Post No. 15,185
Date uploaded in London – 15 November 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
அப்பர் தேவாரத்தில் ஆறாம் திருமுறையில் புள்ளிருக்குவேளூர் என்னும் வைதீஸ்வரன் கோவில் பற்றிய பதிகத்தில் ஒரு அருமையான செய்தியை அளிக்கிறார்; இதை மாணிக்கவாசகரின் திருவாசகத்தில் உள்ள போற்றி போற்றித் திருஅகவல் பகுதியுடன் ஒப்பிட்டுப் பார்த்து மகிழலாம்.
மின்னுருவை விண்ணகத்தில் ஒன்றாய் மிக்கு
வீசுங்கால் தன்னகத்தில் இரண்டாய்ச் செந்தீத்
தன்னுருவின் மூன்றாய்த்தாழ் புனலின் நான்காய்த்
தரணிதலத் தஞ்சாகி யெஞ்சாத் தஞ்ச
மன்னுருவை வான்பவளக் கொழுந்தை முத்தை
வளரொளியை வயிரத்தை மாசொன் றில்லாப்
Coral, Peral, Diamond, 24 carat Gold
பொன்னுருவைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
பொ-ரை: மின்னல் போன்று பிரகாசிக்கும் உருவினனாய், வானத்தில் ஒலி என்ற ஒரே பண்பாய், வீசும் காற்றில் ஒலி ஊறு என்ற இருபண்புகளாய், சிவந்த நெருப்பில் ஒளி, ஊறு, ஒலி என்ற முப்பண்புகளாய், பள்ளம் நோக்கிச் செல்லும் நீரில் சுவை, ஒளி, ஊறு, ஒலி என்ற நான்கு பண்புகளாய், நிலத்தில் நாற்றம், சுவை, ஒளி, ஊறு, ஒலி என்ற ஐந்து பண்புகளாய்க் குறையாத புகலிடமாக நிலைபெற்ற பொருளாய், பவளக் கொழுந்தாய், முத்தாய், வளர் ஒளியாய், வயிரமாய், பொன்போலும் Coral, Pearl, Diamond, 24 carat Gold நிறமுடைய புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.
திருவாசகம்
“பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி” (தி.8 திருவாசகம். போற்றித் திருவகவல் – 137 – 41) என்பது முதலியனவாக அருளிச்செய்தவற்றையும் அறிக.
இதில் பஞ்சபூதங்களில் ஐந்து தன்மைகளை அழகாக எடுத்துரைக்கிறார் மாணிக்கவாசகர் திருவாசகத்தில் போற்றித் திரு அகவல் பாட்டில்
பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி 140
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி
என்று சிவபெருமானைப் போற்றுகிறார்
***
அறிவியல் செய்தி
Sound, Wind, Fire, Water, Earth
பஞ்சபூதங்களுக்கும் என்னென்ன குணங்கள் உண்டு என்பதை இது கூறுகிறது; இதில் ஒரு அறிவியல் செய்தியும் உள்ளது. முதலில் சப்தம் என்னும் ஒலியைக் குறிப்பிடுகிறார் விஞ்ஞானிகளும் BIG BANG ‘பிக் பேங்’ என்னும் ஒலியுடன் இந்தப் பிரபஞ்சம் தோன்றியது என்று கூறுகிறார்கள். அதற்குப் பின்னர் பூமியில் உயிரினங்கள் தோன்றுவதற்கு முன்பாக காற்றும் தீயும் தான் இருந்தது. நம்முடைய பூமி கொஞ்சம் கொஞ்சமாக குளிர்ந்து போய் தண்ணீர் அதாவது மழை மூலம் நீர் பெருக்கெடுத்தது; அந்தக் கடலில் இருந்து தான் உயிரினங்கள் தோன்றின என்பதை நாம் தசாவதாரத்திலும் காண்கிறோம் .
Sound, Wind, Fire, Water, Earth
நீரிலிருந்து உருவான மத்ஸ்ய என்னும் மீனிலிருந்து முதல் அவதாரம் துவங்குகிறது. அந்த நீரிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நிலம் வெளியேறியது. பின்னர் பிராணிகளும் மனிதர்களும் தோன்றி இன்றைய பூமியாகத் திகழ்கிறது இதையும் இந்தப் பாடல் அருமையாக, வரிசைக் கிராமமாக எடுத்துரைக்கிறது.
புறநானூறு 2
இதே போல புறநானூற்றிலும் ஒரு பாடல் உண்டு அங்கு பஞ்ச பூதங்களையும் அதன் குணங்களை வைத்து மன்னர்களுக்கு ஒப்பிடுகிறார்கள்
மண் திணிந்த Earth நிலனும்,
நிலம் ஏந்திய Sound /Sky விசும்பும்,
விசும்பு தைவரு Wind, வளியும்
வளித் தலைஇய Fire தீயும்,
தீ முரணிய நீரும், , Water, என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்
பஞ்ச பூதங்களின் வரிசை மாறினாலும் அவற்றின் குணங்களை அப்படியே மன்னருக்குச் சாற்றுகிறார் முரஞ்சியுயர் முடிநாகராயர் . இதே போல புறநானூறு பாடல் 51 லும் வருகிறது
இந்தப்பாடலில் முதல் முதலில் அந்தாதி அமைப்பை தமிழ் இலக்கியத்தில் காண்கிறோம். அப்பர் பாட்டில் ரத்தினைக் கற்களையும் பத்தரை மாத்துத் தங்கத்தையும் காண்கிறோம்..
–சுபம்—-
Tags- அப்பர் சொல்லும் அதிசயச் செய்தி, ஐந்து பூதங்களின், விஞ்ஞான விளக்கம், பஞ்ச பூதங்கள். திருவாசகம், தேவாரம் அப்பர், புள்ளிருக்குவேளூர்