திருவள்ளுவன் காப்பி அடித்த சொற்கள்! ஏழு முறை தரையில் விழுந்த கதை ! (Post.14,815)

Written by London Swaminathan

Post No. 14,815

Date uploaded in London –  31 July 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருவள்ளுவர், சங்க காலத்துக்குப் பின்னர் வாழ்ந்தவர் என்பது அறுநூறு குறள்களில் வரும் ஸம்ஸ்க்ருதச் சொற்களும் , பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை காட்டியது போல புதிய இலக்கணம் இருப்பதாலும் தெரிகிறது; அப்பரும் சம்பந்தரும் மஹேந்திர பல்லவர் காலத்தவர்கள் ;ஆகவே வள்ளுவருக்கும் அப்பருக்கும் இடையே நூறு ஆண்டுகள்தான் இடைவெளி ; காலத்தின் தாக்கத்தை இந்த ஒப்பீடுகளில் காணலாம்

லண்டன் பல்கலைக் கழகத்தில் நாங்கள் வள்ளுவர் சிலை  வைத்தபோதும் அடித்த அழைப்பிதழில் வள்ளுவர் ஐந்தாம் நூற்றாண்டுக்காரர்  என்றுதான் அடித்தோம். இறைவனுக்கான அடைமொழிகள் நீண்ட காலத்துக்கு முன்னரே சம்ஸ்க்ருதத்தில் உள்ளன;  அவற்றை அப்படியே மொழிபெயர்த்ததைக் குறளிலும்,  தேவாரத்திலும், திவ்யப் பிரபந்தத்திலும் காணமுடிகிறது .

***

அகரமுதலானை – சம்பந்தர் தேவாரம் – முதல் திருமுறை திருவாப்பனூர் பதிகம்– சிவன்

****

மலர்மிசை ஏகினான் – கமலாசன– காளிதாசனின் குமாரசம்பவம்.7-70  -பிரம்மா .

நீலநிற உருவின் நெடியோன் கொப்பூழ்

நான்முக ஒருவர் பயந்த  பல் இதழ்த்

தாமரைப் பொகுட்டுபெரும்பாணாற்றுப்படை 402-404

****

எண்குணத்தான் – அஷ்ட மூர்த்தி  — சிவன்

***

அடி அளந்தான் – வாமன / த்ரி விக்ரம அவதாரம்

மண் அளந்த மணிவண்ணன் -அப்பர் தேவாரம் ஆறாம் திருமுறை–581 .

***

பல்மாயக்கள்ளன்-மாயக் கிருஷ்ணன் 

****

ஆதிபகவன், –ஆதிமூலம் – கஜேந்திரமோக்ஷம் கதை;

ஆதி அந்தணன் -பிரம்மா

ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ

வேத மா பூண் வையத் தேர் ஊர்ந்து”  (பரிபாடல் வரிகள் 22,23)

****

ஆதி பகவன் என்பதை விளக்கிய பரிமேல் அழகர் இப்பாட்டால் முதற் கடவுளது உண்மை கூறப்பட்டது என்கிறார். ஆதி பகவன் என்பது விஷ்ணுவைக் குறிக்கும் என்பது ஆழ்வார்கள் கருத்து.

அந்தமில்  ஆதியம்பகவன் — என்கிறது திருவாய்மொழி

****

சம்சார சாகரம்-ஸம்ஸாரஸாகர – அஷ்டாவக்ர கீதா / கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு ; சிவபுராணம் 2-3-

****

அப்பர் தேவாரம் ஆறாம் திருமுறை , பாடல் 162

தனக்குவமை இல்லாதான் – அப்பர் தேவாரம் ஆறாம் திருமுறை–ஒப்பு ஒருவர் இல்லாத  ஒருவன் தன்னை ; ஒப்பிலியப்பன் /விஷ்ணு கோவில்

****

பாம்பு அணையில் பள்ளியானும் பங்கயத்து மேல் அயனும்

வேண்டாமை வேண்டுவதும் இலான்தன்னை –பாடல் 466 .

***

சுவைஒளி ஊறு ஓசை , நாற்றத்து பாடல் 272 .

****

மூவன் – சிவன் – பாடல் 195 . சங்க புலவ அம்மூவன்.

****

இதோ வள்ளுவன் ஏழு முறை தரையில் விழுந்த கதை !

திருவள்ளுவன் கடவுள் வாழ்த்து பற்றி யாரும் சொல்லாத ஒரு ரகசியம் அவன் ஏழு முறை கடவுள் காலில் தடால்  தடால்  என்று விழுகிறான் என்பதாகும் . இது கிறிஸ்தவ, முல்லிம் யூத சம்பரதாயங்களுக்கு எதிரானது ஏனெனில் அவர்கள் கணக்குப்படி கடவுளுக்கு கால் கிடையாது ; அதாவது உருவம் கிடையாது ; பாத நமஸ்காரமும் கிடையாது .

பாத நமஸ்கரம் புத்த மதத்தினருக்கும் சமண மத்தனாருக்கும் கிடையாது  இந்துக்களிப்பார்த்து கோவில் கட்டிய பின்னரே அவர்களுக்கும் உருவ வழிபாடு வந்தது சம்ஸ்க்ருத நூல்களிப்பார்த்து  சமய நூல்கள் எழுதும்போதுதான் உன் தாள் பணிகின்றோம் என்று எழுதினார்கள் உதாரணமாக திருத்தக்க தேவர் என்ற சமணர் எழுதிய  சீவக சிந்தாமணியில் கடவுள் வாழ்த்தில் காணலாம் ; அனால் இந்துக்களோவெனில் ஓவியங்களிலும் சிற்பங்களிலும் இலக்கியங்களிலும் பாதாரவிந்தங்களில் விழுவதாக எழுத்தியுள்ளார்கள்; காட்டியுள்ளார்கள்

பாத + அரவிந்த = பாத தாமரையில் .

சாமி! உன் காலில் விழுந்து கும்புடறேன் என்னைக் காப்பாத்துப்பா! என்கிறான்.

வள்ளுவர் திருக்குறள் கடவுள் வாழ்த்து

1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.

2. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்.

3. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார்.

4. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல.

5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

6. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார்.

7. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது.

8. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

பிறவாழி நீந்தல் அரிது.

9. கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை.

10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்.

–subham—

Tags-  வள்ளுவன் ,ஏழு முறை, தரையில் விழுந்த கதை ,திருவள்ளுவன் ,காப்பி அடித்த, சொற்கள், பாத நமஸ்காரம், தாள், அடி 

Leave a comment

Leave a comment