கலபாகஸ் தீவின் அதிசயங்கள்! எனது மருமகள் கண்ட காட்சிகள்! -1 (Post.15,044)

GIANT TORTOISES

Written by London Swaminathan

Post No. 15,044

Date uploaded in London –  1 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

Manta Ray

தென் அமெரிக்கக் கடற்கரையிலிருந்து வெகு தொலைவில் நடுக்கடலில் உள்ள தீவு கலபாகஸ் GALAPAGOS ஆகும். ராட்சத ஆமைகளுக்கும், டார்வினின் பரிணாமக் கொள்கைக்கும் பெயர்போன தீவு. உண்மையில்  சுமார் பத்து தீவுகள் அடங்கியவை இது.  எல்லாம் எரிமலைக் குழம்பு என்னும் லாவா பாறைகள்  நிறைந்த இடம்; ஒவ்வொரு  தீவிலும் வெவ்வேறு விதமான ஓடுகளுடன் ஆமைகளைக் கண்டவுடன் சார்ல்ஸ் டார்வினுக்கு புத்தியில் உதித்தது பரிணாமக் கொள்கை! ஆனால் இந்துக்களோ தசாவதாரம் மூலமாக இதை ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லிக் காட்டிவிட்டனர்.என்னுடைய மருமகள் கடலுக்கடியில் துணிகர செயல்களை செய்யும் டைவிங் ஸ்நோர்கெல்லிங் ஆகியவற்றில் கெட்டிக்காரி. அவளுடைய உறவினர் ஒருவரும் இதே போல கடல் கன்னி SEA NYMPH. இருவரும் பத்து நாட்கள் அங்கே தங்கி துணிகர கடலடி விளையாட்டுகளில் ஈடுபட்டதோடு நிலத்தில் உலவும் மிகப்பெரிய அங்குள்ள ஆமைகள் ,  விநோதப் பறவைகளை புகைப்படம் எடுத்துவந்து எங்களுக்கு ஒரு வீடியோ காட்சி அளித்தாள் ;சுமார் அரை மணி நேரம். பிரைவசியைக் PRIVACY காப்பதற்காக ஆட்கள் இல்லாத புகைப்படங்களை மட்டும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

SEA LION

ஜலபஜ என்று ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு ஆமை என்று பொருள்; ஸ்பானிய மொழி பேசும் ஈக்வடார் நாட்டுக்குச் சொந்தமானது இந்தத்  தீவு ; ஸ்பானிய மொழி சம்ஸ்க்ருத மொழியிலிருந்து பிறந்த லத்தீன் மொழியிலிருந்து பிறந்த மொழி ஆகும். ஆகையால் ஆமைத் தீவு என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லன ஜலபஜ தீவு என்பதை கலபாகஸ் என்று சொல்கின்றனர்.

இந்த தீவில் வினோதமான பறவைகளும், கடல் வாழ் உயிரினங்களும், பெரிய ஆமைகளும்  வாழ்வதால் கடுமையான விதிகளை சுற்றுலாப் பயணிகளுக்கு விதித்துள்ளனர். தீவுக்குச் செல்லும் முன்னரும் தீவிலிருந்து வெளியேறும் போதும் பைகளையும் பெட்டிகளையும் சோதனை  போடுகின்றனர். இயற்கையில் தலையிடக்கூடாது என்பதற்காக எந்த ஒரு பொருளையும் அங்கே எடுத்துச் செல்லவும் கூடாது; அங்கிருந்து கல், விதை, செடி கொடி கிளிஞ்ஞல், சோளி முதலியற்றை எடுத்துக்  கொண்டும் போகக்கூடாது..

பூமத்திய ரேகைக்கு ஆங்கிலத்தில் ஈக்வடார் EQUATOR என்று பெயர் . அந்த நில நடுக்கோடு இந்த நாட்டின் வழியாகச் செல்வதால் அதையே நாட்டின் பெயராகவும் வைத்தனர். இரண்டுக்கும் வித்தியாசம் தெரிய வேண்டும் என்பதற்காக நில நடுக்கோட்டில் நாம் சாப்பிடும் டி T சப்தம் இருக்கும். நாட்டின் சப்தத்தில் போடி வாடி என்னும் டி  D சப்தம் , ஸ்பெல்லிங் இருக்கும்

Golden Iguana

பசிபிக் மஹா சமுத்ரத்தின் நடுவிலுள்ள இந்தத் தீவுகள் கடற் கரையிலிருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கின்றன

அங்கே சென்ற என்னுடைய உறவினர்கள்  சுத்த சைவம்- வெஜிட்டேரியன்கள் – நல்ல வேளையாக அந்த நாட்டின் அடிப்பட்டை உணவு சோறும் பீன்ஸ் விதை உணவும் தான் ஆகையால் வெஜிட்டேரியங்கள் பிழைக்கலாம்

என்ன அதிசயங்கள் ?

மிகப்பெரிய ஆமைகள்! நம் வீட்டுக் கிழவிகளோ எருமை மாடோ சாலைகளைக் கடக்க எவ்வளவு நேரமெடுக்குமோ அவ்வளவு நேரம் எடுத்து மெதுவாகப்போகும் ஆமை!  இந்துக்கள் கண்டுபிடித்த உண்மை- ஆமை ரகசியம் ஆகும் யார் மெதுவாக சுவாசிக்கிறார்ளோ- அதவது பிரணாயாமம் என்னும் மூச்சுப் பயிற்சி செய்கிறார்களோ அவர்கள் நீண்ட காலம் வாழலாம் ஆமைகள் 300 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன இதனால் சம்ஸ்க்ருத ஸ்லோகங்களிலும் திருக்குறளிலும் ஆமைகளை புலனடக்கத்துக்கு  எடுத்துக் காட்டகச் சொல்கிறோம்

அங்கு GOLDEN IGUANAS பொன்னிற இகுவானாக்கள், நீல நிறக் கால்களை உடைய பூபி பறவைகள், சீல் என்னும் கடல் சிங்கங்கள் சுத்தியல் தலை மீன்கள் HAMMERHEAD  சுறா மீன்கள், கடலுக்கு அடியில் பயங்கர சுறாமீன்கள்,  மாண்ட ரே MANTA RAY என்னும் பறவை மீன்கள் என்று எண்ணற்ற மீன்களும், பறவைகளும் பிராணிகளும் வசிக்கின்றன. குறிப்பிட்ட சில சீசன்களில் சென்றால் பசிபிக் பெருங்கடலில் வாழும் டால்பின்களையும் திமிங்கிலங்களையும் கூடக் காணலாம்  சுற்றுலாப்பயணிகளை அழைத்துச் சென்று கடல் விளையாட்டுகளில் இறக்கிவிட்டு பத்திரமாக அழைத்துவருவதற்கு நமபத் தகுந்த சுற்றுலாக்கள் ஈக்வடார் நாட்டில் உள்ளன  கடற்பாறைகளின் வினோத வடிவங்களையும் கண்டு களிக்கலாம் எரிமலைத் தீவுகள் என்பதால் இப்படிப்பட்ட பாறை விநோதங்கள் இருக்கின்றன.கலபாகஸ் தீவுகளின் சுற்றளவு 60,000 சதுர கிலோமீட்டர் இதை நாட்டின் தேசீய பூங்கவாக ஈக்வடார் அறிவித்தது யுனெஸ்கோவும் இதை உலக பாரம்பர்ய தலங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது

Blue Footed Boobies

Darwin’s finches, tortoises and turtles, sea lions, blue-footed boobies, hammerheads, manta rays and marine iguanas – for an archipelago of 20 islands, there are a thousand words that come to mind when we hear the word ‘Galapagos’.

உலகின் மிகப்பெரிய பறவை ஆல்பட்ராஸ்  அதில் ஒரு வகை இங்கே வசிக்கிறது ; பெங்குவின்களும் உண்டு.

கடலுக்கு அடியில் பவளப்பாறைகளை இருக்கின்றன

The British naturalist Charles Darwin made key observations in 1835 that shaped his theory of evolution.

கடலுக்கு அடியில் ஓடும் ஆறுகளை நீரோட்டங்கள் என்பார்கள் இத்தகைய கடல் நீரோட்டங்களும் பலவகை உயிரினங்களை இழுத்து வருகின்றன

Darwin’s finches, tortoises and turtles, sea lions, blue-footed boobies, hammerheads, manta rays and marine iguanas – for an archipelago of 20 islands, there are a thousand words that come to mind when we hear the word ‘Galapagos’.

To be continued…………………………………..

Tags- கலபாகஸ், அதிசயங்கள்! மருமகள் கண்ட காட்சிகள்! -1 நீரோட்டங்கள், தீவு பசிபிக் கடல், ராட்சத ஆமைகள் , ஜலபஜன், Galapagos

Leave a comment

Leave a comment