
Indra in Nepal
Post No. 14,851
Date uploaded in London – 10 August 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Part One
மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே.

மாயோன் மேய காடு உறை உலகமும் – (மாயவன்/Vishnu மேவிய காடுபொருந்திய உலகமும், சேயோன் மேய மைவரை உலகமும் – முருகவேள் skanda மேவிய மைவரை உலகமும், வேந்தன் மேயதீம்புனல் உலகமும் – இந்திரன் indra மேவிய தீம்புனல் உலகமும், வருணன் varunan மேய பெருமணல் உலகமும் – வருணன் மேவிய பெருமணல் உலகமும், முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என சொல்லிய முறையால் சொல்லவும் படும்- முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய முறையினானே சொல்லவும் படும்—தொல்காப்பியம்
ரிக்வேதத்தில் இந்திரனுக்குத்தான் அதிகத் துதிப்பாடல்கள் உள்ளன . தமிழின் பழைய நூலான தொல்காப்பியமும் இந்திரனையும் வருணனையும் தமிழ் மக்களின் வழிபடு தெய்வங்களாகச் சொல்கிறது; இது மாக்ஸ்முல்லர் கால்டுவெல் கும்பலுக்கு செமை அடி கொடுக்கிறது ; ஆரிய –திராவிட வாதம் பேசி இரண்டு இனத்தவரும் இந்தியாவுக்கு வெளியிலிருந்து வந்தவர்கள் என்று கால்டுவெல் மாக்ஸ்முல்லரும் பரப்பியதோடு ஆரியர் வேறு திராவிடர் வேறு என்று சாகும் வரை பிரசாரம் செய்தனர்; அந்த இரண்டு கும்பல்களைத் தொல்காப்பியர் குழிதோண்டிப் புதைத்துவிட்டார்! ஆனால் செத்த பாம்பை அடிக்கும் சில “வீரர்கள்” இன்றும் இருக்கத்தான் செய்கின்றனர்!!
தமிழ் நாட்டில் இந்திர விழா கொண்டாடப்பட்டது சங்க இலக்கிய நூல்களில் உள்ளது. ஒருவன் அடியோடு சாய்ந்தான் அல்லது விழுந்தான் என்பதற்கு வால்மீகி ராமாயணம் அடிக்கடி பயன்படுத்தும் உவமை இந்திர விழா தூண் சாய்க்கப்பட்டது போல என்பதாகும் ஏனெனில் அக்காலத்தில் நீண்ட நாள் நடந்த இந்திர விழா முடிந்த பின்னர் அந்த தூணை மக்கள் எல்லோரும் சேர்ந்து சாய்ப்பார்கள் . பிற்கால தமிழ், சம்ஸ்க்ருத இலக்கியங்களில் இந்த விழா பற்றியோ, தூண் பற்றியோ எதையும் காணமுடியாது .
இதிலிருந்து என்ன தெரிகிறது?
இந்திரன் மற்றும் இந்திர விழா பற்றிய நூல்கள் அனைத்தும் இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்னர் எழுதப்பட்டவை என்பது தெளிவாகிறது .
இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத்; ராஜ+ இந்திர! இன்றய இந்தியாவின் பிரதமரும் இந்திரனே! நர+ இந்திர மோடி= நரேந்திர மோடி ! இந்தியாவின் எந்த மாநில டெலிபோன் டைரக்டரி மட்டுமல்ல, ஆசிய நாடுகள் அத்தனையிலும் இந்திரன் பெயர் இருக்கும்! ஆங்கிலத்தில் இதை ஆண்ட்ரூ ANDREW என்பார்கள் தமிழ் சங்க இலக்கியத்தில் உள்ள ஆய்+ அண்டிரன் என்ற பெயரிலிருந்து ஆண்ட்ரூ வந்தது. ஆய் அண்டிரனின் உண்மைப் பெயர் அஜேந்திரன் !
ஆய் அண்டிரனை வரவேற்க இந்திர லோக முரசு ஒலிக்கத் துவங்கியது- புறம்.241
நிற்க! சங்க இலக்கியத்தை நோக்குவோம்.
துறக்கத்து அமரர் செல்வன்- பரி. 5-69
அமரர் செல்வன்-பரி. 5-51
வானத்து வளம்கெழு செல்வன் -பரி. 5-59
அருநிலை உயர் தெய்வத்து அணங்கு -பரி. 9-12
விண்ணோர் வேள்வி முதல்வன் -பரி. 5-30
வடபால் உயர்ந்தோங்கியுள்ள பெருமலையைக் காவல்புரிபவன் –பரி.9-1/3
நூறு வேள்வி செய்து வீரன் ஆனவன்- முருகு.155/6
ஆயிரம் கண்கள் உடையவன் – முருகு.155; , கலி.105-15; பரி.9-9
வஜ்ராயுதத்தைக் கையில் ஏந்தியவன் -புறம்241; கலி.105-15; பரி.18-30;
நெடியோன் -புறம்.241;
இந்திரர் அமிழ்தம் – புறம்.182
இந்திரன் வில் – பரி.18-39; புறம்.20; அகம்.84;192; பெரும்பா.292;
இந்திரன், பூசை; இவள் அகலிகை …. பரி.19-50/3
(திருப்பரங்குன்ற ஓவியத்தைக் கண்ட பட்டிகாட்டுப் பெண்ணுக்கு வான் கணவன் இந்திரன்-அகலிகை கதையைச் சொன்ன காட்சி; பூசை=பூனை
இந்திரவிழாவின் பூவன்ன –
புன்தலைப்பேடை வரிநிழல் அகலவும் – ஐங்குறு.62-1/2
பதிற்று .30-14;
அமிழ்தம் என்ற சொல்லும் மூன்று வித ஸ்பெல்லிங்க்குகளுடன் தமிழ்ச் சங்க நூல்களில் பயிலப்படுகின்ற்ன .

Indra in South East Asian Countries
திருமுருகாற்றுப்படை 155….
நூற்றுப்பத் தடுக்கிய நாட்டத்து நூறுபல்
வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்
தீரிரண் டேந்திய மருப்பி னெழினடைத்
தாழ்பெருந் தடக்கை யுயர்த்த யானை
எருத்த மேறிய திருக்கிளர் செல்வனு
160நாற்பெருந் தெய்வத்து நன்னகர் நிலைஇய
உலகங் காக்கு மொன்றுபுரி கொள்கைப்
பலர்புகழ் முவருந் தலைவ ராக
பொருள்
(155-159) (நூறைப் பத்தால் பெருக்கினால் வரும்) ஆயிரம் கண்களுடனும் நூற்றுக்கு மேற்பட்ட பல வேள்விகளே இயற்றி முடித்த—பகைவரை முன்னேறி அழித்த வெற்றிச் சிறப்புடனும் (விளங்கி ), நான்காக அமைந்த மருப்புகளையும் (தந்தங்களையும்) அழகிய நடையினையும் உடைய—தாழ்ந்து தொங்கும் பெரிய நீண்ட துதிக்கையைத் தூக்கி மேலே உயர்த்திய வெள்ளையானையின் பிடரியின் மேல் அமர்ந்து வரும் — திருமகளின் விளக்கம் பெற்ற செல்வனாகிய இந்திரனும்,
(Throughout South Asia, Indra’s Elephant is shown with many trunks and many tusks)

Indra in Laos stamps (Phra= Sri)
மூவர் வருகையின் காரணம்
(160-165) இந்திரன், நான்முகன். திருமால், உருத்திரன் என்னும் நான்கு பெரிய தெய்வங்களுள் (முருகனால் சிறைப்பட்டுக் கிடக்கும் நான்முகன் நீங்கலாக ). நல்ல திருப்பதிகள் நிலைபெற்றுள்ள உலகினைக் காக்கும் ஒப்பற்ற செயல் புரியும் கொள்கை கொண்ட —பலரும் புகழும் திருமால், உருத்கிரன், இந்திரன் ஆகிய மூவரும் தாம் தத்தம் தலைமையினைப் பெற வேண்டியும்………………
*****
இந்திரன் இடம்பெறாத தமிழ் நூல்களே இல்லை என்று சொல்லிவிடலாம். புறநானூற்றில் உண்டு. திருக்குறளில் உண்டு. ஐங்குறு நூற்றிலும் இருக்கிறது. தேவலோக அமிழ்தம், நிறைய இடங்களில் வருகிறது.
மிகவும் வியப்பான விஷயம்! பாபிலோனிய ஜில்காமேஷ் போன்றோர் உலக மியுசியங்களில் ஒளிந்து கொண்டுவிட்டனர். ஆனால் இந்திரனையோ இன்றும் பிராமணர்கள் முக்கால சந்தியாவந்தனத்தில் தினமும் வழிபடுகின்றனர். உலகம் முழுதும் உள்ள இந்துக் கோவில்களில் தினசரி பூஜைகளில் இந்திரனும் வருணனும் வழிபடப்படுகின்றனர். இந்திரன் பெயர் இல்லாத இனம் இந்தியாவில் எங்குமே இல்லை. இந்தியாவின் முதல் ஜனாதிபதியான ராஜேந்திர பிரசாத் முதல் தமிழ்நாட்டின் நாகேந்திரன், கண்ணாயிரம் வரை எல்லாம் இந்திரன் பெயர்கள்தான்.
இன்றும்கூட குச்சிப்புடி முதலிய நடனங்களில் மேடையில் இந்திரன் கொடி வைக்கப்படுகிறது. சிலப்பதிகார, மணிமேகலை புகழ் மாதவிக்குக் கொடுக்கப்பட்ட தலைக் கோல் இந்திரன் மகன் ஜயந்தனுடன் தொடர்புடையது.
நேபாளத்தில் இந்திர விழா
இன்றுவரை இந்திர விழாவை பழந்தமிழ்நாடு போலக் கொண்டாடும் நாடு நேபாளம். அதன் தலை நகரமான காத்மண்டுவில் ஆண்டுதோறும் அரசாங்கத் திருவிழாவாக நடைபெறுகிறது. தமிழ் நாடு போலவே கொடி ஏற்றி ஆடல் பாடலுடன் இந்திர தேவன் ஊர்வலத்துடன் விழா நடைபெறுகிறது.
தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா, பர்மாவில் ஏப்ரல் மாத புத்தாண்டு தினத்தில் நடைபெறும் நீர் விழாவும், இன்று இந்தியா முழுதும் நடை பெறும் ரக்ஷா பந்தனும் (கையில் சகோதரிகள் கட்டிவிடும் காப்பு) இந்திரன் தொடர்புடைய விழக்களே.
பொங்கலுக்கு முதல் நாளன்று தமிழர்கள் கொண்டாடும் போகிப் பண்டிகை இந்திர விழாவின் ஒரு பகுதியே. போகி என்பது இந்திரனின் பெயர்களில் ஒன்று.
****
வேதத்தில் எண்கள் முப்பது, நூறு, ஆயிரம் என்ற எண்களின் ஸம்ஸ்க்ருதச் சொற்களை இந்திரனைக் குறிக்கப் பயன்படுத்துவார்கள். ஏனெனில் அவன் 33 தேவர்களுக்குத் தலைவன்; நூறு அஸ்வமேத யாகங்களைச் செய்தவன்; ஆயிரம் கண்களை உடையவன். இதைத் தமிழிலும் காளிதாஸனிலும் காண்கிறோம்.
To be continued…………………….
Tags- காளிதாசன், காவியங்கள் இந்திரன், சங்கத் தமிழ் நூல்கள், ஒப்பீடு! – 1