ராமாயணத்தில் வரங்கள் (29) ஹேமாவுக்கு ஸ்வயம்பிரபா செய்த உதவி! (Post No.14,832)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,832

Date uploaded in London – 5 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் வரங்கள் (29)

ராமாயணத்தில் வரங்கள் (29) ஹேமாவுக்கு ஸ்வயம்பிரபா செய்த உதவி!

ச. நாகராஜன்.

கிஷ்கிந்தா காண்டத்தில் ஐம்பத்தோராவது ஸர்க்கமாக அமைவது ‘ஸ்வயம்பிரபை செய்த ஸத்காரம் என்ற ஸர்க்கமாகும்.

ஹனுமானைப் பார்த்து ஆச்சரியப்பட்ட ஸ்வயம்பிரபை யாரும் நுழைய முடியாத குகையில் நுழைந்திருக்கும் நீங்கள் எதற்காக இங்கு வந்தீர்கள் என்று கேட்கிறாள்.

முதலில் தன்னை யார் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும் ஸ்லோகங்கள் இவை: 

துஹிதா மேருசாவர்ணேஹம் தஸ்யா: ஸ்வயம்பிரபா |

இதம் ரக்ஷாமி பவனம் ஹேமாயா வானரோத்தம் ||

வானரோத்தம – வானர ச்ரேஷ்டரே!

அஹம் – நான்

மேருசாவர்ணே – மேருசாவர்ணியின்

ஸ்வயம்ப்ரபா – ஸ்வயம்பிரபை என்ற

துஹிதா – பெண்

தஸ்யா – இந்த

ஹேமாயா: – ஹேமையினுடைய

இதம் – இந்த

பவனம் – மாளிகையை

ரக்ஷாமி – காத்து வருகிறேன்

மம ப்ரியசஹி ஹேமா ந்ருத்தகீதா விஷாரதா |

தயா தத்தவரா சாஸ்மி பவனோத்தமம் ||

ந்ருத்தகீதா விஷாரதா – நடனம், கீதம் இவற்றில் வல்லவளான

ஹேமா – ஹேமை

மம – எனது

ப்ரியசஹி – உயிர்த்தோழி

தயா – அவளாலே

தத்தவரா அஸ்மி – கேட்டுக்கொள்ளப்பட்டவளாக ஆனேன்

ச – அதனால்

பவனோத்தமம் – அழகான (இந்த) மாளிகையை

ரக்ஷாமி – காத்துக் கொண்டிருக்கிறேன்

      கிஷ்கிந்தா காண்டம், 51வது ஸர்க்கம் ஸ்லோகங்கள் 16, 17 

மேருசாவர்ணியின் பெண்ணான ஸ்வயம் பிரபா தெய்வப் பெண்ணான ஹேமை கேட்டுக் கொண்டதற்கிணங்க அந்த குகையையும் அதில் உள்ள அழகிய மாளிகை உள்ளிட்டவற்றையும் காத்து வருகிறாள்.

இதைச் சொல்லி விட்டு ஹனுமானிடம் அவர் வந்த காரியம் பற்றிக் கேட்கிறாள் ஸ்வயம்ப்ரபா.

பிறகு நடக்கும் சுவையான சம்பவங்களை அடுத்து வரும் ஸர்க்கங்கள் விளக்குகின்றன.

**

Leave a comment

Leave a comment