காளிதாசன் நூல்களிலும் சங்க இலக்கியத்திலும் சுராங்கனி, அசுரர்கள், அணங்கு –3 (Post.14,924)

சுராங்கனி சுராங்கனி சுராங்கனிகா மாலு கெனவா

Written by London Swaminathan

Post No. 14,924

Date uploaded in London –  31 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are takn from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 மாலு கெனவா= shame on you ;சுராங்கனி = apsaras; divine beauty!

சுராங்கனி சுராங்கனி சுராங்கனிகா மாலு கெனவா

Part 3

அந்தக — குமார  -13-7;14-1, 8;15-1, 50;17-40;

ஜம்ப —- குமார -13-33;15-3;

தாரக — குமார 12-39;,44;13-13,46;14-1;155;17-16,54

(எட்டு சர்க்கங்களுக்கு மேலுள்ள குமார சம்பவ சர்க்கங்கள் பிற்காலத்தில் வேறு புலவர்களால் சேர்க்கப்பட்டது என்பது அறிஞர்களின் கூற்று . ஆயினும் நான் மேலே கொடுத்துள்ளேன்.)

Sura/Deva+ Aaaranangu/beauty

அணங்கு , நங்கை, சுராங்கனி (தேவ லோக அழகி, நங்கை)

சுர + ஆரணங்கு= சுராங்கனி

அணங்கே விலங்கே கள்வர் தம் இறை என

பிணங்கல் சாலா அச்சம் நான்கே (தொல்காப்பியம் 1202)

உரை

சூர் அர மகளிர் ஆரணங்கே (சுராங்கனி )- யாப்பருங்கல விருத்தி உரை மேற்கோள்

***

अमुम्सहासप्रहितेक्षणानि

व्याजार्धसंदर्शितमेखलानि।

नालम्विकर्तुम्जनितेन्द्रशङ्कम्

सुराङ्गनाविभ्रमचेष्टितानि॥ १३-४२ ரகுவம்சம்

சுதீக்க்ஷ்ண முனிவரின்  தவத்தைக்  கலைக்க  இந்திரன்  சுராங்கணாக்களை  அனுப்பினான். அவர்கள் புண் சிரிப்புடன் பார்த்தனர் இடையில் உள்ள மேகலைகள் நழுவுவது போல பாவனை செய்து இடையைக்காட்டினர் அப்படியும் அந்த சுராங்கணாக்கள் / அணங்குகள் முனிவரின் தவத்தை கலைக்க முடியவில்லை . 

amumsahāsaprahitekṣaṇāni

vyājārdhasaṁdarśitamekhalāni |

nālamvikartumjanitendraśaṅkam

surāṅganāvibhramaceṣṭitāni || 13-42

*****

चरतः किल दुश्चरम् तपस्तृणबिन्दोः परिशङ्कितः पुरा|

प्रजिघाय समाधिभेदिनीम् हरिरस्मै हरिणीम् सुराङ्गनाम्॥ ८-७९

முன்னொரு காலத்தில் த்ருணபிந்து என்ற முனிவர் செய்தற்கரிய தவத்தைச் செய்தார். முனிவரின்  தவத்தைக்  கலைக்க  இந்திரன்  ஹரிணீம் என்ற சுராங்கணாவை அனுப்பினான்.

carataḥ kila duścaram tapastṛṇabindoḥ pariśaṅkitaḥ purā|

prajighāya samādhibhedinīm harirasmai hariīm surāganām || 8-79 raghuvamsam

***

அணங்கு என்ற சொல் சங்க இலக்கியத்தில் எண்ணற்று இடங்களில் வருகிறது கடல்மலைநீர் நிலைகள்இசைக்கருவிகள் முதலியவற்றில் வருத்தத்தைத் தரக்கூடிய அணங்குகள் வசிப்பதாக சங்கத் தமிழர்கள் நம்பினார்கள் . இவர்களை தேவ லோக நங்கைகளுடன்தான் ஒப்பிட முடியும்

மதுரை மருதை ஆவது போல குதிரை குருதை ஆவது போல அங்கணா, அணங்கு ஆகும்

அங்க என்பது நங்கை, அணங்கு என்றும்  மாறி இருக்கலாம்

எடுத்துக்கட்டாக சுரா= தேவலோக ;அங்கணி = அழகி= சுரா ங்கணி என்று காளிதாசரும் சிங்கள மக்களும் பயன்படுத்துகின்றனர். 

***

பாட்டு

சுராங்கனி சுராங்கனி சுராங்கனிகா மாலு கெனவா

சுராங்கனி

சுராங்கனி சுராங்கனி சுராங்கனிகா மாலு கெனவா

மாலு மாலு சுராங்கனிகா மாலு கெனவா

சுராங்கனி என்றால் தேவ லோக அப்சரஸ் போன்று அழகுடைய பெண்; .இதைத் தமிழில் அர மகளிர் அல்லது சூரர மகளிர் என்று பயன்படுத்தியுள்ளனர் காளிதாசன் அப்படியே சுராங்கனி என்று பயன்படுத்தியுள்ளான்.

அவுணர் – KURU-1, THIRU 59;PATHI 11-4; PARI 5-7; 8-8; PURAM 174,; MADU 590; PARI 3-56;  KALI 2-3

அரக்கர் –புறம் 378-19

அரமகளிர்- AINK255-2; 418-3;191-4; 204-2;

KALI-40-23;

THIRU.41;117;

KURU.53-7

KURIN.197;

AKAM.32-7;162-25;342-12;

MALAI-190, 294

வானவ  மகளிர் – மது .582

ராவணன் – KALI 38-1/5;

 முப்புரம்  எரித்தது  – கலி 150-1;கலி .2-1/8;பரி .5-22/7;கலி .38-1;புறம் .55-1/4;பரி .திரட்டு  1-75/8;

***

கின்னரமுரலு மணங்குடைச் சாரல் -பெரு 494

இந்த வரிக்குப் பொருள் எழுதிய உ வே சா சொல்லுவதாவது ,

இனிய காலத்திலே கின்னரம் என்னும் பறவைகள் பாடும்  தெய்வங்களையுடைய சாரலிடத்து ………………..

கின்னர மிதுனங்கள் பாராய் – என்ற கம்பராமாயண சித்திரகூடப் படல பாடலையும்  உ வே சா எடுத்துக்காட்டுகிறார்

கின்னரர்கள்  = ஆகாயத்தில் பாடும் தேவர்கள்

****

செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த

செங்கோ லம்பிற் செங்கோட்டி யானைக்

கழல்தொடிச் சேஎய் குன்றம்

குருதிப் பூவின் குலைக்காந் தட்டே.=  குறுந்தொகை 1

அவுணர் = அரக்கர்

போர்க்களம் இரத்தத்தால் சிவக்கும்படி அசுரர்களைக் கொன்று அழித்த சிவந்த திரண்ட அம்பையும், சிவந்த கொம்புகளை உடைய யானையையும்,  வீரவளையலையும் உடைய முருகனுக்குரிய இம்மலையானது இரத்தம்போல் சிவந்த காந்தட்பூக்களின் குலைகளை உடையது..

***

எம்மணங் கினவே மகிழ்ந முன்றில்
நனைமுதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல்
வேலன் புனைந்த வெறியயர் களந்தொறும்
செந்நெல் வான்பொரி சிதறி யன்ன
எக்கர் நண்ணிய எம்மூர் வியன்துறை
நேரிறை முன்கை பற்றிச்
சூரர மகளிரோ டுற்ற சூளே. 

அணங்குதல் = வருத்துதல்;  சூரரமகளிர் /சுராங்கனி = தெய்வமகளிர்

****

சங்க நூல்களில் அணங்கு

கடவுள் என்ற பொருளில் 29  இடங்கள்

தெய்வ ப்பெண்கள் -2  இடங்கள்

வருத்தும் தேவிகள் – 3  இடங்கள்

பெண்ணின் மார்பகத்தில் அணங்கு  –5 இடங்கள்

வீடுகளில் வசிக்கும் அணங்கு  –3 இடங்கள்

யாழில் , கடம்ப மரத்தில் ஒவ்வொரு இடம்

யானைத் தந்தத்தில் 2  இ டங்கள்

நீர்நிலைகளில்  – 12  இ டங்கள்

மஹாபாரத்திலும் நீர் நிலையில் இருந்த பேய் யுதிஷ்டிரனிடம் கேட்ட கேள்வி யக்ஷப்ரச்னம் என்ற பெயரில் உலகப் புகழ்பெற்ற கேள்வி- பதில் சம்பவமாக வந்துள்ளது

முருகன் என்ற கடவுளாக பெண்களுக்குத் தொல்லை கொடுத்த அணங்கு  – 6  இடங்கள்

இதை காளிதாசனும் சொல்கிறான்

சங்க நூல்களில் முருகன் என்னும் அணங்கு :–

நற்றிணை – 47-8; 376-10; 386-6; புறம் .299-6; கலி .52-10; முறுக்கு -289

மொத்தம் முப்பது இடங்களில் வருத்தும் / துன்பம் தரும் தேவதையாக  வருகிறது

காதலி ஒரு அணங்காக வருகிறாள் – பரி  12-57

****

MY OLD ARTICLES: –

அரக்கர்கள்,அசுரர்கள் யார்?, Research paper written by London Swaminathan, Research article No.1395; Dated 7th November 2014

இந்துக்களின் 18 பிரிவுகள் : பதினெண் கணங்கள், ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1399; தேதி 9 நவம்பர், 2014.

அசுரர்கள், அரக்கர்கள் அகராதி, ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1365; தேதி அக்டோபர் 23, 2014.

அரக்கர்கள் யார்? கம்பன் தரும் உண்மைத் தகவல்! (Post No.3066) 16 -8-2016

அரக்கர்கள்,அசுரர்கள் யார்? (நவம்பர் 7, 2014)
அசுரர்கள், அரக்கர்கள் அகராதி (அக்டோபர் 23, 2014)
திராவிடர்கள் யார்?
அகத்தியரை நியூசிலாந்து மக்கள் வணங்குவது ஏன்?

–subham—

சுராங்கனி, காளிதாசன், சிங்கள பாட்டு, அணங்கு , அவுணர், அரக்கர், சங்க நூல்களில் அணங்கு

Leave a comment

Leave a comment