ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல் (Post No.14956)

Written by London Swaminathan

Post No. 14,956

Date uploaded in London –  8 September 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த வாசித்து வழங்கும் செய்தி மடல்.

அனைவருக்கும் வணக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் மாதம் ஏழாம்  தேதி 2025-ம் ஆண்டு

****

இன்று சந்திர கிரஹணம் இந்தியாவிலும் உலகின் பெரும்பகுதியிலும் தெரியும். தமிழ்நாட்டிலும் பிற மாநிலங்கிளிலும் கிரஹண காலத்தில் கோவிலைத் தற்காலிகமாக மூடி விடுவார்கள் சில இடங்களில் சந்நிதிகளை மட்டும் மூடுவார்கள்ஆகையால் இன்று ஞாயிற்றுக்கிழமை கிரஹண காலத்தில் கோவிலுக்குச் செல்வதானால் முன்கூட்டி விசாரித்துவிட்டுச் செல்லவும் .

கிரஹண காலத்தில் பிரார்த்தனை செய்வதுமந்திரங்களை ஜபிப்பது பல மடங்கு பலன்களைத் தரும் என்பது இந்துக்களின் நம்பிக்கை . வீட்டிலேயே இதைச் செய்யலாம் .

***

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சொத்து மீட்பு வழக்கு : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

 மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சொத்து மீட்பு தொடர்பான வழக்கில் தமிழக அரசு விரிவான பதில் மனுதாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை  கிளை உத்தரவிட்டுள்ளது.

மீனாட்சி அம்மன் கோயில் சொத்து மற்றும் அதன் உப கோயில்களின் சொத்துகளை மீட்டு பாதுகாக்கவும், கோயில் புதுப்பிப்பு பணிகளை முடித்து விரைவாகக் கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிடக் கோரியும் திருத்தொண்டர் அறக்கட்டளையின் அறங்காவலர் ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரை  கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், மீனாட்சி அம்மன் கோயில் சொத்துக்களை மீட்க 2021ஆம் ஆண்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் எடுக்கப்பட்ட நடவடிக்கைக் குறித்து விரிவான அறிக்கைத் தாக்கல செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

***

ஒணம் பண்டிகை கொண்டாட்டங்கள்

மலையாள மொழி பேசும் மக்கள் இருக்கும் அனைத்துப் பகுதிகளிலும் இந்த பண்டிகைக் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதே போன்று தமிழகக் கேரளா எல்லைப் பகுதியான கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளிலும் அத்தம் நட்சத்திரம் முதலே கொண்டாட்டம் களைகட்டியது. அத்தப்பூ கோலப் போட்டி, ஊஞ்சல் ஆட்டம், உறியடி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் உற்சாகமாக நடைபெறறன. தொடர்ந்து அறுசுவை உணவான ஓணம் சத்யா உணவை அனைவரும் ருசித்து உண்டனர் .

அசுர அரசனான மகாபலி மன்னன் பெரிய யாகம் ஒன்றுநடத்தினான்.அந்த யாகம் வெற்றிகரமாக நடத்தினால் இந்திரலோகமே அவனது வசமாகும்.இதனால் கலக்கம் அடைந்த தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர். தேவர்களை காப்பதற்காக மூன்று அடி உயரமான வாமன வடிவம் எடுத்து மகாவிஷ்ணு யாகம் நடக்கும் இடத்திற்கு சென்றார். மூன்று அடி நிலம் வேண்டும் என்ற வரம் கேட்ட வாமனருக்கு மகாபலி மன்னன் கமண்டலத்தில் உள்ள தீர்த்தத்தை வாமனரின் கைகளில் விட்டதும் விண்ணுக்கும், மண்ணுக்கும் ஆக திரு விக்ரமனாக உருவெடுத்த மகாவிஷ்ணு -முதல் அடி வானத்தை,இரண்டாவது அடி பூமியையும் அளந்தார். மூன்றாவது அடிக்கு இடம் இல்லாததால் தன்னுடைய தலைமை காட்டிய மகாபலி தலை மீது கால் வைத்து அவரை பாதாள லோகத்திற்கு அனுப்பினார் ஆண்டுக்கு ஒரு முறை தன்னுடைய மக்களை காண பூமிக்கு வரவும் மகாபலிக்கு வரம் அளித்தார். மகாவிஷ்ணுவின் வரத்தின் படி ஆண்டுக்கு ஒரு முறை தனது மக்களை காண மகாபலி பூமிக்கு வரும் ஆவணி மாத திருவோண நட்சத்திர தினமே ஓணம் பண்டிகையாக கேரள மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

ஓணம் பண்டிகை பத்து நாட்கள் கொண்டாட்டமாக இந்த ஆண்டு 2025 ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 5 ஆம் தேதி திருவோண நட்சத்திரம் நாள் வரை கொண்டாடப்பட்டது.

பத்து நாட்கள் நடைபெறும் பண்டிகையில் 64 வகையான ஓணம் சத்தியா விருந்து, படகு போட்டிகள்,வண்ண வண்ண அழகான மலர்களால் கோலமிட்டு மிக பிரம்மாண்டமாக ஓணம் கொண்டாடப்படுவது வழக்கம்.

**********************************

தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நுாலகத்தின் 5 ஆண்டு நிதி நிலை அறிக்கை தேவைஉயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை : தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நுாலகத்தை மாதிரி நுாலகமாக வகைப்படுத்த தாக்கலான வழக்கில் அதன் 5 ஆண்டு கால நிதி நிலை அறிக்கை, ஆண்டறிக்கை, அனுமதிக்கப்பட்ட, காலியாக உள்ள பணியிட விபரங்களை அரசு தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

சென்னை பிரபாகரன் தாக்கல் செய்த பொதுநல மனு: தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நுாலகம் ஆசியாவின் பழமையான நுாலகங்களில் ஒன்று. இது 16 ம் நுாற்றாண்டில் தஞ்சாவூர் நாயக்க மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்டது. பின் மராட்டிய மன்னர்களால் குறிப்பாக இரண்டாம் சரபோஜி மன்னரால் (1798-1832) மேம்படுத்தப்பட்டது.

தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, உருது, மராத்தியில் 60 ஆயிரம் ஓலைச்சுவடிகள் உள்ளன. இவை இந்தியாவின் அறிவுசார் மற்றும் கலாசார பாரம்பரிய பங்களிப்புகள். ரூ.1.65 கோடியில் ஓலைச்சுவடிகள், புத்தகங்களை டிஜிட்டல் மயமாக்குதல், சமஸ்கிருத புத்தகங்கள் மொழிபெயர்ப்பு, ஓவியங்களை பாதுகாக்க மற்றும் நுாலகத்தை சீரமைக்க அரசு 2012 ல் திட்டமிட்டது. இதை முழுமையாக செயல்படுத்தவில்லை. அலுவலர் பணியிடங்களை நிரப்பவில்லை. உள்கட்டமைப்பை மேம்படுத்தவில்லை. இதனால் அரிய ஓலைச்சுவடிகள், ஆவணங்கள் சேதமடைகின்றன.

மத்திய கலாசாரத்துறை தேசிய நுாலகங்கள் இயக்கத்தை 2014 ல் துவக்கியது. இதன்படி தேசிய மெய்நிகர் நுாலகம் உருவாக்குதல், பின்தங்கிய மாவட்டங்களில் நுாலகங்களை மேம்படுத்துதல், நெட்வொர்க் இணைப்பு வழங்கும் நோக்கில் ரூ. 400 கோடி ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் சரஸ்வதி மகால் நுாலகம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் உள்கட்டமைப்பை மேம்படுத்த நிதி ஒதுக்காமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

தேசிய நுாலகங்கள் இயக்கத்தின் கீழ் சரஸ்வதி மகால் நுாலகத்தை மாதிரி நுாலகமாக வகைப்படுத்தி, டிஜிட்டல் மயமாக்கி மேம்படுத்த நிதி ஒதுக்க வலியுறுத்தி மத்திய கலாசாரத்துறை செயலர், தமிழக தலைமைச் செயலருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் நிரஞ்சன் எஸ்.குமார் ஆஜரானார்.

தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அஜ்மல்கான்: இந்நுாலகத்தை வரலாறு மற்றும் கலாசார அடையாள முக்கியத்துவம் வாய்ந்த இடமாக ஆக.,1 ல் அரசு அறிவித்துள்ளது.

தற்குரிய செலவு, பராமரிப்பிற்கான நிதியை அரசு வழங்கும். தேசிய நுாலகங்கள் இயக்கத்தின் கீழ் மாதிரி நுாலகமாக மாற்ற வேண்டிய அவசியமில்லை என்றார்.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

நுாலகத்தின் 5 ஆண்டுகால நிதி நிலை அறிக்கை, ஆண்டறிக்கை, அனுமதிக்கப்பட்ட மற்றும் காலியாக உள்ள பணியிட விபரங்களை அரசு தரப்பில் செப்., 16 ல் தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.

*****

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம்!

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம் செய்தார்.

இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வருகை தந்தார். அப்போது அவருக்கு கோயில் நிர்வாகத்தினர், பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். தொடர்ந்து கோயிலுக்குள் சென்ற திரௌபதி முர்மு, ஆண்டாள் யானைக்கு பழங்கள் வழங்கி ஆசி பெற்றார்.

இதையடுத்து மூலவர் சன்னதிக்கு சென்ற குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, ரங்கநாதரை மனமுருகி வழிபட்டார். குடியரசு தலைவர் வருகையை ஒட்டி கோயிலில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதையடுத்து டெல்லி புறப்பட்ட திரௌபதி முர்முவை காண, திருச்சி கொள்ளிடம் பஞ்சக்கரை அருகே ஏராளமான மக்கள் காத்திருந்தனர். அப்போது அவர்களை கண்ட திரௌபதி முர்மு காரில் இருந்து இறங்கிச் சென்று, நலம் விசாரித்தார். மேலும் தனது பாதுகாப்பு அதிகாரிகளிடம் அங்கிருந்த குழந்தைகளுக்கு மிட்டாய் வழங்குமாறு அறிவுறுத்தினார்.

*****

செப்டமபர் 20 பம்பையில்  ஐயப்ப சங்கமம்

ஐயப்பன் மாநாட்டுக்கு சர்ச்சைக்குரிய பெண்ணுக்கு அழைப்பா? அமைச்சர் கொடுத்த விளக்கம்

இந்தக் கூட்டம் பெரும் சர்ச்சைக்குளாகி இருகிறது கடவுள் நம்பிக்கையில்லாத , இந்து விரோத  மார்க்ஸீய, திராவிடக் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதால் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன

திருவனந்தபுரம்: உலக ஐயப்பன் சங்கமம் மாநாட்டுக்கு சர்ச்சைக்குரிய பெண்ணாக பார்க்கப்படும் பிந்து அம்மணி க்கு அழைப்பு விடுக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தேவசம் போர்டு அமைச்சர் வாசவன் விளக்கம் அளித்துள்ளார்.

கேரளாவின் பம்பையில் உலக அய்யப்ப பக்தர்கள் சங்கமம் நிகழ்ச்சி நடக்கிறது. இந்நிகழ்ச்சியை கேரள முதல்வர் பினராயி விஜயன் துவங்கி வைக்கிறார். ‘இந்த விழாவில் பங்கேற்க அண்டை மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள் உள்பட பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.,

2019ம் ஆண்டு சபரிமலைக்கு அத்துமீறி நுழைந்த பிந்து அம்மணி என்ற பெண்ணும், உலக ஐயப்பன் சங்கமம் மாநாட்டில் பங்கேற்க அனுமதிக்குமாறு கேரள அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இது குறித்து தேவசம் போர்டு அமைச்சர் வாசவன் கூறுகையில், ‘மாநில அரசுடன் இணைந்து திருவனந்தபுரம் தேவசம் போர்டு ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சியில் அவரை (பிந்து அம்மணி) அனுமதிக்க வேண்டிய அவசியமில்லை. எந்தவொரு வகையிலும் அவர் ஐயப்பா சங்கமத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்,’ என்றார்.

****

நிலச்சரிவு: வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை 9-ம் நாளாக நிறுத்தம்

காஷ்மீரில் மீண்​டும் நிலச்​சரிவு ஏற்​பட்​ட​தால் மாதா வைஷ்ணவி தேவி கோயில் யாத்​திரை 9-வது நாளாக நேற்​றும் நிறுத்​தப்​பட்​டது. ஜம்மு காஷ்மீரில் கடந்த சில வாரங்​களாக கனமழை பெய்து வரு​கிறது.

இதனால் ஆறுகளில் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டுள்​ளதுடன் மலைப் பகு​தி​களில் நிலச்​சரிவு ஏற்​பட்​டுள்​ளது. ரியாசி மாவட்​டத்​தில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி கோயிலுக்கு செல்​லும் பாதை​யில் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி நிலச்​சரிவு ஏற்​பட்​டது. இதில் 34 பக்தர்கள் உயி​ரிழந்​தனர். 20 பேர் காயமடைந்​தனர். இதையடுத்து வைஷ்ணவி தேவி கோயிலுக்​கான யாத்​திரை தற்​காலிக​மாக நிறுத்​தப்​பட்​டது.

இடி​பாடு​களை அகற்​றும் பணி நடை​பெற்று வரு​கிறது. இதனிடையே, காஷ்மீரில் தொடர்ந்து கனமழை பெய்து வரு​கிறது.

எனினும், நிலச்​சரிவு ஏற்​பட்​ட​போது பக்​தர்​கள் யாரும் இல்​லாத​தால் உயி​ரிழப்பு எது​வும் ஏற்​பட​வில்​லை. அதே​நேரம், கோயி​லில் உள்ள பூஜாரிகள் தொடர்ந்து தின​மும் பூஜை செய்​து வரு​கின்​றனர்​.

****

திருப்பதி கோவிலுக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை

திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் பிராணதான அறக்கட்டளைக்கு கோடிக்கணக்கில் பணம் சேர்ந்து வருகிறது .

உலகிலேயே பணக்காரக்கடவுள் என்று பெயர் பெற்ற திருப்பதி வெங்கடாசலபதி கோவில் ஏழை மக்களுக்கு சேவை செய்ய  பல அறக்கட்டளைகளை  நடத்திவருகிற்து சில தினங்களுக்கு முன்னர் ஒரு கல்வி நிறுவனத்தைச் சேர்ந்தவர்  ஒரு கோடியே பதினோரு லட்சம் ரூபாயை பிராணதான அறக்கட்டளைக்கு அளித்தார் . வணிகர் பி.வி ரவிக்குமாரும் கோடிக்கணக்கில் அளித்தார். ஜனவரி மாதம் சென்னையைச் சேர்ந்த வர்த்தமான ஜெயின், ஐந்து கோடிக்கும் மேலாக நன்கொடை அளித்தது குறிப்பிடத்தக்கது ;இது ஏழை மக்களின் மருத்துவ வசதி மற்றும் பசுக்களை பராமரிக்கும் பணிகளுக்குச் செலவிடப்படுகிறது.

கூகுள் நிறுவன துணைத்தலைவர் தோட்டா சந்திரசேகர் சமீபத்தில் திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் பிராணதான அறக்கட்டளைக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கினார்.

****

உலக அரசியலில் கோலோச்சும் இந்திய வம்சாவளியினர்

புதுடில்லி: இந்திய வம்சாவளியை சேர்ந்த 261 பேர் பல்வேறு நாடுகளில் மக்கள் பிரதிநிதிகளாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

இது தொடர்பாக ராஜ்யசபா எம்பி சாந்தம் சிங் சாந்துவுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் பலர், வெளிநாடுகளில் அரசியல் நிர்வாகம், சர்வதேச அமைப்புகளில் முக்கிய பதவி வகித்து வருகின்றனர்.

உலகில் 204 நாடுகளில் 3.43 கோடி இந்தியர்கள் வசித்து வருகின்றனர். பாகிஸ்தான், கியூபா மற்றும் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள சான் மரினோவில் மட்டும் எந்த இந்தியர்களும் இல்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இதில் மக்கள் பிரதிநிதிகளாக தேர்வு செய்யப்பட்ட இந்தியர்கள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியல்

மொரிஷியஸ் -45

கயானா -33

பிரிட்டன் 31

பிரான்ஸ் -24

கனடா -22

சூரினாம் -21

டிரினிடாட் & டொபாகோ – 18

மலேஷியா, பிஜி -தலா 18

அமெரிக்கா – 6 இந்திய வம்சாவளியினர் மக்கள் பிரதிநிதிகளாக தேர்வாகி உள்ளனர்.

உலகளவில் அதிக இந்தியர்கள் வசிக்கும் 10 நாடுகள்!

அமெரிக்கா,ஐக்கிய அரபு எமீரேட், கனடா, மலேஷியா

சவுதி அரேபியா,இலங்கை,தென் ஆப்ரிக்கா  , பிரிட்டன

ஆஸ்திரேலியா ஆகும்.

****

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த   வாசித்த செய்தி மடல் இது.

அடுத்த ஒளிபரப்பு செப்டம்பர் மாதம் 14–ம் தேதி ஞாயிற்றுக்கிழமை லண்டன் நேரம் பகல் ஒரு  மணிக்கும்,

இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் .

வணக்கம்.

—SUBHAM—-

Tags – World Hindu News, 7 -9-2025, Gnanamayam, Broadcast, Vaishnavi

Leave a comment

Leave a comment