.jpg)
Post No. 15,099
Date uploaded in London – 18 October 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx

Part Seventeen
Detailed description of Sudharsana Chakram in English was posted here yesterday; now it is given in Tamil.
சுதர்சன சக்ரம்
சுதர்சன சக்ரம் என்பது விஷ்ணுவின் கையிலும் அவருடைய அவதாரமான கிருஷ்ணனின் கையிலும் உள்ள சக்தி வாய்ந்த வட்ட வடிவ ஆயுதம் ஆகும் . இதை வைஷ்ணவர்கள் தனியாகவே கோவிலில் சன்னிதி வைத்து வணங்குகிறார்கள். இது எதிரிகளையும் கஷ்டங்களையும் நீக்கும் ஒரு மூர்த்தி ஆகும். சத்ருக்னனின் அவதாரம் என்று கேரள மக்கள் சுதர்சன சக்ரத்தை வழிபடுகிறார்கள்.
சுதர்சன ஹோமம் என்று ஒரு ஹோமமும் அதற்கான தனியான பிரயோக மந்திரங்களும் இருக்கின்றன. இதுவும் தென்னிந்தியாவில் பிரயோகத்தில் உள்ளது சுதர்சன சக்கரத்துக்கு என்றே தனியான கோவில்களும் இருக்கின்றன.
அஹிர்புத்ன்ய சம்ஹிதா என்ற நூலில்தான் சுதர்சன சக்ரம் பற்றிய மந்திரங்கள், வழிபடும் முறைகள், ஹோமம் செய்யும் விதிகள் உள்ளன.
சுதர்சன சக்ரம் ஆஸ்திரேலிய பழங்குடிகளின் பூமராங் ஆயுதம் போன்றது; அது காரியத்தை முடித்த பின்னர் விஷ்ணு அல்லது கிருஷ்ணர் கைக்கே திரும்பிவரும்.
மஹாபாரதம், ராமாயணம் ,புராணங்கள் ஆகியவற்றில் இதை பற்றிய பல செய்திகள் உள்ளன; விஸ்வ கர்மா செய்த மூன்று ஆயுதங்களில் இதுவும் ஒன்று; ஏனையன திரிசூலம், புஷ்பக விமானம் ஆகும். அவைகளும் எதிரிகளை அழித்த சம்பவங்களை புராணங்கள் விரிவாக எடுத்துரைக்கின்றன.
வைஷ்ணவர்கள் சக்கரத்தாழ்வார் என்றும் சக்ரபாணி என்றும் பெயரிட்டு வழி படுகிறார்கள் . கும்பகோணத்தில் உள்ள சக்ரபாணி கோவில் மிகவும் புகழ்பெற்றது.

சில்பசாரம் என்னும் நூல் பதினாறு கைகளைக்கொண்ட சுதர்சன சக்ரத்தை விவரிக்கிறது ; அவை சங்கு, சக்ரம், வில், அம்பு, கத்தி, திரிசூலம் ,கோடாரி, பாசம் , அங்குசம், தாமரை, வஜ்ராயுதம்/இடி, உழுகலன், உலக்கை, கதை, ஈட்டி/வேல் ஆகும் . தெற்றிப் பற்களும் தீ போன்ற மகுடமும் மூன்று கண்களும் அந்த மூர்த்திக்கு உண்டு .
பொதுவாக சக்ரத்தின் பின்பக்கத்தில் அறுகோணம் இருக்கும்; ஆனால் திருப்பதியில் பதினாறு கைகளுடன் உள்ள சுதர்சன மூர்த்திக்குப் பின்னால் சமபக்க முக்கோணத்தின் நடுவில் நரசிம்ம மூர்த்தி யோகாசன நிலையில் அமர்ந்து இருக்கிறார். அவருடைய முடி, அக்கினி போல இருக்கும் இந்த நரசிம்மரை ஜ்வாலா நரசிம்மர் என்று அழைப்பார்கள்.
4, 8 ஆகிய குறைந்த கரங்களுடனும் பல இடங்களில் சுதர்சன மூர்த்தி வடிக்கப்பட்டுள்ளார்
நான்கு கைகளுடன் உள்ள விஷ்ணுவின் வலது கையில் சுதர்சன சக்ரத்தைக் காணலாம் .
***
சுதர்ஸன சக்ரத்தை விஸ்வ கர்மா செய்ததாகவும் அதைக்கொண்டு சக்ரவனத்தில் ஹயக்ரீவன் என்ற அசுரனைக்கொன்று அவன் கையில் இருந்த ஆயுதத்தை விஷ்ணு பறித்ததாகவும் ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது.
மஹாபாரதத்தில் குறைந்தது இரண்டு இடங்களில் சுதர்சன சக்ரத்தைக் காண்கிறோம். ராஜசூய யாகத்தில் சிசுபாலனின் தலையைச் சீவுவதற்கு கிருஷ்ணன் இதை ஏவினார். மஹாபாரத யுத்தத்தில் சூரியனை மறைக்க இதை கிருஷ்ணர் ஏவியவுடன் யுத்தம் முடிந்துவிட்டது என்று எண்ணி வெளியே வந்த ஜயத்ரதனை வீழ்த்த சகசக்ராயுதம் பயன்பட்டது.
புராணங்களில் கஜேந்திர மோட்சம் கதை விரிவாக உள்ளது ஆதிமூலமே என்று கதறிய யானையின் குரலைக்கேட்டு விரைந்து வந்த விஷ்ணு, சுதர்சன சக்ரத்தை ஏவி முதலையைக் கொன்றார் இது சிற்ப வடிவில் குப்தர் காலம் முதலே உள்ளது .
***

வரலாற்றில்
கிருஷ்ணர், பலராமன் உள்ள பழங்கால நாணயத்திலும் விருஷ்ணி குலத்தினர் வெளியிட்ட நாணயங்களிலும் சக்ரம் உள்ளது. ஆகவே இதற்கு குறைந்தது 2200 ஆண்டுகள் வரலாறு இருக்கிறது.
புராணத்தில் ஒரு கதை வருகிறது; விஸ்வகர்மாவின் மகள் சமக்ஞா சூரியனை திருமணம் செய்துகொண்டதாகவும் அவனுடைய ஒளி தாங்க முடியாமல் அப்பாவிடம் புகார் செய்யவே அவர் சுதர்சன சக்ரத்தை உருவாக்கி சூரியனை மங்கச் செய்ததாகவும் கதை போகிறது; கங்கண சூரிய கிரகணத்தை விவரிக்கும் நிகழ்ச்சி இது என்று சொல்லலாம்.
ஸ்ரீ சுதர்சன அஷ்டகம்
ஆனிச் சித்திரையில் சுதர்சன ஜயந்தி கொண்டாடப்படுகிறது. திருவாழி ஆழ்வான், திகிரி, ஹேதிராஜன், சக்கரத்தண்ணல் நேமிதரங்கம் என்ற பல்வேறு பெயர்களால் இவர் அழைக்கப்படுகிறார்.
சுதர்சன உபாசியாக விளங்கிய ஸ்வாமிதேசிகர் ஸ்ரீ சுதர்சன அஷ்டகம் என்ற பாமாலையினை சக்கரத்தாழ்வாருக்குச் சூட்டியிருக்கிறார்.
சுதர்சன சக்ரம் உள்ள கோவில்கள்

கேரளத்தில் நிறைய சுதர்சன சக்ர கோவில்கள் உள்ளன . ஆந்திரத்தில் சிம்மச்சலம் கோவில் சக்ரபாணி சந்நிதி,
வீரராகவ ஸ்வாமி கோவில் , திருஎவ்வுள் ; ரங்கநாதஸ்வாமி கோவில், ஸ்ரீரங்கப்பட்டன ; திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவில், மதுரை ; வரதராஜ பெருமாள் கோவில்,காஞ்சிபுரம் முதலியன குறிப்பிடத்தக்கவை.
· Sri Sudarshana Bhagavan Temple, Nagamangala.
·
· Jagannath Temple, Puri, As Sudharsana Moorthy
· Alathiyur Pavelikkara Narayanathu Kavu Sudarshana Temple, Triprangode, Malappuram.
· Thuravoor Sree Narasimha Moorthy Temple, Alappuzha–
· Sreevallabha Temple, Thiruvalla, Pathanamthitta –
· Thrichakrapuram Temple, Puthanchira- The main deity is Sudharsana Moorthy.
· ****
As Shatrughna avatar
· Payammal Sree Shatrughna Swami Temple, Thrissur
· Methiri Sree Sathrughnaswamy Temple, Kottayam
· Nedungaattu Sree Shatrugna Swami Temple(Mammalassery), Ernakulam
· Naranathu Shatrughna Swami Temple, Malappuram
· Payam Sri Mahavishu (Shatrughna) Temple, Kannur
· Sree Shatrughna Swami Temple, Kalkulam, Kuthannur, Palakkad

—subham—
Tags- சுதர்சன சக்ரம், Hinduism through 500 Pictures in Tamil and English, படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்,Part 17