Written by London Swaminathan
Post No. 15,147
Date uploaded in London – 3 November 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
SECOND PART
மீனாக்ஷி அம்மனின் தலைப்பாகைக் கிரீடம்
அடுத்ததாக திருவிழா காலத்தில் அம்மன் குதிரை வாகனத்தில் வரும்போது போர் வீரன் போல தோற்றமளிப்பதற்காக குதிரை வாகன தலைப்பாகை கிரீடம் பொருத்தப்படும் . இதை திருமலை நாயக்கர் செய்துகொடுத்துள்ளார் . அதிலும் நவரத்தின கற்கள் இருக்கின்றன
தலைப்பாகைக் கிரீடத்தின் எடை 113 தோலா
ஒரு தோலா = 11 . 66 கிராம்
332 நன் முத்துக்களும் 472 சிவப்புக் கற்களும் 158 பலச்ச வைரமும் 27 மரகதங்களும் இந்த கிரீடத்தை அலங்கரிக்கின்றன.
***
திருமுடிச் சாத்து
திருமுடிச் சாத்து என்ற ஒரு கிரீடத்தையும் திருமலை நாயக்கர் செய்து கொடுத்துள்ளார் .இது அம்மனுக்கு சாத்தப்படுகிறது .பெண்கள் தங்கள் தலைமுடியை உச்சிக்கொண்டை போடாமல் , அப்படியே பின்பக்கமாக வாரி சடையாக பின்னி தொங்கப்போடுவது போன்ற அமைப்பில் இக்கிரீடம் அமைந்துள்ளது . இதன் எடை 83 தோலா; 324 சிவப்புக் கற்களும் 116 பலச்ச வைரமும் மூன்று நீலக் கற்களும், இரண்டு மரகதங்களும் 694 முத்துக்களும் , இரண்டு வைடூரியங்களும் கிரீடத்தில் பதிக்கப்பட்டு உள்ளன
ஆவணி மூல விழாவில் சுந்தரேஸ்வரர் கூலி ஆளாக வைகைக் கரைக்குச் செல்வார் அப்போது தலையில் கூடையும் தோளில் மண் வெட்டியும் தாங்கியிருப்பார் ;இவைகளெல்லாம் தங்கத்தாலானவை
திருவிளையாடற்புராணத்தில் பரஞ்சோதி முனிவர் சொன்னே கரும்பனும் விரும்ப நின்ற கட்டழகும் என்ற திருமேனி நம் மனக்கண்ணில் தோன்றும்; இவைகளின் எடை-
கூடை – 25 தோலா தங்கம் ;
கூடையைத் தாங்கும் சுமையடை – 84 தோலா தங்கம்;
மண்வெட்டி- 19 தோலா தங்கம்
அவைகளில் பலச்ச வைரங்கள் , மரகதக் கற்கள் பதித்துள்ளனர்.
***
பொட்டுக்காறை
சிவகங்கையை ஆண்ட பவானி சங்கர் ராஜா சேதுபதி, அம்மனுக்கு தங்க கொடியுடன் கூடிய பட்டை தீட்டாத மாணிக்கக் கற்கள் , மரகதக் கற்கள் பதித்து செய்யப்பட பொட்டுக்காறையொன்று செய்து கொடுத்துள்ளார்
இதன் எடை 53 தோலா; 331 சிறிய மாணிக்கக் கற்களும் 116 44 பெரிய மரகதங்களும் பதிக்கப்பட்டு உள்ளன . இதேபோல ராமநாத புர மன்னர் பாஸ்கர சேதுபதி கோவிலில் உள்ள ஆக்ஞா சித்த மூர்த்திக்கு பெரிய பதக்கம் ஒன்றைத் தங்கள் கொடியில் கோர்த்து நன்கொடையாக கொடுத்துள்ளனர்; பதக்கத்தின் பின்பக்கத்தில் தமிழில் இதன் விளக்கம் இருக்கிறது 1893 ஆம் மூன்றாம் ஆண்டில் கொடுத்துள்ளார். இதிலும் எல்லா வகைக் கற்களும் உள்ளன.
***
பவளக்கொடி பதக்கம்
கடலில் உள்ள பவளக்கொடி போல கிளை கிளையாக அமைக்கப்பட்டுள்ளது;ரத்தினம் பதித்த ஒரு வளையமும் பொருத்தப்பட்டுள்ளது ;அதன் எடை 11 தோலா 6 4 மாணிக்கக் கற்கள் ,25 முத்துக்கள் வளையத்தில் பதிக்கப்பட்டுள்ளன.
பவள தாழ் வடம்
இதைத் தவிர பவள தாழ் வடம் ஓன்றும் உள்ளது இதை கர்நாடக திப்பு சுல்தானுக்கு அமைச்சராக பணிபுரிந்த பூர்ணையா என்பவர் மீனாட்சி அம்மனுக்குக் கொடுத்திருக்கிறார் பெரிய உருண்டை வடிவத்தில் முதிர்ந்து விளைந்த பளபள ப்பும் சிவப்பு நிறமும் கொண்ட 28 பவள மணிகளை 27 தங்க குண்டுமணிகளுக்கு இடையிடையே வைத்து அமைத்துகே காட்டியுள்ளனர் ; இதன் மொத்த எடை 43 தோலா .
***
நளச் சக்ரவர்த்தி பதக்கங்கள் /வாகனப் பதக்கங்கள்
நிடத நாட்டு மன்னன் நளச் சக்ரவர்த்தி கொடுத்த இரண்டு பெரிய பதக்கங்கள் இருக்கின்றன . இவை வெள்ளியும் தங்கமும் கலந்த பொன்னால் செய்யப்பட்டவை .எடை – 69 தோலா, 45 தோலா
ஒரு பதக்கத்தில் பட்டை தீட்டாத 79 பெரிய மாணிக்கக் கற்களும் 18 நீலக் கற்களும்,8 மரகதங்களும் 6 வைடூரியங்களும் இரண்டு கோமேதங்களும் பதித்துள்ளனர் . இன்னும் ஒரு பதக்கத்தில் பட்டை தீட்டாத 83 பெரிய மாணிக்கக் கற்களும் 12 நீலக் கற்களும்,7 மரகதங்களும் 6 வைடூரியங்களும் 3கோமேதங்களும் பதித்துள்ளனர்.
இவையிரண்டும் குந்தன கட்டிட வெளிப்பாட்டில் அமைந்தவை. கோவில் கருவூலப்பட்டியலில் இவைகளை வாகனப்பதக்கண்கள் என்று குறித்து வைத்துள்ளனர்
திருவிழாக் காலங்களில் உயரமான குதிரை, யானை, கற்பக மரம், பூதம் ,யாளி நந்தி தேவர் ஆகிய வாகனங்களின் சுவாமியை எழுந்தருளப் பண்ணி வீதி வலம் வரும்போது இப் பதக்கங்கள்நன்றாகத் தெரியும் .
***
ரோமானிய காசுமாலை
சங்க காலத்தில் தமிழ் நாட்டுக்கும் இத்தாலிக்கும் இடையே பெரிய அளவில் ஏற்றுமதி- இறக்குமதி வியாபாரம் நடந்ததை சங்க இலக்கியமும் தென்னிந்தியா முழுதும் கிடைத்த ரோமானிய காசுகளும் காட்டுகின்றன . அந்தக்காலத்தில் கிடைத்த தங்கக்காசுகளை மக்கள் ரகசியமாக உருக்கி தங்க நகைகளாகச் செய்துவிட்டனர் இன்றோ அந்தத் தங்கக்காசு ஒவ்வொன்றின் மதிப்பும் அதிலுள்ள தங்கத்தின் மதிப்பை விட நூறு மடங்கு வி லைக்கு வெளி நாடுகளில் எல்லாம் ஏலம் போகிறது. நல்ல வேளை யாக திருவநந்தபுரம் , மதுரைக் கோவில்களில் ரோமானிய தங்கக்காசு மாலைகள் சுவாமி அம்மன் கழுத்தில் தொங்குகின்றன. அதில் லத்தீன் மொழி வாசகங்களும் உள்ளன; ஒவ்வொரு மன்னரின் பெயரையோ காசின் படத்தையோ வெளியிட்டால் இன்றைய மதிப்பினை அறியலாம். வரலாற்றினை புதுக்கி எழுதவும் வழிபிறக்கும்
இந்த காசுமாலையில் 48 ரோமானியாக் காசுகளை 50 தங்கமணியுடன் பட்டு கயிற்றில் சேர்த்துக் கட்டியுள்ளார்கள்
இதன் எடை 21 தோலா .
இதேபோல வேறு வெளிநாட்டுக்காரர்கள் கொடுத்த காசுமாலையும் மீனாட்சிக்கு உண்டு . இங்கிலிஷ் ஈஸ்ட் இந்தியா கம்பெனி காயின்ஸ் என ஆங்கில மொழி பொறித்த 73 தங்க காசுகளால் ஆன ஒரு காசு மாலையை ஆங்கிலேயர்கள் வழங்கினர் . இதன் எடை ஆறு தோலா இந்த காசுமாலையில் 48 ரோமானியாக் காசுகளை 50 தங்கமணியுடன் பட்டு கயிற்றில் சேர்த்துக் கட்டியுள்ளார்கள்
இதன் எடை 21 தோலா .
ஒரு தோலா – 11. 66 க்ராம்
1 tola = 11. 66 grams. More gramsely, it’s 11. 6638 grams
***
அடுத்ததாக தங்க மிதியடிகள்
அருள்மிகு மீனாட்சியம்மனின் திருவடிகளைத் தாங்கும் இரண்டு மிதியடிகள் கோவிலில் உள்ளன இதன் பின்னால் ஒரு கதை உள்ளது .1812 ஆம் ஆண்டில் ரோஸ் பீட்டர் என்ற ஆங்கிலேயர் மதுரை மாவட்ட கலெக்டராக இருந்தார் . அக்காலத்தில் கோவில் மேற்பார்வையும் கலெக்டரிடம் இருந்தது ; பீட்டர் , குதிரை மேலிருந்தபடியே கோவிலை வலம் வருவார் அவருக்கு மீனாட்சி அம்மனின் அருள் கிடைத்தது . அது ஒரு அதிசய சம்பவம் !
To be continued………………………
மதுரை மீனாட்சி கோவில் ,நவரத்தினக் குவியல்!-2 ,