மிருக பலி நியாயமா? என் கேள்விக்கு என்ன பதில் ? (Post No.14,819)

Human Sacrifice in Indus Valley

Buffalo Sacrifice in Indus Vaklley

Written by London Swaminathan

Post No. 14,819

Date uploaded in London –  1 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

Vanakam Sir 🙏🏼🙏🏼  

My humble thanks to your blog about YUBA STAMBAM.  

BHRAMMA PURANAM 

BHRAMANDHA PURANAM 

( Published with Tamil translation by Sri Raghavendra group… COIMBATORE).  

Says 

In Aswametha Yagna done by Lord Bhrammadheva 21 horses were killed.  

The fat ( வபை) 21 குதிரைகளிடம் இருந்து எடுக்கப்பட்டு ஸ்ரீவரதராஜன் ….. உற்சவர் தேவப்பெருமாளுக்கு பிரம்ம தேவர் தந்தார். 

ஸ்ரீதேவாதிராஜன் தமது கைகளால் எடுத்து அந்த கொழுப்பு …. வபையை நிவேதனமாக ஸ்வீகரித்துக் கொண்டார் என்று உள்ளது. 

நீங்கள் சில ப்ரமாண தகவல்களுடன் ( ஸாயனர்) வேத உரையின்படி விலங்குகள் பலியிடப்படுவது வேத நெறிப்படி இல்லை என்று நிரூபணம் செய்து உள்ளீர்கள். 

 இதற்கு இன்னும் சிறந்த ஆதாரங்களை blog ல் பதிவு செய்தீர்கள் என்றால் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்.

 தங்களது யூப ஸ்தம்ப விளக்கத்தால் சற்றே மனம் சமாதானம் பெற்றது. இருப்பினும் தெளிவான வேத காலத்தில் நிஜமாக நிலவிய தகவல்களை அறிய ஆவலாய் உள்ளேன்.

மிகவும் நன்றி🙏🏼🙏🏼🤗🤗🥰 

மிகவும் நன்றி🙏🏼🙏🏼🤗🤗  

S. R. 

K.PURAM.

****

MY REPLY

அன்புடையீர்

கட்டுரையைப் படித்து கருத்து தெரிவித்தமைக்கு நன்றி..

விரிவான பதில்களையும் பின்னர் தருகிறேன்.

சுருக்கமான பதில் :

ஒரு காலத்தில் உயிர்ப்பலி நடந்தது உண்மையே ; காலப்போக்கில் அதைக் கைவிட்டு அடையாளபூர்வமாகச் செய்தார்கள் என்பதே நான் நம்பும் கருத்து .

சரி, இப்படி உயிர்ப்பலி செய்யலாமா / என்ற கேள்வி எழும்போது என் மனதிற்குள் வரும் எண்ணம் – ஒவ்வொரு நிமிடமும் உலகெங்கிலும் பல கோடி உயிரினங்களை மனிதர்கள் சாப்பிடுவதற்காக கொன்று குவிக்கிறர்கள்; தென் கொரியா நாட்டில் ஆண்டுதோறும் பத்து லட்சம் நாய்களை அடித்துச் சாப்பிடுகிறார்கள் என்ற செய்தி சமீப காலமாகப் பத்திரிகைகளில் அடிபடுகிறது முஸ்லீம்கள் மொகரம் பண்டிகையில் பல்லாயிரம் ஆடு மாடுகளை ஓட்டகங்களைக் கொன்று சாப்பிடுகிறார்கள்.

எங்கள் பிரிட்டனில் ஒரு கோழிப்பண்ணையிலோ மாட்டுப்பண்ணையிலோ தொற்று நோய் வந்துவிட்டால் உடனே பல்லாயிரம் பிராணிகள் உடைய பண்ணைகளை அடியோடு எரித்துவிட்டு அரசாங்கம் கொடுக்கும் நஷ்ட ஈட்டுத்  தொகையை ஏற்கிறார்கள். அமெரிக்காவில் ஒரே நாளில் பல லட்சம் பசுக்களை எரித்த செய்தியும் பத்திரிகைகளில் வந்தது.

சங்க இலக்கியத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் மாமிசம் சாப்பிட்ட குறிப்புதான் கிடைக்கிறது ; பிராமணர் வீட்டில் மட்டும் சாதமும் மாதுளங்காய்ப் பொரியலும் கிடைத்த செய்தி கிடைக்கிறது. .பொதுவாக சாது சந்யாசிகள் பிராமணர்கள், வெஜிட்டேரியங்கள்; சைவ உணவுக்காரர்கள்  ஆனால் தீட்சிதர்கள் மாட்டின் வபையை டேஸ்ட் செய்து தீட்சிதர் பதவி பெற்றதையும் அஸ்வ மேத யாகத்தில் குதிரை பலியிடப்பட்டதும் உண்மை என்றே நான் நம்புகிறேன் ; காலப்போக்கில் இதைக் கைவிட்டார்கள் . இலங்கை புத்த மத குருமார்கள் பிறர் கொண்டுவரும் மாமிசத்தை இன்றும் சாப்பிடுகிறார்கள்; வள்ளுவன் இதை ஒரு குறளில் கிண்டல் செய்கிறான்.

மெளரிய குல மன்னர்களின் முக்கிய சாப்பாடு மயில். அவர்களின் வம்சத்தின் பெயரே மயில் என்ற சொல்லில் இருந்து வந்தது; அந்த வம்சத்தில் வந்த அசோகன் உலகம் முழுதும் புத்த தர்மத்தைப் பரப்பிய போதும் அரண்மனையில் கொல்ல வேண்டிய மிருகங்களின் எண்ணிக்கையைக் குறைத்தான் என்று மட்டுமே உள்ளது தவிர்த்தான் என்று கல்வெட்டு கூறவில்லை ; பலகோடி ஆடுமாடுகள் தினமும் கொல்லப்படும்போது ஒரு மன்னன் அஸ்வமேதம் செய்ததில் நான் ஒன்றும் குறை காணவில்லை . திருஷ்டிப் பரிகாரத்துக்கு பூசணிக்காயை அல்லது தேங்காயை உடைப்பது போல வெற்றியின் அடையாளமாக அவர்கள் ஒரே ஒருகுதிரையைக் கொன்றிருக்கலாம் அல்லது பல குதிரைகளைக் கொன்று இருக்கலாம் காலப்போக்கில் இதைக் கைவிட்டு தானியத்தைப் பயன்படுத்தினார்கள் என்றே நான் நம்புகிறேன் மிருக பலி என்ற நோக்கில் — மனித பலி என்ற நோக்கில் ஆராய்ச்சி செய்தால் சிறுத்தொண்டர் போல பிள்ளையை கறி சமைத்த செய்தி பைபிளிலும் கிடைக்கிறது பஹ்ரைன் தீவில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் எலும்புக்கூடுகளுடன் சமாதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இவைகளையும் முன்னரே கட்டுரையில் கொடுத்தேன் சிந்து சமவெளி முத்திரையில் மனித பலி முத்திரை உள்ளது ; பலிகள் நடந்தது உண்மையே!

முடிவுரை

மனிதர்கள் சாப்பிடும் கோழி, மீன், நண்டு, ஆடு, மாடு ,ஒட்டகம், நாய், பல்லி , பாம்புகளை ஒப்பிடுகையில் யாகப்பலி என்பது இமயமலைக்கு முன்னால் நமது கிராமத்திலுள்ள பாறைகளின் அளவே என்பதையும் எவரும் மறுக்க முடியாது. யாராவது இது போன்ற கேள்விகளை எழுப்பினால் நான் கேட்கும் கேள்வி :நீ வெஜிட்டேரியானா? சைவ உணவுக் காரனா?

உன் நண்பர்கள சைவ உணவுக்காரர்கள் இல்லையென்றால் என்றாவது அவர்களிடம் இதை விவாதித்துக் கைவிட சொல்லி இருக்கிறாயா?

செய்யவில்லை என்றால் ஏன் செய்யவில்லை ? சொல்

உலகம் முழுதும் ஒவ்வொரு நிமிடமும் மனிதர்கள் சாப்பிடும் மிருகங்களின் எண்ணிக்கைப் பற்றி உனக்கு என்ன தெரியும் சொல்; அதைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய்? சரியா தப்பா?

மதத்தின்பெயரால் உலகம் முழுதும் மனிதர்களைக் கொல்கிறார்களே அது சரியா தப்பா ? இப்போது இஸ்ரேலிய யூதர்கள்  4000 முஸ்லீம் குழந்தைகளையும் 6000 கர்ப்பிணிப்பு பெண்களையும் 50,000 ஆண்களையும் கொன்றார்களே உலக நாடுகளும் முஸ்லீம்களும் ஏன் இதைத்  தடுக்கவில்லை?

மனிதக் கொலையைப் பற்றியே கவலைப்படாத நீ ஒரு குதிரைப்பலி பற்றி விதண்டாவாதம் செய்கிறாய்! உன் நெஞ்சசைத் தொட்டு சொல் ; இன்யை படுகொலைகள் பற்றிப் பேசத் திராணி இல்லாத நீ , உலகம் முழுதும் மாமிச உணவைத்த தடை செய்யக் கூச்சல் போடாத  நீ இது பற்றிப்பேசுவது, நியாயமா ? இது பற்றிப் பேசவோ விவாதிக்கவோ யாருக்கு உரிமை இருக்கிறது என்பதை மேலே விளக்கிவிட்டேன்

இன்றைய தினம் சிக்கன் சாப்பிடும் நிறைய பிராமணர்களை நான் லண்டனிலும் சென்னையிலும் சந்தித்துவிட்டேன் ஆனால் மாமிசம் சாப்பிடும் ஒரு சமண மதக்காரரையும் பார்த்ததில்லை . அவர்கள் வேண்டுமானால் இதை விவாதிக்கலாம் ;மஹாவீரர் 2600 ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னதை இன்றும் பின்பற்றும் ஒரே சமயம் ஜைன மதம்தான் .

அன்புடன்

லண்டன் சாமிநாதன்                                                          1-8-2025.

—subham—-

tags-மிருக பலி, நியாயமா?,   கேள்வி பதில், Human sacrifice, Indus Valley, Horse sacrifice.

Leave a comment

Leave a comment