உடல்நலம் பேணுவதில் ஏஐயின் தாக்கம்! (Post No.14,893)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,893

Date uploaded in London – 23 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஜூலை 2025 ஹெல்த்கேர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

உடல்நலம் பேணுவதில் ஏஐயின் தாக்கம்! 

ச. நாகராஜன்

நாம் விரும்பியோ விரும்பாமலோ தொலைக்காட்சி நம் வீட்டில் புகுந்து விட்டது; நம்மை ஆக்கிரமித்துக் கொண்டது.

நாம் விரும்பியோ விரும்பாமலோ மொபைல் போன் நம் கையில் குடியேறி விட்டது; நம்மை ஆக்கிரமித்துக் கொண்டு விட்டது.

இதே போல யோசித்துப் பார்த்தால் அன்றாட வாழ்வில் பல்வேறு அம்சங்கள் நம்மைக் கேட்காமலேயே நம்முடன் சேர்ந்து கொண்டிருக்கின்றன.

இந்த வகையில் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ ஐ நம் வாழ்வில் எல்லாத் துறைகளிலும் புகுந்து விட்டது.

ஹெல்த்கேர் துறையை மட்டும் அது விட்டு விடுமா, என்ன? அதிலும் புகுந்து விட்டது!

ஏஐ என்பது கணினி மற்றும் மெஷின் மூலமாக மனித அறிவை அப்படியே உருவாக்கி சிக்கலான விஷயங்களைச் சுலபமாக உடல்நலம் பேணும் துறையில் முடித்து விடுகிறது.

நோய் பற்றிய ஆய்வு, நோயை இனம் கண்டவுடன் அதற்கான சிகிச்சை, சிகிச்சையில் சிறந்த சிகிச்சை எது, கேன்ஸர் போன்ற அபாயகரமான நோய்களிலிருந்து மீள்வது எப்படி உள்ளிட்ட அனைத்திற்கும் இப்போது நம்பகமான ஒரு வழியாக அமைகிறது ஏஐ வழி!

மெஷின் லேர்னிங் : ஏராளமான தரவுகளைக் கொண்டு மாடல்களை உருவாக்கி எந்த சிகிச்சை முறையை மேற்கொள்வது என்பதை இதனால் அறியலாம்.

டீப் லேர்னிங் : அதிகமான தரவுகள், பயிற்சி நேரம், மெஷின் லேர்னிங் மூலமாக பல புதிய வழிகளைக் காணல் – இதுவே டீப் லேர்னிங்!

நேச்சுரல் லாங்குவேஜ் ப்ராஸஸிங்: (என் எல் பி) மனிதன் பேசுகின்ற மொழியை அல்லது எழுத்தைப் புரிந்து கொள்வது தான் என் எல் பி.

ஏராளமான ஆவணங்களை, குறிப்புகளை, அறிக்கைகளை இது சரியாகப் புரிந்து கொள்ள வழி வகுக்கும்.

ரொபாடிக் ப்ராஸஸ் ஆடோமேஷன் (ஆர் பி ஏ) சிகிச்சையில் தானாகவே நிர்வாகம் மற்றும் சிகிச்சை வழிமுறையில் உதவுவது தான் ஆர் பி ஏ.

ஏஐ எப்படி உதவுகிறது?

ஏராளமான தரவுகளைக் கொண்டிருப்பதால் அவற்றை அலசி ஆராய்ந்து குறிப்பிட்ட மனிதருக்கு குறிப்பிட்ட வியாதிக்கு என்ன மருந்து என்பதைக் கண்டுபிடிக்கிறது.

தேவையான  மருந்தைத் தேர்ந்தெடுக்கிறது.

என்ன வியாதி என்பதை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து விடுவதால் வியாதி முற்றுவதோ நீண்ட கால சிகிச்சையோ ஏராளமான செலவோ, உடல் துன்பமோ இருக்க வாய்ப்பு குறைவாக ஆகிறது.

வரப்போவதைக் கணிக்கும் மாடல்களை அமைத்து இனி வியாதி எப்படி ஆகக் கூடும் என்பதை மாடல் மூலம் அறிந்து அதற்கேற்றபடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வழிவகை செய்கிறது.

சோதனை முடிவுகளையும் சிகிச்சை முன்னேற்றத்தையும் ஆராய்ந்து தெளிவுபடுத்தி முடிவைத் தெரிவிக்கிறது.

ஒவ்வொரு மனிதருக்கும் அவரது தனிப்பட்ட உடல்நிலைக்குத் தக்கபடி சிகிச்சைத் திட்டம் உருவாக்க ஏஐ வழி வகுக்கிறது.

எக்ஸ் ரே, எம் ஆர் ஐ, சி டி ஸ்கேன் ஆகியவை துல்லியமாகவும் விரைவாகவும் எடுக்கப்பட வழி செய்கிறது.

ஒரு நோயாளியின் பழைய நோய்க் குறிப்புகளை ஆராய்ந்து விரைவாக தற்போதையை நிலையைச் சுட்டிக் காட்டி இனி என்ன ஆகக் கூடும் என்பதைத் தெரிவிக்கிறது.

மாலிகுலர் ஸ்ட்ரக்சர் மற்றும் மருந்து திறன் ஆகியவற்றை ஆராய்ந்து மருத்துவ உதவியை அளிக்கிறது.

அறுவை சிகிச்சை தேவை என்றால் ரொபாட் உதவியுடன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. எடுத்துக்காட்டாகச் சொல்லப் போனால் டா வின்சி சர்ஜிகல் அமைப்பு, ஏஐ உதவியுடன் 2022ல் மட்டும் 15 லட்சம் அறுவை சிகிச்சையை உலகெங்குமுள்ள இடங்களில் மேற்கொண்டது. 20 சதவிகிதம் இரத்த இழப்பை அது தவிர்த்திருக்கிறது,

இது மட்டுமின்றி மனநல சிகிச்சையில் ஏஐ இனி முத்திரை பதிக்க இருக்கிறது. இதற்காக sentiment analysis, wearable data chatbot interactions மூலமாக ஒருவரின் மனநிலையையும் உணர்வுகளையு,ம் அது கண்காணிக்கிறது.

உணர்வுகள், மனம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் இதன் உதவி ஏராளமானோருக்கு உதவக் கூடும்.

அடுத்து தொடர்ந்து நீண்ட காலமாக அவதிப்படும் நோயாளிகளுக்கு நோயைச் சமாளிக்க உதவி செய்கிறது. எடுத்துக்காட்டாக டயபடீஸ், ஹைபர் டென்ஷன் ஆகியவற்றில் ஏஐயின் அருமையான உதவியைக் காணலாம்.

நோயாளியை நேரில் பார்க்க வேண்டிய அவசியம் இல்லாமல் இணைய வழியாகவே விவாதித்தல், கலந்துரையாடுதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். 50 லட்சம் பேர்கள் இப்படிப்பட்ட இணைய வழியை ஏற்கனவே மேற்கொண்டுள்ளனர்.

மோசடியைக் கண்டுபிடித்தல் : தவறான இன்ஷூரன்ஸ் தொகைக்கான கோரிக்கை, பில்களில் ஏற்படும் தவறுகள் ஆகியவற்றைக் கண்காணித்து மோசடிகளைத் தவிர்க்கிறது.

நோயாளிகளின் மரபணு சார்ந்த தரவுகளைச் சரியாக ஆராய உதவி செய்கிறது.

சிகிச்சைக்காக கட்டாயம் சோதனை மேற்கொள்ள வேண்டியவர்களை இனம் காண உதவுகிறது. அனைவரும் இனி எல்லா சோதனைகளையும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

ஆஸ்பத்திரிகளில் சென்று நெடுநேரம் உட்கார்ந்து அங்கிருக்கும் சூழ்நிலைகள் தரும் தொற்றுவியாதிகளைத் தொற்றிக் கொள்ளும் நிலை இனி இல்லை.

ரொபாட்களின் உதவியுடன் பிஸிகல் தெராபியை இனி மேற்கொள்ளலாம்.

தூரத்திலிருந்தே தொடர்ந்து ஒரு நோயாளியை இனி கண்காணிக்க முடியும்.

டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவத்தில் துணை நிலை ஊழியர்கள் ஆகிய அனைவருக்கும் இனி பயிற்சியை ஏஐ மூலமாகத் தர முடியும்.

மருத்துவமனைகளில் மருந்து ஸ்டாக் இல்லை என்ற நிலை ஏற்படாமல் தேவையை துல்லியமாக நிர்ணயித்து தேவையான அளவு மருந்துகளை ஸ்டாக் செய்ய முடியும்.

வயதானவர்களைக் கண்காணிப்பதன் மூலம் அவர்கள் தடுமாறி விழுவது உள்ளிட்டவற்றைத் தடுப்பதோடு அவசரகால நிலையை உணர்ந்து உடனடி உதவியைச் செய்ய முடியும்.

எல்லா பரிந்துரைகள் பற்றிய பேச்சுக்கள், டாக்டர் – நோயாளி உரையாடல் ஆகிய அனைத்தும் பதிவு செய்யப்படும்.

சமூகத்தில் பரவக்கூடிய அபாய வியாதிகளைப் பற்றி முன்பாகவே உணர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இனி சாத்தியமாகும்.

ஆக ஏஐ நம் வாழ்வில் மருத்துவத் துறையில் மட்டும் இப்படிப் பல்வேறு வழிகளில் உதவ இருக்கிறது.

இதை மக்கள் வரவேற்று அங்கீகரித்து விட்டார்கள் என்றே சொல்லலாம்! குறைகள் ஏஐயில் உண்டு; என்றாலும் அவை நீக்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதால் பயமில்லை!

***

Leave a comment

Leave a comment