
Post No. 14,973
Date uploaded in London – 12 September 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx

பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை தொல்காப்பியத்திலுள்ள ஸம்ஸ்க்ருதச் சொற்களின் பட்டியலைக் கொடுத்துள்ளார் ; ஒவ்வொரு சொல்லும் ஏராளமான இடங்களில் கையாளப்படுகின்றன. குறிப்பாக காமம் , உவமம் என்னும் சொற்களைக் கூறலாம் . மேலும் நிறைய சொற்கள் எந்த மொழி என்றே கண்டுபிடிக்க முடியவில்லை உதாரணத்துக்கு நிம்பிரி (பொறாமை) என்னும் ஒரு சொல்லைக் கூறலாம் இதிலுள்ள நிம்- சம்ஸ்க்ருத மொழியில் மட்டுமே உள்ளது . யாரும் விளக்க முடியாத இந்த ஒலிக்கு நிம் = இல்லை ; பிரி = பிரியம் என்று நானாக யூகம் செய்கிறேன்.
இதே போல ஹார்ட்/HEART என்னும் ஆங்கிலச் சொல் ஹ்ருத் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லில் இருந்து சென்று தமிழிலும் ஹ்ருதயம் என்று ஆனது ; இப்படிப்பட்ட முக்கியமான சொல் இல்லாமல் இருக்க முடியாது என்று நினைத்து நானாக குருத்து என்ற சொல்லைக் கண்டுபிடித்தேன். இருதயம் குருத்து வடிவத்தில் இருப்பதாலும் குருதி என்ற தமிழ்ச் சொல்லுக்கு ரத்தம் என்ற பொருள் இருப்பதாலும் ஊகித்தேன் . இவை எல்லாம் ஊகங்கள் மட்டுமே.
த்ருண தூமாக்கினி என்பது தொல்காப்பியரின் பெயர் என்றும் அவர் அகத்த்தியரின் மனைவியை தமிழ் நாட்டுக்கு அழைத்து வரும் விஷயத்தில், அவருடன் அகத்தியர் சண்டை போட்டார் என்றும் அப்பொழுது ஒருவர் மீது ஒருவர் சாபம் இட்டனர் என்றும் புகழ்பெற்ற உரைகாரர் நச்சினார்க்கினியர் உரையில் கூறுகிறார். சங்க காலத்தில் அகத்தியன் பெயர் இல்லை. பிற்காலத்தில் மணிமேகலையில் வருகிறது அதற்கு முன்னர் காளிதாசன், பாண்டிய மன்னரையும் அகத்திய முனிவரையும் தொடர்பு படுத்திப் பேசுகிறார். இமயமலை போல பொதியமலையிலும் வேள்வித் தீ இருப்பதாகப் புற நானூற்றுப் புலவர் பாடியதால் அங்கு அகத்தியர் வேள்வி செய்தார் என்பதை யூகித்தறியலாம் . மேலும் தொல்காப்பியருக்கு சர்ட்டிபிகேட் கொடுத்தது நான்கு வேதங்களைப் படித்த திருவிதாங்கூர் ஆசான் என்று பனம்பாயிரானார் தொல்காப்பியப் பாயிரத்தில் சொல்வதால் தொல்காப்பியரின் பின்னணி ஓரளவுக்குத் தெரிகிறது; அதாவது எல்லாம் பொதிய மலையை ஒட்டியே நடந்தது.
****

தொல்காப்பியத்தில் 75 சம்ஸ்க்ருதச் சொற்கள்
அமரர்
அந்தம்
ஆணை
உவமம்
காலம் 5
காரம்
திசை
கபிலை
கரகம்
கருமம் 10
கரணம்
காமம்
காயம்
காரணம்
களம் 15
குணம்
சிந்தை
சின்னம்
சூதர்
தா 20
தாரம்
தூது
தெய்வம்
நாடகம்
நிமித்தம் 25
பதி
பருவம்
Pali / பலி
Puutham/ பூதம்
மங்கலம் 30
மண்டிலம்
மதி
மந்திரம் / MANTRA
மாயம்
மனம் 35
முகம்
முரசு
வருணன்
வள்ளி
வாணிகம் 40
கரகம்
குஞ்சரம்
நிச்சம்
வண்ணம்
தேசம் / தேயம் 45
சூத்திரம்
ஆசிரியர்,
இமை,
உரு,
உருவு 50
துணி
இலக்கணம்
சுண்ணம்
அத்தம்,
அம்போதரங்கம், 55
அமுதம்,
அவை,
ஆரம்,
உலகம்,
ஏது, 60
பழி,
அரசன்,
அரணம்,
ஏமம்,
ஐயர், –65
கவரி,
தாமதம்,
தூணி,
பண்ணத்தி,
பார்ப்பனன், –70
பையுள்,
மாராயம்,
பக்கம், 73
ஒட்டகம் 74

என் கருத்துக்கள்
எழுத்துடன் கரம் சேர்ப்பது சம்ஸ்க்ருத வழக்குக்கு
அ -கரம் — 75
உ- கரம்
சம்ஸ்க்ருதத்தில் எல்லா எழுத்துக்களுக்கும் காரம் என்று சேர்ப்பார்கள் அ -காரம்
FROM MY 2012 ARTICLE:
13. தொல்காப்பியர் பயன்படுத்தும் சம்ஸ்கிருதச் சொற்கள் பட்டியல் மிக மிக நீண்டது; கீழே காண்க:
எழுத்து அதிகாரம்: உவமம், காலம், காரம், காயம், திசை, பூதம், பூதன், மதி, ஆசிரியர், இமை, உரு, உருவு, துணி (12)
சொல் அதிகாரம்: அத்தம், ஆனை, இலக்கணம், உவமம், கருமம், களம், காரணம், திசை, தெய்வம், பூதம், சுண்ணம், வண்ணம் (12)
பொருள் அதிகாரம்: அத்தம், அந்தரம், அம்போதரங்கம், அமரர், அமுதம், அவை, ஆரம், உலகம், உவமம், உரு, ஏது, கபிலை, கரகம், கருமம், கரணம், காமம், காயம், காரணம், காலம், குணம், குஞ்சரம், சிந்தை, சின்னம், சூதர், தாரம், திசை, தூது, தெய்வம், நாடகம், நிமித்தம், பழி, பருவம், பலி, பூதம், மங்கலம், மண்டிலம், மந்திரம், மதி, மாயம், மானம், முகம், முரசு, வருணன், வள்ளி, வாணிகம் (46)
கீழ்கண்ட வார்த்தைகள் பிராக்ருதம் மூலமாக நுழைந்த சம்ஸ்கிருதச் சொற்கள்: அரசன், அரணம், அவை, ஆசான், ஆசிரியர், ஆணை, இமை, இலக்கணம், உரு, ஏமம், ஐயர், கவரி, சுண்ணம், தாமதம், தூணி, தேயம், நிச்சம், பக்கம்,, பண்ணத்தி, பார்ப்பனன், பையுள், மாராயம், வண்ணம்.

— SUBHAM—
TAGS- தொல்காப்பியம், சம்ஸ்க்ருதம், சொற்கள், த்ருண தூமாக்ணி