விண்வெளியின் காலநிலை பூமிக்கு ஏற்படுத்தும் அபாயங்கள்! இனி கவலை இல்லை – கண்காணிப்பால்! (Post.15,132)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,132

Date uploaded in London –   30 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

10-8-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை! 

SPACE WONDER 

விண்வெளியின் காலநிலை பூமிக்கு ஏற்படுத்தும் அபாயங்கள்!

இனி கவலை இல்லை – கண்காணிப்பால்! 

ச. நாகராஜன் 

விண்வெளி காலநிலை (SPACE WEATHER) என்பதைப் பற்றி நம்மில் பெரும்பாலானோருக்கு அதிகமாகத் தெரியாது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் விண்வெளிச் சுற்றுப்புறச் சூழலில் ஏற்படும் மாறுபாடுகளே விண்வெளி காலநிலை ஆகும். 

இதனால் ஏற்படும் ஒரு சம்பவத்தை கிரகங்களுக்கு இடையே ஏற்படும் ஒளிவட்ட நிறை வெளியேற்றம் (INTERPLANETARY CORONAL MASS EJECTION)  எனக் கூறுகிறோம். சூரியனிடமிருந்து வெளியேறும் சூரியத் துகள்களையும் அநேக காந்தப் புலங்களையும் இந்த எஜெக் ஷன்கள் கொண்டுள்ளன. ஒரு வினாடிக்கு 1242 மைல் வேகத்தில் இவை பயணிக்கும்.

இவை உருவாக்குகின்ற புயலுக்குப் பெயர் ஜியோமாக்னெடிக் ஸ்டார்ம். பார்க்க அழகாக இருந்தாலும் இவை சாடலைட்டுகளின் பணிகளைத் தடுக்கும். மின் கிரிட்களை இயங்காமல் செய்யும். விண்வெளிவீரர்களின் பயணத்திற்குப் பெரும் ஊறு விளைவிக்கும்.

இதுமட்டுமின்றி ராணுவ நடவடிக்கைகளுக்கும் இது ஒரு பெரிய இடையூறாக அமைகிறது.

 \இந்த விண்வெளி காலநிலை அச்சுறுத்தலைத் தடுக்க மட்டும் ஆண்டிற்கு வருடந்தோறும் 2.7 டிரில்லியன் அமெரிக்க டாலர் செலவாகிறது.

 1859ம் ஆண்டு செப்டம்பர் மாதம் காரிங்டன் நிகழ்வு (CARRINGTON EVENT) என்ற ஒரு சம்பவத்தில் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பெரும் தீ விபத்துக்கள் இந்த விண்வெளி காலநிலையால் ஏற்பட்டது; ஏராளமான டெலிகிராப் லைன்கள் சேதமடைந்தன.

 1972ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இன்னொரு காரிங்டன் நிகழ்வில் சந்திரனைச் சுற்றி வந்த விண்வெளிவீரர்கள் அபாயத்திற்குள்ளாயினர்.

2022 பிப்ரவரியில் ஸ்பேஸ் எக்ஸ் தன்னுடைய 49 சாடலைட்டுகளில் 39ஐ இதனால் இழந்தது.

 ஆகவே இந்த அச்சுறுத்தலைப் போக்க மொஜ்தாபா அகவான் டஃப்டி (Mojtaba Akhavan Tafti) என்ற விஞ்ஞானியின் தலைமையில் ஒரு பெரும் குழு இயங்கி வருகிறது

 இந்தக் குழு ஸ்பேஸ் வெதர் இன்வெஸ்டிகேஷன் ஃப்ராண்டியர் (SWIFT – Space Weather Investigation Frontier) என்ற பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்தியுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக விண்வெளி காலநிலையை இது கண்காணிக்கப் போகிறது.

 ஒரு கண்காணிப்பு மானிட்டரை 13 லட்சம் மைல்களுக்கு அப்பால் இது நிறுவி இந்தப் பணியைச் செய்யும்.

 ஏற்பட இருக்கும் நிகழ்வுக்கு 60 நிமிடங்களுக்கு முன்னால் அது பற்றிய தகவல்கள் பூமியில் விண்வெளி விஞ்ஞானிகளுக்கு கிடைக்கும்.

ஸ்விஃப்ட் (SWIFT – Space Weather Investigation Frontier) இதற்காக ஒரு சோலார் செல்லை அமைத்துள்ளது. சோலார் செல் என்பது பாய்மரப் படகுகளில் சாதாரணமாக விரிக்கப்படும் பாய் என்று சொல்லலாம். இது சுற்றுப்பாதையை அடைய எரிபொருள் போலச் செயல்படும். இந்த பாயின் அளவு ஒரு கால்பந்தாட்ட மைதானத்தின் பரப்பில் மூன்றில் ஒரு பங்கு அளவு இருக்கும். சூரியனிடமிருந்து வரும் துகள்களின்  இயக்கத்தையும் வேகத்தையும் இந்த சோலார் செல் சமனப்படுத்தும்.

ஒரு படகோட்டி எப்படி நிலைமைக்குத் தக தனது பாயை விரித்துக் கொண்டு மாற்றுகிறானோ அதே போல இந்த சோலார் செல்லையும் மாற்றலாம்.

 ஆக விண்வெளி காலநிலை இதுவரை ஏற்படுத்திய அபாயங்கள் இனி நேராது. இதன் அச்சுறுத்தலுக்கும் நாம் தயாராகி தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

விண்வெளியில் இப்போது பலநாடுகளின் “நடமாட்டம்” அதிகமாகி விட்டது. ஆகவே ஸ்விப்டின் முக்கியத்துவம் அனைவராலும் உணரப்படுகிறது!

விண்வெளி விஞ்ஞானிகள் பெரிதும் மகிழ, விண்வெளி வீரர்கள் அப்பாடா என்று பெருமூச்சு விட ஸ்விப்ட் குழுவுக்கு நாமும் நமது நல்வாழ்த்துக்களை ராக்கெட் வேகத்தில் அனுப்புவோம்!

*** 

Leave a comment

Leave a comment