புராணங்களை நினைவு வைத்துக்கொள்ள கி.வா.ஜ டெக்னீக்- உத்தி! (Post No.14,475)

Written by London Swaminathan

Post No. 14,775

Date uploaded in London –  18 July 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

புராணங்களின் எண்ணிக்கையில் எப்போதும் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால் ஒரு சில மாற்றங்களை மட்டும் காண்கிறோம்

தேவி பாகவதத்தில் ஒரு ஸ்லோகம் வருகிறது

Devī Bhāgavata (Skanda 1, chapter 3, śloka 21) .

madvayaṃ   bhadvayaṃ caiva bratrayaṃ vacanuṣṭayam |

anāpadlliṅga-ku-skāni purāṇāni pṛthaka-pṛthaka ||

மத்வயம் பத்வயம் சைவ ப்ரத்ரயம்  வசனுஷ்டயம்

அனாபத்லிங்க- கூ – ஸ்கானி புராணாநி ப்ருதக ப்ருதக

இதன் பொருள் (இதைத்தான் கி.வா.ஜ . தமிழில் கொடுத்தார் )

By ‘ம 2 ’ (Ma) two Purāṇas –Matsya and Mārkaṇḍeya , by ‘பா 2 ’ (Bha) two Purāṇas –Bhāgavata and Bhaviṣya , by ‘ப்ர 3  (Bra) three Purāṇas –Brahma, Brahmavaivarta and Brahmāṇḍa , by ‘வ 4  ’ (Va) four Purāṇas –Vāmana, Viṣṇu , Vāyu and Varāha , by ‘அ 1   ’ (A)–Agni Purāṇa , by ‘ந1  ’ (Na)–Nārada Purāṇa , by பத்1 (Pad)–Padma Purāṇa , by ‘லி 1 ’ (Li)–Liṅga Purāṇa , by ‘க 1  ’ (Ga)–Garuda Purāṇa , by ‘கூ 1  ’ (Ku)–Kūrma Purāṇa and by ‘ஸ்க1  ’ (Ska)–Skanda Purāṇa.

***

பதினெட்டு புராணங்களை நினைவு வைத்துக்கொள்வதற்கு எப்படியும் நீண்ட பாடலை நினைவு வைத்துக்கொள்ளவேண்டும். இதற்கு பிரபல தமிழ் அறிஞர் கி.வா.ஜகந்நாதன் வேறு ஒரு உத்தியைக் கூறுகிறார்.

கீழ்கண்ட எழுத்துக்களை நினைவு வைத்துக்கொள்ளுங்கள் போதும்;

அதை நான் அகர வரிசையில் அமைத்துள்ளேன்; இன்னும் எளிதாக இருக்கும் .

ஆ இ; க, க, கூ;

சி,சூ; நா;

ப, பா, பி, பௌ[

ம , மா; வ, வா;  வா, வி

****

அ,  ஆ  = ஆக்கினேய / அக்கினி புராணம்

இ = இலிங்க புராணம்

க, க , கூ =கந்த புராணம் ,கருட புராணம், கூர்ம புராணம்

சி,சூ =சிவ புராணம்,சூரிய புராணம் ;

நா= நாரத புராணம்

ப , பா, பி , பௌ= பதும புராணம் ,பாகவத புராணம்  ,

பிரம்ம கைவர்த்த புராணம்  ,பிரமாண்ட புராணம், பௌடிக புராணம்

ம , மா = மச்ச புராணம் ,மார்க்கண்டேய  புராணம்

வ, வா, வா, வி = வராக புராணம் ,வாமன புராணம், வாயு புராணம்,  விஷ்ணு  புராணம் .

*****

ஒரே ஸ்லோகத்தில் 18  புராணங்கள்

அறப்பளீஸ்வர சதகம் மூலமும் உரையும்

தலைமைசேர் பௌடிகம், இலிங்கம், மார்க்கண்டம், எழில்

     சாரும்வா மனம், மச் சமே,

  சைவம், பெ ருங்கூர்மம், வருவரா கம், கந்த

     சரிதமே, பிரமாண் டமும்,

தலைமைசேர் இப்பத்தும் உயர்சிவ புராணம்ஆம்;

     நெடியமால் கதை;வை ணவம்

  நீதிசேர் காருடம், நாரதம், பாகவதம்,

     நீடிய புராணம் நான்காம்;

கலைவளர்சொல் பதுமமொடு, கிரமகை வர்த்தமே,

     கமலா லயன்கா தைஆம்;

  கதிரவன் காதையே சூரிய புராணமாம்;

     கனல் காதை ஆக்கி னேயம்;

அலைகொண்ட நதியும்வெண் மதியும்அறு கும்புனையும்

     அத்தனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

பௌடிக புராணம்

இலிங்க புராணம்

மார்க்கண்டேய புராணம்

வாமன புராணம்

மச்ச புராணம்

சிவ புராணம்

கூர்ம புராணம்

வராக புராணம்

கந்த புராணம்

பிரமாண்ட புராணம்

ஆகிய 10-ம் சிவன் கதை

****

விஷ்ணு  புராணம்

கருட புராணம்

நாரத புராணம்

பாகவத புராணம் 

4-ம் திருமால் கதை

****

பதும புராணம்

பிரம்ம கைவர்த்த புராணம்

2-ம் பிரமன் கதை

****

சூரிய புராணம் – கதிரவன் கதை

ஆக்கினேய புராணம் – அக்கினி கதை

அம்பலவாணக் கவிராயர் பாடிய சதுரகிரி அறப்பளீசுர சதகம்.

சில ஸ்லோகங்களில் சூரிய புராணத்துக்குப் பதிலாக

வாயு புராணம்   உள்ளது .

****

மகரிஷி வியாசர் விஷ்ணு புராணத்தில் சொல்கிறார் :

பிரஹ்மம் பத்மம் வைஷ்ணவாஞ்ச  சைவம் பாகவதம் ததா

ததான்யன் நாரதீயம்  ச மார்க்கண்டேயம் ச சப்தமம் (7)

ஆக்னேயமாஷ்டமம் (8) சைவ பவிஷ்யம் நவமம் (9) ததா

தசமம் (10) ப்ரஹ்மவைவர்த்தம் லைங்கமேகாதசம் (11) ஸ்ம்ருதம்

வராஹம் த்வாதசம் (12) சைவ ஸ்காந்தம் சாத்ர த்ரயோதசம் (13)

சதுர்தசம் (14) வாமனகம்  கெளர்ம பஞ்சதசம் (15) ததா

மாத்ஸ்ய ச கருடாம் சைவ ப்ரஹ்மாண்டாஞ்ச ததஹ பரம்

மஹாபுராணான்யேதானிய  ஹ்யஷ்டாதச (18) மஹாமுனி

விஷ்ணு புராணம் 

brāhmaṃ pādmaṃ vaiṣṇavañca śaivaṃ bhāgavataṃ tathā |

tathānyannāradīyaṃ ca mārkaṇḍeyaṃ ca saptamam ||

āgneyamaṣṭamaṃ caiva bhaviṣyaṃ navamaṃ tathā |

daśamaṃ brahmarvaivartaṃ laiṅgamekādaśaṃ smṛtam ||

vārāhaṃ dvādaśaṃ caiva skāndaṃ cātra trayodaśam |

caturdaśaṃ vāmanakaṃ kaurma pañcadaśaṃ tathā ||

mātsya ca garuḍaṃ caiva brahmāṇḍañca tataḥ param |

mahāpurāṇānyetāni hyaṣṭādaśa mahāmune ||

  Viṣṇu Purāṇa (3/6/21–24).

–subham—

Tags-ஒரே ஸ்லோகத்தில்,. 18 புராணங்கள் , அறப்பளீசுர சதகம், வியாசர், விஷ்ணு புராணம், தேவீ பாகவதம் , ஸ்லோகம்

Leave a comment

Leave a comment