Post No. 15,178
Date uploaded in London – 13 November 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
LONDON RATH YATRA PICTURES TAKEN BY LONDON SWAMINATHAN
சம்பிரதாய பஜனைகளுக்குச் செல்லுவோர் கண்ணன் புகழ் பாடி பக்தர்கள் ஆடுவதைப் பார்த்திருக்கிறோம். அதே பஜனையில் பெண்கள் கைகளில் விளக்குகளை ஏந்தி வட்டமாகச் சுற்றி ஆடுவதையும் பார்க்கிறோம். இளம் பெண்கள் கோலாட்டம், கும்மி அடித்து தேவியையோ கிருஷ்ணனையோ பாடி மகிழ்வதையும் பார்க்கலாம். .ஆனால் நம்மாழ்வார் சொல்லும் டான்ஸ் ஆட்டத்தை இன்று ஹரே கிருஷ்ணா இயக்கத்தினரிடமே பார்க்க முடிகிறது. இதை வங்காளத்தில் பிறந்த சைதன்யர், சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் துவக்கி வைத்தார் என்று நான் எண்ணிக்கொண்டிருந்தேன். ஏனெனில் ஹரே கிருஷ்ண இயக்க ஸ்தாபகர் பக்தி வேதாந்த பிரபுபாத சுவாமிகள், சைதன்யர் போன்ற மஹான்களையே மேற்கோள் காட்டுகின்றார் .
நம்மாழ்வார் பாடிய பாசுரங்களோ சைதன்யருக்கும் 700, 800 ஆண்டுகளுக்கு முந்தையவை. நம்மாழ்வார் சொல்வது போல குதித்தும் மேலே எழும்பியும் துள்ளி ஆடுவோர் ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர்தான். எல்லோரும் நகைக்கும் படி, சிரித்துப் பரிகசிக்கும்படியும் ஆட வேண்டும் அப்போது உடல் தலைகீழாகப் போக வேண்டும்; பக்தர்களின் தலைகள் தரையில் நமஸ்காரம் செய்யும் வகையில் ஆடவேண்டும் என்று நம்மாழ்வார் பாடுவதிலிருந்து 1300 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் நாட்டில் இத்தகைய பக்தர்கள் தெருக்களில் பஜனை செய்தது தெரிகிறது; ஏனெனில் நம்மாழ்வார் பஜனை மடங்களைப் பற்றிப் பேசாமல் தெரு வீதிகளில் ஆடும் ஆடடத்தைக் குறிப்பிடுகிறார்.
சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய 11 வகை நடனங்களில் கிருஷ்ணர், சக்தி முதலிய டான்ஸ்களை சொன்னாலும் அவை எல்லாம் மேடையில் ஆடியவை; ரசிகப்பெருமக்களை மகிழ்விக்க நடந்தவை; ஆனால் நம்மாழ்வாரோ உண்மையான பக்திப்பெருக்கினை நமக்குப் படம்பிடித்துக் காட்டுகிறார் இத்தகைய காட்சிகளை ராம கிருஷ்ண பரமஹம்சர் விவரித்தபோதும் சைதன்ய மஹாப்ரபுவையே நமக்குக் காட்டுகிறார் உண்மையில் இந்த ஆட்டத்தின்/ நடனத்தின் பெருமை எல்லாம் நம்மாழ்வாரையே சாரும்.
அடுத்த முறை ஹரே கிருஷ்ணா இயக்கத்தினரின் டான்ஸ்களை பார்க்கையில் நம்மாழ்வார் பாசுரங்களை பாடுங்கள்; நான் முப்பது ஆண்டுகளாக லண்டனில் ஆண்டுதோறும் ரத யாத்திரையில் ஆண்களும் பெண்களும் ஆடும் ஆட்டத்தை பார்த்துக்கொண்டு இருக்கிறேன் அது போன்ற ஆட்டத்தை பஜனைகளில் கூடக் காணமுடிவதில்லை. விரைவில் நீங்களும் பைத்தியம் ஆகுங்கள் பரமனைப் பாடி ஆடுங்கள் சிரிப்பார் சிரிக்கட்டும்; அவர்கள் சிறியோர் என்பது நம்மாழ்வார் வாக்கு சோற்றால் அடித்த பிண்டங்கள் என்று ஒரு பாசுரத்தில் ஏசுகிறார். நூற்றுக்கு நூறு உண்மை அது!
****
நம்மாழ்வார் நட்டுவாங்கம்
1
எழுந்தும் பறந்தும் துள்ள வேண்டும்
அதாவது கால் தரையில் படக்கூடாது
2
பண்கள் தலைக்கொள்ளப்பாடி
பறந்தும் குனிந்தும் ஆட வேண்டும்
3
தலையினொடு ஆதனம் தட்டாத
தடுக்கூட்டமாய் பறவி ஆட வேண்டும்
எம்பெருமான் குணங்களைப் ப்பாடி ஆடுகையில் தலை தரையில் படும்படி கீழது மேலதாய்ப் பறந்து பறந்து ஆடவேண்டும் .
4
சிறீதரன் தொல் புகழ் பாடி
கும்பிட்டு நட்டம் இட்டு ஆடி
கோகு உகட்டுண்டு உழலாதார்
அதாவது பாடிக்கொண்டே குதித்துக் கூத்தாடி தலை மண்டியிட்டு ஆடவேண்டும்
5
இதைச் செய்யாதார் ஊண் மல்கி மோடு பருப்பார் == அதாவது சோற்றால் அடித்த சதைப் பிண்டங்கள் போல்வர்
***
திருவாய்மொழி-3-5-
மொய்ம் மாம் பூம் பொழில் பொய்கை முதலைச் சிறைப் பட்டு நின்ற
கைம்மாவுக்கு அருள் செய்த கார் முகில் போல் வண்ணன் கண்ணன்
எம்மானைச் சொல்லிப் பாடி எழுந்தும் பறந்தும் துள்ளாதார்
தம்மால் கருமம் என் ? சொல்லீர் தண் கடல் வட்டத்து உள்ளீரே ?–3-5-1
*****
தண் கடல் வட்டத்து உள்ளாரைத் தமக்கு இரையாத் தடிந்து உண்ணும்
திண் கழல் கால் அசுரர்க்குத் தீங்கு இழைக்கும் திரு மாலை
பண்கள் தலைக் கொள்ளப் பாடிப் பறந்தும் குனித்து உழலாதார்
மண் கொள் உலகில் பிறப்பார் வல் வினை மோதம் அலைந்தே –3-5-2
***
மலையை எடுத்துக் கல் மாரி காத்துப் பசு நிரை தன்னை
தொலைவு தவிர்த்த பிரானைச் சொல்லிச் சொல்லி நின்று எப்போதும்
தலையினோடா தனம் தட்டத் தடு குட்டமாய்ப் பறவாதார்
அலை கொள் நரகத்து அழுந்திக் கிடந்தது உழைக்கின்ற வம்பரே –3-5-3
****
வம்பவிழ் கோதை பொருட்டா மால் விடை ஏழும் அடர்த்த
செம் பவளத் திரள் வாயன் சிரீதரன் தொல் புகழ் பாடி
கும்பிடு நட்டம் இட்டு ஆடிக் கோகு கட்டு உண்டு உழலாதார்
தம் பிறப்பால் பயன் என்னே ? சாது சனங்கள் இடையே –3-5-4
****
சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்கு
ஆதி அம சோதி வுருவை அங்கு வைத்து இங்கு பிறந்த
வேத முதல்வனைப் பாடி வீதிகள் தோறும் துள்ளாதார்
ஓதி வுணர்ந்தவர் முன்னா என் சவிப்பார் மனிசரே ?–3-5-5
English translation of verse 3.5.5:
Not all their learning and mumblings dry will make them men,
If they dance not in the open streets, love-smitten
And sing not the glory of the Lord, by Vedas acclaimed
As the foremost, who did in all that supernal splendor descend
From the high heavens, to kill Kañcaṉ, the tyrant
Who did the soft and pious men torment.
***
வார்புனல் அம் தண் அருவி வடதிருவேங்கடத்து எந்தை,
பேர்பல சொல்லிப் பிதற்றி பித்தர் என்றே பிறர்கூற,
ஊர்பல புக்கும் புகாதும் உலோகர் சிரிக்க நின்று ஆடி,
ஆர்வம் பெருகிக் குனிப்பார் அமரர் தொழப்படுவாரே.
English translation of verse 3.5.8:
Those that articulate, with yearning deep, the names many
Of our Lord in Vaṭa Tiruvēṅkaṭam, with its fountains many
And cool, nice cascades, pass in and out of many a town,
Singing and dancing in ecstasy like mad men,
By worldlings ridiculed, will be worshipped by those in heaven.
—subham—
Tags- பைத்தியம் போல,டான்ஸ் ஆடுங்கள், நம்மாழ்வார் அறிவுரை, ஏனையோர் சிரிக்கட்டும், ஹரே கிருஷ்ணா இயக்கம், டான்ஸ்