Post No. 15,165
Date uploaded in London – 9 November 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
முந்தைய கட்டுரைகளில் நாம் லலிதா சகஸ்ரநாமத்தில், நவரத்தினம், நகரங்கள், பூக்கள் முதலியவற்றைப் பார்த்தோம் அம்பாளின் வர்ணங்களும் பல நாமங்களில் வருகின்றன ; பொதுவாக, அதிகமாக சிவப்பு நிறத்தை அம்பாளுடன் தொடர்பு படுத்துகிறார்கள் .இதோ சில நாமங்கள்:–
1
சர்வ வர்ணோப சோபிதா என்ற நாமம் தேவியை வர்ணங்களுடன் தொடர்புடுத்திப் போற்றுகிறது.,
எல்லா வர்ணங்களும் உள்ள கலர் சக்கரக் COLOUR WHEEL காற்றாடியைச் சுழற்றினால்-வேகமாகச் சுற்றினோமானால் — வர்ணங்கள் மறைந்து வெள்ளை நிற ஒளி மட்டுமே மிஞ்சும். .
இன்னும் ஒரு பரிசோதனை – முப்பட்டைக் கண்ணாடி என்னும் பிரிஸ்ம் PRISM வழியாக வெண்மையான சூரிய ஒளிக்கிரணத்தைச் செலுத்தினால் திரையிலோ சுவற்றிலோ வான வில்லின் அற்புதமான ஏழு நிறங்களையும் காணலாம்.
இவைகளைக் கருத்திற்கொண்டு அம்பளை நிறங்களுள்ளவள் என்றும் நிறங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்ட வெண்மை நிறம் — அதாவது ஜோதியாக ஒளிர்பவள் என்றும் வியாக்கியானம் செய்துள்ளார்கள்.
(வர்ணம் என்றால் எழுத்து, அக்ஷரம் என்ற பொருளும் உண்டு).
***
ரக்த வர்ணா BLOOD RED
சஹஸ்ரநாமத்தில் வரும் பூக்களைப் பற்றிய கட்டுரையில் ஜபாகுஸுமம் HIBISCUS ROSASINENSIS என்னும் செம்பருத்திப் பூவினைக் கண்டோம். அதை நினைவுபடுத்தும் வகையில் அம்பாளின் மற்றோர் நாமம் வருகிறது ; அது ரக்த வர்ணா என்பதாகும். அம்பாளின் உதடுகள், கன்னங்கள், உடல் முழுதும் சிவப்பு வர்ணமாகப் பார்க்கிறார்கள் முற்றும் துறந்த முனிவர்களும் யோகிகளும் ; நாமும் கூட சூரியனை – ஒளிப்பிழம்பினை- வெள்ளை நிறத்தில், மஞ்சள் நிறத்தில், சிவப்பு நிறத்தில் காண்கிறோம் அல்லவா?
***
சர்வாருணா
.jpg)
இதற்கு முன்னர் சர்வாருணா என்ற நாமத்திற்கு சர்வ+அருணா என்று பொருள் கொண்டு அவளை அருண நிறத்தவள் — அதாவது ஆடை, ஆபரணம், மேனி, மலர் ஆகியன எல்லாமே செந்நிறம் என்று உரை கண்டுள்ளனர்
நீலகண்ட தீட்சிதர் எழுதிய அற்புதமான அம்பாள் துதியான ஆனந்த சாகர ஸ்வத்தில் வரும் பாடலையும் உரைகாரர்கள் எடுத்தாள்கின்றனர் . அதில்,
குங்குமப்பூ அலங்கரிக்கும் திருமேனி, சிவப்பு வர்ண ஆபரணங்களை அணிந்து அழகுடன் காட்சி தருபவள், தாம்பூலம் தரித்து செந்நிற வாயுடையவள் – இப்படிப்பட்ட செந்நிறக் காட்சி என் முன்னால் நிற்கவேண்டும் என்று தீட்சிதர் வேண்டுகிறார்
ப்ரத்யக்ர குங்கும ரசாக்லிதாங்கராகம்
ப்ரத்யங்க தத்த மணி பூஷண ஜால ரம்யம்
தாம்பூல பூரிதமுகம் தருணேந்து சூடம்
சர்வருணம் கிம் அபி வஸ்து மமாவிரஸ்து
என்பது நீலகண்ட தீட்சிதர் யாத்த பாடல் ஆகும்
***
பீத வர்ணா என்ற நாமத்தை எடுத்துக்கொள்வோம்.
பீதம் என்பது குங்குமப்பூவுக்கும் பெயர்; மஞ்சள் நிறத்துக்கும் பீத வர்ணம் என்று பெயர் ; அதாவது பொன்னிறமான பட்டின் நிறம். க்ரீம் கலர் ; இந்துக்கள் போன்ற வர்ண உணர்வுள்ளவர்களை வேறு எங்கும் காண முடியாது. நிறங்கள் ஓர் ஐந்துடையாய் என்று சிவபெருமானின் ஐந்து நிறங்களை மாணிக்க வாசகர் திருவாசகத்தில் துதிக்கிறார் . பரதர் எழுதிய பரத நாட்டிய நூலில் தியேட்டரில் எந்த ஜாதி மக்களுக்கு எந்த வர்ண ‘சீட்’டுகள்– ஆசனங்கள் -என்று ஒதுக்குகிறார் கிருஷ்ணன்- பலராமன் அணிந்த யுனிபார்ம்களை/ சீருடைகளை UNIFORMS பஜனைப் பாடல்தோறும் பாடுகிறோம்; கிருஷ்ணன் CREAM COLOUR, YELLOW பீதாம்பரதாரி; அவனுடைய அண்ணன் பலராமனோ நீலாம்பரதாரி; எப்போதும் BLUE, பிளு கலர் துண்டு மேலிருக்கும். எப்படி கலர் கான்ஸஸியஸ் COLOUR CONSCIOUS பாருங்கள்! மூவாயிரம் அணுக்களுக்கு முன்னரே இப்படி கலர்களை பார்க்கலாம் .பீத என்றால் தீ, சூரியன் என்றும் அகராதி சொல்லும். பித்தளை என்று நாம் சொல்லும் உலோகத்துக்கும் மஞ்சள் CREAM COLOUR, YELLOW நிறமே காரணம். அத்தனையும் சம்ஸ்க்ருதம்.
***
திரிவேணி, த்ரி குணாத்மிகா, த்ரயம்பகா என்ற நாமங்களுக்கு உரைகாரர்கள் ஆதிசங்கரரின் செளந்தர்ய லஹரியில் ஒரு ஸ்லோகத்தை எடுத்துக் காட்டுகிறார்கள் :
पवित्रीकर्तुं नः पशुपतिपराधीनहृदये दयामित्रैर्नेत्रैररुणधवलश्यामरुचिभिः ।
नदः शोणो गङ्गा तपनतनयेति ध्रुवममुं त्रयाणां तीर्थानामुपनयसि संभेदमनघम् ॥ ५४॥
Pavithrikarthum nah pasupathi-paradheena-hridhaye Daya-mithrair nethrair aruna-dhavala-syama ruchibhih;
Nadah sono ganga tapana-tanay’eti dhruvamamum Trayanam tirthanam upanayasi sambhedam anagham-54
பவித்ரீ கர்த்தும் ந: பஶுபதி பராதீன ஹ்ருதய தயாமித்ரைர் நேத்ரை ரருண தவல ஶ்யாம ருசிபி:
நத: ஶோணோ கங்கா தபன தனயேதி த்ருவமமும் த்ரயாணாம் தீர்த்தானா முபநயஸி ஸம்பேத மநகம் 54
ஆதி சங்கரர். அம்பாள் தரிசனம் பெற்று அதை நமக்கு ஆனந்தாமிர்தமாக 103 ஸ்லோகங்களில் அள்ளித்தருகிறார்
“அம்பே, லலிதா தேவி, பசுபதிக்கு ஸ்வாதீனமான அன்பு நிறைந்த ஹ்ருதயத்தை படைத்தவளே ! அம்மா உனது நயனங் களை எப்படி வர்ணிப்பேன்? அவை தயை, கருணை நிறைந்த அழகிய, சிவப்பு, வெளுப்பு, கறுப்பு என்ற வர்ணங்களைக் கொண்டவையாக இருக்கிறதே. இது எதை நினைவூட்டுகிறது தெரியுமா? ப்ரவாஹமாக மேற்கு நோக்கிச் செல்வதும் சிவப்பு நிறம் கொண்டதுமான சோணபத்ரா என்ற நதியும், பனி உருகி வெள்ளை வெளேரென்று குளிர்ந்த சமுத்திரம் போன்ற வெண்ணிற கங்கை நதியும், சூரிய புத்திரியாகவும் இயற்கையிலேயே கறுப்பு வர்ணம் கொண்ட யமுனா நதியுமாகிய மூன்று புண்ய புண்ணிய நதிகளும் ஒன்று சேர்ந்த ஸங்கமமாகி பாவத்தையெல்லாம் போக்கும் ப்ரயாகையாக காட்சி அளிக்கிறது. ஓஹோ! எங்கள் பாபத்தை எல்லாம் அழித்து புனிதமாக்குவதற்காக அல்லவோ உன் பார்வை இருக்கவேண்டும் என்பதற்காக நீ அமைத்துக்கொண்ட மூன்று நிற கண்களோ உன்னுடையவை”
மேலே சொன்ன மூன்று நிற கண்கள் உள்ளார்த்தமாக குண்டலினி சக்தி தியானத்தால் ஏற்படும் நன்மையை குறிக்கிறது.
திரிவேணி :–
திரிவேணி நாமத்திற்கு உரைகாரர்கள் மூன்று நதிகளை குறிப்பிடுகிறார்கள்
காளிந்தி யமுனை == கருப்பு நிறத்துடன் ஓடும் நதி
கங்கை -வெண்மை நிறத்துடன் ஓடும் நதி
சோணபத்ரா — தங்க நிறத்தில் ஓடும் நதி
***
த்ரி குணாத்மிகா
சத்வ குணம்– வெண்மை
ராஜஸ குணம்– சிவப்பு /தங்க நிறம்
தாமச குணம்– கருப்பு
****
தேவியுடன் தொடர்புடைய நாமங்களில் கீழ்கண்டன வருகின்றன:
தாமரை மலர், மாணிக்கம், குருவிந்தம் – சிவப்பு
ஜபா புஷ்பம் – செம்பருத்தி சிவப்பு நிறம்; கண்களில் தீட்டிக் கொண்டிருக்கும் மை கருப்பு/ நீலம் .
இவை மேம்போக்காகக் கண்டவைதான்; உரைகளை ஆழமாகப் படித்தால் இன்னும் பல நிறங்களைக் காண முடியும் . ஸ்படிகத்தை எதனருகில் வைத்தாலும் அதன் நிறத்தைக் கொண்டுவிடும். நிறமற்ற நீரில் போட்டாலோ காண்பதற்க்கரிதாகி மறைந்து விடும் ; தேவியும் அப்படியே !உருவம் உடையவள்; உருவமில்லாதவள்; நிறங்கள் உடையவள்; நிறங்கள் இல்லாத பளிங்கு போன்றவள்.
—SUBHAM—
TAGS- லலிதா சஹஸ்ர நாமத்தில், வர்ணங்கள் , நிறங்கள் , பீத வர்ணா, ரக்த வர்ணா, சர்வ அருணா , சர்வ வர்ணோப சோபிதா