சங்க இலக்கியத்தில் ஜாதிகள் (Post No.15,003)

Written by London Swaminathan

Post No. 15,003

Date uploaded in London –  19 September 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

சங்க காலத்தில் ஜாதிகள் இருந்தன ; சில ஜாதிகள் மிகவும் இழிவாகக் கருதப்பட்டன ; மேலோர், கீழோர்  என்ற பாகுபாட்டினைப் புறநானுறு சொல்கிறது . பிறப்பொக்கும் எல்லா உயிரும் என்பது வள்ளுவர் செய்த பகவத் கீதை ஸ்லோகத்தின் அப்பட்டமான மொழிபெயர்ப்பு . ஜாதிகளின் பட்டியல் நீண்ட பட்டியல்; சங்க இலக்கியம் முழுதும் விரவிக்கிடக்கிறது .

மாடு தின்னும் புலையா உனக்கு மார்கழித்த திரு நாளோ என்ற பிற்காலப் பாட்டுக்கு அடித்தளம் சங்க இலக்கியம் ஆகும்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்.- திருக்குறள் –972

எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.

चातुर्वर्ण्यं मया सृष्टं गुणकर्मविभागश: |

तस्य कर्तारमपि मां विद्ध्यकर्तारमव्ययम् || 4-13||

chātur-varṇyaṁ mayā sṛiṣhṭaṁ guṇa-karma-vibhāgaśhaḥ

tasya kartāram api māṁ viddhyakartāram avyayam

The four categories of occupations were created by Me according to people’s qualities and activities. Although I am the Creator of this system, know Me to be the Non-doer and Eternal.

சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்ம விபாகஸ:|

தஸ்ய கர்தாரமபி மாம் வித்ய கர்தாரமவ்யயம்:|| 4-13

பொருள்:

குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி நான் நான்கு வர்ணங்களை உண்டாக்கினேன்.

அதற்கு நான் கர்த்தா (நானே உருவாக்கினேன்) எனினும், என்னை படைப்பை கடந்தவன், என்றும் கர்த்தா அல்ல என்றும் அறிந்துகொள். —பகவத் கீதை 4-13

மஹாத்மா காந்தியும் இந்த கீதை ஸ்லயோகத்தை லோகம் நியாயப்படுத்தில் எழுதியுள்ளார்.

***

புறநானுற்றில் ஜாதி

புற நானூற்றில் கீழ் ஜாதி

இழிசினன் – 287 -2 ; 82 -3; 289 -10

துடி எறியும் புலைய!

எறிகோல் கொள்ளும் இழிசின!-287-2.

***

சாறுதலைக் கொண்டெனப், பெண்ணீற்று

உற்றெனப் பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக்

கட்டில் நிணக்கும் இழிசினன் கையது-82

இவற்குஈக என்னும் அதுவும்அன் றிசினே;

***

கேட்டியோ வாழி பாண! பாசறைப்

பூக்கோள் இன்றென்று அறையும்

மடிவாய்த் தண்ணுமை இழிசினன் குரலே.-289

பறைக்கொட்டு  அடிப்பவர்களை பறையன் என்றும் இழிசினன் என்றும் அழைத்தனர் .பழமொழிகளில் இவர்களை எள்ளி நகையாடுவதைக் காணலாம்.

****

(மாடு தின்னும்)  புலையன் , புலைத்தி

நான்கு முக்கிய ஜாதிகள்

துடியன், பாணன், பறையன், கடம்பன், என்று

இந் நான்கு அல்லது குடியும் இல்லை;– புறம் 335.

புறம் –259-5; 311-2; 287-1; 360-19;

கலி.72-14;117-7;55-18; 95-10;68-19;85-22

அகம்.34-11;

நற்றிணை 90-3; 77-1; 347-5;

குறு.330-1;

இவற்றில் பெரும்பாலான  இடங்களில் கீழ் மக்கள் என்னும் பொருளில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அவரவர்கள் குலத்தொழிலைச் செய்து வந்தனர்.

***

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்

பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே;

பிறப்போ ரன்ன உடன்வயிற்று உள்ளும்

சிறப்பின் பாலால் தாயும்மனம் திரியும்

ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்

மூத்தோன் வருக என்னாது அவருள்

அறிவுடை யோன்ஆறு அரசும் செல்லும்

வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்

கீழ்ப்பால் ஒருவன் கற்பின்

மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே.– புறநானுறு 183 . 

தமக்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்க்குத் தேவைப்படும் பொழுது உதவி செய்தும், மிகுந்த அளவு பொருள் கொடுத்தும், ஆசிரியரிடம் பணிவோடு, வெறுப்பின்றி கல்வி கற்றல் நன்று. ஒரே தாயின் வயிற்றில் பிறந்த பிள்ளைகளுள், அவர்களின் கல்விச் சிறப்புக்கேற்ப தாயின் மனநிலையும் மாறுபடும். ஒரே குடும்பத்தில் பிறந்த பலருள்ளும் “மூத்தவன் வருக” என்று கூறாமல் அறிவுடையவனையே அரசனும் தேடிச் செல்வான். வேறுபட்ட நான்கு குலத்தாருள்ளும் (பிராமணர்சத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற நான்கு குலத்தினருள்ளும்) கீழ்க்குலத்தில் உள்ள ஒருவன் கல்வி கற்றவனாக இருந்தால், மேற்குலத்தில் உள்ள ஒருவன் அவனை வணங்குவான். புறநானுறு 183 . 

****

இது மனு தர்ம சாஸ்திரத்தில் உள்ளது

2-241. It is prescribed that in times of distress a student may learn the Veda from one who is not a Brahmana; and that he shall walk behind and serve such a teacher, as long as the instruction lasts.

பிராமணர் அல்லாதவரிடமும் வேதம் கற்கலாம் (இதிலிருந்து பிராமணர் அல்லாதோரும் வேதத்தில் சிறப்படைந்தது தெரிகிறது. உ-ம்- ஜனகன்

***

2-223. If a woman or a man of low caste perform anything leading to happiness, let him diligently practise it, as well as any other permitted act in which his heart finds pleasure. கீழ் ஜாதி ஆணோ பெண்ணோ  மனதிற்கு மகிழ்ச்சி தரும் சடங்கினைப்பி பின்பற்றினால் அவர்கள் பின்பற்றட்டும்

***

“A man who has faith may receive good learning even from a man who is lower, the ultimate law even from a man of the lowest castes, and a jewel of a woman even from a bad family”–2-239

***

“Ambrosia may be extracted even from poison,

And good advice even from a child,

Good behaviour even from enemy

And gold even from something impure “– Manu 2- 240

விஷத்திலிருந்தும்  அமிர்தம் பெறலாம் ;

குழந்தையிடமிருந்தும் நல்லதைக் கற்கலாம் ;

எதிரியிடமிருந்து நன்னடத்தையைக் கற்கலாம் ;

அசுத்தமான தாதுவிலிருந்தும் தங்கத்தை எடுக்கலாம்.–மனுதர்ம சாஸ்த்திரம் 2-240

****

“Women, jewels, learning, law, purification, good advice and various crafts may be acquired from anybody” – Manu 2-241

 எவரிடமிருந்தும் நகைகள், பெண்களை மணம் புரிதல், கல்வி, சட்டம், தொழில்கள், புத்திமதி, ஆகியவற்றைப் பெறலாம்.

***

திருக்குறளில் ஜாதி

“Though high born, an unlettered man is deemed lower than a learned man of lower birth. “—Tirukkural 409.

மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்

கற்றார் அனைத்திலர் பாடு.–409

கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும் கல்விக் கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவரே.—திருக்குறள் 409.

****

அகநானுற்றில் ஜாதி

அண்டர் -இடையர் , அத்தக்கள்வர், அந்தணர், உள்ளனர், உழவர், குயவர், கொல்லர், தட்டார், பரதவர், பாணர், யானைப்பாகன், வேளாப்பார்ப்பார் .

இவை தொழிலின் அடிப்படையில் உள்ளது போலத் தோன்றினாலும் குயவன் மகன் குயவனே, இடையன் மகன் இடையனே என்றுதான் சமுதாயம் இருந்துள்ளது ஆயினும் கசாப்புக்கடை நடத்திய தர்மவியாதனை மஹாபாரதம் புகழ்வது போல எல்லா ஜாதியினரிடத்திலும் குணக்குன்றுகள் இருந்தனர்.

அக நானூற்றில் அந்தணர், வேளாளர், அரசர், இடையர், எயினர், கூத்தர் , தட்டார் , வணிகர், பெண்கள் பாடிய பாடல்கள் உள்ளன.

—subham—

Tags-சங்க இலக்கியத்தில், ஜாதிகள் , இழிசினன், பறையன், புலையன் , புலைத்தி

Leave a comment

Leave a comment