ஞானமயம் வழங்கும் (28 9 2025) உலக இந்து செய்திமடல் (Post No.15,037)

Written by London Swaminathan

Post No. 15,037

Date uploaded in London –  29 September 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து லண்டன் சுவாமிநாதன் வாசித்து வழங்கும் செய்தி மடல்.

அனைவருக்கும் வணக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் மாதம் 28-ம்  தேதி 2025-ம் ஆண்டு

திருவண்ணாமலை கோவிலில் கட்டுமானங்களுக்கு ஐகோர்ட் தடை

சென்னை: ‘திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் உள்ளே, வெளியே, எந்தவொரு கட்டுமானங்களும் மேற்கொள்ளக்கூடாது’ என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் கிழக்கு பகுதியில் உள்ள ராஜகோபுரத்துக்கு எதிரே, 6.40 கோடி ரூபாய் செலவில், அடுக்குமாடி வணிக வளாகம் கட்ட திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், ‘இண்டிக் கலெக்டிவ்’ அறக்கட்டளை நிர்வாகி டி.ஆர்.ரமேஷ் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந் தனர். இந்த வழக்குகள், நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, மனுதாரர் டி.ஆர்.ரமேஷ் ஆஜராகி, ”கோவிலில் கட்டுமானங்கள் மேற்கொள்ளக்கூடாது என, இந்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும், புராதன கோவிலின் உள்ளே கட்டுமான பணி நடக்கிறது,” எனக் கூறி, புகைப்பட ஆதாரங்களை தாக்கல் செய்தார்.

இதை பார்வையிட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

வணிக வளாகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்த வழக்கை, இந்த நீதிமன்றம் விசாரித்து வரும் நிலையில், நீதிமன்ற கவனத்துக்கு கொண்டு வராமல், அறநிலைய துறை கட்டுமான பணிகளை மேற்கொண்டு வரும் செயல் கண்டனத்திற்குரியது.

தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கோவிலின் நான்காவது பிரகாரத்தில், சுற்றுச்சுவருக்கு மிக அருகில், க்யூ காம்ப்ளக்ஸ், பக்தர்கள் காத்திருப்பு கூடம் கட்டப்படுகிறது. இது, அதிர்ச்சி அளிக்கிறது.

இந்த கட்டுமானங்கள் அமைக்க வேண்டிய அவசியம் என்ன என்பதை விளக்கும் வகையில், ஆவண, ஆதாரங்களுடன், அறநிலைய துறை விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை அக்., 16ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது.

அதுவரை, நான்காம் பிரகாரத்தில், க்யூ காம்ப்ளக்ஸ், பக்தர்கள் காத்திருப்பு கூடம் மட்டுமின்றி, கோவிலின் உள்ளே மற்றும் வெளியே, எந்த கட்டுமானங்களையும் மேற்கொள்ள அறநிலைய துறைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. அக்டோபர் 5-ம் தேதி கோவிலில் ஆய்வு செய்ய உள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

****

தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்புகோவில்கள் பட்டியலை தர உத்தரவு

தமிழகத்தில், ஆகம விதிகளுக்கு உட்பட்ட கோவில்கள் எவை; உட்படாத கோவில்கள் எவை என்பது தொடர்பாக, அடுத்த மூன்று மாதங்களுக்குள் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி, தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், ஆகம விதிகளை பின்பற்றும் கோவில்களில், ஆகம விதிகளுக்கு முரணாக அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்கவோ அல்லது தேர்வு செய்யவோ தடை விதிக்கக் கோரி, அனைத்திந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

மேலும், முறையாக அர்ச்சகருக்கு படித்த நபர்களை தகுதியின் அடிப்படையில் அர்ச்சகராக நியமிக்கலாம் என்ற தமிழக அரசின் முடிவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடைக்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தும், நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ் சந்திர சர்மா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. ஆகம கோவில்களை கண்டறியும் கமிட்டியில், உறுப்பினர் நியமனத்தில் தமிழக அரசுக்கும், அர்ச்சகர்களுக்கும் இடையே கருத்து முரண்ஏற்பட்டது.

சர்ச்சைக்குரிய நபர்களை அந்த கமிட்டியில் உறுப்பினர்களாக நியமிக்க வேண்டாம்’ என, தமிழக அரசை நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ஆகம கோவில்களை கண்டறியும் கமிட்டியில், மயிலம் பொம்மபுர ஆதீனம் பாலய சுவாமிகளை உறுப்பினராக நியமிக்க உத்தரவிடுகிறோம். 

அந்த கமிட்டியின் மூலம், தமிழகத்தில் ஆகம விதிகளை பின்பற்றி தினசரி பூஜைகள் நடக்கும் கோவில்கள் எவை, பின்பற்றாமல் பூஜைகள் நடக்கும் கோவில்கள் எவை என்பதை மூன்று மாதங்களுக்குள் அடையாளம் காண வேண்டும். அந்த அறிக்கையை தமிழக அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும். அதை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 2026 ஜனவரிக்கு ஒத்தி வைத்தனர்.

****

கேரளா அரசு நடத்திய அய்யப்ப சங்கம கூட்டம் தோல்வி

கேரளத்தில் சபரிமலையில் பம்பையில் ஏற்பாடு செய்யப்பட அய்யப்ப சங்கம மகாநாடு படுதோல்வி என்று கேரளத்தில் எதிர்க்கட்சிகளாகவுள்ள காங்கிரஸ்  கட்சியும் பாரதீய ஜனதாக ட்சியும் கருத்து தெரித்துள்ளன. ஏழு கோடி ரூபாய் செலவில் தேவ ஸ்வம்போர்டும் மார்க்ஸ்சிஸ்ட  கட்சி தலைமையிலுள்ள அரசும் ஏற்பாடு செய்த இந்த மஹாநாட்டிற்கு 4000  பேர் பதிவு செய்ததாக தேவஸ்வம் போர்டு அமைச்சர் வாசவன் கூறினார் ஆனால் பத்திரிக்கைகளும் டி வி சானல்களும் ஆட்களே இல்லாத நாற்காலி வரிசைகளை படமாக வெளியிட்டு மகாநாடு பிசுபிசுத்தது என்று எழுதின; இது பற்றி அமைச்சரிடம் கேட்டபோது பிரதிநிதிகள் வெவ்வேறு இடங்களுக்குக்குச் சென்ற போது நாற்காலிகள் காலியாக இருந்ததாவும் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் இது பற்றி தவறான செய்தி வெளியிட்டதாகவும் கூறி மழுப்பிவிட்டார்.

பாரதீய ஜனதாக்  கட்சி போட்டி அய்யப்ப பக்தர் மாநாடு நடத்தி அண்ணாமலையை சிறப்பு விருந்தினராக அழைத்தது

அந்தக் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் பிரமாணப்பத்திரத்தை கேரள அரசு திரும்பப் பெற வேண்டும் என்று முதலமைச்சர் பினராயி விஜயனை வலியுறுத்தினார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், கேரள மாநிலம் பந்தளத்தில் நடந்த சபரிமலை சமரக்ஷண சங்கமத்தில் பங்கேற்றது மகிழ்ச்சியளிக்கிறது என்றும், பிரம்மச்சாரியான ஐயப்பனின் புனிதத்தைக் காக்கும் ஒரு தெய்வீக நிகழ்ச்சி என்றும் தெரிவித்தார்

கம்யூனிஸ்டுகள் மற்றும் அவர்களின் கூட்டணியான திமுக, தேர்தல் சமயத்தில் நடத்தும் அரசியல் நாடகத்தால், லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கையை சீர்குலைத்து விடக் கூடாது என்றும், சனாதன தர்மத்தைப் பாதுகாக்க ஒரு தீர்மானமான அரசியல் மாற்றத்திற்கான நேரம் தான் இது என்றும் தெரிவித்தார்.

***

கர்பா நடனத்தில் முஸ்லீம்களுக்குத் தடை–  விஸ்வ ஹிந்து பரிஷத் வேண்டுகோள்

நாடு ழுமுவதும் நவராத்திரி விழா களைகட்டியுள்ளது. இதையொட்டி, வட மாநிலங்களில் பெண்கள் ஒன்று கூடி குஜராத்தை பாரம்பரியமாக கொண்ட கர்பா நடனம் ஆடுவது வழக்கம். இதில் முஸ்லீம் இளைஞர்களும் புகுந்து லவ் ஜிகாது நடத்தி இந்துக்களை மதம் மாற்றி கல்யாணம் செய்துகொள்வது பல இடங்களில் நடந்தது இதனால் சக்தி தேவியை நடுவில் வைத்து நடனம் ஆடும் GARBHA கர்பா நடனத்தில் முஸ்லீம்களை அனுமதிக்க  வேண்டாம் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் வேண்டுகோள் விடுத்துள்ளது

உத்தர  பிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் வெளியே மிகப்பெரியா  போர்டுகளும் வைக்கப்பட்டுள்ளன. கர்பா  நடனத்தின் போது  தேவியைக் குறிக்கும் சிலைகளையோ அடையாளங்களையோ வைத்து காலில் காலணி  இல்லாமல் ஆடுவது பாரம்பர்ய   வழக்கம் . தற்காலத்தில் பாலிவுட் கும்பல்கள் புகுந்து சினிமாப்பாட்டுகளைப் போட்டு ஆட்டம் நட்த்தி வருகின்றன்  கேளிக்கையை விரும்பும் இந்துப் பெண் கள் இதில் சென்று லவ் ஜிஹாத்தி ல் மாட்டிக்கொண்டு கட்டாய மதமாற்றத்தில் சிக்கி முஸ்லீம்களாக மாற்றப்படுவதால் நாடு முழுதும் இந்த எச்சரி க்கையை விஸ்வ ஹிந்து பரிஷத் வெளியிட்டுள்ளது.

***

அமெரிக்காவில் அனுமார் சிலை  குறித்து சர்ச்சை

ஹனுமன் சிலை குறித்து அதிபர் டிரம்ப் ஆதரவாளர் சர்ச்சையை உண்டாக்கியுள்ளார் . டிரம்ப்பின் இந்திய விரோதப் போக்கினைப் பயன்படுத்திக்கொண்டு அவர் இந்துக் கடவுள் ஹனுமார் குறித்து அவதூறு பரப்பிவருகிறார் .

அமெரிக்காவில், ஒற்றுமை சிலை என்று அழைக்கப்படும் ஹனுமன் சிலை குறித்து டெக்சாஸ் குடியரசுக் கட்சித் தலைவர் அலெக்சாண்டர் டங்கன் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஒற்றுமை சிலை என்றும், நாட்டின் 3வது உயரமான சிலை என்றும் ஹனுமன் சிலை போற்றப்படுகிறது.

அமெரிக்காவின் TEXAS டெக்சாஸ் மாகாணத்தின் சுகர்லேண்டில் உள்ள ஸ்ரீ அஷ்டலட்சுமி கோவிலில், 90 அடி உயர ஹனுமன் சிலை கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அலெக்சாண்டர் டங்கன் என்பவர், ‘டெக்சாசில் பொய்யான ஹிந்துக் கடவுளின் ஒரு பொய்யான சிலையை ஏன் அனுமதிக்கிறோம்’ என எக்ஸ் வலை தளப் பதிவிட்டுள்ளார்.

இதற்கு, ஹிந்து அமெரிக்க அறக்கட்டளை கண்டனம் தெரிவித்துள்ளது.

 இது ஒரு கிறிஸ்துவ நாடு’ என்று பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த பதிவில் பைபிளில் இடம்பெற்றுள்ள சில வாசகங்களையும் சுட்டிக்காட்டி இருக்கிறார். அலெக்சாண்டர் டங்கன் குறிப்பிட்டுள்ளதாவது;

என்னை தவிர வேறு கடவுள் உனக்கு இருக்கக்கூடாது. வானத்திலோ, பூமியிலோ, கடலிலோ உள்ள எந்த ஒரு சிலையையோ அல்லது உருவத்தையோ நீ உனக்கு உருவாக்கிக் கொள்ளக்கூடாது.கடவுள் பற்றிய உண்மையை அவர்கள் பொய்யாக மாற்றிவிட்டார்கள். கடவுளின் உண்மையான சத்தியத்தை மறைத்து, படைத்தவரை வணங்குவதற்கு பதிலாக, அவர் உருவாக்கிய உலகத்தையும், பொருட்களையும் வணங்க ஆரம்பித்தார்கள். கடவுள் என்றைக்கும் புகழப்படுவதற்கு உரியவர்.

இவ்வாறு அலெக்சாண்டர் டங்கன் தமது பதிவில் கூறியுள்ளார்.

எக்ஸ் வலை தள பதிவோடு, கோயிலில் உள்ள அனுமன் சிலை வீடியோவையும் அவர் இணைத்துள்ளார்.

அலெக்சாண்டர் டங்கனின் கருத்துக்கு அமெரிக்க ஹிந்து பவுண்டேஷன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுகுறித்து புகார் ஒன்றையும் டெக்சாஸில் உள்ள குடியரசுக் கட்சி அலுவலகத்துக்கு எக்ஸ் வலைதள பதிவின் மூலம் அனுப்பி உள்ளது.

******

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து லண்டன் சுவாமிநாதன் வாசித்த செய்தி மடல் இது.

அடுத்த ஒளிபரப்பு அக்டோபர்  மாதம் 5–ம் தேதி ஞாயிற்றுக்கிழமை லண்டன் நேரம் பகல் ஒரு  மணிக்கும்,

இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் .

வணக்கம்.

—SUBHAM—-

Tags – World Hindu News, 28 -9-2025, Gnanamayam, Broadcast, London swaminathan

Leave a comment

Leave a comment