Post No. 14,840
Date uploaded in London – 7 August 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
பெரும்பாணாற்றுப்படை
நீல் நிற உருவின் நெடியோன் கொப்பூழ்
நான்முக ஒருவர் பயந்த பல் இதழ்
தாமரை பொகுட்டின் காண்வர தோன்றி
பொருளுரை:
காஞ்சிமா நகரமானது நீலநிற உருவம் கொண்ட திருமால் படுத்திருப்பது போலவும், திரையனின் அரண்மனையானது திருமாலின் கொப்பூழில் தோன்றிய நான்முகன் அமர்ந்திருக்கும் தாமரையின் பொகுட்டு போலவும் அமைந்திருக்கும்.
****
பாம்பணையில் பள்ளி கொண்ட பெருமாளை– , நாராயணனை– சங்கத் தமிழ்ப்புலவர்களும் காளிதாசனும் போற்றிப் புகழ்கின்றனர் அந்த நாராயணனின் கால்களை லெட்சுமி பிடித்துவிட்டு உபசரிப்பதும் நாராயணனின் தொப்புள் கொடியிலிரூந்து பிரம்மா தோன்றுவதும் புலவர்களால் பாடப்படுகிறது. பரிபாடலில் மற்றும் முல்லைக் கலியில் வரும் திருமால் பாடல்களை படித்தால் பாகவத புராணக் கதைகளின் சுருக்கத்தைக் காணலாம்.
பரிபாடல் 4-ல் பல அவதாரச் செய்திகளும் பாற்கடலில் பள்ளிகொண்ட நாராயணனின் காட்சியும் காணப்படுகிறது
நரசிம்ம அவதாரம், வராக அவதாரம், கஜேந்திர மோட்சம் , விஷ்ணுவின் தோற்றம், அவருடைய பல ராமன், பரசுராமன் தோற்றம் எல்லாம் ஓரே பாடலில் வருகிறது. பாகவத புராணத்தையே சுருக்கித் தருகிறார் புலவர்
திருமால் அவரவர் மனத்தில் தோன்றும் உருவம் கொண்டுள்ளான். பிரகலாதனுக்கு இனியவனாகவும், அவன் தந்தை இரணியனுக்கு இன்னாதவனாகவும் நடந்துகொண்டான்.
திருமணி, அலையில்லாத கடல், பொழியும் மேகம் – மூன்றைப் போன்ற மெய்-நிறம் கொண்டவன் நீ.
இந்த மா-நிற உடம்புக்கு மாறுபட்ட, பொன்னிற உடை கொண்டவன். (பட்டாடை). உன்னைத் தாங்கிக்கொள்ளாத பகைவரை அழிக்கும் சக்கரத்தைக் கொண்டவன்.
பன்றி உருவம் கொண்டு இந்த உலகத்தைத் தூக்கினாய்.
யானை உருக்கொண்டு முதலைக்கு மோட்சம் அளித்த மால்
கருடச்சேவல் கொண்ட உயர்ந்த கொடியை உடையவனே! திருமால்
பனைக்கொடியை உடையவனே! பலராமன்
நாஞ்சில் என்னும் கலப்பைக்கொடியை உடையவனே! பரசுராமன்
யானைக்கொடியை உடையவனே! முதலைக்கு மோட்சம் தந்த யானை அவதாரம்
நஞ்சு கொண்டது பாம்பு. அந்தப் பாம்பின் உயிரை வாங்குவது கருடன். அந்தக் கருடன் உனக்குக் கொடி.
அந்தப் பாம்பு உன் முடிப்பக்கம் உள்ளது.
அந்தப் பாம்பே உனக்குத் தொடியாகவும் (கங்கணமாகவும்) உள்ளது.
அந்தத் தொடியில் பாம்பு தலைப்பக்கம் கொண்டுள்ளது.
பாம்பே உனக்கு அணிகலன்.
அதுவே உனக்குச் மெத்தை.
அதன் தலைப்பக்கம் உன் தலை.
துளசி உன் மாலை.
திருமகள்-மறு இருக்கும் மார்பு கொண்டவன். நீ
உனக்குள்ளிருந்து தோன்றியது தாமரை.
அந்தத் தாமரையே உன் கண்.
அந்தத் தாமரையே உன் திருவடி.
ஐந்து இருள் அற நீக்கி, நான்கினுள் துடைத்து, தம்
ஒன்று ஆற்றுப்படுத்த நின் ஆர்வலர் தொழுது ஏத்தி,
நின் புகழ் விரித்தனர்: …….
திருமணி, திரைபாடு அவிந்த முந்நீர்,
வரு மழை இருஞ் சூல் மூன்றும் புரையும் மா மெய்;
மாஅ மெய்யொடு முரணிய உடுக்கையை;
நோனார் உயிரொடு முரணிய நேமியை:
செயிர் தீர் செங் கட் செல்வ! நிற் புகழ 10
புகைந்த நெஞ்சின், புலர்ந்த சாந்தின்
பிருங்கலாதன் பலபல பிணி பட
வலந்துழி, மலர்ந்த நோய் கூர் கூம்பிய நடுக்கத்து
அலர்ந்த புகழோன், தாதை ஆகலின்
இகழ்வோன், இகழா நெஞ்சினனாக, நீ இகழா
நன்றா நட்ட அவன் நன் மார்பு முயங்கி,
ஒன்றா நட்டவன் உறு வரை மார்பின்
படிமதம் சாம்ப ஒதுங்கி,
இன்னல் இன்னரொடு இடி முரசு இயம்ப,
வெடி படா ஒடி தூண் தடியொடு,
தடி தடி பல பட வகிர் வாய்த்த உகிரினை;
****
சேவல் ஓங்கு உயர் கொடியோயே!
சேவல் ஓங்கு உயர் கொடி
நின் ஒன்று உயர் கொடி பனை;
நின் ஒன்று உயர் கொடி நாஞ்சில்;
நின் ஒன்று உயர் கொடி யானை; 40
நின் ஒன்றா உயர் கொடி ஒன்று இன்று:
……………..
பாம்பு சிறை தலையன;
……………….
நின்னில் தோன்றிய நிரை இதழ்த் தாமரை 60
அன்ன நாட்டத்து அளப்பரியவை;
நின்னின் சிறந்த நின் தாள் இணையவை;
நின்னில் சிறந்த நிறை கடவுளவை;
………………………………….
—-கடுவன் இளவெயினனார் பாட்டு
***
துளசி வரும் மேலும் சில இடங்கள் பதிற்று .31-7/9; பரி .13-59/60.
துளசி விஷ்ணுவின் தலையில் இருக்கும் l- பரி .4-59 ; பரி .13-29.
***
ஸ்ரீ வத்ச (திருமறுமார்ப)- (பெரும் . 29, பரி .1-38; பதிற்று 31-7; பரி .1-3/8; பரி -2-31; கலி .104-9
***
பிரம்மா , விஷ்ணுவின் தொப்புள்கொடியிலிருந்து தோன்றும் தாமரையில் தோன்றுதல்
பெரும் . வரிகள் 402-404. பரி 3-93/ 94 உள்ளது
***
தாமரை இதழ் போன்ற கண்கள்
பரி .2-53 , 1-6, 4-60/61; 15-49,.
தாமரைப் பாதங்கள் -பரி .13-46/47
பிறவிப்பிணியை அறுத்து முக்திதரும் பாதா ங்கள் -பரி .3-2;பரி .4-62
சங்கு சக்ர கதாதாரி- பரி .13-7/9. கலி .134-1/4
***
புள் கொடி –கருடக்கொடி– புறம்.56
***


God Narasimha appaering in Homa Fire
இவை அனைத்தும் காளிதாசனால் பாடப்பட்டவையே.
வராஹ அவதாரம் – ரகு 7-56
ருக்மிணி – மாள. 5-2
ஆயிரம் தலை ஆதிசேஷன் – ரகு .10-8; லெட்சுமி-10-9;
கெளஸ்துப மணி, கருட – ரகு 10-10;10-13; 10-62
நாராயண-10-63;
भोगिभोगासनासीनम् ददृशुस्तम् दिवौकसः।
तत्फणामण्डलोदर्चिर्मणिद्योतितविग्रहम्॥ १०-७
ஆயிரம் தலை ஆதிசேஷன்
bhogibhogāsanāsīnam dadṛśustam divaukasaḥ।
tatphaṇāmaṇḍalodarcirmaṇidyotitavigraham || 10-7
****
श्रियः पद्मनिषण्णायाः क्षौमान्तरितमेखले।
अङ्के निक्षिप्तचरणमास्तीर्णकरपल्लवे॥ १०-८
லட்சுமியின் மடியில் கால்கள் இருக்க அதை லெட்சுமி வருடி உபசரிக்கிறாள்
śriyaḥ padmaniṣaṇṇāyāḥ kṣaumāntaritamekhale।
aṅke nikṣiptacaraṇamāstīrṇakarapallave || 10-8
***
प्रबुद्धपुण्डरीकाक्षम् बालातपनिभाम्शुकम्।
दिवसम् शारदमिव प्रारम्भसुखदर्शनम्॥ १०-९
தாமரைக்கணகள்; பளபளக்கும் சூரியவண்ண ஆடை
prabuddhapuṇḍarīkākṣam bālātapanibhāmśukam।
divasam śāradamiva prārambhasukhadarśanam || 10-9
***
प्रभानुलिप्तश्रीवत्सम् लक्ष्मीविभ्रमदर्पणम्।
कौस्तुभाख्यमपाम् सारम् बिभ्राणम् बृहतोरसा॥ १०-१०
கெளஸ்துப மணி , மார்பில் ஸ்ரீவத்ச மரு
prabhānuliptaśrīvatsam lakṣmīvibhramadarpaṇam।
kaustubhākhyamapām sāram bibhrāṇam bṛhatorasā || 10-10
***
பத்தாவது சர்க்க கனவுக் காட்சியில் தசரத மன்னனின் மனைவியர் கண்ட கனவுகளில் விஷ்ணுவின் சின்னங்கள் அனைத்தையும் கண்டதை முந்தைய கட்டுரையில் கண்டோம்.
—subham—
Tags–காளிதாசன் காவியங்களில் விஷ்ணு ஆதி சேஷன் பிரம்மா !- Part 6