடன் உயிர் தப்பினார்.

விமானம் கீழே விழுவதை அறிந்த ரமேஷ் அவசரகதவு வழியாக வெளியே குதித்து தப்பியுள்ளார்.

இருக்கை எண் 11 ஏ என்பது ட்ரீம்லைனர் விமானத்தில் எகானமி வகுப்பில் முதல் வரிசையில் ஜன்னலுக்கு வலதுபக்கத்தில் உள்ள இருக்கையாகும். இது அவசரவழியை ஒட்டி அமைந்துள்ளது.

விமானம் கீழே விழுந்து நொறுங்குவதற்கு சில நொடிகளுக்கு முன்பாக அவசரநிலை தெரிவிக்கப்பட்டது. உடனே உஷாரான அவர் சரியாக விமானம் கீழே விழுந்து மோதும் போது விமானத்தில் ஏற்பட்ட பிளவைப் பயன்படுத்தி அதன் வழியாக எகிறிக் குதித்தார். காயங்களுடன் உயிர் தப்பினார்.

அவர் கண் விழித்த போது அருகில் அவரைச் சுற்றி சடலங்கள் கிடந்தன. பயந்து அலறியவர் ஓட ஆரம்பித்தார். அவரை மீட்புக் குழுவினர் காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 முப்பது விநாடிகளுக்குள் எல்லாம் முடிந்து விட்டது.

 ரமேஷுக்கு அருகில் உட்கார்ந்திருந்த அவரது சகோதரர் உயிரிழந்தார்.

 மிக பயங்கரமான கோர விபத்தில் பல ஆச்சரிய செய்திகள் உள்ளன.

ஒருவர் இந்த விமானத்தை சரியான நேரத்தில் பிடிக்க முடியாததால் பயணம் செய்ய முடியவில்லை. டிக்கட் வாங்கிய இன்னொருவர் தாய் அவரைப் பிரிவதைத் தாங்க முடியாமல் வருந்தி அதில் போக வேண்டாம், இன்னும் இரு என்று சொன்னதால் அவர் பயணிக்கவில்லை. அவர் உயிர் தப்பினார்.

 ரமேஷ் உயிர் பிழைத்த அதிசய சம்பவத்திலிருந்து ஒன்று மட்டும் தெரிகிறது: காலம் வரும் முன்னே காலன் வர மாட்டான்!

**

Leave a comment

Leave a comment