சீனாவுக்குப் போகாதே! அருணகிரிநாதர் அறிவுரை! (Post No.15,161)

Written by London Swaminathan

Post No. 15,161

Date uploaded in London –  8 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழில் 1300-க்கும் மேலான பாடல்கள் நமமக்குக் கிடைத்துள்ளன இதில் ஒரு பாடலில் அவர் ஒரு அட்வைஸ் தருகிறார். ஏன் துபாய், பங்களாதேஷ்  முதலிய துலுக்க நாடுகளுக்கும் சீனாவுக்கும் போய் கஷ்டப்படுகிறீர்கள் ? முருகனைச் சிந்தித்து அருள் பெறுங்கள் என்கிறார். 500 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் இதை எழுதியபோது வணிகத்திற்காக பலரும் பல நாடுகளுக்குச் சென்றிருக்கிறார்கள்.  திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் போன்றோர் தென் கிழக்கு ஆசிய  நாடுகளில் வியாபாரம் செய்த செய்திகளைக் கல்வெட்டுகள் நமக்குத் தெரிவிக்கின்றன;.சீனாவிலும் ஒரு தமிழ் கல்வெட்டு இருக்கிறது.

இப்போதுதான் நம்மவர்கள் மத்திய கிழக்கிலுள்ள துபாய், எமை ரேட்ஸ் நாடுகள், சவுதி அரேபியா ,ஈரான் இராக் ஆகிய நாடுகளுக்குச் செல்கிறார்கள் . அருணகிரிநாதர் பாடிய பாடலில்  சீனம், சோனம், வங்கம் ஆகிய மூன்று நாடுகளைக் கூறுகிறார். சோனம் என்பது அவரது காலத்தில் அரேபிய தீபகற்பத்தைக்  குறித்தது . சீனாவுடனான வணிகம் நீண்ட காலமாக உள்ளது. சில்க் ரூட் என்றும்  பட்டு வணிக்கப்  பாதை என்றும்  வெளியேயான பல ஆராய்ச்சி நூல்களில் 2000  ஆண்டுகளாக நடைபெறும் வணிகம் பற்றிய தகவல்கள் உள்ளன

அருணகிரிநாதர் பர்மா, மலேசியா சிங்கப்பூர், தென் கிழக்கு ஆசிய நாடுகளைக் குறிப்பிடாமல் ஏன் சோனம் வங்கம் சீனம் என்று குறிப்பிட்டார்? என்பது ஆராய்ச்சிக்கு உரியதே

அந்தக் காலத்திலிருந்தே நம்மவர்களுக்கு சீனா மீது ஒரு அவ நம்பிக்கை! பாரதியாரும்

ஜாதி மதங்களைப் பாரோம் – உயர்

ஜன்மம்இத்தேசத்தில் எய்தினராயின்

வேதியராயினும் ஒன்றே – அன்றி

வேறு குலத்தினராயினும் ஒன்றே

ஈனப் பறையர்களேனும் அவர்

எம்முடன் வாழ்ந்திங்கிருப்பவர் அன்றோ?

சீனத்தராய்விடுவாரோ? – பிற

தேசத்தர் போற்பல தீங்கிழைப்பாரோ?

ஆயிரம் உண்டிங்கு ஜாதி – எனில்

அன்னியர் வந்து புகல் என்ன நீதி ? – ஓர்

தாயின் வயிற்றில் பிறந்தோர் – தம்முள்

சண்டைசெய்தாலும் சகோதரர் அன்றோ?

ஒன்று பட்டால் உண்டு வாழ்வே – நம்மில்

ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே

நன்றிது தேர்ந்திடல் வேண்டும் – இந்த

ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்?

…………………..

என்று சீனாவை ஏசுகிறார்

***

இதோ திருப்புகழ் பாடலும் பொருளும் :

வெங்கா ளம்பா ணஞ்சேல் கண்பால்

     மென்பா கஞ்சொற் …… குயில்மாலை

மென்கே சந்தா னென்றே கொண்டார்

     மென்றோ ளொன்றப் …… பொருள்தேடி

வங்கா ளஞ்சோ னஞ்சீ னம்போய்

     வன்பே துன்பப் …… படலாமோ

மைந்தா ருந்தோள் மைந்தா அந்தா

     வந்தே யிந்தப் …… பொழுதாள்வாய்

கொங்கார் பைந்தே னுண்டே வண்டார்

     குன்றாள் கொங்கைக் …… கினியோனே

குன்றோ டுஞ்சூ ழம்பே ழுஞ்சூ

     ரும்போய் மங்கப் …… பொருகோபா

கங்கா ளஞ்சேர் மொய்ம்பா ரன்பார்

     கன்றே வும்பர்க் …… கொருநாதா

கம்பூர் சிந்தார் தென்பால் வந்தாய்

     கந்தா செந்திற் …… பெருமாளே.

……… சொல் விளக்கம் ………

வெங்கா ளம்பாணஞ்சேல் கண் … கொடிய நஞ்சு, அம்பு, சேல் மீன்

– இவற்றை ஒத்த கண்கள்,

பால் மென்பாகு அஞ்சொற் குயில் … பால், மென்மையான

வெல்லப்பாகு போன்ற இனிமையான, குயிலை நிகர்க்கும் சொற்கள்,

மாலை மென் கேசந்தா னென்றே கொண்டார் … இருளை ஒத்த

மெல்லிய கூந்தல்தான் என்று இவ்வகையாகக் கொண்டுள்ள பொது

மாதர்களின்

மென்றோள் ஒன்றப் பொருள்தேடி … மென்மையான தோள்களைத்

தழுவுவதற்காகப் பொருள் தேட வேண்டி,

வங்காளஞ் சோனஞ் சீனம்போய் … வங்காள நாடு, சோனக நாடு*,

சீனா முதலிய தூரமான இடங்களுக்குப் போய்

வன்பே துன்பப் படலாமோ … வம்பிலே கொடிய துன்பத்தைப்

படலாமோ?

மைந்து ஆருந்தோள் மைந்தா அந்தா … வலிமை மிகுந்த

தோள்களைக் கொண்ட குமரனே, அழகனே,

வந்தே யிந்தப் பொழுதாள்வாய் … வந்து இந்த நொடியிலேயே

என்னை ஆண்டருள்வாயாக.

கொங்கார் பைந்தேனுண்டே வண்டார் … வாசனை மிக்க

பசுந்தேனை உண்டே வண்டுகள் நிரம்பும்

குன்றாள் கொங்கைக் கினியோனே … வள்ளிமலையில்

வசிக்கும் வள்ளியின் மார்பை இனிமையாக அணைவோனே,

குன்றோடுஞ் சூழ் அம்பேழுஞ் சூரும் … சூரனுக்கு அரணாக

விளங்கிய ஏழு மலைகளும், ஏழு கடல்களும், அந்தச் சூரனும்,

போய் மங்கப் பொருகோபா … பட்டு அழியும்படியாக போர்

செய்த சினத்தை உடையவனே,

கங்காளஞ்சேர் மொய்ம்பார் அன்பார் கன்றே … எலும்புகளும்

கபாலமும் சேர்ந்த மாலையை அணிந்த தோளை உடைய

சிவனாரின் அன்பு நிறைந்த குழந்தாய்,

உம்பர்க் கொருநாதா … தேவர்களின் ஒப்பற்ற தலைவனே,

கம்பு ஊர் சிந்தார் தென்பால் வந்தாய் … சங்குகள் தவழும்

கடலின் தெற்குக்கரையில் இருக்க வந்தவனே,

கந்தா செந்திற் பெருமாளே. … கந்தனே, திருச்செந்தூரில்

வீற்றிருக்கும் பெருமாளே.

சோனகம் 56 தேசங்கள் சேர்ந்த பாரத நாட்டில் ஒரு தேசம்.

தமிழிலும் ஆங்கிலத்திலும்    பொருள் எழுதியது    ஸ்ரீ கோபால சுந்தரம் https://www.kaumaram.com/thiru/nnt0102_u.html

vengA LampA NanjcEl kaN: “Their eyes are like deadly poison, arrows and cEl fish;

pAl menpA kanjcoR kuyil: their speech is sweet as milk, molten jaggery and cuckoo’s music;

mAlai men kEcanthA nenRE koNdAr: their soft hair is like the darkness”; and so on. Thus describing the harlots,

menRO LonRap poruLthEdi: people roam in search of wealth to enable them to embrace their soft shoulders;

vangA LanjcO nanjcee nampOy: they go to far away places like Bengal, ChOnakam* and China

vanpE thunbap padalAmO: to suffer unnecessary miseries. Is it worthwhile?

maindhA runthOL mainthA anthA: Oh KumarA, with strong shoulders! Oh handsome one!

vanthE yinthap pozhuthALvAy: Please come right at this moment and take charge of me!

kongkAr painthE nuNdE vaNdAr kunRAL: She lives in VaLLimalai, which is full of beetles imbibing fragrant and fresh honey;

kongkaik kiniyOnE: You fondly hug the bosom of that VaLLi!

kunRO dunjcU zhampE zhunjcUrum: The seven protective hills of SUran, the seven seas and SUran himself

pOY mangkap porukOpA: were destroyed by Your wrath, Oh Lord!

kangkA LanjcEr moympA ranpAr kanRE: He wears a garland of bones and skulls around His shoulders. You are the loving child of that Lord SivA.

vumpark korunAthA: You are the unique master of the Celestials!

kampUr cinthAr thenpAl vanthAy: You came to reside in the south shore of the sea full of floating conch shells.

kanthA centhiR perumALE.: Oh KanthA, Your abode is ThiruchchendhUr, Oh Great One!

****

என்னுடைய கருத்து

சோனகம் என்ற சொல்லின் அகராதி விளக்கம் — 56  தேசங்களில் ஒன்று .

சோனகர் – துலுக்கர்இஸ்லாமியர் யவனர்உவச்சர் ..

அருணகிரிநாதர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருள் இஸ்லாமியர்துலுக்கர்

யவனர் என்ற சொல்லும் காலப்போக்கில் அர்த்தம் மாறிக்கொண்டே வந்த சொல்லாகும்.

கால யவனர் என்ற கருப்பு யவனர்கிருஷ்ண பரமாத்வை  ஓட ஓட விரட்டி ,அவரை உத்தரப்பிரதேச மதுராவிலிருந்து குஜராத்திலுள்ள துவாரகைக்கு யாதவர்களுடன் குடிபெயரச் செய்தான் என்று பாகவத புராணம் கூறுகிறதுஇதுவரை யாரும் இது பற்றி ஆராயாமல் கப்புச்சிப்பு என்று மவுனியாக இருக்கிறார்கள். நான் மட்டும் சுமேரியராக இருக்கலாம் என்று கட்டுரை எழுதியுள்ளேன்.

***

சங்க இலக்கியத்தில் யவனர் மர்மம்!

ஆராய்ச்சிக் கட்டுரை வரைபவர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்.:–1207; தேதி:- ஆகஸ்ட் 1, 2014.

***

யவனர்களைத் தமிழர்களும் சாணக்கியனும் தாக்கியது ஏன்?

Date: 30 DECEMBER 2017 ; Post No. 4564

***

யவன முண்டா ! பாணினி தகவல் (Post No.8021)

Post No. 8021

Date uploaded in London – 22 May 2020   

***

யவனர்கள் கிரேக்கர்களா ஆமாம் / இல்லை (Post No.7812)

Post No.7812

Date uploaded in London – 10 April 2020   

—-SUBHAM—-

Tags- சீனாவுக்குப் போகாதே! அருணகிரிநாதர் அறிவுரை, சோனகம், யவனர்கள்

Leave a comment

Leave a comment