
Post No. 14,803
Date uploaded in London – 27 July 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Part two
காளிதாசன் கடவுள் வாழ்த்தாக சிவனை வைத்த நூல்கள் :
ரகு வம்சம்
சாகுந்தலம்
விக்ரமோர்வசீயம்
மாளவிகாக்நிமித்ரம்
****
சங்க இலக்கியங்களில் சிவ பெருமான் கடவுள் வாழ்த்துள்ள நூல்கள்: – ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு, புறநானூறு
சிவனுடைய மனைவியின் பெயர்களைக் காளிதாசன் குறிப்பிடும் இடங்களையும் நினைவிற்கொள்வது அவசியம் – அம்பிகா, அபர்ணா, பவானி, கெளரி, கபாலாபரணா / காளி, உமா. இதே போல தமிழ் இலக்கியத்திலும் உமா, காளி, துர்கா, கொற்றவை, காடுகிழாள், பழையோள் என்ற இடங்களில் கணவன் சிவன் என்பதையும் மறந்துவிடக்கூடாது .
****

சிவன்
அர்த்தேந்துமெளலின் – மேக 57. பிறைசூடி ; அர்த்த இந்து = பாதி சந்திரன்
அநங்கசத்ரு- மன்மதனின் எதிரி
அந்தகாரி – உலககினை அழிப்பவர்
பூதாதிபதி – பூதங்களின் தலைவன்
சந்திர மெளலி – பிறைசூடி
தூர்ஜதி-
இந்து மெளலி – பிறைசூடி
கிரீச – மலைவாசி; இமயமலையில் வசிப்பவன்
ஹர- விக்னங்களை , எதிரிகளை அழிப்பவன்
மதநாந்தகர – மதனன் என்னும் மன்மதனை சம்ஹரித்தவன்
மஹேச- பெரிய கடவுள்
மஹேஸ்வர – பெரியோன்
ம்ருகாங்க மெளலி –
நீலகண்ட – நீலமணிமிடற்றவன் , (மணிமிடற்றன்)
பசுபதி- பிராணிகளின் தலைவன்
பிநாகபாணி- பினாகம் என்னும் வில்லை உடையவன் பிநாகின்
புராரி –புரம் எரித்தவன்
சம்பூ
சங்கர- நன்மை செய் பவன்
சிவ- மங்களம் உண்டாக்குபவன்
ஸ்மராரி -மதனன் என்னும் மன்மதனை சம்ஹரித்தவன்
ஸ்மராராதி -மதனன் என்னும் மன்மதனை சம்ஹரித்தவன்
த்ரி லோசன –முக்கட் செல்வன்
த்ரி நேத்ர- முக்கட் செல்வன்
அயுக்ம நேத்ர- மூன்றாவது காண் உடையவர்
த்ரி புராரி-முப்புரம் எரித்தவன்
உமாபதி-உமையின் கணவன்
வ்ருஷ வாகன- விடை ஏறி
பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்தில் ஒன்றரைக் கண் வாத்தியார் ஒருவர் இருந்தார் அவரை அரைப்பரமசிவம் என்று நாங்கள் கிண்டல் செய்வோம் ; அதாவது எங்களுக்குள் பேசிக்கொள்வோம் ; உண்மையில் நாங்கள் ஆசிரியரைக் கிண்டல் செய்த சொல் தேவாரத்தில் உள்ளது சிவகுக்குள்ள மூன்று கண்களை அர்த்தநாரி வடிவத்தில் காணும் பொது சிவனை ஒன்றரைக் கண்ணா என்று அப்பர் பாடுகிறார் இதைக் காளிதாசனும் பாடியிருக்கிறான்!

அம்மூவன் – அழகிய மூன்று கண்ணுடையோன்
உருத்திரங்கண்ணனார் – Mr திருவாளர் ருத்ராக்ஷ
பரிமேல் அழகர் – திருவிளையாடல் புராணத்தில் சிவனுக்கு பரஞ்சோதி கொடுத்த பெயர்
எண்குணத்தான் ஆகிய பெயர்களும் சிவன் பெயர்களே
திருக்குறள் கடவுள் வாழ்த்தில் வரும் எண்குணத்தான் என்ற சொல்லுக்குப் பரிதியார் மட்டும், சிவன் என்று உறுதியாகக் கூறுகிறார் . எவரும் சமணர், புத்தர் என்று கூறவில்லை
காளிதாசன் சொல்லும் எட்டுக்குணங்களுக்கு தேவார பாடல்கள் ஆதரவு கொடுக்கின்றன. அந்த எட்டு தண்ணீர், தீ, ஆகாயம், பூமி, வாயு, எஜமானன், சூரியன் சந்திரன். இவை ருத்ரா, சர்வா, பசுபதி, உக்ரா, அசனி, பாவ, மஹாதேவா மற்றும் ஈசான..
அஷ்டமூர்த்தி = அஷ்ட + மூர்த்தி, எட்டு வடிவம் கொண்டவன். ஐந்து பூதங்களும் சந்திரன், சூரியன், இயமானன் என்ற மூன்றும் சேர்ந்து எட்டு உருவில் உள்ளதையே அஷ்டமூர்த்தி என்பர்
அஷ்டமூர்த்தி என்பது காளிதாசன் சொன்ன சொல் .
Eight forms has Shiva, lord of all and king:
And these are water, first created thing;
And fire, which speeds the sacrifice begun;
The priest; and time’s dividers, moon and sun;
The all-embracing ether, path of sound;
The earth, wherein all seeds of life are found;
And air, the breath of life: may he draw near,
Revealed in these, and bless those gathered here—Sakuntalam Drama
****
பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் ஒருவரே என்று குமார சம்பவ ஏழாவது காண்டத்தில் தெள்ளத்தெளிவாகக் கூறுகிறார்
ஒரே இறைவன் மூன்றாகப் பிரிந்து மும்மூர்த்திகள் ஆகின்றனர்; அவர்கள் மூவரும் மாறிமாறி முதலிடத்துக்கு வருவார்கள். ஒரு சமயம் விஷ்ணுவுக்கும் மேலாக சிவனும் ,இன்னும் ஒரு சமயத்தில் சிவனுக்கும் மேலாக விஷ்ணுவும் மற்ற ஒரு சமயத்த்தில் இவர்களுக்கு மேலாகப் பிரம்மாவும் வருவார்கள் என்கிறார் இவ்வளவு தெளிவாக மும்மூர்த்திகளையும் விளக்கியது காளிதாசன்தான் 7-44
तमन्वगच्छत्प्रथमो विधाता श्रीवत्सलक्ष्मा पुरुषश्च साक्षात् ।
जयेति वाचा महिमानमस्य संवर्धयन्त्या हविषेव वह्निम् ॥
சங்க இலக்கியத்தில் காளிதாசன் பயன்படுத்திய சொற்களையே சங்கப்புலவர் பயன்படுத்தினர்; யஜுர் வேத ருத்ரம்- சமகத்தில் எவ்வளவோ அடைமொழிகள் சிவபெருமானுக்கு இருந்த போதிலும் காளிதாசன் தேர்ந்தெடுத்ததை மட்டுமே தமிழ்ச் சங்கப்புலவர்கள் பயன்படுத்தியது கவனத்திற்கொள்ள வேண்டிய விஷயம் ஆகும்.
அவைகளைத் தொடர்ந்து காண்போம் …..
To be continued…..
tags- காளிதாசன், காவியங்கள் , சிவபெருமான் -,part 2