நிசாசர மஹரிஷி ஸம்பாதிக்கு இறக்கைகள் மீண்டும் முளைக்க வரம் அருளியது! (Post No.14,888)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,888

Date uploaded in London – 21 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் வரங்கள் (31)

ராமாயணத்தில் வரங்கள் (31) நிசாசர மஹரிஷி ஸம்பாதிக்கு இறக்கைகள் மீண்டும் முளைக்க வரம் அருளியது!

ச. நாகராஜன்

கிஷ்கிந்தா காண்டத்தில்  அறுபத்தி மூன்றாவது ஸர்க்கமாக அமைவது ‘‘ஸம்பாதியின் இறக்கைகள் முளைத்தலும் வானரர்கள் புறப்படுதலும்’ என்ற ஸர்க்கமாகும்.

சீதாதேவியைத் தேடிச் சென்ற வீரர்கள் ஸம்பாதி என்ற கழுகரசனைச் சந்திக்கின்றனர். சூரியனால் இறகுகள் எரிக்கப்பட்டு கீழே விழுந்து கிடந்த அவர் தனது சரிதத்தை விஸ்தாரமாக அங்கதனுக்கு எடுத்துரைத்தார்.

நிசாசரர் என்ற முனிவர் ஸம்பாதியை அங்கேயே இருக்குமாறும் சீதாதேவியைத் தேடி வானரர்கள் அங்கு வரும் போது அவருக்கு மீண்டும் இறக்கைகள் முளைக்கும் என்றும் கூறுகிறார்.

சீதையை இராவணனன் ஆகாயமார்க்கத்தில் தூக்கிச் சென்ற விஷயத்தை ஸம்பாதி வானரர்களுக்குக் கூறினார்.

அவர் வானரர்களுடன் பேசிக் கொண்டிருந்த போதே அவரது சிறகுகள் மீண்டும் முளைத்தன.

அதைச் சொல்லும் ஸ்லோகங்கள் பின்வருமாறு:

தஸ்ய த்வேவம் ப்ரூவானஸ்ய ஸம்பாதேர்வானரை: ஸஹ |

உத்பேததுஸ்ததா பக்ஷௌ சமக்ஷம் வனசாரிணாம் ||

வானரை: – வானரர்களோடு

ஸஹ – கூட

ஏவம் – இப்படி

ப்ரூவானஸ்ய- சொல்லிக்கொண்டிருந்த

தஸ்ய – அந்த

ஸம்பாதே – ஸம்பாதிக்கு

ததா து – அப்பொழுதே

வனசாரிணாம் – வானரவீரர்களுடைய

சமக்ஷம் – எதிரிலேயே

பக்ஷௌ – இரண்டு இறக்கைகளும்

உத்பேதது – முளைத்து வளர்ந்தன

ஸ த்ருஷ்ட்வா ஸ்வாம் தனும் பக்ஷைருத்கதைரருணச்சதை: |

ப்ரஹர்ஷமதுலம் லேபே வானராம்ஷ்சேதமப்ரவீத் ||

அருணாச்சதை: – அருணோதயவர்ணமுள்ள

உத்கதை: – அப்போது தான் முளைத்திருக்கிற

பக்ஷை: – சிறகுகளோடு கூடிய

ஸ்வாம் – தனது

தனும் – சரீரத்தை

ஸ: – அவர்

த்ருஷ்ட்வா – கண்டு

அதுலம் – ஒப்பற்ற

ப்ரஹர்ஷ – சந்தோஷத்தை

லேபே – அடைந்தார்

வானரான் ச – வானரர்களைப் பார்த்து

இதம் – பின்வருமாறு

அப்ரவீத் – சொன்னார்

கிஷ்கிந்தா காண்டம், 63வது ஸர்க்கம் ஸ்லோகங்கள் 9, 10

தனது இறக்கைகளை அடைந்த ஸம்பாதி வானரர்களிடம் நீங்கள் சீதாதேவியை அடைவீர்கள் என்று கூறி விட்டு மேலே உயரப் பறந்தார்.

இந்த வரலாற்றில் நிசாசர மஹரிஷியினால் மீண்டும் இறக்கைகள் கிடைக்கும் என்ற வரத்தை ஸம்பாதி பெற்றதைக் காண்கிறோம்.

***

Leave a comment

Leave a comment