எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்! (Post No.14,807)

ஞானமயம் வழங்கும் 27-7-2025  உலக இந்து செய்திமடல் (Post No.14,807)

Written by London Swaminathan

Post No. 14,807

Date uploaded in London –  28 July 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து  வைஷ்ணவி ஆனந்தும்  லதா யோகேஷும்  வாசித்து வழங்கும் செய்தி மடல்.

அனைவருக்கும் வைஷ்ணவி ஆனந்த்  வணக்கம்.

இன்று ஞாயிற்றுக்கிழமை ஜூலை 27-ம் தேதி 2025-ம் ஆண்டு .

(compiled from popular Newspapers of India)

முதலில் இந்தியச் செய்திகள்!

அமர்நாத் யாத்திரை

அமர்நாத் யாத்திரை யாத்ரீகர்கள் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது

அமர்நாத் யாத்திரை ஆகஸ்டு 9-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அமர்நாத் யாத்திரை 2025 ஜூலை 3ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9ம் தேதி முடிவடைகிறது. இந்த புனித யாத்திரை 37 நாட்கள் நடைபெறும். இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமான யாத்ரீகர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

இது தொடர்பாக காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா பதிவிட்டுள்ளதாவது:

யாத்திரை தொடங்கியதிலிருந்து புனித குகை ஆலயத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் வழிபாடு நடத்தியுள்ளனர். இதன் மூலம் வருடாந்திர அமர்நாத் யாத்திரை ஒரு முக்கிய மைல்கல்லைக் கடந்துள்ளது.

இந்த புனித பயணம் அனைவருக்கும் அமைதி, வலிமை மற்றும் நிறைவைக் கொண்டுவரட்டும் என்று மனோஜ் சின்ஹா பதிவிட்டுள்ளார்.

********

கன்வர் யாத்திரை

உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.

ச்ராவண மாதத்தை முன்னிட்டு ஹரித்வார் கங்கை நதியில் கன்வர் யாத்ரீகர்கள் புனித நீராடி வருகின்றனர்.

ச்ராவண  சிவராத்திரி மற்றும் கன்வர் யாத்திரையின் இறுதி நாளையொட்டி ஹரித்வாரில் ஏராளமான யாத்ரீகர்கள் குவிந்தனர். தொடர்ந்து அவர்கள் கங்கை நதியில் புனித நீராடி வழிபாடு நடத்தினர். கங்கையில் சேமித்த புனித நீரை கன்வர் என்று அழைக்கப்படும் காவடியில் சுமந்து சென்று சொந்த ஊர்களிலுள்ள சிவன் கோவிலில் அபிஷேகம் செய்வது வழக்கம்

*****

இனி மாநிலச் செய்திகள்

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் சுற்றுப்பயணம் செய்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கோயில் நிலத்தில் குடியிருப்போருக்கு கோயில் நிலம் சொந்தமாக்கப்படும் என்றும், தங்களுடைய அரசு அமைந்தால் அரசு சார்பில் வீடு கட்டித்தரப்படும் என்றும் சொல்லியிருப்பது உண்மையிலேயே மிகுந்த அதிர்ச்சி அளிக்கும் செய்தி யாகும்.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட 40,000 க்கும் மேற்பட்ட கோயில்களுக்குச் சொந்தமாக பல லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளது. இந்த நிலங்களில் ஒரு நெல் முனை அளவு கூட தமிழகத்தை ஆண்ட திராவிட அரசாங்கங்கள் கொடுத்தது அல்ல.

அந்தக்காலத்தில் அரசர்களும், ஆன்மீகப் பெரியோர்களும் கோயில்களுக்கு ஆறு கால பூஜை நடக்கவும், கோயில்களின் அன்றாட செலவுகளுக்காகவும் அந்தக் கோயில் நிலங்களில் இருந்து வருகின்ற வருமானத்தின் மூலமாக செலவு செய்ய கோயில்களுக்கு நிலங்களை எழுதி வைத்தனர்.

தற்போது பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர் பிடியில் உள்ளது. நீதிமன்றங்கள் பலமுறை தலையிட்டு இதைப் பற்றி பேசியும் எந்த ஒரு அரசாங்கமும் கோயில் நிலங்களை மீட்க சரியான நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை. ஆக்கிரமிப்பாளிடமிருந்து முறையான வாடகை கூட வசூல் செய்யப்படுவதில்லை.

நிலைமை இப்படி இருக்கையில் திரு. எடப்பாடி பழனிச்சாமி என்று சொல்வது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போன்று உள்ளது.

பல்லாயிரம் ஆண்டு காலமாக நின்று நிலைத்திருப்பது நமது கோயில்களும், நமது கலாச்சாரமும் மட்டுமே. கோயிலையும், அதன் மூலமான கலாச்சாரத்தையும் அரசியல் சுயநலத்திற்காக காவு கொடுப்பதை எந்த விலை கொடுத்தும் பக்தர்கள் தடுத்தே தீருவார்கள்.

ஆகவே எடப்பாடி பழனிச்சாமி சொல்லியிருப்பதை இந்து முன்னணி மிக வன்மையாக கண்டிக்கிறது.

அவர் சொல்லியிருப்பதை திரும்பப் பெற வேண்டுமென இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது என்று இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

****

ஆடி அமாவாசை.. நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுத்து முன்னோர்களை வழிபட்ட மக்கள்

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஆடி அமாவாசையை ஒட்டி பல்லாயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த குவிந்ததால் ஸ்ரீரங்கம் பகுதிகள் திணறியது. அதிகாலை முதலே ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். மக்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி முன்னோர்கள் நினைவாக வழிபட்டு தர்ப்பணம் கொடுத்தனர்.

ஆடி அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவதால் அவர்களின் ஆசியுடன் குடும்பமும் சந்ததியினரும் விருத்தி அடையும் என்பது நம்பிக்கை. தாய், தந்தை, பாட்டனார், முப்பாட்டனார் என்று முன்னோர்களை நினைத்து அவர்களின் பெயர்களை கூறியும், நினைத்தும் புரோகிதர்கள் மூலம் எள், தர்ப்பண நீர், அரிசி, வாழைக்காய், சாப்பாடு ஆகியவற்றையும் வைத்து வழிபட்டனர்

ராமேஸ்வரத்தில் காலை முதலே ஏராளமான மக்கள் குவிந்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த மக்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி, கடற்கரையில் அமர்ந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுத்தனர்.

திருவள்ளூரில் வைத்திய வீரராகவர் கோவில் அருகில் உள்ள ஹிருத்தாபநாசினி குளம் மற்றும் காக்களூர் பாதாள விநாயகர் கோவில் அருகே உள்ள ஏரியில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

மாமல்லபுரம் கடற்கரை மற்றும் திருக்குளம் பகுதியில், ஏராளமானோர் புனித நீராடி, மறைந்த தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.

சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை கரையில் தங்கள் முன்னோர்கள் நினைவாக பூஜைகள் செய்து வழிபடுவதற்காக அதிகாலையிலே நூற்றுக்கும் மேற்பட்டோர் வருகை தந்ததந்தனர்.

.கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே கோதையார், பரளியார் ஆகிய நதிகள் இணைந்து தாமிரபரணியாக உருவெடுக்கும் “குமரி சங்கமான” மூவாற்று முகம் ஆற்றோரம் இன்றஆற்றோரம் இன்று ஆடி அமாவாசை பிதுர் தர்ப்பணம் நிகழ்ச்சி நடந்தது.

*****

பிரதமர் நரேந்திர மோடி விஜயம்

பிரதமர் நரேந்திர மோடி இன்று கங்கை கொண்ட சோழபுரம் சிவன் கோவிலுக்கு விஜயம் செயதார்

சோழர்களின் சூரிய வம்சத்தைச் சேர்ந்த இந்து மன்னன் ராஜேந்திர சோழன் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார்

. அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை விழாவை இந்த ஆண்டு சிறப்பாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 23 முதல் 27 வரை 5 நாட்கள் விழாவாகக் கொண்டாடப்படவுள்ளது. இதில் கடைசி நாளான ஜூலை 27ஆம் தேதி திருவாசகம் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார்

****

1.50 லட்சம் விநாயகர் சிலைகள்: ஹிந்து முன்னணி தீவிரம்

திருப்பூர்: விநாயகர் சதுர்த்தியன்று தமிழகம் முழுதும், ஹிந்து முன்னணி சார்பாக, 1.50 லட்சம் விநாயகர் சிலைகள் வைக்கப்பட உள்ளன.

-விநாயகர் சதுர்த்தி நாளில், வீதிகள் தோறும், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுவது வழக்கம். வரும் ஆக.,27ல் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, ஹிந்து முன்னணி சார்பில், தமிழகம் முழுதும், 1.50 லட்சம் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டு, சிலை தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இது குறித்து ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியதாவது:

விநாயகர் சிலைகள் அனைத்தும் சுற்றுசூழல் பாதிக்காத வகையில், பேப்பர் கூழ், கிழங்கு மாவு மூலம் தயாரிக்கப்பட்டுள்ளன. வாட்டர் கலர் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. சிம்ம வாகனம், சிவ பார்வதி, முருக விநாயகர், சித்தி புத்தி விநாயகர், அன்ன வாகனம், விஸ்வரூப விநாயகர் என பல்வேறு வடிவங்களில், 3 அடி முதல், 11 அடி வரையில் சிலைகள் தயார் செய்யப்பட்டுள்ளது.

****

சபரிமலையில் விமான நிலையம்.. 3500 அடி ரன்வேயுடன்.. விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் சபரிமலையில் விமான நிலையம் அமைப்பது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை கேரள மாநில அரசு,

 மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

பத்தனம்திட்டா அருகே செருவல்லியில் இந்த விமான நிலையம். அமையும்.

திட்ட அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

புதிய விமான நிலையத்தில் 3,500 மீட்டர் நீள ஓடுபாதை மற்றும் அதே அளவுள்ள டாக்ஸி பாதை இருக்கும்.

பயணிகள் முனையத்தின் வடிவமைப்பில் இரண்டு பல மாடி வளைவு அமைப்பு (Multiple Apron Ramp System) கொண்ட ஏரோபிரிட்ஜ்கள் இருக்கும்..

நீண்ட தூரம் செல்லும் பெரிய ரக விமானமான போயிங் 777-300 மாதிரி விமானமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெரிய அளவிலான விமானங்களையும் கூட கையாளக் கூடிய வகையில் விமான நிலையம் அமையும் என்பதை சுட்டிக் காட்டுகிறது. பயணிகள் கட்டிடம் , தனி சரக்கு முனையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

*****

மதுரை ஆதீனத்துக்கு திராவிட போலீஸ் தொல்லை

பாரதீய ஜனதா  கட்சியின்  மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் அவர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அன்று கூட விசாரணை நடத்திவிட்டு, தற்போது அவர்களது முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளது  திமுக அரசு.

இப்படி தேவையற்ற மனுக்களைப் போட்டு இந்து மதத் தலைவர்களையும் நீதிமன்ற நேரத்தையும் அவமதிக்கும் வழக்கத்தைத் திமுக அரசு கைவிட வேண்டும், உடனடியாக மதுரை ஆதீனத்தின் முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரும் காவல்துறை மனுவைத் திரும்பப் பெற வேண்டும் என்று திமுக அரசை நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.

****

ஆடி அமாவாசை..

ஓணம் திருநாளை முன்னிட்டு 15 பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு: கேரள அரசு அறிவிப்பு

கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு  6 லட்சம் குடும்பங்களுக்கு 15 பொருட்கள் அடங்கிய இலவச தொகுப்பு வழங்கப்படும் என்று கேரள மாநில அரசு அறிவித்துள்ளது.

ஓணம் பண்டிகை. இந்த ஆண்டு வருகிற செப்டம்பர் மாதம் 5-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மஞ்சள் நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கு கேரள அரசு சார்பில் 15 பொருட்கள் அடங்கிய இலவச தொகுப்பு வழங்கப்படும்

அதில் ½ லிட்டர் தேங்காய் எண்ணெய், ½ கிலோ சர்க்கரை, ½ கிலோ பாசிப்பருப்பு, சேமியா பாயசம் மிக்ஸ் பாக்கெட், மில்மா நெய் 200 கிராம், முந்திரி பருப்பு, சாம்பார் பொடி, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, மல்லி பொடி, தேயிலை, துவரம் பருப்பு, உப்பு தூள் உள்பட 15 பொருட்கள் அடங்கி இருக்கும்.

அத்துடன் மாநிலத்தில் பல இடங்களிலும் ஓண சந்தைகள் திறந்து காய்கறிகள், பழங்கள், நேந்திரங்காய் ஆகியவை குறைந்த விலையில் வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்து உள்ளது.

****

அடுத்ததாக வெளிநாட்டுச் செய்தி .

ஆஸ்திரேலியாவில் ஹிந்துக் கோவிலில் இனவெறி வாசகம்: மர்ம நபர்கள் அட்டூழியம்

 ஆஸ்திரேலியாவில் ஹிந்துக் கோவில் மீது இனவெறியில் கருத்துகள் எழுதப்பட்ட சம்பவம் பக்தர்கள் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில், கார் பார்க்கிங் பிரச்னையில் சரண்ப்ரீத் சிங் என்பவரை கும்பல் ஒன்று இனவெறி கருத்துக்கள் கூறி திட்டியபடி முகம் மற்றும் வயிற்று பகுதிகளில் எட்டி உதைத்து தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மெல்போர்னின் போர்னியா பகுதியில் நகரில் உள்ள ஸ்ரீசுவாமி நாராயண் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள், சிவப்பு பெயின்ட்டில் இனவெறி ரீதியில் வாசகங்களை எழுதிச் சென்றுள்ளனர்.

மேலும், அந்த பகுதியில் ஆசியாவைச் சேர்ந்தவர்கள் நடத்தும் உணவகங்களிலும் இக்கும்பல் இதேபோன்ற செயலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் நிர்வாகிகளுடன் அதிகாரிகள் தொடர்பில் உள்ளனர்.

 இந்த தாக்குதல்,  வழிபாட்டுக்கான உரிமை மற்றும் மத சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று ஹிந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர்

 ****

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து  வைஷ்ணவி ஆனந்தும் லதா யோகேஷும் வாசித்த செய்தி மடல் இது.

அடுத்த ஒளிபரப்பு  ஆகஸ்ட் மாதம் மூன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை  லண்டன் நேரம் பகல் ஒரு  மணிக்கும்,

இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் .

வணக்கம்.

—SUBHAM—-

Tags- Gnanamayam, World Hindu News, 27 July 2025, Broadcast

Leave a comment

Leave a comment